அக்பர் மெஸ் என்றதும் ஏதோ தலைவாழை இலைப் போட்டு மதிய உணவு போடும் உணவகம் என்று நினைத்து விடாதீர்கள். அக்பர் மெஸ் என்பது ஒரு பிரியாணிக் கடை. சென்னை செண்ட்ரலிலிருந்து வந்தால் மாநகராட்சி கட்டிடத்திற்கு வலது பக்கமாய் திரும்பினால் பெரியமேட்டிக்கு போகும். அங்கே நேரு ஸ்டேடியத்திற்கு எதிரே இருக்கும் மசூதிக்கு அருகில் ஒரு சிக்னலிருக்கும். அங்கே இடது பக்கமாய் திரும்பினால் இரண்டாவது இடது தெருவின் உள்ளே நுழைந்தாலே சும்மா வாசனைப் மூக்கைத் துளைக்கும்
ஒரு சின்னக்கடை. சுமார் இருபது பேர் மட்டுமே உட்காரக்கூடிய இடம். பேப்பர் வாழையிலையில் தான் பிரியாணி சர்வ் செய்யப்படும். அந்த இடத்திலேயே ஒரு மெகா சைஸ் அண்டாவிலிருந்து பிரியாணி எல்லோருக்கும் எடுத்துக் கொடுக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும். அதற்கு சுமார் மூன்று பேர்கள் அதைச் சுற்றி உட்கார்ந்து கொண்டேயிருப்பார்கள். அது தவிர பார்சலுக்கென்று தனிக் வரிசை. அதில் எப்போதும் பத்து பேர் நின்று கொண்டிருப்பார்கள் தூக்குச் சட்டியோடு. லோக்கல் ஆட்கள் பார்சலை இங்கே கட்டிக் கொண்டு போவதைவிட இப்படி வீட்டிலிருந்து தூக்குச் சட்டியில் கொண்டு போவதையே விரும்புகிறார்களாம்.
பிரியாணியைத் தவிர வேறு சிக்கன்,மட்டன் சாப்ஸ், மற்றும் சில சைட்டிஷ்களிருக்க, கத்திரிக்காய் சட்னியையும், வெங்காயப்பச்சிடியையும் போட்டவுடன். இரண்டு ப்ளேட்டுகளில் நல்ல மட்டனுடன் ப்ரியாணி பரிமாறப்பட, அதைப் பார்த்து அட இவ்வளவை எப்படி சாப்பிடறதுன்னு மலைச்சா? சாப்ட்டப்புறம்தான் தெரியும். அது பத்தாது போலருக்கேன்னு. அவ்வளவு அருமையான சுவை. அதிக மசாலாயில்லாமல், அதன் சுவையை பற்றி எழுதிச் சொல்ல முடியாது. அனுபவிச்சு சாப்பிட்டுப் பார்க்கணும். இந்த பிரியாணியின் ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா? வழக்கமா பிரியாணி சாப்டப்புறம் வயிறு திம்முனு இருக்கும். ஆனா இங்க அதுக்கு சான்ஸேயில்லை. ஒரு மணிநேரத்தில க்ளீனா ஜெரிச்சு. அடுத்தது எப்போன்னு வயிறு கேட்கும் நிச்சயம் ஒரு முறை போய் வாங்க..

Post a Comment
13 comments:
நாளைக்கு நம்ம நண்பர் தியேட்டர் டைம்ஸ் சென்னைக்கு மதிய நேர ரெயிலில் வர்றாரு. அவர அங்கே கூப்பிட்டு போய்ட வேண்டியதுதான்.
கிங் விஸ்வா
வேதாளரின் (முகமூடி வீரர் மாயாவியின்) புத்தம் புதிய காமிக்ஸ் கதைகள் - யூரோ புக்ஸ்
படிக்கறப்பவே பசியெடுக்குது. அப்படியே விலையையும் போட்டால் தகவல் முழுமை பெறுமே.
படிக்கிறப்பவே நாவில் எச்சில் ஊருகிறது.
