Fame National.
முதல் குறை தியேட்டர் டிக்கெட் புக்கிங் செய்வதற்கு பைக் டெம்ப்ரவரி பார்க்கிங் வசதி கிடையாது. அது எல்லா தியேட்டர்களிலும் இருக்கிறதா? என்று கேட்பவர்களுக்கு இந்த வசதி நிச்சயம் தேவை என்று கேட்க வேண்டும். சத்யத்தில் இருக்கிறது. தேவி காம்ப்ளெக்ஸில் இருக்கிறது. ஆனால் மல்ட்டிப்ளெக்ஸ் போன்ற தியேட்டரில் கிடையாது. ஸோ.. இங்கிருந்தே நம்மிடமிருந்து காசு புடுங்க ஆரம்பிக்கிறார்கள். தியேட்டர்கள் திறக்கப்படும் வரை நமது போலீஸும் அங்கே நோ பார்க்கிங் போர்டு வைக்காது. தியேட்டர் திறந்தவுடன் நோ பார்க்கிங் போர்டு வைத்துவிட்டு, அரை மணிக்கொருதரம் யாருக்கும் தெரியாமல் பூனைப் போல லாரியை எடுத்து வந்து வண்டிகளை ஏற்றிக் கொண்டு போய் நோ பார்க்கிங் சார்ஜ், மற்றும் வண்டியை தூக்கிய சார்ஜ் அது இதுவென ஒரு நூற்றியமைப்பது ரூபாயை ஆட்டை போடுகிறார்கள். என் வண்டியை தூக்கி விட்டார்களா? என்று கேட்பீர்கள். இல்லை.
சரி இதாவது பரவாயில்லை. தியேட்டர் திறந்த நாள் அன்று வெறும் பத்து ரூபாய்க்கு பார்க்கிங் விட்டவர்கள். இப்போது ஒரு மணி நேரத்திற்கு பத்து ரூபாய் ஆக்கிவிட்டார்கள். மத்த மால்களைப் போல இந்த மாலில் அதிக நேரம் செலவழிக்க, கடைகளோ, அல்லது பொழுது போக்க்கு அம்சங்களோ இல்லை. வெறும் தியேட்டரைத் தவிர வேறு சிறப்பம்சம் இல்லை. அப்படியிருக்க தியேட்டர் டிக்கெட் வாங்கிய பிறகு பார்க்கிங் போட வசதி செய்தால் நிச்சயம் சினிமா பார்பவர்களுக்கு பார்க்கிங் சார்ஜ் குறைத்து வாங்கலாம்.
சரி தியேட்டருக்குள் போனோமென்றால் அங்கே அருமையான பிங்க் நிற அட்மாஸ்பியர் நம்மை கவரவே செய்கிறது. ஒரு நல்ல விஷயம் 3டி கண்ணாடிகளுக்கு 50 ரூபாய் வாங்கிக் கொண்டு திரும்பக் கொடுத்துவிடுகிறார்கள். முற்றிலும் இலவசம். தேவி தியேட்டர் போல கொள்ளையில்லை. 3டி படம் பார்க்கப் போனால் பாதி பேர் தலை தான் தெரியும் படியான சீட் அமைப்புக்கு அநியாயமாய் 50 ரூபாய் வாங்குகிறது தேவி நிர்வாகம்.
பேம் திரையரங்குகள் மொத்தம் ஐந்து ஸ்கீரீன்களை கொண்டது. அதில் இரண்டு ஃபிலிம் ப்ரொஜக்டர்களை கொண்டது. மற்ற மூன்று க்யூபின் “க்யூ” சர்வர் ப்ரொஜக்ஷனை கொண்டது. மற்ற மல்ட்டி ப்ளெக்ஸுகள் எல்லாம் க்யூபின் டி சினிமா சர்வர் வைத்திருக்க, இவர்களின் க்யு சர்வர் சாதாரண டிஜிட்டல் ப்ரொஜக்ஷன் தான். சரி அது கூட ஓகே.. படம் ஆரம்பித்த அரை மணி நேரத்தில் ஏசியை ஆஃப் செய்துவிட்டார்கள். அதை விடக் கொடுமை. திரையின் வலது பக்கம் முழுவதும் ப்ரொஜக்டரிலிருந்து வரும் வெளிச்சம் கட் ஆகி கருகும்மென இருந்தது. 3டி படம் பார்க்கப் போய் கேவலமான எஃபெக்டில் படம் காட்டிக் கொண்டிருந்தார்கள். உடனடியாய் தியேட்டர் ஆட்களை அழைத்து ஏசி மற்றும் ப்ரொஜக்ஜனைப் பற்றிய குறைகளை சொல்ல, ஒரு பத்து நிமிஷத்தில் ஒருவர் வந்தார். அவரிடம் தியேட்டர் ஸ்கீரினை கைகளாலேயே ஓட்டி, இதோ இங்கே எப்படி வெளிச்சம் த்ரோ ஆகிறது. இங்கே பாருங்கள் வெளிச்சம் இல்லவேயில்லை. என்று தெளிவாக விளக்கி சொன்னவுடன் “இதோ இப்போ ஆப்பரேட்டரிடம் போய் சொல்கிறேன்” என்று சொல்லிவிட்டு போனவர்தான் அரை ம்ணி நேரம் ஆகியும் ஏசியும் போடவில்லை, ப்ரொஜக்ஷனையும் சரி செய்யவில்லை.
