கொத்து பரோட்டா-13/06/11
வைகோவின் தயாரிப்பில் நடந்த வீரத்தாய் வேலு நாச்சியார் வரலாற்று நடன நாடகம் பார்க்க அழைத்திருந்தார் அதன் இயக்குனர் ஸ்ரீராம் சர்மா. எனக்கு நடனம் பற்றி, அதிலும் பாரம்பரிய பரதநாட்டியம் பற்றி எதுவும் தெரியாது. பெரிய ஆர்வமில்லாமல் தான் போனேன். வெள்ளையனை எதிர்த்து போராடிய முதல் பெண்மணி யார்? என்ற கேள்வியை கேட்டால், பெருவாரியான மக்கள் ஜான்ஸி ராணியைத் தான் சொல்வார்கள். ஆனால் அது உண்மையல்ல. 1835ல் தான் ஜான்ஸி ராணி தோற்கடிக்கப்பட்டார். ஆனால் அதற்கு நூறாண்டுகளுக்கு முன்னமே சிவகங்கையின் வேலு நாச்சியார் வெள்ளையர்களை எதிர்த்து போராடி அவர்களை ஓட, ஓட விரட்டினார். ஆனால் இது மறைக்கப்பட்ட வரலாறு. அதை எடுத்துச் சொல்லும் விதமாய், மிக சுவாரஸ்யமாய் ஒரு பிரம்மாண்டமான திரைப்படத்தை நம் கண் முன் ஓடியதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தினார்கள் இக்குழுவினர். முக்கியமாய் இந்நாடகத்தின் இசை. முழுக்க, முழுக்க கர்நாடக இசையை மட்டுமே வைத்து பாடப்பட்ட, நாட்டிய நாடகமாய் இல்லாமல், பாமரர்களுக்கும் போய் சேரும் விதமாய், எளிமையாய் இசையமைத்து, பாடல்களின் மூலம் கதை சொன்ன விதம் அட்டகாசம். வேலு நாச்சியாராக பாத்திரமேற்று நடனமாடிய செளம்ய குரு மணிமேகலை சர்மா தன் நடனத்தினாலும், பாடிலேங்குவேஜுனாலும் நம் கண் முன் வேலு நாச்சியாரை நிறுத்தினார். வேலு நாச்சியார் என்றொரு கேரக்டரை இந்த நடன நாடகத்தைப் பார்த்தவர்களுக்கு, நாச்சியாரின் நிஜ படத்தை காட்டினால் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தமிழகத்தின் முதல் கொரில்லா படை, முதல் பெண்கள் போர்படை, முதல் தற்கொலைப் படை போன்றவற்றை அமைத்தவர் வேலு நாச்சியார் என்பது போன்ற பல நுணுக்கமான விஷயங்களை ஆய்ந்து சொல்லியிருக்கிறார். முக்கியமாய் அந்த தற்கொலைப் படைப் பெண் தன் கடமைக்கு செல்லும் முன் நடக்கும் நிகழ்வுகளை தன் நடனத்தின் மூலம் கொடுத்த இம்பாக்ட் அட..அட.. அட.. அருமை. ஆடிய 60 நடன கலைஞர்களுக்கு பாராட்ட வேண்டும். மேடை நிகழ்வு என்பது எவ்வளவு பெரிய விஷயம், எவ்வளவு மெனக்கெடல், உழைப்பு என்பதை தெரிந்தவர்களுக்கு இந்நிகழ்வில் இருக்கும் சிறுசிறு குறைகள் தெரியாது. வாழ்த்துக்கள் வைகோ, ஸ்ரீராம் சர்மா ஒரு அருமையான தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சியை அளித்தற்க்காக..
###############################
சனியன்று போலீஸ் உயரதிகாரிகள் சென்னையில் நடக்கும் செயின் பறிப்புகளை தடுப்பது எப்படி என்று கலந்தாலோசித்திருக்கிறார்கள். அப்போ ஆந்திரா போனவங்க வேற ட்ரூப்பா..?
###############################
படித்ததில் பிடித்தது.
