விளம்பர உலகில் பிரபலமான ஜெயேந்திரா இயக்கியுள்ள முதல் படம். அருமையான பாடல்களும், ட்ரைலர்களும் கிளப்ப வேண்டிய ஆர்வத்தை சினிமா ஆர்வலர்களிடம் ஏற்றிவிட்டிருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இலலையா? என்று பார்ப்போம்.
காசியில் மூழ்கி எழுந்து வெளியே வருபவன், அங்கு தன் தகப்பனுக்கு திதி கொடுப்பதைக் கூட உணராத சிறுவனிடம் “ உன் பெயர் என்ன?” என்று கேட்க.. அவன் மனோ என்கிறான். பதிலுக்கு சிறுவன் உன் பெயர் என்ன? என்று கேட்கும் போது “நானும் மனோவா இருக்கக்கூடாதா? என்று கேட்டு தன் பெயரும் இனி மனோ என்கிறான். இப்படி ஆரம்பிக்கிறது சித்தார்த்தின் அறிமுகம். அங்கிருந்து கிளம்புவன் ஆட்டோவில் ஏறி தன் இரண்டு விரல்களைக் காட்டி அதில் ஒன்றை தொடச் சொல்லி, அது சொல்லும் வழியில் ஆட்டோவை போகச் சொல்கிறான். இப்படி அடுக்கடுக்காக சின்ன சின்ன ஆர்வக் காட்சிகளுடன் படம் ஆரம்பிக்கிறது. போட்டோ ஜர்னலிஸ்டான நித்யா மேனன் சித்தார்த்தை பல விதமான வேலைகளில் பார்க்க, அவர் மீது ஆர்வப்பட்டு, கொஞ்சம் கொஞமாய் நெருங்க.. சித்தார்த்தின் மீது காதல் கொள்கிறாள். இதன் நடுவில் சித்தார்த்தின் இன்னொரு பக்கமான அமெரிக்க எம்.டி டாக்டரான அஜய்க்கும் பிரியாவுக்குமான காதல் கல்யாணத்தில் முடிந்திருக்க, இங்கே நித்யா தன் காதலை சொலகிறாள். அவளை அவாய்ட் செய்துவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஊரைவிட்டு கிளம்புகிறான். அவனை துரத்தி வரும் நித்யா மேன்ன் விபத்துக்குள்ளாக.. அவளை காப்பாற்ற மீண்டும் அமெரிக்காவுக்கு போகிறார்.. சித்தார்த். ஏன் ப்ரியாவை திருமணம் செய்துவிட்டு அமெரிக்காவை விட்டு இந்தியாவுக்கு வந்து மனம் போன போக்கில் வாழ்கிறார்? ப்ரியாவுக்கும் இவருக்கும் இடையே என்ன நடந்தது?. நித்யாவின் காதலுக்கு என்ன பதில்? என்பது போன்ற கேள்விகளை வெள்ளித்திரையில் பதில் சொல்லுவார்கள்.
சித்தார்த் அறிமுகக் காட்சியிலேயே ஈர்க்கிறார். போகப்போக மெல்ல நம் மனதில் உட்காருகிறார். ஸ்மார்ட்டாக இருக்கிறார். டிசைனர் ட்ரஸ்சுகளில் அழகாய் வலம் வருகிறார். இரண்டாவது பாதியில் தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்துகிறார். படத்தின் திரைக்கதை சறுக்கும் இடத்தில் இவரது நடிப்பால் கொஞ்சம் கவனம் ஈர்க்கிறார். இரண்டாவது பாதியில் மனம் நொந்து அலையும் போது நன்றாக நடித்திருக்கிறார். முக்கியமாய் க்ளைமாக்ஸ் காட்சியில் போனில் பேசும் காட்சி. நெகிழ வைக்கிறார்.

அமெரிக்க காதலியாய் வரும் ப்ரியா ஆனந்த க்யூட்டாகவும், செக்ஸியாகவும் இருக்கிறார். இளமை துள்ளும் சிரிப்புடன் நம் மனதை கவர்கிறார். ஆனால் நடிப்பு என்று வரும் போது கொஞ்சம் டெம்ப்ளேட்டாய் இருக்கிறது இவரது ரியாக்ஷன்கள். சித்தார்த்தை காதலிக்கும் சென்னை பெண் நித்யா மேனன் வரும் காட்சிகள் மிக கொஞ்சமே என்றாலும் பரபரக்கும் துறுதுறு கண்களால் கவர்ககிறார். குள்ளமாய் பூசினார் போல இருந்தாலும் அழகு. தியேட்டரில் தன் ஏமாற்றத்தை காட்டும் ரியாக்ஷன் ஒன்றே போதும். பார்பவர்கள் மனதை கலைத்துவிடுவார்.