மீண்டும் இண்டர்வெல் முடிந்து அதே ப்ளோர் மேனேஜரை அழைத்து கேட்டவுடன் சார்.. ஏசி சரி பண்ணியாச்சு என்றார். சாரி சரியில்ல போட்டாச்சுன்னு சொல்லுங்க என்றது அசட்டுத்தனமாய் சிரித்தார். ப்ரொஜக்ஷன்? என்றதற்கு சொல்லியிருக்கேன் சார்.. சரியாயிரும் என்றார். படம் முடியும் வரை சரியாகவில்லை. ப்ரச்சனை ஒன்று பிரிண்டிலோ, அல்லது 3டிக்காக, முன்னால் வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடியிலோ இருக்க வேண்டும் இந்த சின்ன ப்ராப்ளத்தைக்கூட சரி செய்ய முடியாத அளவிற்கு நிர்வாகம் இருக்கிறது.
சத்யம், ஐநக்ஸைவிட விலை அதிகமாகவே கேண்டீனில் விற்கிறார்கள். முதல் நாள் இருபது ரூபாய்க்கு கொடுத்த தண்ணீர் பாட்டில் இப்போது 30 ரூபாய். தியேட்டர் வாசலில் எப்போதும் கழிவு நீர் ஓடிக் கொண்டிருக்கிறது. அவ்வப்போது ஸ்கீரினுக்கு பின்னால் பக்கத்து ப்ளோரில் எலக்டீரிக்கல் வேலையோ, கார்பெண்டரி வேலையோ நடந்து கொண்டிருக்க, டிடிஎஸ்ஸின் இன்னொரு எபக்டாக டிரில் சவுண்ட் வேறு கூச வைக்கிறது. சென்னை ஐநாக்ஸ் நிர்வாகம் தான் இந்த தியேட்டரை நிர்வகிக்கிறது என்கிறார்கள். இப்படியே போனால் நிச்சயம் இந்த செண்டர் வலுவிழந்து போக நிறைய வாய்ப்புள்ளது. இப்போதே அன்றைய காட்சிகளுக்கும் மட்டுமே ரிசர்வேஷன் செய்கிறார்கள். ஏனென்றால் தியேட்டரில் வசூல் இல்லாமல் ஓடும் படங்களுக்கு பதிலாய் அடுத்த படங்கள் போட வேண்டிய நிலைமையிருப்பதாலும், இதே புதிய படங்கள் அருகிலேயே இதைவிட குறைந்த செலவில் பார்க்கக்கூடிய விலையில் இருப்பதால் நிச்சயம் இவர்களுக்கு ரிஸ்க் பேக்டர் அதிகம். விரைவில் இதற்கான மாற்று யோசனைகளை செய்தால் மட்டுமே பேம் பேமஸாக இருக்கும் இல்லாவிட்டால். நிச்சயம் கஷ்டம் தான்.
மல்ட்டிபளக்ஸ் மால்களில் மக்களிடம் பணம் பிடுங்க செய்யும் தில்லாலங்கடிகள் விரைவில்
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
அது பிங்க் இல்லை தலைவா... லேவண்டர்...
Now I have removed this movie hall from my radar.
Any day - I'm happy with Kamala Cinemas / PVR Cinemas.
Fame will soon be defamed!
நன்றி
இந்த தியேட்டர Blacklist பண்ணிட்டேன்... Bangalore Famce cinemas சத்யம் அளவுக்கு இல்லாட்டியும் நல்லா இருக்கும்.. இந்தளவுக்கு மோசம் இல்ல..
உண்மைதான்.
ரிப்பிட்டேய்.....