அசோகமித்ரனின் “கரைந்த நிழல்கள்” படித்தேன். படு ஸ்பீடான சுவாரஸ்யமான நடை. தமிழ் திரையுலகில் சில காலம் அவர் பணியாற்றியதன் காரணமாய் கிடைத்த அனுபவங்களை வைத்து மிக அழகாய் எழுதப்பட்ட கதை. மனுஷன் என்னமாய் எழுதுகிறார். ஒரு வரியிலிருந்து அடுத்த வரி வசனத்துக்குள் ஒரு குட்டி கதையை வைத்துவிடுகிறார். நான் லீனியர் என்ற வகை கதையமைப்பு அன்றைய காலகட்டத்தில் பெரிய விஷயம்தான். ஏதோ புதுசாய் செய்கிறோம் என்று நினைக்கும் போது இதெல்லாம் ரொம்ப பழசு என்பது போல் பல விஷயங்களை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்கிறார். அன்றைய சினிமாவிலிருந்து இன்று வரைக்கும் தமிழ் சினிமா மாறவேயில்லை என்பது நிஜம். “இப்ப சினிமாவெல்லாம் பெரிசா ஓடறதில்லையாமே.. ஸ்டூடியோவெல்லாம் மூடிண்டு வர்றா போலருக்கு?” “அவருக்கு என்ன டைரக்டர் பத்தாயிரம் வாங்கிண்டு போயிடுவார். நமக்குத்தன் மொத்தமா ஒரு இருநூறு ரூபாய் வாங்கித் தந்ததில்லை.” உதவி இயக்குனர். இன்றும் அதே நிலைதான். பாதி முடிந்த படத்தை ஒட்ட வைத்த கதையை வைத்து எடுத்து ஹிட்டாக்குகிறார்கள். இப்படி எதுவும் மாறாத தமிழ் சினிமாவைப் பற்றி ஒரு அருமையான நாவல்.
###################################
ஆரண்ய காண்டம் படத்திற்கு வந்த இடர்கள் பல என்றாலும் மிக முக்கியமான ஒன்று படத்தில் வரும் கமல், ரஜினி பற்றிய வசனங்கள். சென்சார் போர்டில் அவர்களிடமிருந்து என்.ஓ.சி வாங்கி வந்தால் தான் என்று சொல்லி விட்டார்களாம். இதை கேள்விப் பட்ட கமல் படத்தை பார்த்துவிட்டு, என்ன கொடுமைடா..நல்லாத்தானே இருக்கு என்று சொல்லியிருக்கிறார். அதே போல் ரஜினியும். இவர்களை வைத்து படத்தில் வரும் வசனங்கள் அட்டகாசம். உனக்கு கமல் பிடிக்குமா? ரஜினி பிடிக்குமா? அதற்கு சுப்பு “எனக்கு விசயகாந்த்தான் பிடிக்கும்? ””ஏன்?” “ அவரு தான் ஏழைங்களையெல்லாம் காப்பாத்துவாரு.. தீவிரவாதிகளை ஒழிப்பாரு” சரியான வசனங்கள்.
###############################
ட்ரம்பட்
ட்வீட்டர் புகழ் மாயவரத்தான் சினிமாவியாபாரம் புத்தகம் படித்துவிட்டு ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினார். “Boss, Just got a chance to live with ur cinema viyabaram. WoW. superb. congrats. ட்வீட்டி.. ட்வீட்டி புத்தக விமர்சனத்தையும் ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக ட்வீட்டி விட்டார். நன்றி மாயவரத்தான்.
###############################
விளம்பரம்
விளம்பரங்கள் எடுப்பதற்கு சில அப்நார்மல் விஷயங்களை சுவாரஸ்யப்படுத்துவது சாதாரணம். இந்த விளம்பரம் அதற்கு உதாரணம். நல்ல டென்ஷன் ஏற்படுத்திவிட்டு, தங்கள் ப்ராட்க்டை நுழைத்த விதம் இருக்கிறதே.. Soo..Cute.

################################
ப்ளாஷ்பேக் சில பாடல்களை எந்த காலத்தில் கேட்டாலும் அதன் இனிமையும் சுவையும் கெடாமல் இருக்கும். அந்த வகையில் சபாஷ் மீனாவில் வரும் “சித்திரம் பேசுதடி” பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் கரோக்கேவில் விரும்பிப் பாடும் பாடல். மிக எளிமையான ட்யூனில் லேசான கர்நாடக இசை வாடையுடன், டி.எம்.எஸ்ஸின் இளமையான குரலில் ஸூத்திங் மெலடி.
######################################
தொடர்ந்து மூன்று நிதிகளும் அடுத்தடுத்து படங்கள் வெளியிடாமல் இருப்பதால் சில சின்ன படங்கள் இரண்டாவது வாரம் காலியாக இருந்தாலும் தியேட்டரில் இருக்கிறது. அடுத்த வார படங்களுக்காக, உதாரணம் தேவிபேரடைஸில் மாவிரன். படத்தை அடுத்த வாரம் வரவிருக்கும் அவன் – இவனுக்காக பத்து பேர் கூட இல்லாமல் ஓட்டுகிறார்கள். இத்தனைக்கும் இரண்டு படங்களும் நிதிகளுக்கு சம்மந்தமில்லை. இதையேன் சொல்கிறேன் என்றால். தியேட்டர்களை அவர்கள் ஹோல்ட் செய்து வைத்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு இருந்தது. இப்போதும் அது வேறு ஆட்கள் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறார்கள். என்பதை சொல்லத்தான்.
