Thottal Thodarum

May 3, 2011

Nenu Na Rakshashi -நானும்.. என் ராட்ஷஸியும்..

nnrmoviereview காசு கொடுத்தால் யார் எவரென்று கூடக் கேட்காமல் கொலை செய்யும் ஒருவனுக்கும், யாராவது தற்கொலை செய்து கொள்ள ஆசைப்படுகிறவர்களூடய சாவை நேரடியாய் சென்று வீடியோ எடுத்து யூ டுயூபில் போடும் பெண்ணுக்கும் காதல் வருகிறது. அதன் பின்னால் பிரச்சனைகளும் வருகிறது. என்னா ஒரு லைன்.. சும்மா பின்னி பெடலெடுத்திருக்க வேணாம். ம்ஹும்..


எனக்கு ராணாவை முதல் படத்திலிருந்தே மிகவும் பிடிக்க ஆரம்பித்துவிட்டது. இரண்டாவது படமான ஹிந்தி தம்மேரெ தம் படத்தில் இன்னமும் பிடித்துவிட,மிக ஆர்வமாய் படம் பார்க்கப் போனேன். இரண்டு காண்ட்ராஸ்டான கேரக்டர்களை வைத்து கதை செய்ய ஆரம்பித்ததும் அட பரவாயில்லையே என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.  ஒரு போலீஸ்காரனின் பக்கத்துவீட்டுக்காரனாய் இருந்து கொண்டு, அவனது கேன்சர் பாதிக்கப்பட்ட சின்னப் பெண்ணின் நண்பனாகவும், வெளியே கூலிப்படை கொலையாளியாகவும், இருக்கும் வரை ராணா நிஜமாகவே அதகளமாகத்தான் இருக்கிறார். அதிலும் ச்ண்டைக்காட்சிகளில் இருக்கும் வேகமும், ஸ்டைலும் அட்டகாசமாய் இருக்கிறது. இடைவேளைக்கு பிறகு என்ன செய்வது என்று புரியாமல் இயக்குனரும் கதாசிரியரும் குழம்பிப் போய் இருப்பதால் இவரை குறை சொல்ல முடியாது.
nenu இலியானா தான் அந்த யூடூயூப் பெண். மிகவும் சப்டிலான ஆனால் ராட்ஷஸியான கேரக்டர்தான்.  பல இடங்களில் இவரது ஸ்கிரின் ப்ரெசென்ஸே நம்மை மயக்குகிறது. என்னா ஸ்ட்ரக்சர்ப்பா…. ஆங்காங்கே நடிக்க முயற்சி செய்திருக்கிறார். ஆனால் அதற்கான பின்புலம் காட்சிகளில் இல்லாததால் சப்பென ஆகிவிடுகிறது.  முக்கியமாய் இவருக்கு  சொல்லப்படும் ப்ளாஷ்பேக் படு திராபை. அதிலும் ட்வின்ஸ் மேட்டர். அதன் பிறகு நடக்கும் காட்சிகளில் படு லாஜிக் சொதப்பல்கள். படிந்தி்னம்மோ பாடலின் ட்யூனும், அதில் ரானா , இலியானாவின் இயல்பான நடனமும் அருமை.
Nenu Naa rakshashi Wallpapers (2)  இவர்களை தவிர போலீஸ் ஆபீசராய் வரும் சுப்பராஜு நல்ல பர்மாமென்ஸ். இவரின் கேரக்டருக்கு ஆரம்பத்தில் கொடுக்கும் பில்டப், இரண்டாவது பாதியில் வீழ்ந்து விடுவதால் ஏறவில்லை. முமைத்கான், ஆலி போன்றோனின் காமெடி ஸ்கிட் எடுபடவில்லை.

