கேட்டால் கிடைக்கும்.
ஆம் கேட்டால் நிச்சயம் கிடைக்கும். அதே பேமில் புட் கோர்ட் ஆரம்பித்திருக்கிறார்கள். சரி சாப்பிடலாமென்று என் நண்பர் போய் ஆர்டர் செய்துவிட்டு வந்தார். புட்கோர்ட் புதியதாய் ஆரம்பித்திருப்பதால் இரண்டொரு கடைகளே இருந்தது. சாப்பாடு வந்த பிறகு போய் தண்ணீர் எடுத்துக் கொண்டு வாருங்கள் என்று சொன்னேன். அவர் போய் தண்ணீர் கேட்டார். தண்ணீரெல்லாம் தரமாட்டோம். வேண்டுமென்றால் பேக்கேஜாக கோக் வாங்கிக் கொள்ளுங்கள். அல்லது பாட்டில் தண்ணீர்தான் வாங்க வேண்டும் என்று சொன்னார். இது என்ன அநியாயம்?. இவ்வளவு பெரிய புட்கோர்ட்டில் குடிப்பதற்கு தண்ணீர் தர மாட்டோம் விலைக்குத்தான் வாங்க வேண்டும் என்று எப்படி கட்டாயப் படுத்தலாம்?. என்று கேட்ட போது ஊழியர் திரு திருவென முழித்தார்.
நான் உள்ளே நுழைந்து என்ன ஏது என்று கேட்டுவிட்டு, “இதோ பாருங்கள். ஒரு ரெஸ்ட்ராண்ட் என்று வைத்துவிட்டால் நிச்சயமாய் உங்களின் உணவை சாப்பிடுபவர்களுக்கு தண்ணீர் கொடுத்தே ஆக வேண்டும். பாடில் தண்ணீரையோ, கோக்கையோ தான் குடித்தாக வேண்டும் என்று கட்டாயபடுத்தக் கூடாது. சட்டப்படி தவறு” என்றேன். ஊழியர் அதெல்லாம் எனக்கு தெரியாது, வேணும்னா வாங்கிக்கங்க.. இல்லாட்டி விடுங்க என்றார். அவர் எடுத்தெறிந்து சொன்னதும் எனக்கு கோபம் வந்துவிட்டது. பாதி சாப்பிட்ட அயிட்டங்களை திரும்பக் கொடுத்துவிட்டு எனக்கு சாப்பாடு வேண்டாம். காசை திரும்பக் கொடு என்று கேட்க ஆரம்பித்தேன். அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மேலும் விழிக்க ஆரம்பித்தார். உள்ளே போய் மேனேஜர் போன்ற ஒருவரை அழைத்து வர, அவரும்.. தேய்ந்து போன ரெக்கார்டாக அதே பதிலைச் சொல்ல, நானும் தண்ணீர் கொடுத்தால் சாப்பிடுவேன். இல்லை என்றால் சாப்பாடு வேண்டாம் என் காசைக் கொடு என்றேன்.
இப்போது என்னைச் சுற்றி வேடிக்கைப் பார்க்க கூட்டம் சேர்ந்தது. அதற்குள் ஒருவர் வந்து என்ன பிரச்சனை என்று கேட்க, ஊழியர்கள் சொன்னார்கள். உடனே சார்.. இது புட்கோர்ட் காமன் வாட்டர் வைக்க வேண்டியது நிர்வாகம். அதனால் அவர்களைப் போய் கேளுங்கள். என்றார். எனக்கு உணவு கொடுத்தது உங்களது கடை. சட்டப்படி, ரெஸ்ட்ராரண்ட் விதிகளின் படி, மாநகராட்சியின் விதிமுறைப்படி, ஒவ்வொரு உணவகமும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நல்ல குடிதண்ணீர், டாய்லெட், வசதி ஆகியவைகளை கொடுக்க வேண்டும் என்று இருக்கிறது தெரியுமா? அப்படி கொடுக்கமுடியாது என்றால் எனக்கு உங்கள் சாப்பாடு வேண்டாம் என் காசை கொடுங்கள் நான் எனக்கு தண்ணீர் தருபவரிடம் போய் சாப்பிட்டுக் கொள்கிறேன். இல்லை நாங்கள் இங்கு தண்ணீர் தர மாட்டோம், பாட்டில் தண்ணீரையோ, அல்லது கோக்கையோதான் விலைக்கு வாங்க வேண்டும் என்று எழுதிக் கொடுங்கள். பிறகு நான் எங்கு போக வேண்டுமோ அங்கு போய் பார்த்துக் கொள்கிறேன் என்றதும். அவர் கண் அசைக்க, உள்ளேயிருந்து இரண்டு கிளாஸ் தண்ணீர் வந்தது. இது மாதிரி கே.எப்.சில கேட்டுருவீங்களா? என்றார். என் கூட வா.. இந்தியாவில் எந்த உணவகத்திலும் எனக்கு யார் தண்ணீர் இல்லை என்று சொல்கிறார்கள் என்று பார்போம் என்றேன். என் நண்பர் முதலில் கொஞ்சம் நெளிந்தாலும் சாப்பிடும் போது சொன்னார் ‘பரவாயில்லை சார். விடாம கொடுக்க வச்சிட்டீங்களே?” என்றதும் என் கோபம் அவர் மீது பாய்ந்தது.
