Thottal Thodarum

Jul 5, 2011

தேநீர் விடுதி

theneer-viduthi-reviewபூ, களவாணி போன்ற படங்களின் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரனின் இயக்குனர் அவதாரப் படம். முன் சொன்ன படங்களின் பாட்டைப் போல இப்படமும் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையில் பார்க்கப் போய் அது பலித்ததா? என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இரண்டு இளைஞர்கள். அண்ணன் தம்பி. பந்தல் போடும் காண்ட்ரேக்ட் வேலை செய்கிறார்கள். பகலில் கூட குடிக்கிறார்கள். இரவிலும் குடிக்கிறார்கள். அவர்களின் அம்மா அதைவிட, தன் மூத்த பிள்ளைக்கு தன் அண்ணன் பெண் தர மாட்டேன் என்று சொன்னதால் செத்து போய்விட்டதாக நடிப்பவள். இப்படிப்பட்ட குடும்பத்தில் உள்ள ஒருவனை சப்ரிஜிஸ்ட்ராராக உள்ள நாச்சியப்பன் என்பவரின் செல்ல மகள். நீ வயசுக்கு வந்த பொண்ணு போல இல்லையே.. அதுக்கான அம்சம் இல்லையென்று சொன்னதால் ஹீரோவை காதலிக்க ஆரம்பிக்கிறார். அவர்கள் காதல் ஜெயித்ததா? இல்லையா? என்பதை நம் பொறுமையை சோதித்து நோகடித்து சொல்லியிருக்கிறார்கள்.


ஒவ்வொரு கேரக்டருக்குமான அறிமுகப் படலமே நாடகத்தனத்தின் உச்சமென்றால் அதை படம்பிடித்த முறை அதைவிட அமெச்சூர் தனம். டிவி சிரீயல்களிலேயே நல்ல அருமையான ஷாட்டுகள் எல்லாம் வைக்கிறார்கள்.

நடிப்பு என்று யாரையும் பாராட்ட முடியாதபடி திரைக்கதையிருப்பதால் ஏதும் சொல்ல முடியவில்லை. வழக்கமாய் அட்லீஸ்ட் இரண்டு பாடல்களையாவது ஹிட் கொடுப்பவர் இதில் அதிலும் சோடை போய்விட்டார்.  மணவாளனின் ஒளிப்பதிவு பற்றி சொல்ல ஏதுமில்லை. டிஜிட்டலில் எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் கலர் கரெக்‌ஷன் வேலைகளில் மெனக்கெட்டிருந்தால் கொஞ்சம் வீடியோ ஃபீலை தவிர்த்திருக்கலாம்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்று எல்லா டிபார்ட்மெண்டிலும் கோட்டை விட்டிருக்கிறார். இயக்குனர் எஸ்.எஸ். குமரன். அவ்வளவு ஸ்ட்ரிக்டான தகப்பன் தன் பெண் காதலிக்கும் பந்தல் போடுபவனை தெரிந்தே தன் வீட்டு விழாவிற்கு பந்தல் போட விடுவாரா? க்ளைமாக்ஸில் அவர் செய்வது காமெடி என்று நீங்கள் சொன்னாலும், லாஜிக்கிலலாமல் இடிக்கிறதே?  என்னவோ போங்க சார்.
தேனீர் விடுதி- பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

Post a Comment

18 comments:

குரங்குபெடல் said...

டீ சரியில்லை விடுங்க .
மீசை வளரவே இல்லையாமே . . . ?

நன்றி

Cable சங்கர் said...

athai neenga thaane parthu sollanum.. uthavi iyakkam.

குரங்குபெடல் said...

கண்டிப்பா பாத்துடறேன் சார்

நன்றி

கேரளாக்காரன் said...

Mumbaila meesai pakka chance illama pochu...

shortfilmindia.com said...

mubaila ரிலீஸ் பண்ணல கேரளாக்காரரே.. ஒன்லி டமில் நாடு.

sarav said...

remarkable , i really wonder how you are able to spend time in these movies .. like my senior commentators always say you seem to be savior of tamil movie viewers.

'பரிவை' சே.குமார் said...

Vimarsanam nanru...

kobiraj said...

good review sir.
who is the best director of tamil cinima என்பதில் ஓட்டு போட மறந்து விடாதீர்.
http://kobirajkobi.blogspot.com/

N.H. Narasimma Prasad said...

இப்ப வர்ற முக்கால்வாசி படங்கள் சொல்லி வச்சாமாதிரி ப்ளாப் ஆகுதே. அது ஏன்னே?

ஒரு வாசகன் said...

//2011 ஜனவரி முதல் மே வரை 100 நாட்கள் ஓடிய படங்கள் பட்டியல் வெளியானது. 'மைனா’ 'சிறுத்தை’, 'சிங்கம் புலி’, 'காவலன்’ என்று நீளும் பட்டியலில், 'விருதகிரி’, 'லத்திகா’, 'இளைஞன்’ படங்களும் இடம்பெற்று இருப்பதைக் கண்டு, கோடம்பாக்கமே குப்புறப் படுத்துக்கொண்டு, குமுறிக் குமுறி அழுகிறது//
இந்த வார ஜூவியில் வந்தது. உங்கள் காமாண்ட் என்ன? வழக்கமாக ஒரு quarterly report தருவீர்களே? 2 வது quarter முடிந்துவிட்டது... reportஐ அளியுங்கள்

Anonymous said...

plz paste the code in following linkin html gadget of ur blog....may ppl dont know even a single bit about google reader....they can very directly susbscribe ur blog directly if u paste the code in following link...

http://yithudummy.blogspot.com/2011/07/for-cablesan.html

குறுக்காலபோவான் said...

பயமா இருக்கு சார்! குமரன்,Cable சங்கர்..இனி யார் யாரெல்லாம் டைரக்ட் பண்ண போறாங்கலோ?!

திருநெல்வேலி வெங்கட்ராமன் said...

tea waste next time nalla coffee kadaiyaa try panuvarunu nenaikiren

k amirtharaj said...

ithu konjam shockthan poo,kalavaani padalkalla oru thanithuvam irunthathu anyway s s kumaran rendu padathula ipadi avasarapatiruka vendam.naan konja naal munnala oru serialuku song panna kettan konjam alatinaru inimey music pannavavathu yarum koopiduvangala

Cable சங்கர் said...

மிஸ்டர் குறுக்கால போறவரே.. குமரனில்லை, நானில்லை யார் சரியா வேலை செய்யலைன்னாலும் ஒரே ரிசல்ட் தான்.

SENTHIL MURUAGN said...

Nalla Visayame Illaya? Padathil

மாய உலகம் said...

நான் அப்பவே x அசோசியேட் டைரக்டர்ட்ட சொன்னேங்க கேக்க மாட்டேன்ட்டார்... maayaulagam-4u.blogspot

ஸ்ரீகாந்த் said...

எங்கள் தலைவி ரேஷ்மி பற்றி ஒரு வரி மற்றும் படம் இல்லாததினால் ....வன்மையாக கண்டிக்கிறோம்