கொத்து பரோட்டா – 11/07/11
ஒரே நாளில் இரண்டு ரயில் விபத்துக்கள். விபத்தின் காரணமாய் 35 பேருக்கும் மேல் உயிரிழந்திருக்கிறார்கள். 200க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருக்கிறார்கள். ஹவ்ரா-டெல்லி-கல்கா எக்ஸ்பிரஸ் உத்தரபிரதேசத்தில் பதேபூர் மால்வா என்கிற இடத்தில் விபத்துக்குள்ளாகியிருக்கிறது. திடீரென்று சடன் ப்ரேக்கை டிரைவர் போட்டதால் மற்ற பெட்டிகள் தடம் புரண்டிருக்கிறது. இன்னொரு விபத்து அசாமில் தண்டவாளத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்ததால் நடந்த தடம் புரள்தல். முதல் விபத்தில் உயிர்சேதமும், 140 மேற்பட்டவர்கள் காயமடைந்திருக்கிறார்கள். மற்றதில் சுமார் 60க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருக்கிறார்கள். வர வர ரயில் பயணிக்க கூட பயமாய் இருக்கிறது. ரயில்வே நிர்வாகம் பயணிகளின் பத்திரத்திற்கு உத்தரவாதம் தருமா?
#################################
திமுகவினர் மீது தொடர் பொய் வழக்குகள் போடப்படுவதாகவும், அவர்களுக்கு வழக்கறிஞர்கள் உதவி தேவையென்றால் திமுக வழக்குறைஞ்சர்கள் அணியிலிருந்து உதவி செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் திமுக தலைவர். இம்மாதிரியான வழக்குகள் போடப்படும் போது தனக்கு தெரிவிக்க சொல்லியும் இருக்கிறார். என்ன தலைவர உங்களுக்கு தெரியாதா யார் மீது வழக்கு போடுவார்கள் என்று?. ஊருக்கு ஒரு வழக்குறைஞ்சர்கள் அணியை முடுக்கிவிட்டு யார் மீது வழக்குப் போட்டாலும் கட்சியிலிருந்து ஆஜராக ஏன் பணிக்க கூடாது? அவர்களே ஆடிப் போயிருக்கும் நேரத்தில் உங்களுக்கு கடிதமெழுதி வக்கில் கேட்குற நிலையிலா இருப்பார்கள்?
#############################
சக்சேனா மீது தொடர் வழக்குகள் போடப்பட்டு வருகிறது. முக்கியமாய் விநியோகஸ்தர்களிடமிருந்து வரும் புகார்கள் குறிப்பிடக்கூடியதாய் இருக்கிறது. என்னதான் அவர்கள் சூப்பர் ஹிட் படம் என்று சேனலுக்கு சேனல் கூவிக் கொண்டிருந்தாலும் விநியோகஸ்தர்களின் புகார் அப்படங்களின் வெற்றியை பற்றிய நிஜ நிலமையை சொல்லிவிட்டது. எந்திரன் திரைப்படத்தை எம்.ஜியில் வாங்கி தங்கள் தியேட்டரில் வெளியிட்ட பல தியேட்டர்காரர்கள் பெரிய அடி வாங்கியிருக்கிறார்கள் என்று ஒரு சில தியேட்டர்களைப் முன்பே சொல்லியிருக்கிறேன். இன்னும் சில விநியோகஸ்தர்கள் அட்வான்ஸ் முறையில் வாங்கி வெளியிட்டு நஷ்டமடைந்தததால் பணத்தை திரும்ப கேட்டிருக்கிறார்கள். ஆனால் வரவில்லை. இம்மாதிரி நிறைய தியேட்டர் உரிமையாளர்கள் படம் வெளியிட்டு நஷ்டமடைந்திருக்கிறார்கள் என்று முன்பே நான் சொன்ன போது, பல ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இப்போது உண்மை கொஞ்சம் கொஞ்சமாய் வெளிவருகிறது. இப்படத்தை வாங்கும் போதே பின்னால் ப்ரச்சனை செய்யக்கூடாது என்று சொல்லியே அக்ரிமெண்ட் போட்டதாகவும் ஒரு செய்தி உண்டு. படம் வெளியாகி ஒரு வாரத்திற்குள் படத்தை ஜெமினி பிக்சர்ஸிடம் கை மாற்றிவிட்டதன் காரணத்திற்கு பின்னால் நிறைய விஷயம் இருக்கிறது. எந்திரன் திரைப்படம் இம்மாதிரியான சில பல நஷ்டங்களால் வெற்றிப்படமல்ல என்றாகிவிடாது. தமிழ் சினிமாவின் சமீபத்திய முக்கிய ப்ளாக் பஸ்டர் எந்திரன் என்பதையும் மறுக்க முடியாது. அதுபோல அப்படத்தை வாங்கி நஷ்டமடைந்ததையும் மறைக்க முடியாது. அளவுக்கதிகமான தியேட்டர்களில், அதிக விலைக்கு விற்றதால் வந்த வினை. இப்போது அறுக்கிறார்கள். இரண்டு பக்கமும்.