மெளலி, கீதா, என்று சின்ன கேரக்டர்கள் தங்கள் பங்கை செவ்வனே செய்திருக்கிறார்கள். படத்தின் கதாநாயகன் யார் என்றால் அது ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியன் தான். இது வரை அமெரிக்கா என்றால் சட்டென சொல்லும் படியாய் லொக்கேஷன்கள் இல்லாமல், புது லொக்கேஷன்கள், அருமையான ஒளியமைப்பு செய்த ஷாட்டுகள், என்று பார்த்து பார்த்து செய்திருக்கிறார். முக்கியமாய் ரெட் ஒன் கேமராவின் அத்துனை சாத்தியங்களையும் செவ்வனே பயன்படுத்தி ஒரு ரிச்சான விஷுவல்களை அளித்திருப்பது பாராட்டுக்குறியது. பேண்டம் ப்ளெக்ஸ் கேமராவினால் பாடல் காட்சியில் வரும் ஸ்லோமோஷன் காட்சிகளை படம்பிடிக்கப்பட்ட காட்சிகள் அற்புதம். பாராட்டபட வேண்டிய இன்னொருவர் இசையமைப்பாளர் சரத். முக்கியமாய் கார்த்திக் பாடியுள்ள ‘நீ கோரினால்” அட்டகாசமான மெலடி. அராபியன் ஸ்டைலில் சரத் பாடியுள்ள பாடல் சிச்சுவேஷனுக்கு பொருந்தினாலும் தனிப்பட விதத்தில் பெரிய இம்பாக்டை கொடுக்கவில்லை. பின்னணியிசையில் அடிக்கடி செண்டை மேளத்தை அடித்து ஊர் பாசத்தை காட்டியிருக்க வேண்டாம் சேட்டா..
எழுத்தாளர் சுபாவுடன் பயணித்து இயக்கியிருப்பவர் ஜெயேந்திரா. விளம்பர உலகிலிருந்து வந்தவர் ஆகையால் ஒவ்வொரு ஷாட்டும் மிக அற்புதமாக வடிவமைத்திருக்கிறார். பாடலின் ந்டுவே மாண்டேஜில் வரும் குட்டிக் காட்சிகள் மூலமே கதையை நகர்த்துவது சுவாரஸ்யம். அதே போல வசனங்கள். ஷார்ப்பானது ஆனாம் மணியின் ஸ்டைலிலும் இல்லாமல் இருப்பது படு சுவாரஸ்யம். முதல் பாதியில் கொஞ்சம் செட்டிலாவதற்கு நேரம் எடுத்துக் கொண்டாலும், நிஜத்தையும், ப்ளாஷ்பேக்கையும் இணைத்து கதை சொன்ன விதம் ஆர்வத்தை தூண்டும் படியாகவே இருந்தது. ப்ரியா ஆனந்திற்கும், சித்தார்த்துக்கு இடையே காதல் மூளும் காட்சிகளில் இளமை. அதிலும் ஸ்டெத் வைத்து பார்க்கும் போது காதில் கேட்கும் புது வெள்ளை மழை படு இண்ட்ரஸ்டிங். இரண்டாவது பாதியில் மெதுவாக செல்லும் திரைக்கதைதான் லேசாய் காலை வாரி விட்டது என்று சொல்ல வேண்டும். முக்கியமாய் சித்தார்த்தின் நிலையை விரிவாக காட்டினாலும், அது நம் மனதினுள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் கொஞ்சம் அமெரிக்க தனமாய் இருப்பது கதையுடன் பயணிக்க தடையாய் உள்ளது . ட்ரைலரைப் பார்த்து, ஒர் இளமை துள்ளும் படத்தை பார்க்க ஆவலாய் வந்தவர்களுக்கு ஏமாற்றமாய்த்தான் இருக்கும். ஆனாலும் அழகான, விஷுவல்களுடனான ஒரு படத்தை அளித்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் மெனக்கெட்டிருந்தால் ஒரு க்ளாஸான படம் கிடைத்திருக்கும்.
180- முழுசா திரும்பல..

சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Post a Comment
16 comments:
ஐ சுடு சோறு..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
குழந்தைகளுக்கான நுண் அறிவு வளர்க்கும்(fine movement) இலகு கருவி (உள்ளுர் கண்டுபிடிப்பு)
ஃஃஃஃபடத்தின் திரைக்கதை சறுக்கும் இடத்தில் இவரது நடிப்பால் கொஞ்சம் கவனம் ஈர்க்கிறார்ஃஃஃஃ
அடுத்த ஞாயிறு பார்த்திட்டால் போச்சு...
saavadichchuttaanunga thalai....
ippathaan return from sangam theater.......
