பிரபுதேவாவின் உதவியாளர் ஏ.சி.முகில் இயக்கியுள்ள முதல் படம். போஸ்டரில் சாந்தனு, ஹீரோயின் படத்துடன் எல்லாவற்றிலும் சந்தானத்தின் படத்தை போட்டிருந்தார்கள். முழுக்க, முழுக்க சந்தானத்தை நம்பியே வெளி வந்திருக்கும் படம் என்று தெரிந்தது.
தாத்தா கிராமத்தில் ஒரு பெண்ணைப் பார்த்து வைத்து கல்யாணம் செய்து கொள்ளச் சொல்லி மிரட்ட, அவரிடம் தான் வேறு ஒரு பெண்ணை காதலிப்பதாய் சொல்லிவிடுகிறார் சாந்தனு. முப்பது நாளுக்குள் காதலியை கூட்டி வரவில்லையென்றால் தான் பார்த்த பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொல்ல, வேறு வழியில்லாமல் காதலியை தேடி அலைகிறார் சாந்தனு. ஒரு பெண்ணைப் பார்த்து மயங்கிய சாந்தனு அவளை இம்ப்ரஸ் செய்ய, குருடன் என்று பொய் சொல்லி காதலிக்க, ஒரு கட்டத்தில் அவளுக்கு தெரிந்து விடுகிறது. பின்பு காலில் விழுந்து எல்லாம் இழந்த காதலை பெற, கல்யாணம் எல்லாம் நிச்சயமாகிவிடுகிற நேரத்தில் ஒரு சண்டையில் நிஜமாகவே கண் போய்விடுகிறது. அப்புறம் என்ன ஆனது என்று தியேட்டரில் போய் கண்டு கொள்ளுங்கள்.
படம் ஆரம்பித்த முதல் காட்சியிலிருந்து ஏற்கனவே மூன்னூறு முறைக்கு மேல் தமிழ் சினிமாவில் பார்த்த காட்சிகளாய் வந்து கொண்டிருக்க, நாலு சீனுக்கு ஒரு சீன் சந்தானம் வந்து லேசாய் கிச்சு, கிச்சு மூட்டிவிட்டு போனார். இடைவேளை வந்ததும் இன்னும் வேற படம் பாக்கணுமா? என்று எனக்குள் கேட்டுக் கொண்டிருந்தேன். முதல் பாதியில் நோகடித்ததற்கு பிராயச்சித்தமாய் இரண்டாம் பாகம் லாஜிக், அது இது என்று எதையும் பார்க்க மாட்டீர்கள் என்றால் சிரிக்கலாம்.
அதற்காக என்னடா படம் நல்லாயிருக்கோன்னு நீங்க நினைச்சிற வேணாம். ஒண்ணுமேயில்லாம சொதப்பியிருக்கிற திரைக்கதையில் கொஞ்சமேனும் சுவாரஸ்யம் கொடுத்த அந்த சில நிமிடங்களைத் தவிர பெரிதாய் படத்தைப் பற்றி சொல்ல முடியவில்லை.புதிய இசையமைப்பாளர் விஜய் எபினேசரின் பாடல்கள் எடுபடவேயில்லை. படத்திற்கு பெரிய ஸ்பீட் ப்ரேக்கரே பாடல்கள் தான். ஒளிப்பதிவு பற்றி பெரிதாய் சொல்ல ஏதுமில்லை.
சாந்தனு கொஞ்சம் நன்றாக ஆடுகிறார். ஆனால் சண்டைக் காட்சிளில் படு காமெடி. கொஞ்சம் நடிக்க முயற்சி செய்த இடங்களில் சந்தானம் உதவியிருக்கிறார். சந்தானம் வழக்கம் போல சந்தடி சாக்கில் அடித்து விடுகிறார். இரண்டாவது பாதி என்ற ஒன்றை இவரில்லையேல் அய்யா சாமி நினைக்கவே பயமாயிருக்கு. ஹீரோயின் எல்லாம் நல்லா நடிச்சிருக்காங்கன்னு சொல்ல அவருக்கு வேலையுமில்லை. கிடைச்ச வாய்ப்பை யூஸ் பண்ணிக்கவுமில்லை.
