Thottal Thodarum

Jul 29, 2011

கருங்காலி

Karungali190810_26 பூமணி படத்தின் இயக்குனர். மிட்டா மிராசு, கிழக்கும் மேற்கும் போன்ற படங்களுக்கு பிறகு நெடுநாள் படமில்லாமல் தானே நடித்து இயக்கிய படம். வெகு நாட்கள் தயாரிப்பில் இருந்த படம். ஏற்கனவே அஞ்சலியின் துடிப்பான சில ஸ்டில்கலால் ரசிகர்களிடையே ஒர் ஆர்வத்தை ஏற்படுத்திய படம் அந்த ஆர்வத்தை தணித்ததா? இல்லையா? பற்றி பின்பு பார்ப்போம்.


Karungali111210_29 ரவி ஒரு அனாதை. குப்பத்தில் உள்ள அனாதை சிறுவர்களை எடுத்து வளர்க்கும் ஒரு கம்யூனிஸ்ட் தாத்தாவின் ஆதரவில் அவனும் வளர, திடீரென ஒரு நாள் அவர் புட்டுக் கொள்ள, கூட்டத்தை காக்கும் கட்டாயத்தில் திருடனாகிறான். சிட்டி ஆப் காடில் வருவது போல கஞ்சா பேக்கேஜில் வேலை செய்ய ஆரம்பித்து மெல்ல கஞ்சா விற்பவனாக மாறி பொட்டலம் ரவியாய் வளர்கிறான். கெட்டவன் மட்டுமல்ல காமக் கொடூரன். சிறு வயதிலிருந்தே மற்றவர்கள் உடலுறவு கொள்வதை திருட்டுத்தனமாய் வேடிக்கை பார்ப்பவன். கும்பலில் இருக்கும் ஒரே ஒரு சிறுமி வயதுக்கு வந்து ரவியிடம் காதலாகி அவன் பின்னாலேயே அலைகிறாள். உடலுறவு கொள்கிறாள். ஆனால் அவளை திருமணம் செய்ய மாட்டேன் என்கிறான். தன் ஆசையை அவள் ஒருத்தியால் அடக்க முடியாதென்கிறான். அவள் கர்பமாகும் போது அவளை சுட்டுக் கொல்கிறான். நடிகையின் பிணத்துடன் நெப்ரோ மேனியாக்காக மாறி உடலுறவு கொள்கிறான். சரி…. எதுக்கு இவ்வளவு என்று கேட்கிறீர்களா? ஹீரோ இவ்வளவு கெட்டவன் என்று சொல்லத்தான். ஒரு மழை நாளில் விபத்துக்குள்ளாகும் டாக்டரை காப்பாற்றி, அவளின் காதலுக்கு ஆளாகிறான். ஜெயிலிருந்து ஆறு ஆண்டுகள் கழித்து திரும்ப, திருந்தி வந்து நல்ல அன்புள்ள கணவனாய் வாழ்கிறான். ஜெயிலில் பாதிரிமார்கள், குருமார்களின் தொடர் போதனையால் திருந்திவிடுகிறானாம். அப்போது டாக்டரிடம் குழந்தையில்லாமல் வரும் அஞ்சலியை பற்றி தெரிந்து கொண்டு, டாக்டர் தான் அவளிடம் தன்னை அனுப்பியதாகவும், தன்னை ஒரு டேப்ளெட்டாக நினைத்துக் கொண்டு ஒரு ஐந்து நிமிடம் உடலுறவு கொண்டால் நிச்சயம் குழந்தை உண்டாகிவிடும் என்று சொல்லி டார்சர் செய்கிறான் அவள் அவனுடன் உறவு கொண்டாளா? அவள் கணவனுக்கு விஷயம் தெரிந்ததா? ரவியின் மனைவி டாக்டருக்கு தெரிந்ததா? அவள் சோரம் போனாளா என்பதை வெள்ளித்திரையில் முடிந்தால் பார்த்துக் கொள்ளவும்.
