I AM
அஃபியா ஒரு வெப் டிசைனர். தன் கணவன் வேறொருத்தியுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கிறான் என்றும் அதனால் தான் அவர்களுக்குள் குழந்தையை தள்ளிப் போடுகிறான் என்றும் கண்டுபிடித்து, விவாகரத்து கொடுத்துவிட்டு, ஐவிஎஃப் மூலம் விந்தணுக்களை தானம் பெற்று குழந்தைப் பெற்றுக் கொள்ள முடிவெடுக்கிறாள். ஆனால் அதற்கு முன்பு தனக்கு விந்தணு கொடுப்பவனை பார்க்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி போராடுகிறாள். ஆஸ்பிட்டல் விதிகளை மீறி அவள் அவனை சந்திக்கிறாள். பின் நடந்தது என்ன?
காஷ்மீரி பண்டிட் மேக்னா.. காஷ்மீரிலிருந்து உயிர் பிழைப்பதற்காக் காஷ்மீரை விட்டு துரத்தப்பட்ட பண்டிட் குடும்பம். மீண்டும் காஷ்மீருக்கு வரவேக் கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு வேறு வழியில்லாமல் தன் பூர்வீக சொத்தை, தனக்கும் தன் ஊருக்குமான பந்தத்தை அறுக்க காஷ்மீருக்கு வருகிறாள். இது மேக்னாவின் கதை.
அபிமன்யூ, டாகுமெண்டரி பிலிம் மேக்கர். சிறு வயதில் தன் வளர்ப்பு தந்தையால் வண்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டவன். அதன் தாக்கத்திலிருந்து மீள முடியாமல் பை செக்ஷுவலாகவும், கேயாகவும் இல்லாமல் குழப்பத்தில் வாழ்பவன். அவன் அதிலிருந்து மீண்டானா?

ஓமர் ஒரு கார்பரேட் ஆசாமி. ஹோமோ செக்ஷுவல். ஒரு தொழில் முறை “கே”யை கூட்டிக்க் கொண்டு போய் போலீஸில் மாட்டி அதனால் அவமானப்பட்டு, ஏமாற்றப்படுகிறான். மீண்டும் அவனை ஓமர் சந்திக்கிறான். என்ன நடந்தது?
இப்படி நான்கு தனித்தனி கதைகளை சிறுகதைகளாய் கொடுத்திருக்கிறார்கள். இதில் பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் நான்கு கதைகளில் வரும் கேரக்டர்களும் எங்கோ, எப்படியோ மற்ற கதை மாந்தர்களுடனே ஒரு தொடர்பிலிருக்கிறது போல அமைத்திருக்கும் திரைக்கதை. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதமாய் திரைக்கதையமைத்து சொல்லியிருக்கிறார்கள். இதில் எனக்கு மிகவும் பிடித்தது அஃபியா, மேக்னா, அபிமன்யூவின் எபிசோடுகள். அஃபியாவின் கதையில் நந்திதாவின் சட்டிலான நடிப்பும், வசனங்களும் நச். அஃபியாவை சந்திக்க வரும் அபிமன்யூ “ என்னை யாராலும் அதிர்ச்சிக்குள்ளாக்க முடியாது” என்று சொல்லும் போது. “அப்படியா. நீ ஏன் என் குழந்தைக்கு அப்பாவாகக்கூடாது? உன் விந்தணுக்களை எனக்கு கொடுப்பது மூலம்?” என்று கேட்க, அபிமன்யு “அதையே ஏன் நாம் நேரடியாக உன் அறையிலோ,அல்லது என் அறையிலோ வைத்துக் கொள்ளக்கூடாது?” என்று கேட்பான். சட்டென கேட்டால் தூக்கிவாரிப் போடக்கூடிய வசனங்கள் தான் ஆனால் நச்.
