Thottal Thodarum

Jun 6, 2011

கொத்து பரோட்டா-06/06/11

முப்பது லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி மேலும் தொடர்ந்து ஆதரவு தந்து கொண்டிருக்கும் வாசக, வாசகியர்களுக்கும், விளம்பரதாரர்களுக்கும் என் நன்றிகள் பல.. சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

ஜஸ்டின் பைபர். உலகையே தன் துள்ளலான இசையால் மயக்கி வரும் டீனேஜர். அதிலும் இவனது பேபி பாட்டை கேட்டு ஜுரம் வந்து அலையும் இளைஞர்கள் கோடி. சமீபத்தில் தான் யூடுயூபில் அந்த பாடலைப் பார்த்தேன். பாடலில் இருக்கும் இளமை, விஷுவலாகவும் இருக்க, பின்னென்ன அடி தூள் தான். இவரைப் பற்றி ஏதாவது கொஞ்சம் எழுதலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த போது இணையத்தில் கிடைத்தது அஜயன் பாலாவின் கட்டுரை. அவரின் கருத்தும் என் கருத்தும் ஒரே..ஒரே..  என்னா அழகுடா அந்த பொண்ணுங்களும் அவனின் கொஞ்சம் பெமினைனான குரலும்... ம்ஹும்.