Karungali111210_32 அடல்டரி சப்ஜெக்ட் கத்தி மேல் நடப்பதற்கு சமம். கொஞ்சமே கொஞ்சம் விலகினாலும் விரசத்தின் உச்சத்தை தொட்டுவிடும். அப்படிப்பட்ட கதையை எடுத்த இயக்குனர் அக்கதைக்கான ஜஸ்டிபிகேஷனை செய்திருக்கிறாரா?என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். மூன்று ( சாரி மூன்று இல்லை இரண்டுதான்.) கதாநாயகிகளையும் போட்டு பிசைந்தெடுத்துள்ளார். முதல் கதாநாயகியாய் வரும் பெண் கேரக்டர் ஒரு அரைகுறை கேரக்டராய் இருப்பதால், அபாரமான உடல் வளைவுகளை எக்ஸ்போஸ் செய்கிறார். விழுந்து விழுந்து ரவியை காதலிக்கிறார். சாகிறார். இரண்டாவதாக வரும் சுனிதா வர்மா எக்ஸ்போஸ் செய்ய வாய்பில்லை. சொல்லிகொள்ளவும் பெரிதாய் வாய்ப்பில்லை. மூன்றாவதாக வருபவர் அஞ்சலி. பார்த்தவுடன் பச்சக் என முத்தம் கொடுக்கத் தூண்டும் வகையில் இருக்கிறார்.  அவர் முகத்தில் தெரியும் இன்னொசென்ஸுக்காகவே என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று தோன்றுகிறது. சரியான விகிதத்தில் எக்ஸ்போஸ் செய்யப் பட்டிருக்கிறார். இவரின் கேரக்டரின் தன்மையால் இவரின் நல்ல நடிப்பு எடுபடாமல் போய்விடுகிறது. ரவியாக நடித்த இயக்குனர் களஞ்சியத்திற்கு நடிப்பும், பாடி லேங்குவேஜும் வருவேனா என்கிறது. அதிலும் ரவுடியாய் இருக்கும் காலத்திலாவது தலை முடியும், தாடியும் கொஞ்சமாச்சும் காப்பாற்றுகிறது. இரண்டாவது பாதியில் திருந்தியவனாய் வரும் போது அவரது பார்வைகளும், பாடி லேங்குவேஜும் ம்ஹும்.
Karungali190810_25 ஒளிப்பதிவு, எடிட்டிங், ஸ்ரீகாந்த் தேவாவின் இசை எல்லாமே சுமார் ரகம். அதிலும் அஞ்சலி, க்ளஞ்சியம் சம்மந்தப்பட்ட காட்சிகளின் பின்னணியிசை பிட்டு படம் தோற்றது போங்கள். எழுதி இயக்கி, நடித்தவர் இயக்குனர் களஞ்சியம். கன்னி பருவத்திலே படத்தில் வடிவுக்கரசி ஒரு கணம் பாக்யராஜுடன் சபலப்பட்டதினால் நடக்கும் பல விஷயங்கள் நிதர்சனமான கதை. ஆனால் இவ்வள்வு ட்ராமாட்டிக்காக அடல்டரி நடைபெறும் என்று கதை செய்வது படு அபத்தம். அதுவும் டாக்டர் சொல்லி தான் உங்களுடன் உறவு கொள்ள அனுப்பப்பட்டிருகிறேன். என் பெயர் கூட வேண்டாம். என்னை டாப்லெட்டாக நினைத்து ஒரு ஐந்து நிமிஷம் செக்ஸ் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்பவனை எந்த ஒரு அப்பாவி பெண்ணும், கிராமத்துப் பெண்ணும், தெய்வ திருமகள் கிருஷ்ணாவின் மனநிலையில் உள்ள பெண்ணாயிருந்தாலே ஒழிய நம்ப மாட்டாள். தன் கணவன் எப்போது புத்த்கம், செல், கம்ப்யூட்டர் என்று காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறான் என்று குறை சொல்லும் அளவிற்கு உள்ள ஒரு பெண் நிச்சயம் இம்மாதிரியான காரணங்களுக்காக சோரம் போய்விடுவாள் என்று நினைக்க தூண்டுவதே படு அபத்தமான பர்வர்ஷனாக இருக்கிறது. Karungali tamil movie _17__001 படம் நெடுக ஆங்காங்கே வரும் சில பல சுவாரஸ்யமான காட்சிகளையும் ரசித்து பாராட்ட முடியாமல் போவதற்கு பிட் பட பார்மெட் திரைக்கதை என்பது வருத்தமே.  இப்படத்திற்கு அஞ்சலி பெரிய ப்ளஸ்ஸாக இருக்கலாம். ஆனால் அஞ்சலி போன்ற சிறந்த கலைஞர்களின் கேரியருக்கு இந்த படம் ஒரு பெரிய மைனஸே. ம்ஹும் பெட்டர் லக் அஞ்சலி.
கருங்காலி- மழுங்கிய கோடரி