எழுதி இயக்கிய முகில் சாருக்கு இது முதல் படம். நல்ல லைட்டான, காமெடி கலந்த லைனைத்தான் எடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அதை சுவாரஸ்யப் பின்னலாய் திரைக்கதையமைக்க தவறிவிட்டதினால் பல இடங்களில் கொட்டாவி. படம் காமெடியாய் இருக்கலாம். ஆனால் அதில் சொல்லக்கூடிய திரைக்கதை சீரியஸாய் இருக்க வேண்டாமா? அதிலும் கமிஷனர் ஒரு சமயம் கமிஷனர் கூப்பிடறாருன்னு போவதெல்லாம் ரொம்பவே மோசம். அதற்கு பிறகு லாஜிக் என்ற வஸ்துவை தேடிப் பார்த்தாலும் கிடைக்காது போலிருக்கிறது. கேள்வி கேட்க வேண்டுமென்றால் படத்தின் முக்கிய விஷயமே அடிபட்டுவிடும். திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்த அன்றைய இரவு சண்டையில் சாந்தனுவுக்கு கண் பார்வை போய்விடுகிறது. அதற்குபிறகு தலையில் கட்டெல்லாம் கட்டி ஒரு சில நாட்களுக்கு பிறகுதான் அனுப்புகிறார்கள். அதற்கு நடுவில் சாந்தனுவின் காதலியோ, மாமனாரோ, தாத்தாவோ போன் கூட செய்ய மாட்டார்களா? இத்தனைக்கு காதலி கூடவேயிருப்பவள்?. ம்ஹும் முடியல. ஆனால் ரொம்பவே சோதிக்காமல் முழுக்க காமெடி என்று முடிவெடுத்தது பார்த்தால் தான் தப்பிக முடியும்.

கண்டேன் - ம்ம்ம் What to Say?
Post a Comment
10 comments:
கண்டேனை கண்டும் காணாம விட்ரனும்னனு சொல்றீங்க அவ்ளோ தான.. ரைட்டு பார்க்க மாட்டோம்
மொத்தத்தில்...
கண்டேன் = காணவில்லை....
என்ன சொல்லவறீங்க. சந்தானத்துக்காக பார்க்கலாம் இல்லையா? முன்பெல்லாம் கவுண்டமணி செந்திலை புக் பண்ணிட்டுதான் ஹீரோ கால்சீட்டேதருவார். இப்போ கொஞ்சமா சந்தானம் அந்த இடத்தை பிடிச்சிருக்கார். நிஜமாகவே டைமிங் காமெடியில் சந்தானம் சூரர்தான்.
திரைகதை மன்னன் பையனுடைய படத்தில் திரைகதை சரியில்லயா..... ஐய்யோ பரிதாபம்....
படம் தேறாது போல...
இந்த படத்தின் பின்னணியில் (அதாவது ரிலீசில்) ஏதோ ஒரு சம்பவம் இருக்கிறது. கவுதம் மேனன் இந்த படத்தின் ஆடியோவை ரிலீஸ் செய்தார். பின்னர் இதன் சந்தையாக்கல் மும்பையின் ஒரு நிறுவனம் மூலமே நடந்தது.
கிங் விஸ்வா
தமிழ் சினிமா உலகம் - ப்ரீஸ்ட் - கல்லறை உலகம் விமர்சனம்
படம் முழுக்க சந்தானத்தை நம்பி எடுத்திருக்காங்கன்னு நினைக்கிறேன்.ட்ரைலர்ல அடிக்கொரு தடவை அவர் தான் வந்தாரு.அதன் நல்லாருக்கும்னு நினைச்சேன்.
-அருண்-
எல்லாம் சரி. ஆனா கடைசி வரைக்கும் படத்தோட ஹீரோயின் பேரை சொல்லவே இல்லையே?
Songs of movie are really good to hear. Hope you only like kuthu fast beat songs only.
அருமை நண்பரே...
vaithee.co.cc
While writing the reviews,you are making lot of mistakes.Go through your article at least once and then publish.
Post a Comment