தன் வளர்ப்புத் தந்தையால் வன்புண்ர்ச்சி செய்யப்பட்ட அபிமன்யூ. அவரது காதலி நடாஷாவாக ராதிகா ஆப்தே. மிகவும் அற்புதமாக சொல்லப்பட்ட கதை இதுவென என் கணிப்பு. ஒர் வளர்ப்புத்தந்தை தன் மகனிடம் வன் புணர்ச்சியை தொடர்ந்து செய்து கொண்டிருக்க, தனக்கு ஏதாவது புதிதாய் வேண்டுமென்றால் அவனுடன் உறவு கொண்டு வாங்கி பழகி, அதன் உளைச்சலிருந்துமீள முடியாமல் தவிக்கும் கேரக்டர். மிக அருமையாக எங்கேயும் அருவருப்பு தட்டாமல் கம்பி மீது நடப்பது போல, உணர்வு குறையாமல் சொல்லப்பட்டிருக்கிறது. ராதிகா ஆப்தே ஒரு நடிகை. அவனின் காதலி. மிகவும் சுந்தந்திரமானவள். அவளும் அபிமன்யூவும் பேசிக் கொள்ளும் வசனங்கள் அடிதூள்.
“உன்னைச் சுற்றி பெண்கள் எப்போது இருக்கிறார்களே. எல்லோருடனும் படுப்பாயா?”
“என்னைப் பொறுத்த வரை ஆணுறுப்பை வைத்து யோசிக்காத ஆண்களில் ஒருவன் நீ”
“அப்படியே யோசித்தால். என்ன சொல்வீர்கள் என்று எனக்கு தெரியும் அவன் ஒரு ஆஸோல் என்றல்லவா?”
ஜெய் ஒரு காபி ஷாப்பில் தன் இனமான ஹோமோ செக்ஷுவல் ஓமரை கண்டு பிடித்து அவனுடன் காரில் உறவு கொள்ளும் போது போலீஸாரால் பிடிக்கப்படுகிறான். அதன் பிறகு நடக்கும் சம்பவங்களும், வசனங்களும் நமக்கு அருகாமையில் இதெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது என்றாலும் நெளிய வைத்தது. ஆனால் ஒரு கார்பரேட் ஹோமோ கேரக்டரில் தத்ரூபமாய் வாழ்ந்திருக்கும் ராஹுல் போஸை பாராட்டியே தீரவேண்டும். என்ன ஒரு அருமையான பாடி லேங்குவேஜ். எதிராளும் நம்மைப் போல என்று கண்டுபிடித்து சரிகட்டிக் கூட்டிப் போக பேசும் வசனங்கள், உடல்மொழி எல்லாமே மைண்ட் ப்ளோயிங்.
கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட இணை தயாரிப்பாளர்களோடு பயணப்பட்டிருக்கிறாது இப்படம். பல உலகப் பட விழாக்களில் பங்கேற்றிருக்கிற இப்படத்தின் பப்ளிசிட்டி பெரும்பாலும் இணையத்தின் மூலமாய் பிரபலப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இப்படம் கமர்ஷியலான வெற்றியை கொண்டு வராவிட்டாலும். வெற்றிப் படமே.
தயாரிப்பாளர் இயக்குனர் ஓனிரின் நேர்மையான கதை சொல்லல் முறை நம்மை தாக்கத்திற்கு உட்படுத்துகிறது. என்றாலும் அபிமன்யூவின் கதையை சொல்லும் திரைக்கதை அருமை. அவனுடய அப்பாவாக நடித்த இயக்குனர் அனுராக் காஷ்யப்பின் நடிப்பும் குறிப்பிடத்தக்கது. ஒளிப்பதிவு தன் வேலையை செவ்வனே செய்திருக்கிறது. பின்னணியிசையும் பாடல்களும் உறுத்தாமல் படத்தை நகர்த்திச் சொல்கிறது. கடைசி இருபது நிமிஷங்களைத் தவிர அமைதியாய் சிந்திக்கவைக்கும் அதிரடிப் படமே.
IAM- A Different Film To Watch.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
----
I will watch this movie.. thanks na...
Good commentary, inducing the interest of the reader to watch the movie.
Thanks.
-
DREAMER
watch tis movie...பக்கத்து வீட்டில் ஒழிந்திருந்து அவ்வப்போது இரவு நேரத்தில் தன் பக்கத்து வீட்டு பெண்ணின் வீட்டில் ரகசியமாய் நுழைகிறான் ஒரு பெண் பித்தன். அருமையான திரில்லர்.
அருமையான வரிகள்
BTW in the below paragraph, i guess it has to be Jai instead of Omar.
//ஓமர் ஒரு கார்பரேட் ஆசாமி. ஹோமோ செக்ஷுவல். ஒரு தொழில் முறை “கே”யை கூட்டிக்க் கொண்டு போய் போலீஸில் மாட்டி அதனால் அவமானப்பட்டு, ஏமாற்றப்படுகிறான்//