################################
இன்றைய நாளைய இயக்குனரின் ஒரிஜினல் வர்ஷன் நிகழ்ச்சியை தயாரித்து வழங்கியது அசோக் அமிர்தராஜ் நிறுவனம்தான். சோனி பிக்ஸ் சேனலுக்காக தயாரிக்கப்பட்ட அந்நிகழ்ச்சியில் வெல்பவர்களுக்கு ஹாலிவுட்டில் திரைப்படம் இயக்க வாய்ப்பு வழங்கப்படும் என்று சொன்னார்கள். அப்போட்டியில் வெற்றிப் பெற்ற பிஜோய் நம்பியாருக்கு முதலில் வாய்ப்பு அளிப்பதாய் சொன்ன அமிர்தராஜ் அதற்கு பிறகு என்ன ஆனார் என்று தெரியவில்லை. பின்பு கல்கிகோச்சிலின் தயாரிப்பதாய் இரண்டு வருடங்களாய் ஒரு கதையை சொல்லி காத்திருக்க, அமிர்த்தராஜ் வராததால் கல்கியின் கணவர் அனுராக் காஷ்யப் வர, தயாரான படம் தான் சைத்தான். இடைப்பட்ட காலத்தில் பிஜோய் மணிரத்னத்துடன் குரு, ராவண், ஆகிய இரண்டு இந்தி படங்களில் பணியாற்றியிருக்கிறார். படம் வெளிவருவதற்கு முன்பே பெரும் எதிர்பார்பபை ஏற்படுத்தியிருக்கிறது இந்த படம். படத்தின் பட்ஜெட் பதினோரு கோடியாம். இதில் பப்ளிசிட்டிக்கு மட்டும் பட்ஜெட்டில் பாதி ஆகியிருக்கிறதாம். இன்னொரு முக்கிய விஷயம் படத்தின் ஒளிப்பதிவு நம்ம மதி.
###############################
அடல்ட்கார்னர்பிரசவத்துக்கு போன பொண்டாட்டி குழந்தையோட வீட்டுக்கு வந்தா.. கட்டில் மேல இரண்டு பேண்டீஸ் இருந்திச்சு. நிச்சயம் தன்னோடது இல்லைன்னு தெரிஞ்சு “இது யாருதுங்கன்னு?” புருஷன் கிட்ட கேட்டாள். புருஷன் “எனக்கு தெரியாதுன்னு” எஸ்கேப்பாக,
வந்தப்போ பெட்ரூமுல கட்டில் மேல ரெண்டு பேண்டிஸ் இருந்துச்சி.கையில எடுத்து பார்த்தா அது அவளோடது இல்லைன்னு தெரிஞ்சது. புருஷன்கிட்டே,
”இது யாருதுங்கன்னு கேட்டா?” அவனோட “எனக்கு ஏதும் தெரியாது” அப்படின்னு எஸ்கேப் ஆனால். அவன் ஆபிஸ் போனதும் வேலைக்காரிக்கிட்ட பேண்டீஸைக் காண்பித்தாள்.
பொண்டாட்டி:- இந்த ஜட்டி உன்னோடதா?
வேலைக்காரி:- இல்லைம்மா..என்னோடது இல்ல..
பொண்டாட்டி:- நான் எதுவும் செய்ய மாட்டேன், உண்மைய சொல்லு... வேலைக்காரி:- சத்தியமா சொல்றேன்மா..இது என்னுடையது இல்லை.. வேணும்ன்னா உங்க வீட்டுக்காரர்கிட்ட கேட்டு பாருங்க...நான் ஜட்டியே போட மாட்டேன்னு அவருக்கு நல்லா தெரியும்..
##################################
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
உண்மை.....
நன்றி,
ஜோசப் (http://www.tamilcomedyworld.com)
நிதிகள் படம் வெளியிடாததால் சின்னப்படங்கள் இரண்டாவது வாரம் தாண்டியும் தியேட்டர்களில் இருக்கின்றது என்றால் இத்தனைகாலம் அவர்களது ஆதிக்கம் அதிகமாய் இருந்தது என்றுதானே பொருள்?!
அடல்ட் கார்னர்கூட பெரியளவு 'ஏ'த்தனம் இல்லாமல் ரசிக்கத் தக்கதாகவே இருந்தது.
ரொம்ப நல்லா மிக்ஸ் பண்ணி இருக்கீங்க!
