நிதிகளின் ஆக்கிரமிப்பிலிருந்ததாய் சொல்லப்பட்ட காலத்தில் தனியொரு படமாய் வெளிவந்து வெற்றி பெற்ற களவாணி தயாரிப்பாளரிடமிருந்து மற்றொரு படம். போன வாரமே ரிலீஸாக இருந்தது சுமார் 80 லட்சத்திற்கும் மேலாய் டிபிசிட் காரணமாய் ரிலிஸாகாமல் இந்த வாரம் ரிலீஸ் ஆகியிருக்கிற படம். டிபிசிட் என்றால் என்ன என்பவர்களுக்கு சினிமா வியாபாரம் நூலை படிக்குமாறு சொல்லிக் கொள்கிறேன். (விளம்பரம்)
விமலும், சனுஜாவும் ராத்திரியோடு ராத்திரியாய் ஊரைவிட்டு ஓடி வந்து வேறொரு ஊரின் பஸ் நிலையத்தில் ஒருவரிடம் மாட்டுகிறார்கள். அவர்களைப் பற்றிய ப்ளாஷ்பேக் ஆரம்பிக்கிறது. பிஸினெஸ் பண்ணுகிறேன் பேர்விழி என்று ஊரெல்லாம் கடன் வாங்கி ஒளிந்தலையும் விமலின் அப்பா ஒரு அரசு வாத்தியார். நல்லாசிரியர் விருது பெற்றவர். எந்த விதமான பொருப்புமில்லாமல் அலையும் விமலின் பார்வையில் சனுஜா விழுகிறார். இருவருக்கும் காதல் என்று ஏதுமில்லாமல் ஒரு கட்டத்தில் சனுஜாவின் செயின் விமலிடம் மாட்டிக் கொள்ள, அதை வைத்து சனுஜாவை கரெக்ட் செய்யலாம் என்று நினைத்திருக்கும் போது, நண்பனின் அப்பாவுக்கு மிகப் பெரிய ப்ரச்சனை ஒன்று வர, அந்த நகையை அவளுடய வில்லன் மாமனிடமே அடமானம் வைக்க, ப்ரச்சனை ஆரம்பிக்கிறது. அது எப்படி முடிகிறது என்பதை வெள்ளித்திரையில் காண்க.
லாஜிக் என்ற ஒரு வஸ்துவை நம் மனதிலிருந்து தூக்கி எறிந்துவிட்டால் நகைச்சுவையாய் படம் பரபரவென ஓடுகிறது. அதிலும் கடன் கொடுத்த சிங்கம்புலியிடம் விமல் மிமிக்கிரி செய்யும் காட்சி, அப்பாவின் குரலில் பேசி பேங்க் அக்கவுண்ட் ஓப்பன் செய்ய விமல் செய்யும் மிமிக்கிரி தகிடுதத்தம் என்று பாதி படத்திற்கு இப்படியே ஓடி பொழுது போகிறது. திடீரென சீரியஸாக கதை சொல்ல ஆரம்பித்துவிடுகிறார்கள். அப்போதுதான் தொய்ந்து விழுகிறது திரைக்கதை. நடுநடுவே டெரர் வில்லனாய் சனுஜாவின் முறை மாமன். அவனைப் பார்த்தாலே பயந்து நடுங்கும் சனுஜாவும், அவளது அம்மாவும். ஏன் என்றால் சனுஜாவின் அப்பாவை தள்ளி கொலை செய்ததே மாமன் மகன் வில்லன் தானாம். ஏதோ லாலிபாப்பை பிடுங்கிக் கொண்டான் என்பது போல ஒரு குட்டி ப்ளாஷ் பேக்குகிறார்கள். காமெடி. அதன் பிறகு நடக்கும் காட்சிகள் எல்லாம் வெறும் காமெடி என்ற மாத்திரத்தில் எடுத்துக் கொண்டால் எல்லாம் நன்மைக்கே.

விமலுக்கு ரொம்பவும் மெனக்கெடாத இம்மாதிரி கேரக்டர்கள் பழகிப் போய் அல்வா போல வழுக்கிக் கொண்டு செய்கிறார். ஆனால் நடிப்பதற்கு என்று பெரியதாய் ஏதுமில்லை. சனுஜா அழகாய் இருக்கிறார். அந்த உதட்டையும், கன்னத்தையும் பிடித்துக் கிள்ளி முத்தமிட வேண்டும் போல இருக்கிறார். போன படத்திற்கு இந்த படம் ஊதி விட்டார் கவனிக்கவும். மயில்சாமி ஆங்காங்கே கிச்சு கிச்சு மூட்டுகிறார். எம்.எஸ். பாஸ்கர் பழைய தேங்காய் சீனிவாசனின் வாடையில் டபுள் மீனிங் பேசுகிறார்.
ரமேஷின் ஒளிப்பதிவு பற்றி பெரிதாய் சொல்ல ஏதுமில்லை. தாஜ்நூரின் இசை படத்தின் போக்கிற்கு பெரிய இடைஞ்சலாய் இருக்கிறது. இரண்டாவது பாதியில் க்ளைமாக்ஸுக்கு முன்னால் வரும் பாடல் படு சொதப்பல். காமெடிதான் பிரதானம் என்று ஆகிவிட்ட பிறகு லாஜிக்காக பாட்டெல்லாம் போட்டுத்தான் கதையை சொலல் வேண்டுமா? முடியவில்லை. எல்லா பாடல்களும் எடுபடவில்லை என்றே சொல்ல வேண்டும்.

