180 -நூற்றென்பது
அமெரிக்க காதலியாய் வரும் ப்ரியா ஆனந்த க்யூட்டாகவும், செக்ஸியாகவும் இருக்கிறார். இளமை துள்ளும் சிரிப்புடன் நம் மனதை கவர்கிறார். ஆனால் நடிப்பு என்று வரும் போது கொஞ்சம் டெம்ப்ளேட்டாய் இருக்கிறது இவரது ரியாக்ஷன்கள். சித்தார்த்தை காதலிக்கும் சென்னை பெண் நித்யா மேனன் வரும் காட்சிகள் மிக கொஞ்சமே என்றாலும் பரபரக்கும் துறுதுறு கண்களால் கவர்ககிறார். குள்ளமாய் பூசினார் போல இருந்தாலும் அழகு. தியேட்டரில் தன் ஏமாற்றத்தை காட்டும் ரியாக்ஷன் ஒன்றே போதும். பார்பவர்கள் மனதை கலைத்துவிடுவார்.
மெளலி, கீதா, என்று சின்ன கேரக்டர்கள் தங்கள் பங்கை செவ்வனே செய்திருக்கிறார்கள். படத்தின் கதாநாயகன் யார் என்றால் அது ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியன் தான். இது வரை அமெரிக்கா என்றால் சட்டென சொல்லும் படியாய் லொக்கேஷன்கள் இல்லாமல், புது லொக்கேஷன்கள், அருமையான ஒளியமைப்பு செய்த ஷாட்டுகள், என்று பார்த்து பார்த்து செய்திருக்கிறார். முக்கியமாய் ரெட் ஒன் கேமராவின் அத்துனை சாத்தியங்களையும் செவ்வனே பயன்படுத்தி ஒரு ரிச்சான விஷுவல்களை அளித்திருப்பது பாராட்டுக்குறியது. பேண்டம் ப்ளெக்ஸ் கேமராவினால் பாடல் காட்சியில் வரும் ஸ்லோமோஷன் காட்சிகளை படம்பிடிக்கப்பட்ட காட்சிகள் அற்புதம். பாராட்டபட வேண்டிய இன்னொருவர் இசையமைப்பாளர் சரத். முக்கியமாய் கார்த்திக் பாடியுள்ள ‘நீ கோரினால்” அட்டகாசமான மெலடி. அராபியன் ஸ்டைலில் சரத் பாடியுள்ள பாடல் சிச்சுவேஷனுக்கு பொருந்தினாலும் தனிப்பட விதத்தில் பெரிய இம்பாக்டை கொடுக்கவில்லை. பின்னணியிசையில் அடிக்கடி செண்டை மேளத்தை அடித்து ஊர் பாசத்தை காட்டியிருக்க வேண்டாம் சேட்டா..
எழுத்தாளர் சுபாவுடன் பயணித்து இயக்கியிருப்பவர் ஜெயேந்திரா. விளம்பர உலகிலிருந்து வந்தவர் ஆகையால் ஒவ்வொரு ஷாட்டும் மிக அற்புதமாக வடிவமைத்திருக்கிறார். பாடலின் ந்டுவே மாண்டேஜில் வரும் குட்டிக் காட்சிகள் மூலமே கதையை நகர்த்துவது சுவாரஸ்யம். அதே போல வசனங்கள். ஷார்ப்பானது ஆனாம் மணியின் ஸ்டைலிலும் இல்லாமல் இருப்பது படு சுவாரஸ்யம். முதல் பாதியில் கொஞ்சம் செட்டிலாவதற்கு நேரம் எடுத்துக் கொண்டாலும், நிஜத்தையும், ப்ளாஷ்பேக்கையும் இணைத்து கதை சொன்ன விதம் ஆர்வத்தை தூண்டும் படியாகவே இருந்தது. ப்ரியா ஆனந்திற்கும், சித்தார்த்துக்கு இடையே காதல் மூளும் காட்சிகளில் இளமை. அதிலும் ஸ்டெத் வைத்து பார்க்கும் போது காதில் கேட்கும் புது வெள்ளை மழை படு இண்ட்ரஸ்டிங். இரண்டாவது பாதியில் மெதுவாக செல்லும் திரைக்கதைதான் லேசாய் காலை வாரி விட்டது என்று சொல்ல வேண்டும். முக்கியமாய் சித்தார்த்தின் நிலையை விரிவாக காட்டினாலும், அது நம் மனதினுள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் கொஞ்சம் அமெரிக்க தனமாய் இருப்பது கதையுடன் பயணிக்க தடையாய் உள்ளது . ட்ரைலரைப் பார்த்து, ஒர் இளமை துள்ளும் படத்தை பார்க்க ஆவலாய் வந்தவர்களுக்கு ஏமாற்றமாய்த்தான் இருக்கும். ஆனாலும் அழகான, விஷுவல்களுடனான ஒரு படத்தை அளித்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் மெனக்கெட்டிருந்தால் ஒரு க்ளாஸான படம் கிடைத்திருக்கும்.
180- முழுசா திரும்பல..
180- முழுசா திரும்பல..
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
குழந்தைகளுக்கான நுண் அறிவு வளர்க்கும்(fine movement) இலகு கருவி (உள்ளுர் கண்டுபிடிப்பு)
அடுத்த ஞாயிறு பார்த்திட்டால் போச்சு...
ippathaan return from sangam theater.......
நீங்கள் பாராட்டிய பாலசுப்பிரமணியெம்
எனது நண்பர்.என்னுடைய விளம்பரப்படங்களில் அவர் ஒளிப்பதிவு பணி மிகச்சிறப்பாக இருக்கும்.இன்று கற்ப்பக விநாயகர் தங்கக்கவசத்துடன் வழிபடும் படம் அவர் எடுத்ததுதான்.
- 180 அரை வட்டமில்லையோ? முழுசா திரும்பினா பிரச்னையாகிடுமே?! :)
என்னைய்யா எழுதியிருக்கீரு.?
in bangalore avan ivan is doing well..almost packed shows on week days and housefull on weekend..
ரெகுலர் தமிழ் கூட்டம் , தெலுங்கு டப்பிங் ஹிட் என்று கேள்வி பட்டு தமிழ் version பார்க்க வரும் தெலுங்கு ஆட்கள், அப்புறம் நிறைய கன்னடா ஆட்கள்.
முதல் குருப் எப்போதும் வரும். ரஜினி விஜய் படத்துக்கு கொஞ்சம் அதிகமாகவே வரும். பெங்களூரில் தமிழ் பட வெற்றியை தீர்மானிப்பது மூன்றாவது வரும் கன்னடா சினிமா ரசிகர்களே..இவர்களுக்கு அவன் இவன் ரொம்ப பிடித்து இருக்கு.படம் இன்று வரை பிவிஆர் மற்றும் இன்ன பிற தியேட்டர்களில் ஓடுகிறது. இத்தனைக்கும் இந்திபட போட்டிகளை சமாளித்து.
180’ படம் பெங்களூரில் இருந்து தூக்கிட்டாங்க..தமிழ் versionயை எடுத்து விட்டு தெலுங்கு versionயை அதிக காட்சிகளில் போட்டு இருக்காங்க.