தமிழ் சினிமாவை நிதிகளின் குடும்ப ஆதிக்கத்தால்தான் சின்ன படங்கள் ஓட மாட்டேன் என்கிறது என்கிற ஒரு கூற்றை தமிழ் திரையுலகத்தின் ஒரு கும்பல் சொல்லிக் கொண்டிருந்தது. ஆனால் நிஜத்தில் அதிக விளம்பரமில்லா படங்களுக்கு, பெரிய நடிகர்களில்லா படங்களை மக்கள் அடித்துப் பிடித்துக் கொண்டு பார்க்க விழைவதேயில்லை என்பது தான் நிஜம். ஏன் இந்த புலம்பல் என்று கேட்பவர்களுக்கு காரணம் இந்த படம் மைதானம்.தமிழ் சினிமாவின் வீழ்ச்சிக்கு இன்னொரு காரணம் பட்ஜெட். தேவையில்லாமல் பல லட்சம் கோடிகளை கொட்டிவிட்டு எடுக்க முடியாமல் அவஸ்தைபடுவது. சுமார் நாற்பது லட்சங்களில் வெறும் கதையை மட்டுமே நம்பி, புதியவர்களை வைத்து நார்மல் டிஜிட்டலில் எடுக்கப்பட்ட இப்படத்தை பார்த்தால் டெக்னாலஜி என்பது ஒரு கருவி மட்டுமே. என்பது தெள்ளத் தெளிவாகப் புரியும்.
கொங்கு மாவட்டத்தில் ஒரு கிராமம். அதில் நான்கு நண்பர்கள். கதை நாயகனான நண்பனுக்கு ஒரு தங்கை. அவளூக்கும் நண்பர்களில் ஒருவனுக்கு காதல். ஆனால் நண்பனோ நட்புக்கு துரோகம் இழைக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு காதலில் மருகுகிறான். இந்த காதல் விஷயம் இன்னொரு நண்பனுக்கு அரசல் புரசலாய் தெரியும். அவனும் இந்தக் காதல் வேண்டாம் என்று கண்டிக்கிறான். ஓரு கட்டத்தில் அவளுக்கு வேறு இடத்தில் நிச்சயமாகிவிடுகிறது. இந்நிலையில் திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பு அவள் காணாமல் போகிறாள். பின்பு என்ன ஆனது என்பதை நிச்சயம் வெள்ளித்திரையில் பார்த்து ஆதரவு கொடுங்கள்.
டெக்னிக்கலாய் பார்த்தால் டிஜிட்டல் ஹெச் டிவி கேமரா, அதிகமாய் லைட்டுகள் கிடையாது, இயற்கையாய் கிடைத்த வெளிச்சத்தில்தான் முக்கால்வாசி படத்தை எடுத்திருக்கிறார்கள். கதை நாயகர்களாய் நான்கு உதவி இயக்குனர்கள். தெரிந்த முகமென்றால் தங்கையாக வரும் கதாநாயகியும், அவளுடய பெற்றோர்களாக வரும் இயக்குனர் அகத்தியனும், என்னுயிர் தோழன் ரமாவும்தான்.
நான்கு பேரில் முக்கிய வில்லன் கேரக்டரில் நடிப்பவரின் நடிப்பு ஓகே. மற்றவர்கள் எல்லாம் கிடைத்த கேப்பில் கிடா வெட்ட முயற்சித்திருக்கிறார்கள். கதாநாயகியின் அண்ணாக வருபவரின் நடிப்பும் ஓகே. அகத்தியனின் நடிப்பு ஆங்காங்கே கொஞ்சம் மெலோட்ராமவாக இருந்தாலும் தேவையாகயிருப்பதால் ஒத்துக் கொள்ள முடிகிறது. இயக்குனர் இதுவரை யாரிடம் வேலை செய்தது இல்லையாம். முதல் பாதி திரைக்கதையில் கேரக்டர் எஸ்டாபிளிஷ்மெண்டுக்காக மெனகெட்டது சுறுசுறுப்பை குறைத்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். ஆனால் பாராட்ட வேண்டிய விஷயம் என்னவென்றால் திருவிழா கிடையாது, தண்ணியை போட்டு விட்டு பிகர்களை தேடுவது கிடையாது. குத்து பாட்டு கிடையாது போன்ற பல கிடையாதுகள் படத்தில் இருக்கிறது.
முதல் பாதியில் தங்கையை காணவில்லை என்றதும் நண்பர்களுடன் தேடும் காட்சி அநியாய நீளம். காணாமல் போன இம்பாக்டையே கெடுத்துவிடுகிறது. அது மட்டுமில்லாமல். படத்தில் பைக் ஸ்டார்ட் பண்ணும் காட்சி என்றால் வண்டியை வெளியே எடுத்து நிறுத்தி ஸ்டார்ட் செய்வது வரை காட்டி விட்டு, பின்பு போன இடத்தில் திரும்பவும் ஸ்டார்ட் செய்வது வரை காட்டுவதும், காட்சிகள் நீளமாய் இருப்பதும் படத்திற்கு பெரிய மைனஸ். நல்ல எடிட்டர் நிச்சயமாய் உதவியிருக்க முடியும்.
