சமீபகாலமாய் ஹாலிவுட்டிலிருந்து வெளிவரும் அத்துனை படங்களிலும், 3டி, டெக்னிக்கலர் 3டி, மற்றும் 2டி என்று விளம்பரம் செய்கிறார்கள். பெரும்பாலான படங்கள் 3டியில் என்ன கருமத்திற்கு எடுத்தார்கள் என்றே தெரியவில்லை. எந்த விதமான இம்பாக்டையும் கொடுக்காத படங்களுக்கு எதற்கு 3டி?. சமீபத்தில் பார்த்த டிரான்ஸ்பார்மர்3 படத்தை 2டி பார்த்தாலே நன்றாக இருக்கும். கருப்பு வெள்ளை, கேவா கலர், டெக்னிக்கலர், சினிமாஸ்கோப், 70எம்.எம், என்று மக்களை தியேட்டருக்கு அழைத்து வந்து உட்கார வைக்கும் பல டெக்னிக்குகளை ஹாலிவுட் பட நிறுவனங்கள் முயற்சி செய்தவண்ணம் இருக்கத்தான் செய்கிறது. அதில் ஒன்றுதான் இந்த 3டி. அதுவும் டிஜிட்டல் தொழில் நுட்பத்தின் உட்சபட்ச வளர்ச்சியினால் மிகவும் மெனக்கெடாத 3டி கேமராக்கள் வந்துவிட்டதால் இன்ஸ்டெண்ட் 3டி படம் ரெடியாக கிடைக்கிறது. இதற்கு மூலகர்த்தா நம்ம ஜேம்ஸ் காமரூன் தான். அவரின் அவதார் ஓடிய ஓட்டம் தான் ஆளாளுக்கு 3டி என்று அலைவது. நம்மூரில் மட்டுமல்ல உலகம் பூராவும் இருக்கும் சினிமாக்காரர்கள் ஒரே விதம் தான் என்று நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருப்பேன். அவதார் வெற்றி 3டியினால் மட்டுமல்ல எ...