Thottal Thodarum

Jul 23, 2011

காஞ்சனா – முனி-2

Raghava Lawrence, Lakshmi Rai Hot Kanchana Movie Stills எத்தனை பேரு.. ஒரு படத்துக்கு. சரி விடுங்க.. ஏற்கனவே தமிழில் முனி முதல் பாகம் வந்த போது சரியாக போகவில்லை. ஆனால் தெலுங்கில் ஏற்கனவே ராகவா லாரன்ஸுக்கு இருந்த மார்கெட்டினால் சரி ஓட்டம் ஓடியதாக தகவல்.  அந்த தைரியத்தில் அதே கதையை கொஞ்சமே கொஞ்சம் மாற்றி பார்டு டூ எடுத்திருக்கிறார்கள். இந்த வாரம் வேறு ஏதும் படமில்லாததால் காசி, ஏவி.எம் போன்ற தியேட்டர்களில் காலை காட்சி புல் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதற்கு காரணம் கடந்த ஒரு வாரமாகவே சரி விளம்பரம்.


Raghava Lawrence, Lakshmi Rai Hot Kanchana Movie Stills லாரன்ஸ் ஒரு வீரன், சூரன், கருப்பழகன், பெண்கள், குழந்தைகள் எல்லோரையும் கவர்பவர். ஆனால் இவருக்கு சாயங்காலம் ஆனால் பயம். பேய் பயம். அண்ணன் அண்ணி, குழந்தைகள், அம்மாவோடு ஒரு பெரிய பங்களாவில் இருக்கிறார்கள். ஒரு நாள் இவர்கள் வழக்கமாய் கிரிக்கெட் விளையாடும் க்ரவுண்டி ஏதோ பில்டிங் கட்ட ஆரம்பிக்க, வேறு ஒரு புதிய க்ரவுண்டை கண்டுபிடித்து ஆட ஆரம்பிக்கிறார்கள். அங்கே ஸ்டெம்ப் அடிக்கும் இடத்தில் பேய் இருக்க, அதன் ரத்தம் ஸ்ட்ம்பில் பட்டதோடு வீட்டிற்கு எடுத்து வருகிறார். வீட்டிற்குள் பேய் வந்துவிடுகிறது. அந்தப் பேய் ஏன் வந்தது? எதற்கு வந்தது? என்பதை கட்டாயமாய் கண்டு களிக்க வேண்டும் என்று நினைத்தால் போய் பார்க்கவும்.

ராகவா லாரன்ஸ் வழக்கப்படி நன்றாக டான்ஸ் ஆடுகிறார். ரஜினியை இமிடேட் செய்கிறார். சிகப்பு லஷ்மிராயுடன் சல்லாபிக்கிறார். டபுள் மீனிங்கிலும், சிங்கிள் மீனிங்கிளும் அம்மா, அண்ணன், அண்ணி, என்று மொத்த குடும்பமே பேசிக் கொள்கிறது.  அம்மா பக்கா கோவை பாழை பேசுகிறார். அண்ணி அய்யராத்து பாஷை பேசி சிக்கன் சமைத்து போடுகிறார். அண்ணன் சாதாரண தமிழ் பேசுகிறார். என்ன எழவுக்கென்றே தெரியவில்லை.  முதல் பாதி முழுவதும் தேவையில்லாத சண்டைக் காட்சிகள், குத்து பாட்டுகள் என்று போனாலும், பேய் மேட்டர் ஆரம்பித்ததும் கொஞ்சம் சுறுசுறுப்படையத்தான் வைக்கிறார். சும்மா ஜிவ்வென போய் கொண்டிருக்கும் போது கோவைசரளாவை காமெடியாக்கியதால் ஜில்லிப்பு தணிந்து போய் விடுகிறது. ஆனால் இப்படத்தை பொறுத்தவரை கோவை சரளாத்தான் சரியான எண்டர்டெயினர். சும்மா புகுந்து விளையாடுகிறார். இவரது மருமகளாக வரும் தேவதர்ஷினியும் க்யூட். வெள்ளைத்தோல் லஷ்மிராய் ம்ஹும்…….
Raghava Lawrence, Lakshmi Rai Hot Kanchana Movie Stills இடைவேளைக்கு பிறகு வரும் காட்சிகள் எல்லாம் குழந்தைகள் கூட பயப்படாது. ப்ளாஷ்பேக் காட்சிகள் எல்லாம் படு அபத்தம். எலலா வில்லன்களையும் கொன்ற காஞ்சனா, கடைசி வில்லனை மட்டும் கோவிலுக்குள் வைத்து, வெளியே வைத்து எல்லாம் விளையாடி கொல்வது படு போரடிக்க்கிறது. அட இடைவேளை வரை பரவாயில்லையே என்று நினைத்ததற்கு சரியான பதிலடியை கொடுத்திருக்கிறார்கள். வழக்கமான பழிவாங்கும் கதைக்கு அரவாணி பெயிண்ட் அடித்திருக்கிறார் இயக்குனர் ராகவா லாரன்ஸ்.