நான்கு பேரில் முக்கிய வில்லன் கேரக்டரில் நடிப்பவரின் நடிப்பு ஓகே. மற்றவர்கள் எல்லாம் கிடைத்த கேப்பில் கிடா வெட்ட முயற்சித்திருக்கிறார்கள். கதாநாயகியின் அண்ணாக வருபவரின் நடிப்பும் ஓகே. அகத்தியனின் நடிப்பு ஆங்காங்கே கொஞ்சம் மெலோட்ராமவாக இருந்தாலும் தேவையாகயிருப்பதால் ஒத்துக் கொள்ள முடிகிறது. இயக்குனர் இதுவரை யாரிடம் வேலை செய்தது இல்லையாம். முதல் பாதி திரைக்கதையில் கேரக்டர் எஸ்டாபிளிஷ்மெண்டுக்காக மெனகெட்டது சுறுசுறுப்பை குறைத்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். ஆனால் பாராட்ட வேண்டிய விஷயம் என்னவென்றால் திருவிழா கிடையாது, தண்ணியை போட்டு விட்டு பிகர்களை தேடுவது கிடையாது. குத்து பாட்டு கிடையாது போன்ற பல கிடையாதுகள் படத்தில் இருக்கிறது.
முதல் பாதியில் தங்கையை காணவில்லை என்றதும் நண்பர்களுடன் தேடும் காட்சி அநியாய நீளம். காணாமல் போன இம்பாக்டையே கெடுத்துவிடுகிறது. அது மட்டுமில்லாமல். படத்தில் பைக் ஸ்டார்ட் பண்ணும் காட்சி என்றால் வண்டியை வெளியே எடுத்து நிறுத்தி ஸ்டார்ட் செய்வது வரை காட்டி விட்டு, பின்பு போன இடத்தில் திரும்பவும் ஸ்டார்ட் செய்வது வரை காட்டுவதும், காட்சிகள் நீளமாய் இருப்பதும் படத்திற்கு பெரிய மைனஸ். நல்ல எடிட்டர் நிச்சயமாய் உதவியிருக்க முடியும்.
இதையெல்லாம் சரி செய்வது போல படத்தின் இரண்டாவது பாதி விறுவிறுவென கொண்டு போயிருக்கிறார்கள். இயக்குனர் தயாரிப்பாளர் சக்திவேலுக்கு கொஞ்சம் பணமும், நல்ல ஆர்டிஸ்டுகளும் கிடைத்தால் ஒரு நல்ல படத்தை தருவார் என்று புரிகிறது.
மைதானம்- 50/50
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Post a Comment
16 comments:
valga cable sankar,
me the first
விளம்பரம் இல்லா படம் ஓடமாட்டேங்கறது உண்மையே. ஒரு சில விதிவிலக்குகள் மட்டுமே உண்டு.விளம்பரம் இல்லாததால் எவ்வளவோ நல்ல படங்கள் வந்ததே நிறையபேருக்குத் தெரியாமல் வந்த சுவடு தெரியாமல் ஓடிஒளிந்த வரலாறு அதிகமுண்டு திரையுலகில்.
சில படங்கள் லேட் பிக்அப் ஆன படங்களும் உண்டு. மைதானம் எப்படி என்பது போக போகத்தான் தெரியும். யாரிடமும் உதவியாளராய் வேலைசெய்யாமல் சுயம்புவாய் படமெடுத்ததால் நிறைய தடுமாறியிருக்கிறார் என்று நினைக்கிறேன். இந்த படமே அவருக்கு பாடபுத்தகமாய் இருந்து நிறைய கற்றுக்கொடுத்திருக்கும் என்று நம்புகிறேன். நடுநிலையான விமர்சனம் அருமை.
இந்த மைதானம் படத்தை பற்றிய ஒரு உயர்வான பார்வை:தமிழ் சினிமா உலகம் - மைதானம்
கிங் விஸ்வா
சென்னை சூப்பர் கோமிக்ஸ் - இரண்டாவது காமிக்ஸ் - சென்னை சூப்பர் கிட்ஸ்
//தமிழ் சினிமாவை நிதிகளின் குடும்ப ஆதிக்கத்தால்தான் சின்ன படங்கள் ஓட மாட்டேன் என்கிறது என்கிற ஒரு கூற்றை தமிழ் திரையுலகத்தின் ஒரு கும்பல் சொல்லிக் கொண்டிருந்தது. // அது முற்றிலும் பொய் என்கிறீர்களா?
Hi Sankar
I like all your unbiased and balanced reviews.