Post a Comment

10 comments:

rajamelaiyur said...

படம் தேறாதா ?

rajamelaiyur said...

என்று என் வலையில்

ராஜ் மெட்ரிக் ஸ்டுடண்ட் பவுண்டேஷன் – ஒரு புதிய புரட்சி

Arjun said...

அஞ்சலி போன்ற சிறந்த கலைஞர்களின் கேரியருக்கு இந்த படம் ஒரு பெரிய மைனஸே

உண்மை தான் சார். நல்ல விமர்சனம். கதையே ரொம்ப கேவலமாக இருக்கும் போல

Sivakumar said...

கொத்து பரோட்டா அடல்ட் கார்னரில் எழுதி இருக்கலாம்....

பனித்துளி சங்கர் said...

பாவம் இவர்களின் உழைப்பும் வீணாகப் போச்சா !?

Unknown said...

@Cable Sir

Last Punch was SuperB

Regards
M.Gazzaly
http://hack-erz.blogspot.com

ஒரு வாசகன் said...

சிலவேளைகளில் 'நிதி"களின் பங்களிப்பு தமிழ் திரைப்படங்களுக்கு தேவைபோல் உள்ளது, இது போன்ற படங்கள் வராது தவிர்ப்பதற்க்கு

k amirtharaj said...

kalanjiyam vaypu kidaikatha nalla iyakunarnu ninaichirundhen.oru sila nalla karutharangam,katchi sarbillatha public meetingla ellam partha gnabagam iruku.avar yen intha 'sami'agayara padam panna varanum ?chance kidaikalenna puthi ipadithan velai seyyumo?

hayyram said...

////அப்போது டாக்டரிடம் குழந்தையில்லாமல் வரும் அஞ்சலியை பற்றி தெரிந்து கொண்டு, டாக்டர் தான் அவளிடம் தன்னை அனுப்பியதாகவும், தன்னை ஒரு டேப்ளெட்டாக நினைத்துக் கொண்டு ஒரு ஐந்து நிமிடம் உடலுறவு கொண்டால் நிச்சயம் குழந்தை உண்டாகிவிடும் என்று சொல்லி டார்சர் செய்கிறான் அவள் அவனுடன் உறவு கொண்டாளா? அவள் கணவனுக்கு விஷயம் தெரிந்ததா? ரவியின் மனைவி டாக்டருக்கு தெரிந்ததா? அவள் சோரம் போனாளா //// தூ கருமம். அவனவன் மனசுல இடுக்கிற சொந்த வக்கிர புத்தியை எல்லாம் சினிமாங்கிற பேர்ல எடுத்து அந்த குப்பையை சமூகத்தின் வாயிலும் திணிக்கப்பார்க்கிறார்கள். இந்த லட்ஷனத்தில் இவர்களுக்கெல்லாம் பத்திரிக்கைக்காரன் தப்பா எழுதிட்டா, கிசு கிசு போட்டுட்டா கோபம் வேற வரும். இப்படி படம் எடுத்து தான் ஒரு வித்தியாசமான சிந்த்தனைக்கார இயக்குனர் என்றெல்லாம் சீனைப் போடுவதை விட பிட்டு படம் எடுத்து பொழைப்ப ஓட்டலாம். அதுவே நேர்மையான செயலா இருக்கும்.

aotspr said...

சுமாரான கதை.
Thanks,
Priya
http://www.ezdrivingtest.com