தமன் வர வர ஏமாற்றுகிறார். இப்படத்திலும் அது தொடர்கிறது. கேமரா கோணங்களில் பெரிதாய் பயமுறுத்தாமல் சின்னச் சின்ன ஷாட்களில் நம்மை ஜில்லிட வைக்கும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். கோவை சரளாவும், தேவதர்ஷினியும், வீட்டில் பேய் இருக்கிறதா? என்று கண்டு பிடிக்க செய்யும் முயற்சிகள் த்ரிலுக்கு திரில், காமெடிக்கு காமெடியாக வந்திருக்கிறது.
காஞ்சனா- பேய் படம் எப்படியிருந்தாலும் பார்ப்பேன் என்று சொல்பவர்களுக்கு
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்


Post a Comment

16 comments:

Ramachandranwrites said...

தல, உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா ? பாதி ராத்ரி ரெண்டு மணிக்கு பதிவா ? படுத்து தூங்குங்க பாஸ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சரத்குமார் இந்த படத்தில் உண்டாமே? அப்படியா?

Raj Chandra said...

>>பேய் படம் எப்படியிருந்தாலும் பார்ப்பேன் என்று சொல்பவர்களுக்கு

- நாம அஜீத், விஜய் நடிப்பைப் பார்த்தே பயப்படறதில்லை...அசல் பேய் படத்துக்கா பயப்படபோறோம்?!

மேவி... said...

இதுவும் போச்சா .... படம் பார்த்தே ரொம்ப நாளாச்சு. அப்ப இந்த வாரமும் உலக சினிமா பார்க்க வேண்டியது தான். நம்ம சினிமாகாரங்க உள்ளூர் சினிமாவை பார்க்கவே விட மாட்டாங்க போலிருக்கே

maxo said...

Analum ungalluku Thairiyum Jaasthi thaan !

Intha Padatha Poi Pathirukkingalae !

Anonymous said...

ஹீரோயினுக்கு சேலை கட்டுற சீன நாம எப்பதான் மதிக்க போறோம்

அவங்களும் சேலை கட்ட பழக மாடங்குறாங்க
நாமளும் ஒரு சுடிதார் எடுத்து குடுக்க மாடங்குறோம்
சுடிதார் எடுத்து குடுத்தா அவங்கள போட்டுக்குவாங்களே

Sivakumar said...

அப்படின்னா காஞ்சனா பாத்தவன் காஞ்சானா?

Rishi said...

Shankar ji.... Please read this message...


வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! நொந்து நூடுல்ஸான ஒரு சக வலைப்பதிவரின் சோக கதை..!

http://www.livingextra.com/2011/07/blog-post_2901.html

Karthikeyan Rajendran said...

சங்கர் சார் . நல்ல கமன்ட் கொடுத்தீங்க இல்லன நானும் போயி மாட்டீருப்பேன். அப்பா தப்பிச்சேன்.

s.mohammed said...

neenga muthale unga blog muditu summa irunga periya judge mattom theerpu solrathuku unga padathe eduthu hit aakunga ayachammy(cable sankar)

s.mohammed said...

neenga muthale unga blog muditu summa irunga periya judge mattom theerpu solrathuku unga padathe eduthu hit aakunga ayachammy(cable sanka

shortfilmindia.com said...

நான் ரெடி மொஹம்த்.. நீங்க பணம் போட ரெடியா?

Rafeek said...

யாருப்பா mohamed.. விமர்சனத்த..ஏத்துக்க மனமில்லைன்னா.. ஏதுக்கு சங்கர் ப்ளாக்கிற்கு வரிங்க? hotel ல காசு கொடுத்து சாப்பிட்டு விட்டு சாப்பாடு நல்லா இருந்தா நாலு பேருக்கு சாப்பாட்டுகடைல பகுதில சொல்றார். ஒரு வேளை நல்லா இல்லைன்னு விமர்சனம் பண்ணா.. அவரேயே சமைக்க சொன்னா எப்புடி?

Cable சங்கர் said...

rafeek..விடுங்க.. நான் என்ன எடுக்க மாட்டேன்னா சொல்றேன். தயாரிப்பாளரா அவரு வரட்டும் எடுத்து காட்டிருவோம்.

சித்தார்த்தன் said...

naan sankar sir pakkam...

சரவணன் said...

I am wondering why nobody mentions Sarathkumar's performance in the film. I felt he did great.