இன்னொரு விஷயம். உங்களது வாசகர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம் என்பதால், இந்தவாரம் போலவே இனியும், பெரிதாய் வெளிச்சம் பாய்ச்சப்படாத பல விஷயங்களை அறிமுகப் படுத்துங்களேன். நிகழ்த்துகலைகளில் கூத்துப்பட்டறை நாடகங்கள், பரீக்க்ஷா நாடகங்கள், நல்ல புத்தகங்கள்... இப்படியாக.
நான் ஒரு விளம்பரப்பட இயக்குனர்.
எனவே என்னை மிகவும் கவர்ந்தது.
நியாயமா பாத அந்த வசனத்துக்கு விஜயகாந்த் கிட்டதானே NOC வாங்கணும்???
அதான் A சான்றிதழ் கொடுத்தாச்சே. அப்புறம் ஏன் VIP-க்களுக்கு, அதிகாரத்திலுள்ளோருக்கு பாதம் தாங்குகிறார்களோ?
சித்திரம் பேசுதடி பாடலைப் பாடியவர் மோதி என்னும் பாடகர்.
இவர் வந்த விரைவிலேயே காணாமல் போனவர்
காணா இன்பம் கனிந்ததேனோ என்ர பாடல் தான் மோதி பாடினார்.
சித்திரம் பேசுதடி டி.எம்.எஸ்., தான்
ஆமாம் நன்றிங்கோ..
@ஜீஸஸ் ஜோசப்
நன்றி
@விந்தைமனிதன்
எழுதிட்டா போச்சு.. நிதிகளின் ஆக்கிரமிப்பு படம் ரிலீஸாகாததால். ஆனாலும் தியேட்டர்கள்காலியாய்தான் ஓட்டப்படுகிறது. அடுத்து வரப் போகிற பெரிய படங்களுக்காக.. அப்படின்னா என்ன அர்த்தம் அவங்க இல்லாமலும் இப்படித்தான் இருக்கும்னு
பார்த்திட்டா போச்சு
@சாதாரண கிராமத்தான்
அஹா.. அது சரி.
@ஆரண்ய காண்டம்
இவனுங்க யூ சர்டிபிகேட் படத்துல பாதி க்ளிவேஜ் தெரிய வர்ற சீனை விட்டுருவானுங்க்
@டி.வி.ராதாகிருஷ்ணன்
நான் சொல்லனுமின்னு நினைச்சேன் நீங்களே சொல்லிட்டீங்க..
-அருண்-
நீங்க அய்யா ஜால்ராதான்... ஆனா இப்படி ஒவ்வொரு பதிவிலும் அம்மாவை சீண்டாதீங்க... சீக்கிரம் அதிர்ஷ்டபார்வை பதிவர் மாதிரி ஆயிடுவீங்க....
அப்புறம் நிதி சதின்னாலும் கேபிள் சதின்னாலும் நல்ல படம் ஓடத்தான் செய்யும்... நிதியாலும் கேபிளாலும் மன்னாருவை ஓட்டவும் முடியலை... களவாணியை நிறுத்தவும் முடியலை... நொந்தலாலால்லாம் உதாரணம்....
உடனே எந்திரன் ஓடாத தியேட்டர் எனக்கு தெரியும்னு ஆரம்பிச்சிராதீங்க... ப்ளீஸ்....
2.அப்ப தப்பு பண்றதா இருந்தா அவங்கதான் பண்ணனும். புதுசா வந்தவங்க திருந்தி இருக்கணும். இவங்களும் தப்பு பண்றதா இருந்தா அப்ப ஏன் நிதிகள் செய்ய கூடாது அதானே உங்க கேள்வி? இப்படிதான் இலைகாரன்னு ஒருத்தன் உளறி உளறி இப்ப பேச்சே குறைந்து போச்சு.பார்த்து, உங்களூக்கு ஏதாவது பிரச்னைனா 30 லட்சம் ஹிட்ஸ் ஒண்ணும் பண்ணாது. இத நம்பி மோசம் போயிடாதீங்க.
அம்மா ஆட்சிக்கு வந்தவுடனே அவங்க எல்லாம் ஒடிப்போயிட்டாங்க ஆந்திராவுக்கு சொன்னாங்க.. ஒரு வேளை உங்களுக்கும் செலக்டிவ் அம்னீஷியாவோ..?
2. குய்யோ முறையோன்னு கத்தி பிரயோஜனம் இல்லை.இவங்க இல்லாட்டியும் யார் வந்தாலும் இருக்கிற நடைமுறைதான் இது.. சும்மா.. குதிக்கக்கூடாது. நான் யாரையும் நம்புறது இல்லை. எனனைத்தவிர.
http://www.sramakrishnan.com/?p=2149
நான் படித்த முதல் அசோகமித்ரன் இந்த நாவல்தான் நிச்சயம் அந்த நாவலையும் தேடி படிக்க முயற்சிக்கிறேன்.
என்ன கொடுமைடா சாமி