எத்தன் கண்டேன், மைதானம், சுட்டும் விழிச் சுடரே ஆகிய படங்கள் இன்று வெளியாகியிருக்கின்றன. எத்தனைத் தவிர மற்ற படங்கள் எல்லாம் வெளியாகிவிட்டது. எத்தன் மட்டும் டெபிஸிட்டில் இருப்பதால் வெளியாக்வில்லையாம். பெரும்பாலான படங்களுக்கு மல்ட்டிப்ளெக்ஸ், மற்றும் சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்களில் கூட டேட் கிடைக்கவில்லையாம். ஒரு ஷோவும், அரை ஷோவுமாய் ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலான தியேட்டர்களில் ஏற்கனவே வெற்றிகரமாய் ஓடிக் கொண்டிருக்கும், கோ, வானம், ஆகிய படங்களுடன், எங்கேயும் காதல், போன்ற படஙக்ள் ஓடுவதாலும், தெலுங்கு படங்கள் சுமார் நான்கு பெரிய தியேட்டர்களில் வெளியாகிறது. சமீபகாலமாய் தமிழ் தவிர, தெலுங்கு படங்கள் தமிழ் படங்களுக்கு ஈடாக பத்து செண்டர்களுக்கு மேல் ஓடுகிறது. கூட்டமும் வருகிறது என்பதால் பல சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்காரர்கள் அமோகமாய் வரவேற்கிறார்கள். ஆட்சி மாறியும், தமிழ் படங்களுக்கு தியேட்டர் கிடைக்கவில்லை என்று இப்போது புலம்புவார்கள் இருக்கிறார்களா?
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Post a Comment
9 comments:
குட் கொஸ்ட்டின்...
கேபிள் ஜி, இவிங்களுக்கு படம் கிடைக்கல என்பது பிரச்சனை இல்ல... கருணா அன் கோவுக்கு மட்டும் எப்படி முக்கிய தியேட்டர்கள் கிடைக்குது? அதான் மேட்டர்.
ஜானகி ராமன். கருணா அண்ட் கோவிற்கு சென்ற ஆட்சியில் அல்ல.. இனி எப்போது ப்டமெடுத்தாலும் தியேட்டர் கிடைக்கும் ஏனென்றால்.. அவர்களின் படங்களின் ஆர்டிஸ்ட் மற்றும் டெக்னீஷியன்களின் வேல்யூ அப்படி.
உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 50/100 மார்க். நன்றி!
தெலுகு படங்களின் எதிரி கேபிளார் ஒழிக.
உடனடியாக அவர் வீரா படம் பார்க்கும்படி உத்தரவிடப்படுகிறார்.
கிங் விஸ்வா
தமிழ் சினிமா உலகம் - ப்ரீஸ்ட் - கல்லறை உலகம் விமர்சனம்
Please take care about the spelling mistakes.
ஹய்யா அடுத்த matter ready. போன வாரம் mallu வாரம்... இந்த வாரம் கொல்டி வாரமா?
திங்கள் பதவி வந்தவுடன் உடனே வெள்ளி அன்றே அனைத்து படங்களுக்கு அரங்குகள் கிடைக்க வேண்டும். அப்படி என்றால் உடனே நன்றாக ஓடும் படங்களையும் தூக்கிவிட்டு புது வரவுகளை காட்டவேண்டும். உடனே அந்த படங்களின் ஆட்கள் ஆட்சி மாறிய உடனேயே இப்படியா அராஜம் என்பார்கள். முன்னே சென்றாலும் உதை பின்னே சென்றாலும் உதை. என்ன வாழ்கைடா சாமி...
தொழிலில் தலையிடாமல் சந்தை விசைகளுக்கு விட்டுவிட்டாலே போதாதா...
//ஜானகி ராமன். கருணா அண்ட் கோவிற்கு சென்ற ஆட்சியில் அல்ல.. இனி எப்போது ப்டமெடுத்தாலும் தியேட்டர் கிடைக்கும் ஏனென்றால்.. அவர்களின் படங்களின் ஆர்டிஸ்ட் மற்றும் டெக்னீஷியன்களின் வேல்யூ அப்படி.//
எல்லாம் கொஞ்ச நாள்தான். இப்போது தானே எரிகிறதை எடுத்திருக்கிறார்கள். இனி கொதிப்பது தானாக அடங்கிவிடும்! இன்னும் சில மாதங்கள் இவர்கள் தயாரிப்பில் படம் வரவில்லை என்றால் எல்லாம் மாறிவிடும்!
எது எப்படியோ. இந்த ஆட்சி மாற்றத்தால் தமிழ் சினிமா உயிர் பெற்றால் நல்லது.
Post a Comment