கதை, திரைக்கதை, வ்சனமெழுதி இயக்கியவர் சுரேஷ். ஆங்காங்கே வரும் ஒன்லைனர்களும், சிங்கம்புலி வரும் காட்சிகளூம் இண்ட்ரஸ்டிங். வில்லனுக்கும், ஹீரோவுக்குமான காட்சிகள் மிகக் குறைவே. அதனால் பெரிய கன்பர்ண்டேஷன் ஏதுமில்லையாதலால் சுவாரஸ்யம் கூட வில்லை. சீரியஸாய் வரும் காட்சிகள் கூட முன்னாள் வரும் லாஜிக் மீறிய காமெடி காட்சிகளால் ரசிக்க முடியவில்லை. உதாரணமாய் அப்பாவும், மகனும் பேசிக் கொள்ளும் காட்சி. அதே போல் க்ளைமாக்ஸ் காட்சியெல்லாம் படு சினிமா. போலீஸ், வக்கீலுக்கு எல்லா க்ரெடிட் கார்டேகிடையாது என்பது இயக்குனரே உங்களுக்கு தெரியாதா?. திருடனுக்கு தேள் கொட்டினா மாதிரி சிங்கம் புலியிடமே கடன் வசூல் செய்ய விமல் வருமிடம் அதகளம். மொத்தத்தில் எத்தன் என்ற பெயருக்கு ஏற்றார்போல் இல்லாவிட்டாலும் தப்பிச்சிருவானு தோணுது.
எத்தன் – காமெடி எஸ்கேப்
எத்தன் – காமெடி எஸ்கேப்
Post a Comment
9 comments:
naan escape
உண்மையிலேயே இந்த படத்தில் இருக்கும் அணைத்து மொக்கை பாடல்களையும் எடுத்து விட்டால் படம் நன்றாகவே இருக்கும். கொஞ்சம் ஸ்பீடாகவும் போகும். படத்திற்கு ஸ்பீட் பிரேக்குகள் அந்த பாடல்கள் தான்.
அப்புறம் அந்த பழைய பாடல்களை சரியான இடத்தில பிளேசிங் செய்து சிரிப்பை வரவழைத்து விட்டார்கள்.
கிங் விஸ்வா
காமிக்ஸ் படிக்கும் தமிழ் ஹீரோயின்
தமிழ் சினிமா உலகம் - மைதானம் சினிமா விமர்சனம்
//சனுஜா அழகாய் இருக்கிறார். அந்த உதட்டையும், கன்னத்தையும் பிடித்துக் கிள்ளி முத்தமிட வேண்டும் போல இருக்கிறார்.//
போன பதிவுக்கு இந்தப் பதிவு ...விட்டார் கவனிக்கவும்!
//அந்த உதட்டையும், கன்னத்தையும் பிடித்துக் கிள்ளி முத்தமிட வேண்டும் போல இருக்கிறார். //
அருமை...
பொருப்புமில்லாம -- Poruppu illaama oru spelling mistake..
what is this Cable sir?
super review cable sir
pixar story on google docs written by somebody
https://docs.google.com/viewer?a=v&pid=explorer&chrome=true&srcid=0B_fcNC8PWNURODk3ODZkZjYtNDYxNi00YmY4LWIyZTYtYzE3OTBlMTgyZmRk&hl=en_US
.d...
//விமலும், சனுஜாவும் ராத்திரியோடு ராத்திரியாய் ஊரைவிட்டு ஓடி வந்து வேறொரு ஊரின் பஸ் நிலையத்தில் ஒருவரிடம் மாட்டுகிறார்கள். அவர்களைப் பற்றிய ப்ளாஷ்பேக் ஆரம்பிக்கிறது. பிஸினெஸ் பண்ணுகிறேன் பேர்விழி என்று ஊரெல்லாம் கடன் வாங்கி ஒளிந்தலையும் விமலின் அப்பா ஒரு அரசு வாத்தியார். நல்லாசிரியர் விருது பெற்றவர். எந்த விதமான பொருப்புமில்லாமல் அலையும் விமலின் பார்வையில் சனுஜா விழுகிறார். இருவருக்கும் காதல் என்று ஏதுமில்லாமல் ஒரு கட்டத்தில் சனுஜாவின் செயின் விமலிடம் மாட்டிக் கொள்ள, அதை வைத்து சனுஜாவை கரெக்ட் செய்யலாம் என்று நினைத்திருக்கும் போது, நண்பனின் அப்பாவுக்கு மிகப் பெரிய ப்ரச்சனை ஒன்று வர, அந்த நகையை அவளுடய வில்லன் மாமனிடமே அடமானம் வைக்க, ப்ரச்சனை ஆரம்பிக்கிறது. அது எப்படி முடிகிறது என்பதை வெள்ளித்திரையில் காண்க.//
யோவ்.. உனக்கு மனசாட்சியே கிடையாதாய்யா..
எப்பிடிய்யா இவ்வளவு அழகான ஒரு கதை இந்தப்படத்துல இருக்குறா மாதிரி எழுதுறீங்க.? எப்பிடிய்யா கண்டுபுடிச்ச.? இதுவே உனக்குத் தெரியுதுன்னா.. கொசுவோட கால் சுண்டுவிரல் நகத்துல இருக்குற அழுக்கக்கூட கண்டுபுடிச்சுடுவல்ல நீயி?
ஸ்ரீ, குருவி, யாருக்கு யாரோ லிஸ்ட்ல இந்தப்படத்த சேர்த்துருக்கேன்யா.
இந்தப்படத்த சுமாரா இருக்குன்னு சொன்ன காரணத்துக்காக நீ நரகத்துக்குதான் போவே.!
cable sanger arumaiyana pathivukal
come to my blog www.suncnn.blogspot.com
Post a Comment