சாப்பாட்டுக்கடை- அக்பர் மெஸ்
அக்பர் மெஸ் என்றதும் ஏதோ தலைவாழை இலைப் போட்டு மதிய உணவு போடும் உணவகம் என்று நினைத்து விடாதீர்கள். அக்பர் மெஸ் என்பது ஒரு பிரியாணிக் கடை. சென்னை செண்ட்ரலிலிருந்து வந்தால் மாநகராட்சி கட்டிடத்திற்கு வலது பக்கமாய் திரும்பினால் பெரியமேட்டிக்கு போகும். அங்கே நேரு ஸ்டேடியத்திற்கு எதிரே இருக்கும் மசூதிக்கு அருகில் ஒரு சிக்னலிருக்கும். அங்கே இடது பக்கமாய் திரும்பினால் இரண்டாவது இடது தெருவின் உள்ளே நுழைந்தாலே சும்மா வாசனைப் மூக்கைத் துளைக்கும்
ஒரு சின்னக்கடை. சுமார் இருபது பேர் மட்டுமே உட்காரக்கூடிய இடம். பேப்பர் வாழையிலையில் தான் பிரியாணி சர்வ் செய்யப்படும். அந்த இடத்திலேயே ஒரு மெகா சைஸ் அண்டாவிலிருந்து பிரியாணி எல்லோருக்கும் எடுத்துக் கொடுக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும். அதற்கு சுமார் மூன்று பேர்கள் அதைச் சுற்றி உட்கார்ந்து கொண்டேயிருப்பார்கள். அது தவிர பார்சலுக்கென்று தனிக் வரிசை. அதில் எப்போதும் பத்து பேர் நின்று கொண்டிருப்பார்கள் தூக்குச் சட்டியோடு. லோக்கல் ஆட்கள் பார்சலை இங்கே கட்டிக் கொண்டு போவதைவிட இப்படி வீட்டிலிருந்து தூக்குச் சட்டியில் கொண்டு போவதையே விரும்புகிறார்களாம்.
பிரியாணியைத் தவிர வேறு சிக்கன்,மட்டன் சாப்ஸ், மற்றும் சில சைட்டிஷ்களிருக்க, கத்திரிக்காய் சட்னியையும், வெங்காயப்பச்சிடியையும் போட்டவுடன். இரண்டு ப்ளேட்டுகளில் நல்ல மட்டனுடன் ப்ரியாணி பரிமாறப்பட, அதைப் பார்த்து அட இவ்வளவை எப்படி சாப்பிடறதுன்னு மலைச்சா? சாப்ட்டப்புறம்தான் தெரியும். அது பத்தாது போலருக்கேன்னு. அவ்வளவு அருமையான சுவை. அதிக மசாலாயில்லாமல், அதன் சுவையை பற்றி எழுதிச் சொல்ல முடியாது. அனுபவிச்சு சாப்பிட்டுப் பார்க்கணும். இந்த பிரியாணியின் ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா? வழக்கமா பிரியாணி சாப்டப்புறம் வயிறு திம்முனு இருக்கும். ஆனா இங்க அதுக்கு சான்ஸேயில்லை. ஒரு மணிநேரத்தில க்ளீனா ஜெரிச்சு. அடுத்தது எப்போன்னு வயிறு கேட்கும் நிச்சயம் ஒரு முறை போய் வாங்க..
Comments
கிங் விஸ்வா
வேதாளரின் (முகமூடி வீரர் மாயாவியின்) புத்தம் புதிய காமிக்ஸ் கதைகள் - யூரோ புக்ஸ்
அங்க மட்டுமில்ல, பெரியமேடு முழுக்க பொதுவாகவே பீஃப் தான். சுவையும் ஒண்ணும் சொல்லிகொள்ளும்படி இல்லை.
சுமாரான சாப்பாட்டுக்கு எதுக்கு இவ்வளவு பில்டப்பு?
காலையில பிரியாணி கிடைக்குமா..?
@அமரபாரதி
ம்
@ப்ளாக்பாண்டி
ஒரு நடை போயிருங்க
@ஜனா
வாங்க.. வாங்க..
@அவர்கள் உண்மைகள்
நன்றி..
@ஜ.ரா.ரமேஷ்பாபு
நேர்ல எடுத்தது.
@மணி
வந்திட்டாப் போச்சு
@எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங்
வாங்கி அனுப்பிடறேன்
@இ.சி.ஆர்.
தலைவரே கடை மாறிப் போயிட்டீங்களோ..
@யொஜிம்போ
காலையில் இருக்கிறது என்று தெரியும். மாலை டைம் தெரியவில்லை.
நான் ஒரு உணவு விரும்பி...
எடம் : ராயபெட்டா , பொன்னுசாமி ஹோட்டல் அருகில்
பெயர் : ராமசாமி ஹோட்டல் (மதுரை உணவகம்).