சாப்பாட்டுக்கடை- திண்டுக்கல் ரெஸ்டாரண்ட்
பிரியாணி பிரியர்களுக்கு,மொஹல் பிரியாணி, ஆற்காடு பிரியாணி, ஆம்பூர் பிரியாணி, ஹைதராபாதி பிரியாணி, தம் பிரியாணி என்று பலவிதமான பிரியாணி வகைகள் இருந்தாலும், சமீப காலமாய் சென்னையில் சீரக சம்பா அரிசியில் செய்யப்பட்ட தலப்பாக்கட்டு பிரியாணி பிரபலமாகிக் கொண்டிருப்பது தெரிந்திருக்கும். தலைப்பாக்கட்டு பிரியாணியை போலவே ஏன் அதைவிட கொஞ்சம் நன்றாகவே இருக்கும் பிரியாணி சென்னையில் கிடைக்கிறது. அது நார்த் உஸ்மான் ரோடில் உள்ள திண்டுக்கல் ரெஸ்டாரண்ட்ல் தான்.
ஆரம்பித்த நேரத்தில் சாப்பிடப் போய் நொந்து திரும்பி வந்தேன். சாம்பார் சாதம் போல குழைத்து வைத்திருந்தார்கள் பிரியாணியை. ஆனால் இப்போது எல்லா குறைகளும் சரி செய்யப்பட்டு மிக அருமையாய் வந்திருக்கிறது. அருமையாய் வெந்த துண்டுகளுடன் நல்ல சூட்டோடு சாப்பிட்டால் ம்ம்ம்ம்ம்ம்… இவர்கள் பிரியாணி மட்டுமில்லாது மதியம் சாப்பாடும் சர்வ் செய்கிறார்கள். எழுபத்தியைந்து ரூபாய்க்கு நல்ல நான் வெஜ்/ வெஜ் சாப்பாடு. அருமையான குழம்புகளுடன். நிச்சயம் ஒரு நல்ல குவாலிட்டி மீல்ஸ் சாப்பிட இது சிறந்த இடம்.
மாலை வேலைகளில் டிபன் மற்றும் பிரியாணி வகைகள். ஒரு நாள் கடை மூடும் பொழுது வேளையில் பிரியாணி கேட்ட போது அது இல்லை வேண்டுமானால் தோசை தருகிறோம் என்றார்கள். நண்பர்கள் வேண்டாம் என்று சொல்ல, நான் தான் அவர்களுக்கு தைரியம் சொல்லி நிச்சயம் நல்லாருக்கும் என்று உறுதியளித்து வாங்கிக் கொடுத்தேன் கல் தோசையும், நாட்டுக் கோழி மசாலாவும், மட்டன் ஜிஞ்சர் மசாலாவும், இலவம் பஞ்சு போன்ற தோசையுடன் அவர்கள் தந்த மற்ற அயிட்டங்களையும் சாப்பிட்டவர்கள் அடுத்த நாள் மதிய சாப்பாட்டுக்கு அங்கேயே போக வேண்டும் என்று சொன்னார்கள். அவ்வளவு பிடித்துவிட்டது நண்பர்களுக்கு.
திண்டுக்கல் ரெஸ்டாரண்ட்
நார்த் உஸ்மான் ரோடு,
ஜெயின் கார்ஸின் எதிரில்
சென்னை
நார்த் உஸ்மான் ரோடு,
ஜெயின் கார்ஸின் எதிரில்
சென்னை
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
பாக்க சொல்லுங்க
see this blog...it has cinema reviews of world cinema..all r written very shortly without testing our patience...
vijai
saidapet
this blog has
very useful widget..see at its left side bar
http://chakpak-widgets.blogspot.com/
u can place slideshow of ur books in a large size
நன்றி.