#####################################
####################################
தத்துவம்
I Belive that sex is one of the most beautiful, natural, wholesome thing, that money can buy –Tom Clancy
“You know “that look” women get when they want sex? Me Neither” – Steve Martin.
#####################################
வீடியோ இந்த வாரம்.
மனுஷன்களுக்கு ‘புல்லும்” ஆயுதம்னு சும்மாவா சொன்னாங்க.
ப்ளாஷ்பேக்
இந்திய திரையுலகத்தையே புரட்டிப் போட்ட ஹிட் படம். கயாமத் சே.. கயாமத் தக். சென்னை சபையர் தியேட்டர் காம்ப்ளக்ஸில் மட்டுமே இரண்டு வருடங்களுக்கு ஓடிய படம். இளைஞர்கள் ஜூஹி சாவ்லாவையும், பெண்கள் அமீர்கானையும் வளைத்து வளைத்து சைட்டடித்துக் கொண்டிருந்த காலம். படத்தின் ஹிட்டுக்கு இவர்கள் மட்டும் காரணமல்ல. ஆனந்த் மிலிந்தின் இசையும் தான். படத்தின் அத்துனை பாடல்களும் சூப்பர் ஹிட். அதில் ஒரு பாடல்தான் இந்தப் பாடல் “ஹே மேரே ஹம் சபர்”. படத்தின் இயக்குனர் மன்சூர் கான். அமீர்கானின் கஸின். ஏனோ தெரியவில்லை. மூன்று நான்கு படத்துடன் இயக்குவதை நிறுத்திவிட்டார்.
மைகார்னர்
அடல்ட் கார்னர் ஒரு வயசான பெண்மணி டாக்டரிடம் சென்றாள்: “டாக்டர், என் கணவருக்கு செக்ஸ் உணர்வு குறைஞ்சுடுச்சு”
டாக்டர்: “ஏன், அவருக்கு வயாகரா மாத்திரை கொடுக்கலாமே”
பெண்மணி: “இல்லை டாக்டர், அவர் ஒரு தலை வலி மாத்திரை கூட போட மாட்டார், மாத்திரை ன்னு சொன்னாலே அவருக்கு பிடிக்காது”
டாக்டர்: “அவ்வளவு தானே, மாத்திரையை பொடி பண்ணி வெச்சுக்கங்க, அவர் காப்பி குடிக்கும்போது, காப்பில் அவருக்கு தெரியாம கலந்துடுங்க”
பெண்மணி சந்தோஷமாக கிளம்பினாள். இரண்டு வாரம் கழித்து திரும்பி வந்தாள்.
டாக்டர்: “என்னங்க எப்படி இருந்துச்சு?”
பெண்மணி: “அதை எப்படி டாக்டர் சொல்லுவேன்?”
டாக்டர்: “ஏன், வேலை செய்யலியா?”
