குறும்படம்- போஸ்டர்
கலைஞர் டிவியில் நடக்கும் நாளைய இயக்குனர் நிகழ்ச்சிக்காக நண்பர் ரவிக்குமார் இயக்கத்தில் என்னுடய கதை, திரைக்கதை, வசனத்தில் எடுக்கப்பட்ட இப்படம். அவ்வாரத்திய சிறந்த படமாய் அமைந்தது. அது மட்டுமில்லாமல் நான் பின்னணி குரல் கொடுத்த இன்ஸ்பெக்டர் கேரக்டருக்கு சிறந்த நடிகர் விருதும் கொடுத்தார்கள். உங்களின் பார்வைக்கும் விமர்சனத்திற்கும்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
இது (போஸ்டர் ) என்னமோ என் மனசுல ஓட்டலை. ஏடுத்த விதம் அருமை ஒளிபதிவு சூப்பர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் நடிப்பு சூப்பர். அதுக்கு உங்க டப்பிங் பிரமாதம். சிறுகதையா படிச்சிருந்தா
நல்ல இருந்திருக்குமோ என்னமோ. அப்புறம் அந்த செக்ஸ் அண்ட் ஜேன் 3d
வெப் அட்ரஸ் கேட்டு இருந்தேனே. ஹி...... ஹி......... இன்னும்
உங்கள் சிறுகதைகள் எல்லாமே திரைக்கதை வடிவேற்றத்தில் எழுதப் பெற்றவைதாம் என்றாலும், சுடுகை சுடுகையாகப் பிரிக்கப்பட்ட வடிவத்தில் இக் கதையைப் பார்க்க வாய்த்ததும் ஒரு நல்வினைதான். புதுச் சரக்குகள் இரண்டைப் பாவாடை அளவில் நகர்த்தி உணர்த்தியதைப் பாராட்டுகிறேன்!
நடிகர்கள் எல்லாருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். தொலைபேசிக் குழப்பும் அந்த ‘மாமா’ குணவார்ப்பின் நடிகர் மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார். அந்தத் தொலைபேசிச் சிறுகுறிப்பேட்டின் கையெழுத்துத் தோற்றமும் பாராட்டுக்குரியது! இயக்குநரைப் பாராட்டுகிறேன்!
ஆமா, மறுநாள், காவல் நிலையத்தில் ஆய்வாளர் 'கை-வெண்சுருட்டின்-சாம்பல்-தட்டப்-படுகிற' அந்த அண்ண்மைச் சுடுகை (close-up shot) என்ன உணர்த்துகிறது?
இதே கதையை கேபிள் சார் படமாக்கியிருப்பாராயின் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
இந்ந படம் முழுக்க திருப்பூரில் அனுபவமற்ற நடிகர்களைக்கொண்டு எடுக்கப்பட்டது.
visit my blog. ravikumartirupur.blogspot.com