ஃபாதர் கேரக்டர்
”ஹலோ.. சங்கர்நாராயணன் சாருங்களா?”
“ஆமாம்”
“.. ப்ரொடக்ஷன் மேனேஜர் பேசுறேன். டைரக்டர் சார் தான் நம்பர் கொடுத்தாரு”
“நல்ல ஃபாதர் கேரக்டர் இருக்கு உடனடியாய் உங்க கிட்ட பேசி டேட் வாங்கச்
சொன்னாரு”
”டைரக்டரே சொன்னாரா?”
“அட.. ஆமாங்க.. நல்ல கேரக்டர்.. த்ரூவோட்டா வரும். முக்கியமா ஒரு விஷயம் வேற படம்.. சீரியல் ஏதாவது போய்ட்டிருக்கா?”
“ம்.. இப்போதைக்கு ஏதுமில்லை.. ஏன்?”
“ஒண்ணுமில்லை.. மீசையெடுக்கணும்னு டைரக்டர் சொன்னாரு..”
“என்னாது மீசையெடுக்கணுமா? சார்.. ஏற்கனவே நான் பாதர் கேரக்டர்னு யோசிச்சிட்டிருக்கேன்.. இதில நீங்க மீசை வேற எடுக்கணுமின்னு சொல்றீங்க. எதுக்கு யோசிச்சு சொல்லட்டுமா?”
”என்னா சார்.. மத்த கேரக்டர்னா கூட வேற யாரையாவது போட்டு மாத்திருவாங்க.. ஆனா ஃபாதர் கேரக்டர்னா சீரியல் பூராவும் வரும். நல்லா யோசிச்சிக்கங்க.. அதும் டைரக்டரே உங்களைத்தான் போடணும்னு சொல்லிட்டாரு.. ”
”ம்ம்.. சரி.. டைரக்டரே சொல்லிட்டாருன்னு சொல்றீங்க.. ஓகே.. வர்றேன். என்னைக்கு டேட்டு..”
“இப்போதைக்கு மூணு நாளு.. 26, 29, அடுத்த மாசம்3 ஓகேயா..? அப்புறம் சம்பளம் என்னன்னு சொல்லிட்டீங்கன்னா எல்லாம் முடிஞ்சிரும்”
” என்னண்ணே உங்களூக்கு தெரியாதா?”
“சரி..ரெண்டுக்கு முடிச்சிக்கிறேன்”
“ஓகேண்ணே.. நல்ல கேரக்டர் தானே.. எத்தனைப் பொண்ணு எனக்கு?”
“அதெல்லாம் எனக்கென்ன தெரியும். டைரக்டர் சொன்னாரு கூப்பிட்டேன். ஓகேவா..அதெல்லாம் டைரக்டர் கிட்ட கேட்டுக்கங்க..”
“சரி காஸ்ட்யூம் ஏன்ன ஏதுன்னு அஸிஸ்டெண்ட் டைரக்டர்களை விட்டு சொல்லச் சொல்லுங்க.. போன வாட்டி குலவிளக்கு சீரியல்ல சொல்லாமப் போயி கன்பியூஸ் ஆயிருச்சு.”
“ஆ.. நீங்க ஏதும் எடுத்துக்க வேணாம். இங்க காஸ்ட்யூமர் கிட்ட சொல்லியிருக்காங்கலாம் ஓகே.. அதனால்.. வெறும் கைய வீசிட்டு வந்திருங்க.. ஓகே.. டேட் கன்பார்ம் பண்ணிக்கட்டுமா?”