ஆஹா... சுவை இங்கவரை இழுக்குதே.. பறவாய் இல்லை மீண்டும் விரைவில் அங்குவந்து உங்களை சந்திக்கின்றேன். ஒன்றாக சாப்பிடலாம் :)
நானும் அக்பர் மெஸ் பற்றி கேள்விபட்டு இருக்கேன். நல்ல பெயர்தான் அதற்கு.நான் தவறாமல் உங்கள் சாப்பாட்டு கடை பதிவுகளை படித்து வருகிறேன். மிகவும் உபயோகப்படும் படியான பதிவு. தொடரட்டும் இந்த நல்ல பணி
என்னைய விட்டுட்டு சாப்பிட்டு வந்ததும் இல்லாம, பதிவு வேற. நல்லா இருக்கு, நான் பதிவ சொன்னேன். போட்டோ எல்லாம் அக்பர் மெஸ் ல எடுத்ததா இல்ல கூகுள் மெஸ்-ல சுட்டதா?
சும்மா நான்-வெஜ் சாப்பாடா டேஸ்ட் பண்ணிட்டு இருக்கீங்களே .ஒரு மாறுதலுக்கு நம்ம வீட்டுக்கு வந்து வெஜ் சாப்பிட்டு எப்பிடியிருக்குன்னு சொல்லுங்க கேபிள்ஜி...
நான் கோயம்புத்தூரில் இருக்கிறேன். பார்சல் வாங்கிக் கொரியரில் அனுப்பி வைங்க பாஸ்! புண்ணியமாப் போகும்!!
உங்க பதிவ நம்பி இன்னைக்கு லஞ்சுக்கு அக்பர் மெஸ் போனேன். மட்டன்ற பேர்ல மாட்டுக்கறிய போடுறாங்க. இந்த வித்தியாசம் கூடவா உங்களாலே கண்டுபிடிக்க முடியல?
அங்க மட்டுமில்ல, பெரியமேடு முழுக்க பொதுவாகவே பீஃப் தான். சுவையும் ஒண்ணும் சொல்லிகொள்ளும்படி இல்லை.
சுமாரான சாப்பாட்டுக்கு எதுக்கு இவ்வளவு பில்டப்பு?
கடை டைமிங் இன்னா சார்....
காலையில பிரியாணி கிடைக்குமா..?
சாப்பிட்டு சொல்லுங்க.. விஸ்வா
@அமரபாரதி
ம்
@ப்ளாக்பாண்டி
ஒரு நடை போயிருங்க
@ஜனா
வாங்க.. வாங்க..
@அவர்கள் உண்மைகள்
நன்றி..
@ஜ.ரா.ரமேஷ்பாபு
நேர்ல எடுத்தது.
@மணி
வந்திட்டாப் போச்சு
@எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங்
வாங்கி அனுப்பிடறேன்
@இ.சி.ஆர்.
தலைவரே கடை மாறிப் போயிட்டீங்களோ..
@யொஜிம்போ
காலையில் இருக்கிறது என்று தெரியும். மாலை டைம் தெரியவில்லை.
hi sankar, i hope ecr has gone to the wrong shop...i went to that shop on the same day after i read your article...bought both mutton and chicken briyani..wow!!! is the one word for its taste...the vessel in which they prepare briyani...hmmm i havent seen such a big vessel its like a well...thanks for it...this is the third place i am visiting after reading ur articles first vishwanathan mess next govt fisheries stuff and now akbar...you rock
சங்கர் சார் ... ராயபேட்டவில் ஒரு உணவகம் உள்ளது கண்டிப்பாக சுவைத்து பார்க்க வேண்டிய எடம். சிக்கன் boneless , சாப்பாடு, பரோடா அருமையாக இருக்கும்.
நான் ஒரு உணவு விரும்பி...
எடம் : ராயபெட்டா , பொன்னுசாமி ஹோட்டல் அருகில்
பெயர் : ராமசாமி ஹோட்டல் (மதுரை உணவகம்).
Post a Comment