ஹாங் ஒவர் பார்ட் ஒன்னை பார்த்தவர்கள் நிச்சயம் இந்த பகுதியை பார்க்காமல் விடமாட்டார்கள். அவ்வளவு சுவாரஸ்யமான படம் ஹாங் ஓவர் முதல் பாகம். அதே சுவாரஸ்யத்தை இரண்டாம் பாகமும் தக்க வைத்துக் கொள்ளுமா? என்று யோசித்தவர்களை மீண்டும் மூன்றாம் பாகம் வந்தாலும் பார்க்க தயார் என்று சொல்ல வைத்துவிட்டாரக்ள். என்ன வழக்கம் போல் படம் பார்த்துவிட்டு முதல் பாகம் மாதிரியில்லை என்ற டெம்ப்ளேட் வசனத்தோடு.
முதல் பாகத்தில் வந்த அதே மூன்று நண்பர்கள். இப்போது அதில் ஒருவனான டென்டிஸ்ட் நண்பனுக்கு பாங்காக்கில் திருமணம். ஏற்கனவே பேச்சுலர் பார்ட்டியினால் பட்ட அவதியினால், பாச்சுலர் பார்டியே கிடையாது என்று சொல்லிக் கொண்டிருக்கிறான். இதன் நடுவில் நண்பர்கள் எல்லோரும் பாங்காக்குக்கு போய் சேர, டென்டிஸ்டின் மாமனாருக்கு மருமகனை பிடிக்கவில்லை. அவருடய ஒரே மகனான டெட்டியை தலையில் வைத்துக் கொண்டாடுகிறார். திருமணத்திற்கு இரண்டு நாள் முன்பு டெட்டியோடு வெறும் பீர் மட்டும். அதுவும் ஒரே ஒரு பாட்டில் என்று கறாராய் சொல்லிவிட்டு பார்ட்டி ஆரம்பிக்க, எழுந்து பார்த்தால் ஏதோ ஒரு அழுக்கடைந்த ப்ளாட்டில் எல்லோரும் மட்டையாகியிருக்கிறார்கள். டெண்டிஸ்ட் முகத்தில் இம்முறை பல்லுக்கு பதிலாய் டேட்டூ. வழக்கப்படி தாங்கள் எப்படி இங்கே வந்தோம் என்ன நடந்தது என்று தெரியாமல் முழித்தபடி பார்த்தால் டெட்டியை காணவில்லை. அதிலும் டெட்டியின் விரல் மட்டும் தனியே குரங்கு கையில்.ஏற்கனவே தன்னை தன் மாமனாருக்கு பிடிக்கவில்லை இந்நேரத்தில் தன் அருமை மச்சினனை காணவில்லை என்றால் அவ்வளவுதான் திருமணமே நின்று விடும் என்று டெண்டிஸ்ட் புலம்ப.. அவனை கண்டுபிடித்து திருமணத்துக்கு போகும் அமர்களத்தை தியேட்டரில் பார்த்தால் தான் ரசிக்க முடியும். அதகளம்.
முதல் பார்ட்டில் தாடிக்காரன் செய்த பிரச்சனையால்தான் தாங்கள் மாட்டிக் கொண்டோம் என்றதால் அவனை தன் திருமணத்திற்கு கூப்பிடாமல் இருப்பது, மாமனார் டெண்டிஸ்டை சுவையேயில்லாத குழைந்த சாதம் என்று கிண்டலடிப்பது, ஷிமேலுடன் தான் இரவு செய்த செக்ஸை பற்றி சிலாகிக்கும் மேட்டர். என்று ஒவ்வொன்றாய் சொல்லிக் கொண்டிருந்தால் சுவாரஸ்யம் போய்விடும். படம் நெடுக டபுள் மீனிங் மற்றும் நியூடிட்டி காட்சிகள் இருக்கிறது. கதை பேங்காக்கில் நடக்கிறதல்லவா. அந்த நம்பர் டூ பிஸினெஸ் நண்பன் கேரக்டர் அட்டகாசம். மனிதன் போல் நடந்து கொள்ளும் குரங்கு, மெளன சாமியார், ஷாலின் டெம்பிள் என்று நினைத்து நினைத்து சிரிக்கலாம்.

Hangover-2- A Must See Comedy
டிஸ்கி: இந்த படத்தின் முதல் பாகத்தையும், இரண்டாம் பாகத்தையும் தமிழில் சரியாய் எடுக்க ஒரே குருப்பு பழைய கமல் க்ரூப் அல்லது வெங்கட் பிரபு டீம் தான் எத்தனயோ சுடுறாயங்க இதையும் கொஞ்சம் சுடுங்களேன்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Post a Comment
6 comments:
இந்த கமல், வெங்கட் குரூப்பை விட திறமையான சில குரூப்புகள் உருவாகி வருகின்றன. இந்த இரண்டு குரூபபுகளுமே தங்களின் பொலிவை இழந்துவிட்டன .
கிங் விஸ்வா
எதிர்நீச்சல் - வாண்டுமாமா அவர்களின் வாழ்க்கை வரலாறு
//எத்தனயோ சுடுறாயங்க இதையும் கொஞ்சம் சுடுங்களேன்.//
இன்னொரு பஞ்ச தந்திரமா?
Hang-over 1 தமிழ் டப்பிங் படத்த சமீபத்துல பாத்துட்டு சிரிச்சுக்கிட்டே இருந்தேன். இதுல கேனா.கூனா மாதிரி சொற்களெல்லாம் சரளமா வருது. அதனால இந்த வெர்ஷன் திரையரங்குக்கு வந்திச்சான்னு தெரியல. தமிழ் டப்பிங் யாரோ தன்னார்வலர்கள் செஞ்ச மாதிரி இருக்குது.
கண்டிப்பா பாக்கனும்னு நினைசிகிட்டு இருக்கேன். பாரத்துடனும் தல
போதும்..போதும்..கமல் க்ரூப் என்றால் கிரேசி மோகன் வசனம்.. மைதிலி-ஜானகி, ஆள்மாறாட்டம்..ஒடம்பு தாங்காது. வெங்கட் பிரபு....'கதை' என்ற ஒன்றை வைத்து ஒரு படம் எடுத்த பிறகு இதை எடுத்தால் தேவலை.
//எத்தனயோ சுடுறாயங்க இதையும் கொஞ்சம் சுடுங்களேன்.//
So, that means only others are copying but you don't?
Are you confused as the government is taking Cable TV?
Post a Comment