பெண்மணி: “இல்லை டாக்டர், வேலை செஞ்சுது, நீங்க சொன்னா மாதிரியே அவர் காபி குடிக்கும்போது, வயாகரா பொடியை கலந்துட்டேன், அவர் அந்த இடத்துலேயே என்னை பெண்ட் எடுத்துட்டார். முதல் இரவுல கூட அவர் இப்படி செஞ்சதில்லை”
டாக்டர்: “அப்புறம் என்ன பிரச்சனை?”
பெண்மணி: “இனிமேல் எங்களால் சரவண பவன் பக்கம் முகத்தை காட்ட முடியாது”
டாக்டர்: “ஏன், அவருக்கு வயாகரா மாத்திரை கொடுக்கலாமே”
பெண்மணி: “இல்லை டாக்டர், அவர் ஒரு தலை வலி மாத்திரை கூட போட மாட்டார், மாத்திரை ன்னு சொன்னாலே அவருக்கு பிடிக்காது”
டாக்டர்: “அவ்வளவு தானே, மாத்திரையை பொடி பண்ணி வெச்சுக்கங்க, அவர் காப்பி குடிக்கும்போது, காப்பில் அவருக்கு தெரியாம கலந்துடுங்க”
பெண்மணி சந்தோஷமாக கிளம்பினாள். இரண்டு வாரம் கழித்து திரும்பி வந்தாள்.
டாக்டர்: “என்னங்க எப்படி இருந்துச்சு?”
பெண்மணி: “அதை எப்படி டாக்டர் சொல்லுவேன்?”
டாக்டர்: “ஏன், வேலை செய்யலியா?”
பெண்மணி: “இல்லை டாக்டர், வேலை செஞ்சுது, நீங்க சொன்னா மாதிரியே அவர் காபி குடிக்கும்போது, வயாகரா பொடியை கலந்துட்டேன், அவர் அந்த இடத்துலேயே என்னை பெண்ட் எடுத்துட்டார். முதல் இரவுல கூட அவர் இப்படி செஞ்சதில்லை”
டாக்டர்: “அப்புறம் என்ன பிரச்சனை?”
பெண்மணி: “இனிமேல் எங்களால் சரவண பவன் பக்கம் முகத்தை காட்ட முடியாது”
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
ரயில் விபத்துக்கள் மனதை வருத்தும் செய்தி. போக்குவரத்துத் துறையில் நாம் இன்னமும் முன்னேற வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துகிறது.
திமுக வழக்கறிஞர் விவகாரம்: சம கால புதிய காமெடி,
சக்சேனா: தில்லு முல்லு விவகாரமாக இருக்கிறதே.
சென்னையின் புதிய மல்ட்டிப்ளெக்ஸ் ஃபேம்//
தமிழ் நாட்டிற்கு வரும் போது- கண்டிப்பாக இங்கேயும் ஒரு படம் பார்த்திட வேண்டியது தான், ஆவலைத் தூண்டும் வகையில் எழுதியிருக்கிறீங்க.
தத்துவம்: அடடா... பெண்கள்....எப்ப வேண்டுமானாலும் அந்தப் பார்வையை......
நாம தான் தவிக்கனுமா. கொடுத்து வைச்சவங்க அவங்க.
வீடியோ: அரங்கத்தைச் சிரிக்க வைக்கும் வகையில் அதிரடியாக கீபோர்ட் வாசிக்கிறார்கள்.
ஹி....ஹி....
கயாமத் சே.. கயாமத் தக்.//
இந்தப் படம் இன்னமும் பார்க்கவில்லை, டைம் இருக்கும் போது பார்க்க ட்ரை பண்றேன் பாஸ்,
மைகார்னர்: திரிலிங் கிரைம் விசாரணை வீடியோவாக இருந்தாலும், பின்னணியில் சிட்டிவேசன் வீடியோவாக இருக்குமோ எனும் ஐயம் வருகிறது.
அடல்ட் கார்னர்: கொஞ்சம் புரிந்தும்- கொஞ்சம் புரியாமலும் இருக்கிறது.
