ஒரு காலத்தில் ட்ராவல் செய்யப் போகிறோம் என்றாலே வீட்டிலிருந்து தூக்குசட்டியில் உணவு எடுத்துப் போன காலம் உண்டு. கடந்த இருபது வருடங்களில் ஹைவே உணவங்கள் மிக பிரபலமாக, பல உணவகங்கல் நல்ல தரத்துடன் இருக்க, பயணங்களில் உணவு ஒரு பெரிய பிரச்சனையாகவே இல்லாமல் போனது. பயணங்களில் வெஜ் உணவுதான் சேஃப் என்ற ஒரு எண்ணத்தை ஒரு சில உணவங்கள் மாற்ற ஆரம்பித்தது. அப்படியான ஒரு உணவகம் தான் இந்த டி.கே மாப்பிள்ளை மெஸ். இனி நாம் நல்ல நல்ல நான் -வெஜ் உணவுக்காக 99-100 கி.மிட்டர் எல்லாம் பயணப்பட தேவையில்லை. சென்னையிலிருந்து திருச்சி ரோட்டில் சரியாய் 77வது கி.மீட்டரில் இந்த உணவகம் அமைந்திருக்கிறது. நல்ல இண்டீரியருடன் ஏசி உணவகம். உள்ளே நுழைந்ததும் அவர்கள் போட்டிருந்த அறிவுப்பு போர்ட்டே ஆர்வத்தை ஏற்படுத்தியது.அஜினோமோட்டோ என்கிற சேர்க்கையே அவர்களின் உணவுகளில் கிடையாது என்றிருந்தார்கள். அதே போல பார்ப்பிக்யூ உணவுகளை சமைப்பதற்கு சல்பர் சார்க்கோல் உபயோகிக்காமல் சமைக்கிறோம். எல்லா உணவுகளை அவர்கள் செக்கில் ஆட்டிய எண்ணையில் தான் சமைக்கிறார்கள் என்று அறிவித்திருந்தார்கள். சாப்பிட வருகிறவர்களின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம...
Comments
Hatas off to you, I too faced such experience in so many places; luckily you were not with youR Fmily; otherwise after sometimes they started to call us to go bACK(I FEEL IT AS AN INDIRECT SUPPORT TO) AND ONLY BLAME US AS SHOR TEMPERRED OR ALWAYS QUARRELLING WITH OTHERS WHEREVER IN THEATRES, HOTELS OR ELESEWHERE
sUPPAMANI