“என்னா சார்.. இவ்வளவு சண்டை போடுறேன் கூட நீங்களும் கேட்க வேண்டாம். இங்க நம்மள வேடிக்கை பார்த்த ஆளுங்களைப் போலவே நீங்களும் இருந்திட்டீங்க.” என்றதும் தலை குனிந்தார். “நானா பத்து காசு கொடுத்து வாங்கிறது என் உரிமை. ஆனா அவங்க என் பாக்கெட்டுல கை விட்டு காசை எடுத்து இதைத்தான் சாப்பிடணும் சொல்றது அராஜகம்.” என்றதும் பக்கத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவர் அவர் சாப்பாட்டுக்கு தண்ணீர் கேட்க போனார்.
தியேட்டர்களில் இருக்கும் பெரும்பாலான புட்கோர்டுகளில் இப்படித்தான் கொள்ளையை ஆரம்பிக்கிறார்கள். அதன் பிறகு இன்னொரு விதமான கொள்ளை எப்படியென்றால். தியேட்டருக்குள் விற்கப்படும் பொருட்களின் விலை எம்.ஆர்.பியை விட அதிகம் விற்கக்கூடாது என்று விதியிருக்கிறது. சமீபத்தில் கூட ஒருவர் இம்மாதிரி மல்ட்டிப்ளெக்ஸில் விற்பதை எதிர்த்து கேஸ் போட்டார். உடனே தில்லாலங்கடிகளாய் ஒரு யோசனை செய்தார்கள். பெரும்பாலான மல்ட்டிப்ளெக்ஸுகளில் பாப்கார்ன் முதற் கொண்டு எல்லா அயிட்டங்களும் அவர்களூடய தயாரிப்பாகவோ, அல்லது வெளியேயிருந்து ப்ராண்டட் பெயரில்லாத தயாரிப்பாகவோ, வரவழைத்து விற்க ஆரம்பித்தார்கள். அதையும் மீறி டின் கோக், பெப்ஸி, வாட்டர் பாட்டில்களில் அதன் ஒரிஜினல் விலை போட்டிருப்பதால் என்ன செய்வது என்று யோசித்த போது பெப்ஸி, கோக் தயாரிப்பாளர்கள் ஒரு வேலையை செய்தார்கள். ஒரு டயட் கோக்கின் விலை வெளியே எம்.ஆர்.பி 25 ரூபாய் என்றால் இங்கே தியேட்டரில் 50 ரூபாய். தண்ணீர் பாட்டில் அறுநூறு எம்.எல் குறைந்தது 20 ரூபாய். தியேட்டரில் விற்க்கப்படும் கோக், பெப்ஸி, தண்ணீர் பாடில்களில் மட்டும் தியேட்டரில் தற்போது விற்கப்படும் விலையை போட்டு, இது வெளியில் விற்பனைக்கல்ல என்பதையும் போட்டு விற்கிறார்கள். கேட்டால் இங்கே இதன் எம்.ஆர்.பி. இதுதான் என்று சொல்கிறார்கள்.