############################### ############
“ழ” பதிப்பகத்தின் அத்தனை புத்தகங்களும் சென்னை மாம்பலம் ஸ்டேஷன் அருகில் உள்ள தனலஷ்மி புக் ஸ்டாலிலும், சைதாப்ப்பேட்டை ஹரிபாபு புக் மார்ட்டிலும், மேற்கு மாம்பலம் முருகன் புக் ஸ்டாலிலும் கிடைக்கும்.
##########################################
பாலாவின் அவன் இவன் படத்தை சன் பிக்சர்ஸ்தான் வாங்கி, ரிலீஸ் செய்வதாய் இருந்தது. இப்போது மீண்டும் ஏஜிஎஸ் கையிலேயே போய்விட்டது. இனி அடுத்த படம் வரும் வரை எங்கேயும் காதல் விளம்பரத்தையே தேய்த்துக் கொண்டிருப்பார்கள். மாவீரன் படத்தை தேர்தலுக்கு முன்  ரெட்ஜெயண்ட் தான் நேரடியாய் வெளியிடுவதாய் பத்திரிக்கையாளர்கள் நிகழ்வில் அறிவித்திருந்தார்கள். ஆனால் தேர்தலுக்கு பிறகு அவர்கள் அப்படத்திலிருந்து விலகி விட்டதாய் செய்தி. ஆனால் படத்தின் விநியோகம் செய்தது அவர்கள்தான். முழு அளவில் அவர்களின் சார்பாக ஒருவர் தான் என்பது உண்மை.  கலைஞர் டிவியில் மட்டுமே தொடர் விளம்பரம் வருவது அதை உறுதிப்படுத்துகிறது.அதனால் தான் சொன்னேன் என்ன மாற்றம் வந்தால் என்ன? இவரகளின் வியாபாரம் குறையவே குறையாது.
#################################
நேற்று முருகன் இட்லி கடையில் இட்லி கேட்டால் சப்பையாய் ரெண்டு ரப்பர் பந்துகளை போட அது துள்ளித் துள்ளிக் குதித்தது. சரி சாப்பிட்டு பார்ப்போம் என்று சாப்பிட்டால் படு கொடுமை. உடனே சர்வரிடம் கூப்பிட்டு என்னங்க ஆச்சு உங்க இட்லிக்கு? என்று கேட்ட மறுவினாடி “சாரி சார். புது மாவை ஊத்திட்டாங்க” என்றார். அப்படியென்றால் தெரிந்தேதான் அதை சர்வ் செய்திருக்கிறார்கள். ஒரு இட்லி பதினோரு ரூபாய். நான் அவர்களிடம் வேண்டுமானால் ஒரு இட்லிக்கு பில் போட்டுக் கொள்ளுங்கள். இன்னொரு இட்லி நான் சாப்பிடவேயில்லை. நான் பணம் தர மாட்டேன் என்றதும். இன்னொரு சர்வர் வந்த்  வேணுமின்னா இன்னும் ரெண்டு இட்லி தர்றேன். காசு தரவேண்டாம் என்றார். அருமையான கஸ்டமர் சர்வீஸ். உணவகங்களில் இம்மாதிரி தவறு நடப்பது சகஜம் தான். ஆனால் அதை கஸ்டமரிடம் சொல்லும் முறையிருக்கிறது.  ஒரு முறை நானும் அண்ணன் நைஜிரியா ராகவனும் தயிர்வடை சாப்பிட சரவணபவனுக்கு போயிருந்தோம். அண்ணன் சாப்பிடும் போது முகம் சுளிக்க, என்ன ஆச்சுன்ணே ? என்று கேட்டேன். தயிர் புளிக்குது என்றார். உடனே அங்கிருக்கும் மேனேஜரை கூப்பிட்டு சொன்னேன். அடுத்த நொடி, சாப்பிட்ட ஒரு வடையோடு எடுத்துவிட்டு புதியதாய் இரண்டு வடையுடன் புளிக்காத தயிரோடு தயிர்வடை வந்தது. இது சர்வீஸ். ஏன் அவரு கடை நல்லா ஓடாது?
###############################
இது வரை வந்த படங்களில் இந்த வருடத்தின் ஒரே சூப்பர் டூப்பர் ஹிட படம் கோ தான். படத்தின் பாடல்களினால் ரிலீஸுக்கு முன்பே எல்லா எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்க, தொடர் விளம்பரங்கள் வேறு இன்னும் சுருதியேற்ற, ரீலீசான நாளிலிருந்து செம அறுவடை. தமிழில் மட்டுமே சுமார் ஐம்பது கோடிக்கு மேல் வசூலாகியிருக்கிறதாம். இன்னும் வரும் என்கிறார்கள். இப்படத்தை தெலுங்கில் ‘ரங்கம்” என்ற பெயரில் டப் செய்ய, அதுவும் சூப்பர்ஹிட். டபுள் தமாகாவாக ஆகிவிட்டது.விரைவில் “கோ” ஹிந்திக்கு போகப் போகிறது என்ற தகவல் சுற்றிக் கொண்டிருக்கிறது. தமிழில் சூப்பர் ஹிட்டான அயன் தமிழைத் தவிர வேறு மொழிகளில் சரியாக போகவில்லை என்பது கொசுறு செய்தி.
##############################
நூதன முறையில் திருட்டு என்று தினத்தந்தியில் பல செய்திகள் வரும். அவைகள் எல்லாம் காந்திகாலத்து ஐடியாவாக இருக்கும். அப்படித்தான் இன்றொரு செய்தி. நூதன முறையில் திருட்டு என்று. என்னடாவெனப் பார்த்தால் நிஜமாவே நூதனமாத்தான் இருக்கு. விடியற்காலை மூன்று மணிக்கு காலிங் பெல் அடித்து தங்கச்சி கல்யாணம் வச்சிருக்கேன் பணம் வேணுமின்னு கேட்டிருக்கான். அதுக்கு வீட்டு ஓனரு “நீ யாருன்னே தெரியாது?உனக்கெதுக்கு பணம் தரணும்?” என்று கேட்க, கத்தியக் காட்டி “ஒரு லட்சம் ரூபா கொடு” என்றிருக்கிறான். அவரும் என்னிடம் ஒரு லட்சம் இல்லை ஆறு ஆயிரம் ரூபாய்தான் இருக்குன்னு ஆறாயிரத்தை எடுத்துக் கொடுத்து அனுப்பிட்டு போலீஸுல கம்ப்ளெயிண்ட் பண்ணியிருக்காரு. நூதனமாத்தான் இருக்கு.
#############################
நேத்து ராத்திரி திருவாருரிலிருந்து நண்பர் கார்த்திகேயன் போன். திமுகக்காரர். தலைவர் வந்தாரு பேசிட்டு போனாரு. நல்ல கூட்டம். எல்லாம் சரியாத்தான் பேசிட்டிருந்தாரு. 90 சதவிகிதம் சூப்பரா பேசினவரு. கடைசி பத்து பர்செண்ட் தன் புள்ளை, பேரன்னு பேசி மொத்தத்தையும் கெடுத்துட்டாருன்னு வருத்தப்பட்டாரு. இன்னும் தலைவருக்கு புரியலையேன்னு அவருக்கு ரொம்பவே வருத்தம்.
#############################
அனானிகள் ஒரு வகை இம்சை என்றால் டுபாக்கூர் பெயரை வைத்துக் கொண்டு,  அரை லூசுத்தனமாய் பேசுபவர்களை பார்த்தால் பாவமாய் இருக்கிறது. பத்து முறை டீசெண்டாய் சொன்னாலும் புரிந்து கொள்ள மாட்டேன் என்பவர்களை அடிக்காத குறையாய் வசவினால் தான் புரிகிறது. ம்ஹும் என்ன ஜென்மமோ.
#################################

