Thottal Thodarum

Jun 16, 2011

அன் சங் ஹீரோ –நிகமானந்தா யோகி

nigama_061511-1 நாம் தனி மனிதனாய் எதாவது ஒரு விஷயத்தை செய்தியாக்கவோ, அல்லது அதை பூதாகாரமாய் ஊதி ப்ரச்சனையாக்கவோ முடியுமா? நிச்சயம் முடியாது. இன்றைய கட்டத்தில் அதற்கு செய்தி ஊடகங்களின் ஆதரவில்லாமல் எதுவும் செய்ய முடியாது. சரி செய்தி ஊடகங்கள்தான் அதைச் சரியாக செய்கிறதா? என்றால் அதுவும் பெரிய கேள்விக்குறிதான்.  மற்ற மாநிலங்களில் எல்லாம் கூட பரவாயில்லை. நம் தமிழ் நாட்டு ஊடகங்களில் இரண்டே வகைதான். ஒன்று ஆளும்கட்சி ஆதரவு இன்னொன்று எதிர்ப்பு. இதிலே எதிலும் சேர்த்தியில்லாமல் நடுநிலை என்று முழங்கிக் கொண்டிருக்கும் சில ஊடகங்களை லிஸ்டில் வைத்துக் கொள்ள முடியாது. மீடியா நினைத்தால் எதை வேண்டுமானாலும் திரும்பத் திரும்பச் சொல்லி மக்களின் மனதில் பிரளையங்களை ஏற்படுத்த முடியும். உதாரணம் சன் டிவியில் வளர்ப்பு மகன் திருமணத்தைக் காட்டியே ஆட்சியை பிடித்ததும், அவர்கள் கொடுத்த டிவியிலேயே 2ஜி மேட்டர் நாறிப் போய் தோற்றதையுமே சொல்லலாம். ஆனாலும் தமிழில் சொல்லிக் கொள்கிறார்ப் போல டெம்ப்ளேட் செய்திகளைத் அளிக்காமல், நிஜமான தமிழனின் ப்ரச்சனைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு வரும் சேனல்களோ, பத்திரிக்கைகளோ வெகுவாக இலலை என்பது வருத்தத்துகுரிய விஷயமே. ஆனால் இக்கட்டுரை தமிழக செய்தி ஊடகங்களை பற்றியதல்ல. இந்திய அளவிலான ஊடகங்களைப் பற்றி.


2ஜி,க்கு பிறகு மிகவும் பரபரப்பாக பேசப்பட வைத்த ஒரு செய்து ஹன்னா ஹசாரே, இவரின் உண்ணாவிரத போராட்டத்தை மீடியா எந்தளவிற்கு பரபரப்பாக்கியது என்பதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. எல்லா பத்திரிக்கைகள், செய்தி சேனல்கள், எஸ்.எம்.எஸ்., இண்டெர்நெட் என்று எங்கு பார்த்தாலும் ஹன்னா.. ஹன்னா.. என்று பேசிக் கொண்டிருந்தார்கள். அடுத்து வந்தார் பாபா ராம் தேவ். லஞ்ச ஊழலை எதிர்த்து பல கோடி ரூபாய் செலவில் உண்ணாவிரதமிருக்கப் போகிறேன் என்று மீடியாக்களுக்கு பெரும் தீனிக் கொடுத்தார். ஊரில் உள்ள அத்துனை மீடியாக்களும், அவர் யார்.. எப்படிப்பட்டவர்? அவரின் சொத்து மதிப்பென்ன? என்றெல்லாம் செய்திகளை அள்ளிவிட்டுக் கொண்டிருக்க, ஹன்னா கூட அவருடன் சேராவிட்டால் தான் அட்டு பீஸு ஆகிவிடுவோமோ என்றெண்ணி, அவருக்கு ஆதரவு அளிக்க, டிவியில் தெரிய உட்கார்ந்து கொண்டார். ஏனென்றால் மீடியாவின் பலம் அவ்வளவு பெரியது. ஆனால் இதே நேரத்தில் இன்னொரு பாபா 114 நாட்கள் உண்ணாவிரதமிருந்து தன் உயிரை விட்டிருக்கிறார். இது பற்றி அவர் இறந்தவுடன் தான் வெளியே தெரிகிறது. அதுவும் முதல் பக்க செய்தியாக அல்ல.. நடுவில் ஏதோ ஒரு பக்கத்தில். அவர் ஏன் உண்ணாவிரதமிருந்தார்?

அவர் பெயர் நிகமானந்த் பாபா. வயது 36, மத்ரிசதன் என்கிற அமைப்பின் நிறுவனர் சாமியார். கடந்த பிப்ரவரி மாதம் 19 தேதி முதல் கும்பமேளா பகுதியில் உள்ள கங்கை நதிக்கரையிலிருந்து கல்குவாரி மைனிங்கினால் வரும் கல் துகள்களால் கங்கை அழிந்து  கொண்டிருக்கிறாள் என்பதால் அதை தடுக்க உண்ணாவிரதம் மேற்கொண்டார். உண்ணாவிரதத்தின் போது அவரின் உடல் நிலை மோசமாகி கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.  கோர்ட்டின் மூலமாய் இதற்கு தடையுத்தரவு வாங்கியதை எதிர்த்து குவாரி உரிமையாளர்கள் கேஸ் போட, உத்ராஞ்சல் ஹைகோர்ட் இனிமேல் கும்ப் ஏரியாவில் மைனிங் செய்யக்கூடாது என்று மே 26 அன்று உத்தரவிட்டிருக்கிறது. அதாவது அவரின் உடல் நிலை மோசமாகி ஏப்ரல் 27க்கு பிறகு.  அதற்குள் அவர் கோமாவில் அடங்கிப் போய் கிட்டத்தட்ட மூளை சாவு நிலையில் இருந்து, நேற்று இறந்ததாக அறிவித்துவிட்டார்கள். உடனடியாய் சுஷ்மா சுவராஜ் போய் ஆஜராகிவிட்டார். மத்ரி சதன் அமைப்பினர் நிகமானந்த யோகியை விஷ மருந்திட்டு கொன்று விட்டார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார்கள். அதற்கு காரணமான முக்கிய கல்குவாரிக்காரர்கள் பெயரைச் சொல்லியிருக்கிறார்கள். இவரது சாவிற்கு காரணம் ஆளும் கட்சிதான் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. உத்ரகாண்ட் மக்கள் ஆட்சியாளர்கள்மீது கடும் வெறுப்பிலிருக்கிறார்கள்.

