கபீர், அர்ஜூன், இம்ரான் மூவரும் பள்ளி காலத்திலிருந்தே நெருக்கமான நண்பர்கள். த்ரீ மஸ்கிட்டர்ஸ் என்று அழைக்கப்படும் அளவிற்கு. கபீரின் எங்கேஜ்மெண்டில் கதை ஆரம்பிக்கிறது. கபீர் ஒரு பிஸினெஸ்மேன். இம்ரான் ஒரு ஜாலியான ஆட்பிலிம் காபி ரைட்டர். அர்ஜுன் பணம் மட்டுமே வாழ்க்கையை கொடுக்கும் என்று அசாத்தியமான நம்பிக்கையில் அதை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருப்பவன். நல்லா சம்பாதிச்சு நாற்பது வயசுல ரிடையர் ஆயிடணும் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பவன். கபீர்- நடாஷாவின் எங்கேஜ்மெண்டுக்கு பிறகு இவர்கள் மூவரும் சேர்ந்து பாச்சுலர் பார்ட்டிக்காக ஸ்பெயினுக்கு போகிறார்கள். இங்கிருந்து ஆரம்பிக்கிறது கதை. இன்னொரு முறை வாழ்க்கையை வாழ கிடைக்காது என்பதை புரிந்து கொண்டு அவர்களின் வாழ்க்கையை மாற்றும் பயணமாய் அமைகிறது.
மூன்று ஆண்கள், அவர்களின் நட்பு, ஒவ்வொருவருடய வயதுக்கேற்ப மாறி வரும் பர்ஷப்ஷன்கள், அதை மீறி அவர்களுக்குள் இருக்கும் நட்பின் நெருக்கம். என்கிற கதை அமைப்பைப் பார்த்ததும் தில் சாதா ஹே, மற்றும் ஹேங் ஓவரின் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை. ஆனால் கதையை சொன்ன விதத்தில் அப்படியே கொள்ளை கொள்கிறார்கள்.

தன்னைப் பற்றிய ரகசியத்தை அறிந்து கொள்ளும் ஆவலோடு உள்ளே அழுது, வெளியே வாழ்க்கையை கொண்டாடும் இம்ரான். பணம், வேலை, வேலை, பணம் என்று தனக்கும் தன் காதலிக்கும் சந்தோஷம் தரும் என்று நம்பி காதலை இழந்து தவிக்கும் அர்ஜுன். ஒரு விதமான குழப்பத்தில் ப்ரபோஸ் செய்துவிட்டு, எங்கேஜ்மெண்ட் என்று ஆன பிறகு நடாஷாவின் பொஸஸிவ் மனப்பான்மையை தாங்க முடியாது ஏதோ இறுக்கி கட்டி வைத்தார் போல் உணர ஆரம்பிக்கும் கபீர் என இவர்களுக்குள் இருக்கும் இன்னொரு முகங்களை இந்த ரோட் டிரிப் மூலம் கண்டு கொள்கிறார்கள்.
ஆழ்கடல் டைவிங் சொல்லித்தர வரும் லைலாவிற்கும் அர்ஜுனுக்கும் இடையே நிகழும் உணர்வு காதலாய் மாறும் தருணங்களில் ஆழம் குறைவாகவேயிருந்தாலும், அர்ஜுன் ஊருக்கு கிளம்பியவுடன் அவன் பிரிவு தாங்காமல் ஒரு புல்லட்டை எடுத்துக் கொண்டு அவர்கள் போன வழியிலேயே தேடிப் போய் காதலை சொல்லி முத்தமிடும் போது இருக்கும் அழுத்தம் அந்தக் குறையை மறந்து போகச் செய்துவிடுகிறது. ஆழ்கடலில் மூழ்க பயிற்சி தரும் காட்சியை, ஆழ்கடலின் நிசப்தத்தை, அழகை நம்முள்ளும் கடத்தி விடுகிறார்கள் இயக்குனரும், ஒளிப்பதிவாளரும் சேர்ந்து. லைலாவாக வரும் காத்ரீனா படு க்யூட். ம்ஹும். அதே போல அந்த ஸ்கை டைவிங் காட்சி. அந்தரத்தில் பறக்கும் உற்சாகத்தை, மகிழ்ச்சியை, த்ரில்லை நமக்கும் கிடைக்கிறது. கடைசியில் அதன் மூலம் கட்டிப் போட்டிருக்கும் பல விஷயங்களை உடைந்தெறிந்து கொண்டு வர கேரக்டர்கள் முடிவெடுப்பதை ஜஸ்டிஃபை செய்யாமல் அதை நமக்கு பாஸ் செய்திருப்பது இயக்குனரின் வெற்றி என்றே சொல்ல வேண்டும்.

இம்ரானுக்கும், நஸ்ரூதீன்ஷாவும் சந்திக்குமிடத்தில் வசனங்களுக்கிடையே இருக்கும் அமைதியும், அந்த அமைதி கொடுக்கும் அழுத்தமும் அபாரம். நெகிழ்ச்சியான தருணங்கள். அதே போல இம்ரானுக்கும் அவனுடய ஸ்வீடிஸ் காதலியுடனான வசனங்கள். இவன் இந்தியில் பேச, அவள் ஸ்பானிஷில் பேச, இருவரும் காதல் மொழி பேசுகிறார்கள் என்பது மட்டுமே அவர்களுக்கு முக்கியம். அதற்கு மொழி ஒரு பிரச்சனையேயில்லை என்ற காட்சி சரி ரொமான்ஸ்.