“ஓகேண்ணே.. கன்பார்ம்”
மனதினுள் ஒரே குழப்பமாய் இருந்தது. இவ்வளவு சின்ன வ்யதில் ஃபாதர் கேரக்டருக்கு கமிட்டாவது என்னவோ போலிருந்தது. அடுத்த நாள் லொகேஷன் பற்றிச் சொன்ன போது கூட நான் யோசிக்கவேயில்லை. மெட்டி ஒலி போல நாலைந்து பெண்களுக்கு தகப்பன் என்றால் என்ன செய்வது. ரொம்பவும் வயசான கேரக்டரில் நடிக்க வேண்டியிருக்குமே என்றெல்லாம். யோசித்துக் கொண்டே லொகேஷனுக்கு சென்றதும், தான் தெரிந்தது ஏன் என்னை காஸ்ட்யூம் எடுத்துவரச் சொல்லவில்லை என்று.. அவ்வ்வ்வ்வ்.
அப்படி என்ன நடந்திச்சுன்னு இங்க பாருங்க..
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
நன்றி
@ஹஜாஸ்ரீன்
நன்றியோ நன்றி
உங்க தமிழ் நன்னாருக்கே..
படங்களுக்கு கதை ஏதும் எழுதி இருக்கேளா?
கேபிள் அங்கிள் : ஓவர் சீன் ஒடம்புக்காவது... :)))
காஸ்டியூம் சூப்பரு, நீங்க என்ன Prepared ஆ போயிருந்தாலும் இந்த காஸ்டியூம் எடுத்துப் போயிருக்க முடியாது.. :)
சீரியல்ல ரொம்ப நாள் இந்த கேரக்டர் வருமா?
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
நன்றியோ நன்றி //
yen intha iluwa???? wilangama irukee
ROFL..:-D
பாஸ்,
எங்களை வச்சு காமெடி கீமடி எதுவும் பண்ணலியே :-)
After TR and Babu am find a person doing so many activities.
already you know lyric writing.
Story, screenplay, dialoges, Direction
Learn music,editing, editing.
production cost will get redused.
are you planning to play the lead in your movie.
just kidding dont take it seriously.
உங்க எக்ஸ்பிரஷன் பார்த்து சிரிச்சுக்கிட்டே இருக்கேன் தலைவரே..:-))
இது பழைய சீரியல். நான் தற்போது திரைபட இயக்கத்தில் சீரியஸான முயற்சியில் இருப்பதால்.. நடிப்பதில்லை. மிக நெருங்கிய நண்பர்களுக்கு தவிர..
முதலில் சிறுகதையாய் தான் எழுத நினைத்தேன்..
@பந்து
ம்ஹும்
@பால் ஹனுமான்
:)
@சிவகுமார்
உண்மையை சொல்லப்போனால் இந்த கேரக்டரில் நடிக்க ஆர்வமேயில்லாமல் நடித்தேன்.
ஸ்ரீனிவாசன் அளவுக்கு நடிக்கிறேனா? நன்றிங்க..
எனக்கு சினிமா ஒரு passion. ஆனால் என் எண்ணமெல்லாம் திரைப்பட இயக்கத்தில்தான். ந்டிப்பது என் அடுத்த பிரியாரிட்டிதான்.
ரொம்பவும் பிடிக்காம நடித்தேன்.. அதான் உண்மை.
திரும்பவும் சில நண்பர்கள் கேட்டுட்டு இருக்காங்க.. சீரியலை தவிர்த்து சினிமாவில் மட்டும் நடிக்கலாம்னு இருக்கேன். இந்த வீடியோவ பாத்திட்டு ஓடாம இருந்தா சரி.. :)
Kothu Parrotavuku vanthen, Inga ungaliye kothi irukkanag. Good One.
Cheers
Christo
லுங்கி பாதரோன்னு நெனச்சு பயந்த கடைசியில அங்கி பாதர் ஆக்கிட்டாங்க. அந்த கெட்டப்புல செமயா இருக்கீங்க.
ஒரு GK க்காக கேட்கிறேன் , ரெண்டுன்ன எம்புட்டு?
Oscar . . Confirm
” என்னண்ணே உங்களூக்கு தெரியாதா?”
“சரி..ரெண்டுக்கு முடிச்சிக்கிறேன்”
“ஓகேண்ணே.. //
ஓ! ரெண்டா?
கேபிள்ஜி ரசிகர்மன்றம்
கே.கே.நகர் கிளை.
-அருண்-