This one is not related to this post, but anyhow,I want you to write about the attitude of some Schools, who issue applications for 12th Std only to the students who have scored above 95% in 10th Std. Isn't this atrocious? A small scoop is found in yesterday's (31.05.11) Deccan Chronicle (Chennai).
Well Review . . .
Thanks
என்ன கேபிள் அவர்களே முன்னுக்கு பின் முரணாக உளருகிரிர்கள்? கேபிள் TV களை அம்மா அரசுடமை ஆக்கப்போவதால் வந்த விரக்தியோ?
அரசுடமை ஆக்கினால் எனக்கொண்ணும் பாதிப்பில்லை. கருப்பு.. யார் உளருகிறார்கள் என்று வரும் காலத்தில் தெரியும். அன்னையிலேர்ந்து சொல்றேன். பெயரோடு வாங்கன்னு..
ஆனால் நிஜத்தில் அதிக விளம்பரமில்லா படங்களுக்கு, பெரிய நடிகர்களில்லா படங்களை மக்கள் அடித்துப் பிடித்துக் கொண்டு பார்க்க விழைவதேயில்லை என்பது தான் நிஜம்.//
இந்த மைதானம் படத்தைப் பார்க்க வேண்டுமென்று வழக்கமாகச் செல்லும் ஓரளவு தரமுள்ள திரையரங்குகளான கமலா, சத்யம், ஐநாக்ஸ் ஆகியவற்றை ஆராய்ந்தேன். இந்த படம் இவற்றில் எந்த திரையரங்கிலும் வெளியாகவில்லை. மக்கள் இப்போதெல்லாம் கொடுக்கும் காசுக்கு திரையரங்கம் தரமான சேவை தருகிறதா என்றும் பார்க்கிறார்கள். விளம்பரம் போதாமையை விட தரமான திரையரங்கங்கள் கிடைப்பது கடினமாக இருப்பதுதான் சிறிய படங்களின் வீழ்ச்சிக்குக் காரணம். இந்த காரணத்தாலேயே தா, தென்மேற்கு பருவக் காற்று போன்ற நல்ல படங்களும் ஓடவில்லை.
கேபிள் TV களை அம்மா அரசுடமை ஆக்கப்போவதால் வந்த விரக்தியோ?//
அது அவங்க அம்மா வந்தாலும் முடியாது. மத்திய அரசின் தகவல் பரப்பு துறை கீழ் வரும் ஒரு தொழிலை மாநில அரசால் அரசுடமை ஆக்க முடியுமென்று என்று அம்மா சொல்வதை அ.தி.மு.க அனுதாபிகள் வேண்டுமானால் நம்பலாம். கேக்குறவன் கேனையா இருந்தா பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. அப்படி ஒரு சட்டம் கொண்டு வந்தால் அது மாநில அரசின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது என்று உச்சநீதிமன்றம் சட்டத்தை ரத்து செய்து விடும்.
அடக்கமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அரசு கேபிள் நிறுவனத்தை முழுவீச்சில் செயல்படுத்தி மாநில அரசு இத்தொழிலில் போட்டியாளராக இறங்கலாம். அது ஒன்றுதான் ஆகக் கூடியது.
HI sankarnarayanan,
It is suprising to see you in the movie Vetrivel Saktivel telecasted in KTV Today, in which you acted as police commissioner.
I thought you only acted in TV Serials.
All the best for you in future endeavors.
அது அவங்க அம்மா வந்தாலும் முடியாது//
Don't you know the (central) ministry handling Cable TV is to go to AIADMK?
@covai raghu
nandri
@கடம்பவன குயில்
நிச்சயம்
2கிங் விஸ்வா
பார்த்தேன் நன்றி
@ஹேராம்
முற்றிலும் நிஜமல்ல என்கிறேன்
@கோபி
நிச்சயம் எழுதுகிறேன்.
@உத்வி இயக்கம்
நன்றி
@ஜெகன்நாத்
தியேட்டர்கள் கிடைப்பது ஒரு பக்கம் இருந்தாலும் இம்மாதிரி படங்களை பேட்டர்னைஸ் செய்வதற்கு ரசிகர்கள் இல்லை என்பதும் ஒரு சோகம் தான்.
@ivan yaar
ive acted more than 145 movies in small characters. apart from that 136 serials
Don't you know the (central) ministry handling Cable TV is to go to AIADMK? //
I do not want to speak based on assumptions.Even If such a law is enacted in parliament it has to be applicable throughout India. Other states might not want such a law and the motion may be defeated in Rajyasabha.Also bear in mind that the central government will have to compensate MSOs throughout India for which the central government might not be interested. This is not such an essential service which has to be definitely nationalised. While education and healthcare is being privatised is cable operations such a burning problem?
அ.தி.மு.க வினரின் அரிப்புக்காக முழு நாடும் சொரிந்து கொள்ள முடியாது.
Post a Comment