ப்ளாஷ்பேக் 
எனக்கு இந்தப் பாட்டு மிகவும் பிடிக்கும். சமீபத்தில் பார்த்த ஆணமைதவறேல் படத்தின் பின்னணியிசையில் இதை கொஞ்சமே கொஞ்சம் மிக்ஸியிருக்க, மீண்டும் என் ஞாபக அலைகளில். பாடலின் ஆரம்பித்தில் லோ வாயிசில் பி.பிஎஸ். ஆரம்பிக்கும் அழகே அழகு. மிக அழகான, சிம்பிளான கம்போஸிங். விஸ்வநாதன் ராமமூர்த்தி.

###########################
தத்துவம்
உலகின் சிறந்த கருத்தடை சாதனம்- குழந்தைகள்.

என்னை மன்னியுங்கள்
என் தப்புத்தான்
என்ன செய்யணும்னு சொல்லு நான் செய்த தப்பை சரி செய்ய..?
ஒரு மன்னிப்பின் மிக முக்கியமான விஷயங்கள். ஆனால் இந்த மூணாவது விஷயத்தை பெரும்பாலான மக்கள் கவனிப்பதேயில்லை.
##################################

அடல்ட் கார்னர் 
ஒரு பார்க்கில் ஓரு பையனும் பொண்ணும் அமர்ந்திருந்தார்கள். அப்போது இரண்டு நாய்கள் புணர ஆரம்பித்தது..பையன் வாயில் ஜொள்ளு ஒழுக நாயை பார்த்து விட்டு பொண்ணையும் பார்த்தான்.. பொண்ணு கேட்டாள்:-என்னடா அப்படி பாக்குற...

பையன் சொன்னான்:- ப்ளீஸ் நானும் அதுமாதிரி செய்யட்டுமா...
அதுக்கு பொண்ணு சொன்னா:- தாராளமா செய்..பார்த்து ஜாக்கிரதையா செய்.. நாய் கடிச்சிடபோகுது...
பையன்:- ?????????
#############################

சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

17 comments:

அன்பேசிவம் said...

ஜஸ்டின் பைபர். ம்ம்ம்ம்:-))

மாயவரத்தான் said...

உண்மை தான் பாஸ்!

சரவணபவன் வெற்றி அதன் நிர்வாகத்தில் தான்!

பாண்டிபஜார் சரவணபவன் மாடியில் ஏ.சி. ரூமில் ஜூஸ் கூலர்கள் இரைச்சல் மிக அதிகம். கூடவே சவுண்டு அதிகமாக பாட்டும் போட்டு விடுவார்கள். அங்கே இருக்கும் மேலாளரிடம் சொன்னேன். ஆமாம் சார், ஆனா வேற வழியில்லை என்றார். சாப்பிடும் போதே மொபைலில் இருந்து அவர்கள் ஈமெயிலுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். அடுத்த 4 மணி நேரத்தில் எனது மொபைலுக்கு தொடர்பு கொண்டார்கள் சரவண பவன் வடபழனியிலிருந்து!

உங்கள் புகார் கிடைத்தது. உண்மையிலேயே அது தவறு தான். எவ்வளவு சீக்கிரம் சரி செய்ய முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சரி செய்கிறோம். மன்னித்துக் கொள்ளுங்கள் என்றார்கள்.

இப்போது ஓரளவிற்கு சப்தம் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகக் கேள்வி!

மயிலாப்பூரில் ஒரு முறை பக்கத்து டேபிளில் சிறுவன் ஒருவன் பாதி குடித்த ஜூஸ் டம்ப்ளரை தவறுதலாக கீழே தட்டி விட்டான். சற்று நேரத்தில் புதிதாக முழு அளவு ஜூஸ் வந்தது அதிகக் கட்டணம் இன்றி!

அதான் சரவணபவன்!

Cable சங்கர் said...

நாம் இருவரும் ஒரே இடத்தில் இருந்தும், பக்கத்து பக்கத்து டேபிளீல் இருந்தும் சந்திக்காமல் போனதும் சரவணபவனில்தான்.

Ashwin-WIN said...