உண்ணாவிரதம் இருக்க போகிறேன் என்று அறிக்கைவிடுபவர்களை சப்போர்ட் செய்ய பெரிய அரசியல் அமைப்புகளின் பின்னணியோ, அல்லது கார்பரேட்டுகளின் பின்னணியோ இல்லாது இருந்தால் மீடியா அதை கவனிக்காதோ. இவர்கள்க்கென்று ஒரு தொழில் தர்மமில்லையா? அரசியல் பின்னணீயில்லாததால்தான் நிகமானந்தாவுக்கு கிடைக்க வேண்டிய முக்யத்துவம் மீடியாவில் கிடைக்கவில்லையோ?.  ஹன்னாவுக்கும், ராம்தேவுக்கும் கிடைத்த அதே மீடியா வெளிச்சத்தை, தங்கள் கடமையுணர்ந்து ஊடகங்கள் இவரின் பிரச்சனைகளுக்கு வெளிச்சம் காட்டியிருந்தால் ஒரு உயிர் அணைந்திருககாதே..
இதனால் அறியப்படும் நீதியாதெனில் - பப்ளிக்குட்டி ரொம்ப முக்கியம்.

சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்


Post a Comment

15 comments:

PARAYAN said...

Unmai!!!

bandhu said...

கொடுமை! ஊடகங்களுக்கு நியாய தர்மம் கிடையாது. எது விற்குமோ அதுவே நியாயம் என்பது மறுபடி மறுபடி தெரிந்தாலும் நாம் ஏன் இவர்களை இன்னமும் நம்ப வேண்டும்?

Balaji-Paari said...

http://www.independent.co.uk/news/world/asia/a-decade-of-starvation-for-irom-sharmila-2124608.html

Arvinth said...

Please write a separate post on this and spread the news...

http://candlelightfortamils.blogspot.com/

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

மீடியா வெளிச்சம் இல்லாமல் எந்த காரியமும் நடக்காது என்ற நிலையை அடைந்து விட்டோமா..!! முகம் தெரியாத மனிதர்களின் எண்ணற்ற தியாகங்கள் இப்படி தேசம் முழுவதும் இருந்து கொண்டுதான் உள்ளன.. உள்ளூரில் கூட யாருக்கும் தெரியாமல்.

shortfilmindia.com said...

aravid why dont you spread this post?

shortfilmindia.com said...

aravid why dont you spread this post?

பிரபல பதிவர் said...

என்னவோ போங்க...

Gopi said...

Similarly, there is not even a single line mention in any of the national news channel yesterday on Srilankan Genocide Video telecast in Channel 4.

The Video is very gruesome and the brutalities are shocking.

Atleast bloggers like you should write about it.

R. Jagannathan said...

Anna is not Hanna! - R.J.

R. Jagannathan said...

He is Anna Hazare, not Hanna Hazare. It is true the media makes a mountain out of a molehill!- R.J.

Anonymous said...

Timing post. Thanks!

Arvinth said...

ShortfilmIndia,

I'm not a blogger, I'm just a reader. Thought if popular bloggers like CableSankar, Truetamilan, Savukku, Idlivadai etc share this news in their blogs, it would reach larger people.

SIV said...

நியாமான பார்வை. அன்னா விற்கு அரசியல் கட்சிகள் ஆதரவளித்த போது தூள் படத்தில் வில்லன் அமைச்சர் காவேரி பிரச்சனைக்கு உண்ணாவிரதம் இருப்பதும் அதற்கு அனைவரும் விழுந்து அடித்துக்கொண்டு ஆதரவளிப்பதும் ஞாபகம் வருகிறது.

ஊழல் ஒழிய வேண்டும் என்று ஆதரவளித்த விஐபிகளைவிட எங்கே ஊழல் உண்ணாவிரததிற்கு ஆதரவளிக்கவில்லை என்றால் இமேஜ் பாதிக்கும் என்ற காரணத்தில் ஆதரவளித்த விஐபிகளே அதிகம்

SIV said...

கோபியின் கருத்தை முழுமையாக ஆதரிக்கிறேன். சேனல் 4 பத்தின செய்திகளை எங்கேயும் காண முடியவில்லை. வழக்கமாக ஈழ பிரச்சனைகளுக்கு குரல் குடுக்கும் பதிவுலகமும் சேனல் 4 செய்திகள் பற்றி பெரிதாக கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. நான் வழக்கமாக படிக்கும் கேபிள், லக்கி, உண்மைத்தமிழன் என் யாரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.

பதிவு இடுவதால் என்ன பயன் என்று சிலர் வாதிடலாம். ஆனால் சினிமா விமர்சனம், ரஜினியின் உடல்நிலை இவற்றை விவாதிப்பதை விட ஈழ விஷயங்கள் முக்கியமானவை.

even ஹன்னா ஹசாரே, ராம்தேவ், 2ஜி போன்ற பிரச்சனாகளை விட ஈழப்பிரச்சினை முக்கியமானது. அவசரமானது.