நான் - ஷர்மி - வைரம்-5

5 நான்.
nude__step_3_by_samcatt 
அவன் போகும் வேகத்துக்கு என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை. வாசலில் வாட்ச்மேன் தடுக்க முயன்று ஏதோ கேட்க எத்தனித்த போது, அவன் நிமிர்ந்த வேகத்தைப் பார்த்து எதும் பேசாமல் நின்றுவிட்டான் வாட்ச்மேன். சரசரவென லிப்ட் கதவை திறந்து, இரண்டாவது மாடியின் பொத்தானை அழுத்தினான். கொஞ்சம் பெரிதாய் மூச்சு விட்டபடி இருந்தான். இரண்டாவது மாடி வந்த்தும், அதே வேகத்தில் கதவை திறந்து, அந்த ப்ளாடின் வாசலில் நின்று, ‘ நீ கொஞ்சம் தள்ளி நில்லு.. நான் கூப்பிடும் போது வா” என்று என்னை கத்வுக்கு அப்பால் தள்ளி நிற்க வைத்துவிட்டு, பூட்டியிருந்த க்ரில் கதவை ஓங்கி தடதடவென தட்டினான்.


உள்ளிருந்து அதட்டலாய் “யாரு” என்ற குரலுடன் ஒரு ஆண் வந்து திறக்க, அவனைப் பார்த்த்தும் சைடில் நின்றிருந்த என்னைப் பார்த்தான். என்னிடம் பணம் வாங்கியவன். ”இவந்தானா?” என்பது போல் சைகையால் கேட்க, நான் ஆமாம் என்று சொன்ன மறுவிநாடி அவன் முகத்தில் ஓங்கி குத்தினான். அவன் பெரிய சத்த்துடன் தடேலென மூக்கைப் பிடித்துக் கொண்டு கீழே விழ, சிறிதும் நேரம் கொடுக்காமல் அவன் மீது பாய்ந்து மேலும் இரண்டு குத்துக்களை அவன் முகத்தில் விட, அதற்குள் வீட்டிலிருந்து இரண்டு குண்டுப் பெண்களும், ஒரு சிறு வயது பெண்ணும், உடன் இரண்டு ஆண்கள் அரை குறை உடையோடு முகத்தில் பயத்தோடு அவனை தடுக்காமல் ஓட்த் தயாராக இருக்க, சட்டென நான் உள்ளே புகுந்து கதவை சாத்தினேன்.

”யாருடா..நீங்க எல்லாம்.. நான் போலீஸைக் கூப்பிடுவேன்” என்று அடிபட்டவன் மூக்கைப் பிடித்தபடி கத்தினான். அவன் கையிடுக்கிலிருந்து ரத்தம் கீழே சிந்திக் கொண்டிருந்த்து. குண்டு பெண்மணிகள அவனை சுற்றி பாதுகாப்பாய் நிற்பது போல் நின்றபடி காரே பூரே என்று ஹிந்தியில் கத்திக் கொண்டிருந்தார்கள். அடிக்கடி அவர்கள் சொன்ன வார்த்தை ‘சூத்தியா”. அதற்கு அர்த்தம் தெரியவில்லை.

“ஆ.. கூப்பிடு போலீஸைக் கூப்பிடு.. என்கிட்ட காசை வாங்கி ஏமாத்திட்டு போலீஸை கூப்பிடுவீங்களோ? கூப்பிடுறா..?”

இப்போது மூக்கு உடைந்தவனுக்கு புரிந்துவிட்ட்து. சட்டென சுதாரித்து.. சுற்றி நின்றிருந்தவர்களை பார்த்து “நோ.. பராப்ளம்.. யூ கேரி ஆன்.. கேரி ஆன். மை ஓல்ட் ப்ரெண்ட்.. சாரி.. யூ கேரி ஆன்” என்று சொல்லி அவர்களை அறைக்குள் அனுப்பிவிட்டு, டேபிளின் மேல் இருந்த டிஷ்யூ பேப்பரை எடுத்து முகத்தை துடைத்துக் கொண்டு “சரி. இப்ப என்ன செய்யணுங்கிறீங்க?” என்றான்.