படத்தில் மிக முக்கியமாய் பாராட்டப்பட வேண்டியவர் ஒளிப்பதிவாளர் அனில் ரத்தோட்.  அருமையான க்ளோசப் ஷாட்டுகள், வெனிஸ் போனவுடன் படத்தில் தெரியும் லேசானா ப்ளூ டோன் ரொமான்ஸ் எல்லாவற்ரையும் அருமையா கொண்டு வந்திருக்கிறார். . இவருக்கு துணையாய் எடிட்டரும் தன் பங்குக்கு சிறப்பாக பணியாற்றியிருக்கிறார். இசையமைப்பாளர்கள் விஷ்வா, ரஹ்மானின் இசையில் படிந்தி பாடல் மனதில் நின்றதைப் போல வேறெதுவும் நிற்கவில்லை. அப்பாடலும் மைக்கேல் ஜாக்சனின் ஒரு பாடலை நினைவுப் படுத்துகிறது.
nenu-na-rakshashi-wallpapers-4 எழுதி இயக்கியவர் பூரி ஜெகன்னாத். போக்கிரிக்கு பிறகு அவருக்கு நேரம் சரியில்லை போலிருக்கிறது. வரிசையாய் தோல்வியில் இருக்கிறது. அதில் இப்படமும் சேர்ந்திருக்கிறது. இவர் மாதிரியான கேலிபர் இயக்குனருக்கு லட்டு மாதிரியான லைன், திரைக்கதையில் சொதப்பியதால் வீழ்ந்துவிட்டது.  ஒரு கட்டத்தில் இது தற்கொலைக்கு எதிரான கருத்து சொல்லும் படமா? இல்லை இரண்டு மாறுபட்ட ஆட்களிடையே ஏற்படும் காதல் கதையா?  என்றெல்லாம் தடம் மாறி போவதால் ஒன்றமுடியவில்லை. அதையும் மீறி ஆங்காங்கே பூரி தன் முத்திரையை பதித்திருக்கிறார். முக்கியமாய் மேக்கிங்கில். படு ஸ்டைலிஷான மேக்கிங்.  ப்டிந்தினம்மோ பாடலும்,  ஆக்‌ஷன் ப்ளாக்குகளும் க்யூட். “ஐ லவ் யூ என்று ஒரு ஆண் சொல்வது ஒரு புல்பேக்கேஜ் போல ஆனால் பெண்ணுக்கு மட்டும், காதல், செக்ஸ், அன்பு, எல்லாமே தனித்தனியாக யோசிப்பது போல ஆண்கள் இல்லை என்று ராணா ஐ லவ் யூ சொல்லுமிடம் ரசனை. இப்படி ஆங்காங்கே மிளிரும் ஒரிரு காட்சிகளைத் தவிர பல இடங்களில் கொட்டாவி விடுவதையும், படத்தில் கேரக்டர்கள் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து அலையும் மனநிலை நமக்கும் வருவதை தவிர்க்க முடியவில்லை.
Nenu Na Rakshashi – Only for Die Hard Rana Fans
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

5 comments:

க ரா said...

தமிழ்ல எப்படியும் ரி.மேக்காமயா போயிரப்போராங்க.. :) அப்ப பார்த்துக்கறேன் :)

Philosophy Prabhakaran said...

// யாராவது தற்கொலை செய்து கொள்ள ஆசைப்படுகிறவர்களூடய சாவை நேரடியாய் சென்று வீடியோ எடுத்து யூ டுயூபில் போடும் பெண்ணுக்கும் //

இப்படிஎல்லாம் கூட மனுஷங்க இருக்காங்களா...???

King Viswa said...

ஒழுங்காக அந்த இன்டர்வெல் பிளாக் உடன் படத்தை முடித்து இருந்தால் ஒரு சூப்பர் படம் என்று நானும் சொல்லி இருப்பேன். ஆனால் இன்டர்வெல்லுக்கு பிறகு கதையை எப்படி கொண்டு செல்வதென்றே புரியாமல் முடித்து இருக்கிறார் பூரி. அவரது அந்த மும்மைத் கான் பிக்செஷன் நம்மை பாடாய் படுத்துகிறது.

தெலுகில் இந்த ஒரு ஆண்டில் மட்டும் நான் பல நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் மொக்கை ஸ்கிரீன் பிளே காரணமாக திராபை படங்களாக மாறி இருப்பதை கண்டிருக்கிறேன். படத்தின் ஒன் லைன் செமையாக இருக்கும், முழுபடமும் பார்த்தல் மொக்கையாக இருக்கும்.உதாரணமாக வாண்டட் (கோபிசந்த் படம்), இந்த படம் என்று பல படங்களை சொல்லலாம்.

கிங் விஸ்வா

லேட்டஸ்ட் காமிக்ஸ் தகவல்கள்-காமிக் கட்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ் சித்திரக்கதை-சென்னை சூப்பர் கோமிக்ஸ்

Indian said...

//சப்டிலான //

அது 'சட்டில்'னு கமுக்கமா சொல்லி அப்பீட்டுகிறேன்.

Prabu M said...

பூரி.... சப்பாத்தி ஆகிட்டார்ன்னு சொல்லுங்க....