ஜஸ்டின் பைபர் பகிர்வுக்கு நன்றி. சரவணபவன் டாப்பு டாப்புதான். இங்க நம்மனாட்டுல வாய்க்கு ருசியா சாப்டமுடியளைப்பா கொஞ்சம் இங்கயும் வர சொல்லுங்கோ.
பைனல் காமெடி சூப்பர்.(கிளு கிளு காமெடி)

ASHWIN WIN
விபச்சாரியுடன் ஒருநாள் - சூடான பதிவு (A)

சமுத்ரா said...

+++உலகின் சிறந்த கருத்தடை சாதனம்- குழந்தைகள்+++ good one!

K.S.Muthubalakrishnan said...

I too have good exp in Hotel saravanabhavan 13 years back at Ashokpillar at 6 am i askd coffee and drink water and water is not in good taste told to manager they replaced with package water and askd sorry.

Anonymous said...

செவென் டேஸ்ட் ஊத்தாப்பம்னு சொல்லி உள்ளங்கை சைசுல ஏழு ஊத்தாப்பத்தை குடுத்தாங்க. நான் கூட ஊத்தப்பம்தான் 7 வகை டேஸ்ட்ல இருக்கும்னு பாத்தா, தொட்டுக்க குடுத்த ஐட்டங்கள்தான் 7 வகையா இருந்துச்சி. அது கூட ஸ்பெஷல் ஐட்டம் இல்ல. வழக்கமா டிபனுக்கு தொட்டுக்க குடுக்குற தக்காளி சட்னி, மசாலா கிழங்கு இந்த மாதிரி. இது அண்ணாநகர் ப்ளூ ஸ்டார் கிட்ட இருக்குற சரவண பவன்ல. அவ்வ்!!

யுவகிருஷ்ணா said...

//கலைஞர் டிவியில் மட்டுமே தொடர் விளம்பரம் வருவது அதை உறுதிப்படுத்துகிறது.//

ஜெயாடிவியிலும் மாவீரன் விளம்பரம் வருது தலைவரே. என்னன்னு விசாரிங்க...

Jana said...

கொத்து சுப்பர். தத்துவம் ரொம்ப பிடித்திருக்கு :)

அனுஷ்-(anuz) said...

ஜஸ்டின் பைபர் பேபி பாடல் பற்றி சொல்றீங்க.. ஆனால் அந்த வீடியோவில் likes விட dislike அதிகமே.. அத ஈன்னு மட்டும் புரியல..

Balamurugan said...
This comment has been removed by the author.
shortfilmindia.com said...

பாலமுருகன் ஜஸ்டின் பைபர் ஆண் தான்.

Kannan said...

சரவணா பவன் உணவு சுவை கூடுவதே அவர்களின் கஸ்டமர் சர்வீஸ் மூலமாக தான். கஸ்டமர் இஸ் தி கிங் என்பதை நன்றாக புரிந்து வைத்துள்ளனர். இதே விதமான சேவையை மற்ற இடத்தில எதிர்பார்க்கும் பொழுது, சண்டை தவிர்க்க முடியாததாக ஆகி விடுகிறது. விந்து விழுந்த சு சு....போல மொகரையை வைத்து கொண்டு , தெனவேட்டாக பேசும் இடத்தில், சாப்பிடுவதை விட ரோட்டு கடை உணவு மேலானது. சரவண பவனில் நிர்வாகம் படிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. ஆனால் ஒரு விஷயம், விவிசு போல இருந்ததால், ஈஸ்ட் ஹாம் என்ற இடத்தில் சரவண பவனில் சுவையே இல்லாமல் போயிற்று. சென்னை தோசா முழு போடு போடுகிறது.

hayyram said...

//உலகின் சிறந்த கருத்தடை சாதனம்// நம் நாட்டைப் பொறுத்தவரை பள்ளிக்கட்டணம் தான்
தற்போதைய குடும்ப கட்டுப்பாடு சாதனம்.

ORUVAN said...
This comment has been removed by the author.
அருண் said...

ஜஸ்டின் பைபர் ஏற்கனவே உலக அளவுல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டவர்,எம்எஸ்வி பாட்டும் நல்லாருக்கு,கோ ஹிந்தில அக்சய் குமார் நடிக்கப்போறதா பேச்சு.
-அருண்-

Shankar said...

Talking about Saravanbhavan's customer care, I want to share the following.here in USA, recently a person wanted to return at Home depot stores the tyre he had bought. But he had no bill either.He insisted cash for the return also.The counter person consulted the manager and refunded the amount.What is amazing is Home Depot never sell tires.