கொத்துப் பரோட்டா செம ஜோரு.
இனி உங்களுடன் பேசுவதாய் இல்லை. என் நண்பர் என்கிற அந்தஸ்தை இழந்துவிட்டீர்கள். உங்களுடன் பழகிய நாட்களை மறக்க நினைக்கிறேன்.
குஷ்பூவை அழவெச்சுட்டியேய்யா.. உன்கூட எனக்கென்ன பேச்சு? ச்சே!
அப்பறம்.. அந்த யு ட்யூப் - சகிக்கல. ஷேர் பண்ணிருக்க வேண்டாம்.
Repeeeeeeeeettu!
Same Blood!
சென்னையில் சிறுவனை சுட்ட ராணுவ அதிகாரி அவனை வேண்டுமென்ற சுடவில்லை என்றும், பயமுறுத்துவதற்காக வேறு திசையில் சுட்டதாகவும் அது தவறிப் போய் அச்சிறுவன் மேல் குண்டு பட்டுவிட்டதாகவும் சொல்லியுள்ளார்.
நான் என் சிறுவயதில் மாங்காய் அடிக்க கல் எறிவேன். மாங்காயை குறி வைத்து எறிந்தால் மாங்காயே விழாது. ஆக, ஏதோ ஒரு திசையில் கல்லை எறிந்தால் அது போய் மாங்காய் மேல் பட்டு அது விழும். இதை வைத்து பார்க்கும் போது அந்த ராணுவ அதிகாரி சொல்வதில் உண்மை இருக்க வாய்ப்புண்டு என்பது புரிகிறது.
ஆகவே நீங்கள் யாரையாவது உண்மையிலேயே சுட விரும்பவில்லை எனில் அந்த குறிப்பிட்ட நபரை குறி வைத்து மட்டுமே சுடுங்கள். அப்போதுதான் குண்டு அவரை விட்டு விட்டு வேறு திசையில் போய் விழும். தப்பித்தவறி வேறு எங்கேயோ சகட்டுமேனிக்கு சுட்டு தொலைத்து மட்டும் விடாதீர்கள்.
fame Multiplex - is it like abirami ? do they have sufficient safety measures ? is it like abirami mall which is by far the most unsecure mall(maal a athu ? perasai patta mathiri irukku ...)
this is becoming an issue parking facility illana muthala building kattavae anumathikka kodathu yaaru seia poranga ? naan patha varailkkum express avenue has more parking space but naan anga park pannathilla pakkithala than office irundhadhu athanala nadanthu poidven. athey mathiri theatrkkunnu thani parking vekkanum 1hr kku 10rs 2 hr 20rs ellam kollai ... intha mathiri pannittu apparum theatre kku jananga varathu illannu pulambarathu 15 rubaikku DVD , torrent ellam irukkum bothu ennathukku ivalvu kashta pattu nanga padam ..athuvum athu mokkaiya vera irukkum .... pakka varanum? koncham palla kadichikitta inthiya tholaikatchigalil muthan murayaga thiraikku vantha ... appadinnu pathuttu poidrom selavu micham
cinema karanga . theatre karanga purinchikkitta seri ...
ithuvae oru blog mathiri aiduchi he he he he
http://www.acres-wild.com/Mansoor.shtml
Entha Link a partha ongalai partha mathri iruku sir
Anurag kashyap looks like our Cable Ayya
Krishna
நிச்சயம் அபிராமி மால் போல் இல்ல.நல்ல காற்றோட்டமான, சேப்டி மெசர்ஸ் எல்லாம் சரியாக உள்ள மால்தான். நிச்சயம் குடும்பத்தோடு போகலாம்.
அய்யா .. சாமி...அண்ணாச்சி மட்டும் என்ன பண்ணாரு??
நானும் சஃபேர் தியெட்டர்ல தான் பார்த்தேன்...(அப்ப studying 10th) டைரட்டர்க்கு வயசாயிருக்கும் அதான் ரைட்டு பண்ணல...