ஆரண்ய காண்டம்.
”எது தேவையோ அதுவே தர்மம்.”
இந்த இரண்டு வரிகள்தான் இப்படத்தின் கதை. ஆங்கிலத்தில் வேண்டுமானால் சர்வைவல் த பிட்டஸ்டு என்று எடுத்துக் கொள்ளலாம். ஆங்கில ஹாலிவுட் படங்களை பார்த்து அரைகுறையாய் சூடுப் போட்டுக் கொள்பவர்கள் நிறைய பேர். ஆனால் அதே குவாலிட்டியில் ஒரு படத்தை. அதுவும் குவாண்டின் டொரண்டினோவின் பாணியில் அச்சு அசலாய் ஒரு ப்ளாக் படத்தை கொடுக்க முடியுமா? அதுவும் தமிழில். இதோ.. உங்களுக்காக ஆரண்ய காண்டம்.
கதை என்று பார்த்தால் வழக்கமான கேங்ஸ்டர்களுக்குள்ளான ப்ரச்சனைதான். ஆனால் ஒரு நாளில் இம்மாதிரி மனிதர்களின் வாழ்க்கையில் நடக்கும் பல விஷயங்கள் தான் சுவாரஸ்யம். லோக்கல் தாதாவான அய்யா ஜாக்கி ஷாராப்பிடம் வேலைப் பார்க்கும் பசுபதி, எதிர்க் கோஷ்டியான கஜேந்திரனிடமிருந்து டபுள் க்ராஸ் செய்து சரக்கை அடிக்க நினைக்க, அதில் மிகச் சாதாரண மனிதர்கள் எல்லாம் மாட்டிக் கொள்வதும், பின்னர் அதில் வரும் சிக்கல்களும் மிக அழகாய் சொல்லியிருக்கிறார்கள்.
படத்தின் ஆரம்பக் காட்சியில் வயதான தாதா, சினிமாவில் நடிக்க வைக்கிறேன் என்று கூட்டி வந்து கூத்தியாளாக வைத்துக் கொண்டிருக்கும் சுப்புவிடம் உடலுறவில் முடியாமல் போகும் காட்சியும், தன் இயலாமையை மறைக்க, அவளை அடிக்க.. சுப்பு “உன்னால முடியலைன்னா ஏன் என்னை அடிக்கிறே?” என்று அழும் காட்சியில் ஆரம்பிக்கும் ஆச்சர்யங்கள் படம் நெடுக தொடர்கிறது.
பசுபதியாய் சம்பத். மனிதர் வரவர கலக்கிக் கொண்டிருக்கிறார். மிக இயல்பான பாடிலேங்வேஜ். பல இடங்களில் கண்களில் தெரியும் சிறு சிறு மாற்றங்களில் பல உணர்வுகளை கொண்டு வருகிறார்.
சுப்புவாக யாசின் பொன்னப்பா.. ஆரம்பத்தில் பார்க்கும் போது பரிதாபப்பட வைக்கிறார். சுப்புவுக்கும் சப்பைக்குமான திடீர் காதலும், காமமும் அதிர்ச்சியென்றால் பின்னால் நடக்கும் காட்சிகள் அட போட வைக்கின்றன.
சப்பையாக ரவிக்கிருஷ்ணா. மிகச் சரியான கேரக்டர் அவருக்கு. இவரின் கேரக்டரை பற்றிச் சொன்னால்.. சுவாரஸ்யம் போய்விடும். கிராமத்திலிருந்து கடனுக்கு பயந்து சேவல் சண்டையில் ஜெயிக்க வரும் வாழ்ந்து கெட்ட ஜமீந்தாரும், அவரது ஸ்மார்ட் பையனும் சரியான கேரக்டர்கள். எதிர்பார்ட்டியான கஜேந்திரன், அவனின் தம்பி, அய்யா டீமில் வரும் ஆண்டிகளைப் மேட்டர் செய்யும் இளைஞன். என்று பார்த்து பார்த்து ஆட்களை பொறுக்கியிருக்கிறார்கள். கேஸ்டிங் என்றால் மிக சரியான கேஸ்டிங்.