என்னைக் கூட்டிக் கொண்டு போனவன் சிரித்தான். “வேறென்னா?... எதுக்கு பணம் கட்டினோம்.. அதுக்கு ஏற்பாடு செய்.. எங்களுக்கு ஒண்ணுமில்லை.. இப்படியே நீ எங்களை போலீஸுக்கு பிடிச்சி கொடுத்தாலும் பரவாயில்லை.. என்ன விஷயம்னு சொன்னா உனக்குத்தான் ப்ரச்சனை.. எங்களுக்கு தேவையானதை செஞ்சியானா உனக்கும் ப்ரச்சனையில்லை எங்களுக்கும் பிரச்சனையில்லை.”

மூக்கு உடைந்தவன் யோசித்தான். ”தோ.. பாரு.. நீங்க நினைக்கிறாப் போல அவ்வளவு ஈஸி இல்ல அந்த வேலை. ரொமப் கஷ்டம். உங்க கற்பனையில இருக்கிறா போல இருக்காது. யோசிக்கங்க.. அப்புறம் இதுக்குன்னு வந்திட்டியானா.. நாங்க சொல்றபடி கேட்டியானாதான் தொடர்ந்து உங்களுக்கு வேலை தருவேன். இல்லை.. என்னை ஏதும் சொல்லகூடாது.”

பதில் ஏதும் சொல்லாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தோம். “என்ன பாக்குறீங்க? நான் சொல்றது புரியுதா?” என்றபடி “மேடம்” என்று உள் ரூமைப் பார்த்து அழைத்தான். சண்டையின் போது வெளி வந்த அந்த ரெண்டு குண்டுப் பெண்களில் ஒருத்தி வெளியே வர, அவளிடம் எங்களைக் காட்டி, சைகையால் அவளைப் பார்த்தான். அப்பெண் ஏற இறங்க எங்களைப் பார்த்து “தோனோ பீ.. “ என்று இழுக்க, மூக்குடைந்தவன் “நை..நை.” என்று சொல்லி உள்ளிருந்த இன்னொரு பெண்ணையும் அழைக்க, அவளூம் முதல் பெண்ணின் அதே ரியாக்‌ஷனில் எங்களை பார்க்க, முதல் முறையாய் கூச்சமாயிருந்த்து. முதல் பெண் என்னையும், இரண்டாவது பெண் புது நண்பனையும் அழைக்க, முதல் முறையாய் என் வாழ்க்கையில் ஒரு பெண்ணை சல்லாபிக்கப் போகிறேன் என்ற சந்தோஷத்தைவிட, இப்படி ஒரு குண்டு ஆண்டியுடன் போகிறேனே என்று வருத்தம்தான் ஏற்பட்டது.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Comments

க ரா said…
கொஞ்சம் இடைவெளி விடாமா எழுதினிங்னா இண்டரஸ்டிங்கா இருக்கும்ணா :)
Shankar said…
Need a cue to continue.But as usual good.
i dont like this kind of stuff from you shankar ......

hari
ADMIN said…
படிக்க சுவராஷ்யமாக இருந்தது..! வாழ்த்துக்கள்.!!
அருண் said…
நல்ல போகுது,ரொம்ப gap விழுந்துட்டதுனால மறுபடியும் முதல் பாகத்திலருந்து வாசிச்சேன்,தொடர்ந்து எழுதுங்க,அதிகமா இடைவெளி இல்லாம.
-அருண்-
kishore said…
nice.. but ivlo gap vedam

Popular posts from this blog

சாப்பாட்டுக்கடை - டி.கே. மாப்பிள்ளை மெஸ். -77km

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.