இதைப் படிக்கும் வாசகர்களே.. உங்களுக்கு ஒரு வேண்டுகோள். நிச்சயம் உங்களுக்கும் இம்மாதிரியான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். ஆனால் என்ன செய்வது என்று மனதிற்குள் புழுங்கியபடி காசைக் கொடுத்து வாங்கியிருப்பீர்கள். இனி தயவு செய்து அம்மாதிரி இல்லாமல் உங்கள் உரிமைகளை கேட்டு வாங்குங்கள். நீங்கள் கேட்பது நீங்கள் உழைத்து சம்பாதித்த காசுக்காக, மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் நினைக்காதீர்கள். மற்றவர்களுக்காக நாம் வாழ்வதில்லை. கேட்டால் நிச்சயம் கிடைக்கும்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
Regards
(http://hack-erz.blogspot.com)
மால்களில் நம் கோவணத்தை உருவும் அவலத்தை தார்மீகக்கோபத்துடன் பதிவிட்டு உள்ளீர்கள்.நியாயமாக போரிடும் போது வேடிக்கை பார்த்து ஒதுங்கிப்போகும் நம்மவரின் பொதுப்புத்தி என்றுதான் ஒழியுமோ?????????
Appo Fame Wasternnu sollunga...Already i think they are having some problem with Corp(Commn kudukamma vittu irupanunuga) lot of sewage water outside the complex. Weekdayslaa not many people there.
I hope after doing all these they wont survive...
Evanga rules ellam foreign la.. irukura food court style la follow panuranga.. But it is not applicable in India.
என்ன உதையா?? (சும்மா..)
எனக்கு உங்களின் இந்த பதிவு நிரம்ப பிடித்திருக்கிறது....
மற்றவர்களை பின்பற்றுவதை விட முன்னுதாரணமாக இருப்பது பெருமைக்குரிய விசயம்தான்..
great sir!!
ithukellam pathi complaint panarathuku corp ethachum numb kudukannum
ithukellam pathi complaint panarathuku corp ethachum numb kudukannum// கே.எஃப்.சியில தண்ணி குடுப்பானுங்க.. பல தடவ போயிருக்கேன்.. எப்பயுமே தண்ணி தகராறு வந்ததில்லையே!!!
நாம் கண்டிப்பா கேக்கணும்.. கேக்காதனாலதான் இஷ்டத்துக்கு ஆடறானுங்க..
intha ezhavakku than naan food court pakkamae porathillai. namakku basic law, rules regulations theriyarathillai athanala pala vishayam correcta wronga theriyama poidrathu. intha food court pagattukku thaan. naan innum udipi hotel than kaasum kammi serviceum good. melum naan strict vegetarian enbathal KFC pondra unavagathukku porathillai ithai ellam padikkum bothu bayangarama kovam varuthu. namma makkal paatbhi perukku soranai illayonnu koda thonuthu atleast neengalachum dhairiyama namma urimaiykkaga poradarathu santhoshama irukku. atleast ithai padicha piragavathu matra valaipathivalargal , pinoottam idubavargal thangal urimai vittu kodukkamal kettu vanginargal endral evargal kottam adangum.
oru request .... idhu vishayathil sattam enna solgiradhu entha sattam enna pirivu enbathai kothu parottavil sappadu kadai paguthiyil oru pathivu poda vendumaru kettu kolkiren.
cable annanin ore mana dhairiyathai paratti URIMAI SINGAM endra pattam kodukka senior(enakku) valai pathivalargal matrum pinoottam idubavrgal sarbagavum alikiren ! !
Vazhga Cablesankar ji
njyaayamana kobam. enakkum ithe mathiri pala thadavai nadanthirukkirathu.
public ungale mathiri thunichaala pesanum sir.
Thanks
Subramanian V
Good post.
http://tamildigitalcinema.com/?p=14738
கேளுங்கள் தரப்படும்...
கேளுங்கள் தரப்படும் என்றார்
கேபிள் கேளுங்கள் தரப்படும் என்றார்..
நீங்கள் கேட்டு அவர்கள் பணம் திருப்பி தந்தால் அண்ணன் கேபிளார் அவர்களுக்கு நன்றி சொல்லுங்கள்..