பதிவாயிரம் -1000
பாண்ட் டவுன்லோட் இல்லாமல் தமிழில் இணையதளம் ஆரம்பிக்கலாம் என்ற எண்ணம் தோன்றி இணையத்தை தேடிய போது அகப்பட்டதுதான் வலைப்பூ உலகம். அப்படி முதல் முதலாய் படித்தது அந்நாளைய இணைய உலக பிரபலமான லக்கிலுக்கின் பதிவுதான். அவர் சைக்கிள் கற்றுக் கொண்டதை பற்றி எழுதிய ஒரு கட்டுரையை படித்துவிட்டு அவரின் மின்னஞசலுக்கு எழுதினேன். அப்போது தோன்றிய விஷயம்தான் வலைப்பூ ஆரம்பிப்பது என்று. ஆனால் அதற்குள் தமிழில் நாடகம்.காம் என்கிற பெயரில் இணையதளத்தை ஆரம்பித்தேன். அப்போது எனக்கு டிசைனிங்கில் உதவியவர் இன்றைய பிரபல பதிவர் ஹாலிவுட் பாலா. அப்போது வெறும் பாலாதான். அவர் பாதி டிசைனிங்கிலிருந்த போது எஸ்கேப்பாகிவிட,(அப்போது காணாமல் போனவரை கண்டுபிடித்து கொடுத்ததும் இந்த இணையம்தான்) ஒரு மாதிரி தட்டுத் தடுமாறி நானே டிசைனிங்கை முடித்து ஒரு ஆறு மாதம் நடத்திவிட்டு மூடிவிட்டேன். அது ஏன் என்பது தனிக் கதை.