ஸ்பெயின் தக்காளி விழா, நம்மூர் ஜல்லிக்கட்டுப் போன்ற விழா, அந்நிகழ்வுகளை வைத்து பின்னப்படும் கேரக்டர்களின் உணர்வு நெருக்கங்கள், முடிவுகள். அற்புதமான ஒளிப்பதிவு, ஷங்கர்-இஷான் – லாயின் ஸூத்திங் பின்னணி மற்றும் உறுத்தாத பாடல்கள். ஆண்களின் வாழ்க்கையில் ஒரு பெண் நுழைந்தவுடன், மாறும் நிகழ்வுகள், என்று எழுதிய இயக்கிய ஜோயாஅக்தர் ஒரு பெண் இயக்குனர் என்பதால் பாதிப்பு நிறையவே தெரிகிறது. ஆங்காங்கே சில பல குறைகள் இருந்தாலும், அடித்து தூள் பரத்தும் ப்ரபரப்பான திரைக்கதை, பத்து செகண்டுக்கு எட்டு ஷாட் மாறும் எடிட்டிங், துறுதுறுப்பான பாடல்கள் என்று படங்கள் வந்து கொண்டிருக்கும் காலத்தில், படம் பார்த்துவிட்டு வந்த பிறகும் மனதில் உழன்றுக் கொண்டிருப்பது போன்ற ஒரு விதமான சந்தோஷமே. அதை கொடுத்த ஜோயாவிற்கு பாராட்டுக்கள்.
Zindagi Na Milenge Dobara – Yes.. Must see picture Na Milenge Dobara.ஸ்பெயின் தக்காளி விழா, நம்மூர் ஜல்லிக்கட்டுப் போன்ற விழா, அந்நிகழ்வுகளை வைத்து பின்னப்படும் கேரக்டர்களின் உணர்வு நெருக்கங்கள், முடிவுகள். அற்புதமான ஒளிப்பதிவு, ஷங்கர்-இஷான் – லாயின் ஸூத்திங் பின்னணி மற்றும் உறுத்தாத பாடல்கள். ஆண்களின் வாழ்க்கையில் ஒரு பெண் நுழைந்தவுடன், மாறும் நிகழ்வுகள், என்று எழுதிய இயக்கிய ஜோயாஅக்தர் ஒரு பெண் இயக்குனர் என்பதால் பாதிப்பு நிறையவே தெரிகிறது. ஆங்காங்கே சில பல குறைகள் இருந்தாலும், அடித்து தூள் பரத்தும் ப்ரபரப்பான திரைக்கதை, பத்து செகண்டுக்கு எட்டு ஷாட் மாறும் எடிட்டிங், துறுதுறுப்பான பாடல்கள் என்று படங்கள் வந்து கொண்டிருக்கும் காலத்தில், படம் பார்த்துவிட்டு வந்த பிறகும் மனதில் உழன்றுக் கொண்டிருப்பது போன்ற ஒரு விதமான சந்தோஷமே. அதை கொடுத்த ஜோயாவிற்கு பாராட்டுக்கள்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Post a Comment
7 comments:
Nice Review
Thanks
aiii
Naanthan seconda wow
Cableji athu Zindagi na milegi dobara-- Vazhakai innoru murai kidaikkathu... milengi - let us meet mathiri artham varum ..
Nalla review .. naan kooda ithu dil chahtha hai mathiri irukkumnu ninaichen but unga review athu mathiri illa appadinu solluthu any way colors, star gold pondra channella ithu innum 3 massathila vandhudum appa pakkalam. Theatre rate, parking problem , padam pathukitte popcorn snacks sapida mudiyatha karanathinalae ippa ellam TV la pakka vendiathirukku ... colors channela dabangg pottu theikaran parunga athanla ithu TV la than ... yaar yaar entha charecter nnu solla villai .. Hrithik roshan entha character, Farhan akthar -- ivarthan dil chahtha hai director and also zoya akthar brother as well as Javed akthar oda son innoruthar Abhay deol ... namma dharamendhra oda brother paiyan sunny deol bobby deol oda onnu vitta thambi ... ivaru idhu varikkum art movie mathiri than nadichi vanthirukkar for ex DEV D, oye lucky oye...
அருமையான விமர்சனம்.
படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது.
தக்காளித் திருவிழா making பார்த்தபோது படம் பார்க்கும் எண்ணமிருந்தது, உங்க விமர்சனம் இன்னம் ஆவலைத் தூண்டுகிறது.
Layout Change தேவைதான், ஆனால் இந்த நிறங்கள் நன்றாக அமைந்தாக நான் நினைக்கவில்லை.
படம் பார்த்து விட்டேன். உங்க விமர்சனம் கச்சிதம். படம், விமர்சனம் இரண்டும் அருமை.
இம்ரான் காதலி ஸ்பானிஷ். ஸ்வீடிஷ்? ஸ்வீட் டிஷ் என்று சொல்ல வந்தீங்களா?
மொழி தெரியாவிட்டாலும் அவள் ஸ்பானிஷில் 'நீ நிறைய சிரித்தாலும் உன் கண்களில் சோகம் தெரிகிறது' என்பாள். இந்த மாதிரி நிறைய ஆச்சரிய தருணங்கள் படத்தில்.
மொழி ஒரு பிரச்சனையேயில்லை - ஜோயாவிற்கும் பாராட்டுக்கள்....
அழகாக விமர்சித்த உங்களுக்கும் பாராட்டுக்கள்...
தில் சாஹ்த்தா ஹை வாசமடிப்பதை மறுக்க முடியல..
//Zindagi Na Milenge Dobara – Yes.. Must see picture Na Milenge Dobara.// பஞ்ச் சூப்பர்..
Post a Comment