படம் நெடுக படு சுவாரஸ்யமான ஆனால் பல இடங்களில் நெத்தியிலடிக்கும் வசனங்கள். “உனக்கு அப்பான்னா ரொம்ப பிடிக்குமா?” என்று சம்பத் கேட்க, “இல்ல. ஆனா அவரு என் அப்பா”, “என்னைப் பொறுத்தவரைக்கு ஆம்பளங்க எல்லாருமே சப்பைதான்”. ஏற்கனவே செத்து போனவனைப் பார்த்து “நீ மட்டும் என்கிட்ட உயிரோட மாட்டியிருந்த உன்னை கொன்னுருப்பேன்” படம் நெடுக சட்டிலான ஒரு ஹூயூமர் படு சீரியஸாய் ஓடிக் கொண்டிருக்கிறது.
படத்திற்கு மிகப் பெரிய பலம் யுவனின் பின்னணியிசையும், வினோத்தின்
ஒளிப்பதிவும். இரண்டு பேரும் இயக்குனருக்கு இரு கண்களாய் அமைந்திருக்கிறார்கள். படத்தின் டைட்டில் காட்சியிலிருந்து பெரும்பாலான காட்சிகள் அமைதியாகவேயிருக்க, அதை மீறி பின்னணியிசை வரும் காட்சிகளில் எல்லாம் இதுநாள் வரை அம்மாதிரி காட்சிகளுக்கு கேட்டு பழக்கமான இசையில்லாமல், வருடும், வயலின் கிடார், போன்ற ஸ்டிரிங் இன்ஸ்ட்ரூமெண்டுகளை வைத்து கலக்கியிருக்கிறார் யுவன். வினோத்தின் ஒளிப்பதிவு கதைக்கு தேவையான அத்துனை இம்பாக்டையும் ஒரு சேர கொடுத்திருக்கிறார். படத்தின் முதல் ஷாட்டிலிருந்து. ஒரு சில ஆங்கிள்கள் ரசிக்க வைக்கிறது. P.L. ஸ்ரீகாந்தின் எடிட்டிங் அருமை. அதே போல் ஆக்ஷன் கொரியோகிராபி. கவிதையாய் ரசித்து செய்திருக்கிறார்கள்.
எழுதி இயக்கியவர் தியாகராஜன் குமாரராஜா. முதல் படமாம் இவருக்கு. யார் சொன்னாலும் நம்ப முடியாது. அத்துனை டீடெயிலிங், பர்பெக்ஷன் படம் முழுவதும். ஆரம்பக் காட்சிகளில் கேரக்டர்களை அறிமுகப் படுத்தும் போது செட்டிலாவதற்கு கொஞ்சமே கொஞ்சம் டைம் எடுத்துக் கொள்கிறார். அதன் பின்னால் சும்மா அடி தூள்தான். அருமைனான திரைக்கதை, ஆப்டான இண்டெலிஜெண்டான வசனங்கள். வாழ்க்கையில் மிகச் சாதாரணமாக நடக்கும் நிகழ்வுகளிடையே பேசும் நகைச்சுவைகள். என்று ஒவ்வொரு டிபார்ட்மெண்டிலும் நம்மை ஆச்சர்யப் படுத்துகிறார். புழுவை மீன் சாப்புடுது, மீனை மனுஷன் சாப்புடுறான் என்பது போன்ற வாழ்க்கையின் ஆதாரத்தை மிகச் சுலபாய் சொல்கிறார். கஜேந்திரன் கேரக்டரைப் பற்றி பசுபதி பில்டப் செய்கிறான். கஜேந்திரன் கோபம் வந்தால் கட்டை விரலை கடித்து துப்பிவிடுவான் என்று சொல்லிவிட்டு போகும் காட்சியில் ஒரு பெண்மணியின் கட்டைவிரல் இல்லாத கை சில்ஹவுட்டில் வருவது. க்ளைமாக்ஸ் பின்னி மில் சண்டைக் காட்சியும், அதை படமாக்கியிருக்கும் விதமும் அட..அட.. அட்டகாசம். இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து சொல்லலாம். நீங்கள் பார்க்கும் போது சுவாரஸ்யம் இல்லாம போய்விடும். படத்தில் குறைகளேயில்லையா என்று கேட்டால் பெரிதாய் தெரியவிலலை என்றுதான் சொல்ல வேண்டும். அதையும் மீறி குறை என்று சொன்னால் இம்மாதிரியான வித்யாசமான மேக்கிங் சாதாரண திரைப்பட ரசிகனுக்கு கொஞ்சமே கொஞ்ச நேரம் மெதுவாக செல்வது போல் தோன்றலாம். கிராண்ட் ப்ரிக்ஸ் அவார்ட் வாங்கியதில் ஆச்சர்யமேயில்லை.
