சாப்பாட்டுக்கடை- சாந்தி தியேட்டர் ஈரானி டீக்கடை


தமிழகம் வந்தாரை வாழ வைக்கும் என்பார்கள். ஆம் வருபவர்கள் எல்லாருக்கும் ஏற்ற நகரம் சென்னை. பணக்காரர்கள் முதல் அடிதட்டு மக்கள் வரை அனைவருக்குமான நகரம். அது போலத்தான் சாப்பாடும்.பத்து ரூபாய்க்கு   கலந்த சோறும், பதினைந்து ரூபாய்க்கு மீன் குழம்புடன் சாப்பாடு கிடைக்கிற ஊரில்தான் ஒரு வேளை சாப்பாடு ஆயிரம் ரூபாய்க்கும் கிடைக்கிறது.
சென்னையின் முக்கிய சாலையான அண்ணா சாலையில்,சாந்தி தியேட்டருக்கு முன் ஒரு ஈரானி டீ ஸ்டால் இருக்கிறது. ஈரானி டீ ஸ்டால்களில் மிகவும் பிரபலம் குட்டி சம்சாக்கள். அது பற்றி தனியே வேறு ஒரு பதிவில் பேசலாம். இந்தக் கடையில் ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால் டீ, சம்சா, சமோசா, ஜூஸ் வகையராக்கள் இல்லாமல், காலையிலிருந்து இரவு வரை சுடச் சுட பூரி போட்டு கொடுப்பார்கள். கூடவே அதற்கு கிழங்கும், தக்காளி சட்னி போன்ற ஒரு குருமாவும் தருவார்கள். பதினைந்து ரூபாய்க்கு நல்ல பெரிய சைஸ் பூரி நாலு, அதுவும் போட்டு வைத்த பூரியல்ல. டோக்கன் வாங்கியவுடன் தான் பொரிக்கவே ஆரம்பிப்பார்கள்.   சாப்பிடும்போது சரவணபவன் பூரி ஞாபகம் வருவதை தடுக்க முடியவில்லை. ஒரு செட் பூரி,சின்ன சமோசா ஒரு நாலு, ஒரு டீ.. டிவைன். Have A Try.

#########################################################

சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Comments

This comment has been removed by the author.
//காலையிலிருந்து இரவு வரை சுடச் சுட பூரி போட்டு கொடுப்பார்கள்.//

நானும் அங்கே பூரி சாப்பிட்டிருக்கேன். வாயில் வைக்க சகிக்காது.

கிங் விஸ்வா
ரெடி-2011-ஹிந்திப்படம் - ஆணழகன் சல்மானின் ஒலகப்படம் - திரைவிமர்சனம்
Athisha said…
@கிங்விஸ்வா

வடை எங்களுக்கே.. சாரி சம்சா எங்களுக்கே!
Anonymous said…
see 13அறுவை கேஸ்கள் in this google document

https://docs.google.com/document/d/1jupa2kQYO_Pc4KlRinb1yg5323ktF4epqipg73k0kFM/edit?hl=en_US
Anonymous said…
பெண்களைப் பற்றி சாணக்கியர்

https://docs.google.com/document/d/1idvKf-KoXUc5OuUpWJ_5olkFQnptteG3aUv6CjJBAZo/edit?hl=en_US
yuva.. உனக்கு பூரி பிடிக்காதா?
allinall said…
repeatuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu
நான் விகடனில் பணியாற்றிக்கொண்டிருந்த காலத்தில் இரானி டீ ஸ்டாலுக்குப் போய்தான் டீ குடிப்பது வழக்கம். சாதா டீ 5. ஸ்பெஷல் 6. மற்ற கடைகளைவிட அந்தப் பகுதியில் இரானி ஸ்பெஷல் கொஞ்சம் ஸ்பெஷல்தான்! சமோசா, சூடான பட்டர் பிஸ்கட் சாப்பிட்டு இருக்கேன். ஆனா, பூரி சாப்பிட்டதே இல்லை அங்கு பூரி கிடைக்கும் என்பதே சாப்பாட்டுகடை பார்த்தபிறகுதான் தெரிந்துகொண்டேன். சங்கர் சார் நன்றி.
King Viswa said…
//நானும் அங்கே பூரி சாப்பிட்டிருக்கேன். வாயில் வைக்க சகிக்காது.//

//வடை எங்களுக்கே.. சாரி சம்சா எங்களுக்கே!//

என்ன கொடுமை சார் இது? ஒரு நாள், ஒரே ஒரு நாள் மடிக்கணினியை கொண்டு வராததில் வந்த கேப்பில் இப்படி எல்லாமா கமென்ட் போட்டு மானத்தை வாங்குவது? இருங்க, உங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல என்னால முடியாது. அதுக்கு எல்லாம் அவரு தான் வரணும். அவரு வந்தா....... வெயிட் பண்ணுங்க.

கிங் விஸ்வா.
கவனியுங்க, இங்கே நோ லிங்க்.

Popular posts from this blog

சாப்பாட்டுக்கடை - டி.கே. மாப்பிள்ளை மெஸ். -77km

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.