கள்ளக்காதல்.
ஒவ்வொரு நாளும் தமிழ் தினசரிகளில் வரும் செய்திகளைப் பார்த்தால் வயிறு கலங்கித்தான் போகிறது. முக்கியமாய் கொலைகள் பற்றிய செய்திகளை படித்தால் இன்னும் கலங்கித்தான் போகிறது. எங்கு பார்த்தாலும் கள்ளக் காதல். ஏதோ நாடு முழுக்கவும் கள்ளக் காதல் ப்ரச்சனைதான் முதலில் இருப்பது போன்ற ஒரு பிரமையை ஏற்படுத்துகிறது. அதிலும் தமிழ் தினசரிகளில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டாள் என்றால் உடனே கள்ளக்காதல் ப்ரச்சனையாக இருக்குமோ என்று ஒரு கேள்வி எழுப்பிவிடுகிறார்கள். சில மாதங்களுக்கு முன் ஒரு மேற்கு மாம்பலத்தில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டார். போலீஸார் பல விதங்களில் துருவித் துருவி விசாரணை செய்தும் கொலையாளியை பிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தார்கள். ஆனால் தினத்தந்தியோ.. கொலை நடந்த நாள் முதல் கள்ளக்காதல் ப்ரச்சனை, போனில் பேசினார்கள். தொடர்ந்து தொடர்பிலிருந்தார்கள். என்று மக்களுக்கு பரபரப்பு ஏற்படுத்தும் விதமாக செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் நிஜத்தில் நடந்தது என்னவென்றால் கள்ளக்காதல் விஷயம் ஏதுமில்லை. பணத்துக்காகவும், நகைக்காகவும் செய்யப்பட்ட கொலை அது என்று குற்ற்வாளியை பிடித்ததும் தெரிந்தது. இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், இதே செய்திகள் தந்தி, மற்றும் மற்ற தமிழ் தினசரிகளைத் தவிர, ஆங்கில பத்திரிக்கைகளில் இந்த கள்ளக்காதல் அது இது போன்ற பிரச்சனைகள் ஏதுமில்லை. போலீஸாரின் விசாரணையில் என்ன தெரிந்ததோ அதுதான் இருந்தது. கள்ளக்காதல் ப்ரச்சனையால் கொலைகள் நடக்காமல் இல்லை. ஆனால் அம்மாதிரியான ப்ரச்சனைகள் ஏதுமில்லாத விஷயத்தில் சம்பந்தப்பட்ட குடும்பம் எவ்வளவு மோசமான அவமானத்தை சந்திக்க வேண்டியிருக்கும்?. ஏற்கனவே நடந்த கொலையினால் கிடைத்த அதிர்ச்சியே விலகாதிருக்கும் போது, இறந்தவர்களைப் பற்றி இம்மாதிரியான செய்திகள் மேலும் அவர்களுக்கு அதிர்ச்சியையும், அவமானத்தையும்தான் கொடுக்கும். அப்படி தந்தி போன்ற தினசரிகள் சொன்ன கள்ளக்காதல் ப்ரச்சனையில்லாமல், வேறு ஒரு கோணத்தில் கொலை நடந்திருந்தால் தந்தி போன்ற தினசரிகள் மறுப்பு செய்தியையோ, அல்லது மன்னிப்பு செய்தியையோ வெளியிடுகிறதா?.
ஒரு குடும்பத்தில் இம்மாதிரியான தவறான செய்திகள் அக்குடும்பத்தின் மீது விழும் பார்வை கேவலமானதாகவே படுகிறது. இதற்கு காரணம் கிசுகிசு பாணியில் பரபரப்பான செய்திகளை கொடுக்க வேண்டும் என்பதற்காக இவர்களாகவே ஏற்றிவிடும் மசாலாக்களுக்கு பலியாவது அக்குடும்பம்தான். இவர்களின் செய்தியால் மனமுடைந்து நடைபிணமாய் ஆகிப் போன குடும்பங்களும் உண்டு. செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஆங்கில தினசரிகளில் குறிப்பிடப்படுகிறது. ஆனால் பரபரப்புக்காக எதையும் எழுதுவதில்லை. எனவே இனியாவது கொஞ்சம் பத்திரிக்கை தர்மத்துடன் தமிழ் பத்திரிக்கைகள் நடந்து கொள்ளுமா?
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
எத்தனை பேர் ஞாபகம் வச்சுப்பாங்க... இதெல்லாம் பாஸிங் க்கெளவுட் நியூஸ்தானே....
ஆங்கில பத்திரிக்கை எத்தன பேரால படிக்க முடியும்....
உள்ளது உள்ளபடி படிக்க இதென்னா FIR ஆ???
பத்திரிகையில் உள்ள செய்தி எல்லாம் 100% உண்மை என்று நம்புவதில் இருந்து மக்கள் விடுபடவேண்டும்.
இதற்கு ஒரே வழி தவறாக செய்தி போட்ட பத்திரிகை மீது வழக்கு போட்டு நாறடிப்பது! ஒரு பத்து வழக்கு வந்தால், பத்திரிக்கைகள் கொஞ்சம் ஒழுங்காக எழுதுவார்கள்.
பத்திரிகை தர்மம், சுய ஒழுக்கம் என்று எதுவும் தமிழ் பத்திரிக்கைகளுக்கு கிடையாது! எது விற்குமோ அதையே கொடுப்போம் என்ற ஒரே குறிக்கோள் தான் இவர்களுக்கு!
Daily Thanthi is not even fit to clean your S**T. It leaves black ink.
I can only associate it with a bad smell from the barber shops.
To be frank, i have low regard for those who read it in their house.
I shouldn't judge, but i can't help.
it's a shame to have Tamil newspapers like Daily Thanthi in the same shelf as Dinamani.
Adhitanar did a good job, when there were too many illiterates in TN. Now it's just a useless news paper, which gives late news with out any accuracy.
I normally like Dinamalar.but didn't like their story about yester year cinestars and their brothel links. with out getting in to the merit of the stars or story... Indian society puts brothel ahead of 2g or even murder.
These things should be published only after vetting thoroughly.
only saving grace is that Dailythanthi will eventually die.
1. பாண்டிச்சேரியில் எங்கள் தெருவில் திரிந்து கொண்டிருந்த மனநலம் குன்றிய பெண், பட்டினியால் இறந்த போது "விபசார அழகி மர்ம மரணம்" என்று தலைப்பிட்டு தந்தி செய்தி வெளியிட்டது.
2. எங்கள் அபார்ட்மென்டில் குடியிருந்த பெண்(மருத்துவக்கல்லூரி மாணவி) மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டபோது, "காதல் தோல்வியால் மாணவி தற்கொலை!" என்று விசாரிக்கமலேயே செய்தி வெளிட்டது.
இது போன்ற பொய் செய்திகளை வெளியிட்டு பிழைப்பு நடத்துவதற்கு, @$#%(&^$$&$. வேண்டாம், அசிங்கமாக வாயில் வருகிறது
இல்லாதவைகளை இருப்பதாக பொய்களை பரப்பி விற்பனைகளை அதிகப்படித்துக்கொள்ளவே மனசாட்சியை மறந்துவிட்டு இதுபோன்று செய்கிறார்கள்.
தங்களின் ஆதங்கம் நியாயமானவையே..