ஆரண்ய காண்டம் - A Must Watch.. Intelligent Gangster Flick.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
Over . . .
Anaalum Thanks
உண்மையிலேயே நல்ல படமா? இல்ல நொந்தலாலா மாதிரி நல்ல படமா???
நேற்று 6 degress படம் பார்த்தேன் .சரண் சார், மதன் சார் ,சம்பத் சார் எல்லோரும் வந்திருந்தார்கள் .
உங்களது விமர்சனம் இப்படித்தான் இருக்கும் என்று நினைத்தேன் .அதே போல் உள்ளது .சரியான விமர்சனம் .
டுபாகூர் திரைஅரங்கில் பார்த்தவர்கள் படத்தில் வசனமே புரியவில்லை என்கிறார்கள்
Same tagline was used in the behindwoods review too! ;)
என்ன ஓவரு.. படம் பாத்தீங்களா? தியேட்டரில் சில ரசிகர்கள் செய்யும் அமர்களங்களை வைத்து சொன்ன விஷயம்தான்.
நிச்சயம் பாக்க வேண்டிய படம்.
இந்தப் படம் பார்த்த பிறகுதான் எழுத வேண்டுமென்ற உந்துதலே ஏற்பட்டது. அட்டகாசமான படம்.
அன்பு நித்யன்
-அருண்-
//கிராண்ட் ப்ரிக்ஸ் //
இந்த ப்ரெஞ்ச் உச்சரிப்பே இப்படித்தான் எசமான்.
அது 'க்ராண் ப்ரீ'.
தமிழில் நான் பார்த்து ரசித்த முதல் திரைப்படம்
@ கேபிள் சங்கர் ஆங்கிலப் படங்களுடன் ஒப்பிடா வேண்டாம்
குவாண்டின் டொரண்டினோ இவரால் இந்த படத்தை இயக்க முடியாது
அவர் இந்த சுழலில் இருந்திருந்தால்
அவரும் சப்பை யாகவே இப்படத்தை இயக்கி இருப்பர்
நேத்து காலைலய படம் பார்த்திட்டேன், சும்மா சொல்ல கூடாது பாட்டே இல்லமே ரெண்டு மணிநேரம் படம் சும்மா ஜம்முனு போகுது . நானும் ஒத்துக்கிறேன் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
நல்ல பதிவு
ஆனால் பார்க்க வந்தவர்கள் எண்ணிக்கையென்னவோ 25ஐத் தாண்டாது.
5ஸ்டார் கிருஷ்ணாவிற்கு கஜேந்திரனின் பதில்: அட..அட..!
சுப்புவிடம் சப்பையின் இரண்டாம் இன்னிங்ஸ் அழைப்பு.
வாட்டர் டேங்கை விட்டு இறங்கியபின் சப்பையின் அய்யா பற்றிய bragging-க்கு சுப்புவின் பதில்.
உரையாடல்கள் அருமையாக வந்திருக்கிறது.
டைட்டிலில் யாஸ்மினின் பெயரை யஅஸ்மின் என்று போட்டிருப்பது யாராவது பிழையைக் கண்டுபிடிக்கிறார்களா என்று பார்க்கத்தானோ?
பின்னி மில் பேக்ட்ராப் வரவர போர் அடிக்கத் துவங்கிவிட்டது. நிர்வாகம் கட்டடத்தை ரீ-மாடலிங் செய்வது பற்றி யோசிக்கலாம்.
தியாகராஜன் குமாரராஜா - விகடனின் பேட்டியை வரும் வாரங்களில் எதிர்பார்க்கலாம்.
Please explain some technical words like ப்ளாக் படம் and Non-linear, Linear stories, - explain about these technical words...if u like....
http://www.koodal.com/tamil/movies/reviews/654/aaranya-kaandam
இதுவும் நீங்கள் எழுதிய விமர்சனமா ????
நிச்சயமா பார்க்க வேண்டிய படம்.