// படத்தின் கதாநாயகன் யார் என்றால் அது ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியன் தான். //
நீங்கள் பாராட்டிய பாலசுப்பிரமணியெம்
எனது நண்பர்.என்னுடைய விளம்பரப்படங்களில் அவர் ஒளிப்பதிவு பணி மிகச்சிறப்பாக இருக்கும்.இன்று கற்ப்பக விநாயகர் தங்கக்கவசத்துடன் வழிபடும் படம் அவர் எடுத்ததுதான்.
ஒளிப்பதிவுக்காக நிச்சயம் படம் பார்க்க வேண்டும். டிரைலரிலேயே நீங்கள் சொன்னதுபோல நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கிவிட்டார்கள்.
>>180- முழுசா திரும்பல..
- 180 அரை வட்டமில்லையோ? முழுசா திரும்பினா பிரச்னையாகிடுமே?! :)
சித்தார்த்தின் மீது காதல் கொள்கிறாள். இதன் நடுவில் சித்தார்த்தின் இன்னொரு பக்கமான அமெரிக்க எம்.டி டாக்டரான அஜய்க்கும் பிரியாவுக்குமான காதல் கல்யாணமாகியிருக்க, நித்யா தன் காதலை சொல்ல, அவளை அவாய்ட் செய்துவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஊரைவிட்டு கிளம்புகிறான். அவனை துரத்தி வரும் நித்யா மேன்ன் விபத்துக்குள்ளாக.. அவளை காப்பாற்ற மீண்டும் அமெரிக்காவுக்கு போகிறார்.. சித்தார்த்.//
என்னைய்யா எழுதியிருக்கீரு.?
ஹி..ஹி.. நடுவில ஒரு வார்த்தை மிஸ்ஸிங்.. நோ. ப்ராப்ளம். ராத்திரி ஒன்னரை மணிக்கு எழுதினா இப்படித்தான்.:)
Vimarsanam arumai...
முழுக்கதையையும் சொல்லாமல் விமர்சித்து பார்க்கும் ஆவலை ஏற்படுத்தியிருப்பதற்கு பாராட்டு.
the movie is good ..not bad as you have mentioned..like not turning to 180'/ i think cable sankar is out of form giving bad reviews to good running movies. -:) ..i accept its your personal view..but i like this movie as well as avan ivan.
in bangalore avan ivan is doing well..almost packed shows on week days and housefull on weekend..
thanks arunkumar. டெய்லி தியேட்டர் போய் செக் பண்ணிட்டு வர்றீங்களா?
180 முழுசா திரும்மவில்லை என்றாலும் திரும்பிய வரை நல்லாவே இருக்கு சார்.. பார்க்க வேண்டிய படம்தான்.. என்ன சென்னையை தவிர மற்ற ஊர்களில் ஓடுவது கடினம்..
கேபிள் சார், டெய்லி தியேட்டர் போன என்னால முடியாது, வினியோக உரிமை எடுத்த ஆட்கள் கொஞசம் பழக்கம் அவன்ங்க சொன்னது தான்.
பெங்களூரில் தமிழ் படம் பார்க்க வரும் கூட்டம் கொஞ்சம் வித்யாசமானது..
ரெகுலர் தமிழ் கூட்டம் , தெலுங்கு டப்பிங் ஹிட் என்று கேள்வி பட்டு தமிழ் version பார்க்க வரும் தெலுங்கு ஆட்கள், அப்புறம் நிறைய கன்னடா ஆட்கள்.
முதல் குருப் எப்போதும் வரும். ரஜினி விஜய் படத்துக்கு கொஞ்சம் அதிகமாகவே வரும். பெங்களூரில் தமிழ் பட வெற்றியை தீர்மானிப்பது மூன்றாவது வரும் கன்னடா சினிமா ரசிகர்களே..இவர்களுக்கு அவன் இவன் ரொம்ப பிடித்து இருக்கு.படம் இன்று வரை பிவிஆர் மற்றும் இன்ன பிற தியேட்டர்களில் ஓடுகிறது. இத்தனைக்கும் இந்திபட போட்டிகளை சமாளித்து.
180’ படம் பெங்களூரில் இருந்து தூக்கிட்டாங்க..தமிழ் versionயை எடுத்து விட்டு தெலுங்கு versionயை அதிக காட்சிகளில் போட்டு இருக்காங்க.
neengal overa scene poduvathai konjam niruthungal. unna than cable sankar
Post a Comment