ராம் கோபால் வர்மாவின் லேட்டஸ்ட். சமீபகாலமாய் அவரின் டச்சில்லாமல் வரிசையாய் ராம நாராயணன் போல படமெடுத்து தள்ளிக் கொண்டிருக்கிறார். அதுவும் தினசரி ஹெட்லைனில் ப்ரப்ரப்பாக பேசப்பட்ட விஷயங்களை வைத்து படமெடுத்துக் கொண்டிருக்கிறார். நீரஜ் குரோவர், மரியா சூசைராஜ் என்கிற நடிகையின் நிஜ வாழ்க்கை கதையை இம்முறை படமெடுத்திருக்கிறார்.
Aug 31, 2011
Aug 30, 2011
புலி வேஷம்
முப்பத்தியைந்து லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கிய அன்பு வாசக நெஞ்சங்களுக்கும், சக பதிவர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள். சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Aug 29, 2011
கொத்து பரோட்டா -29/08/11
முப்பத்தியைந்து லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கிய அன்பு வாசக நெஞ்சங்களுக்கும், சக பதிவர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள். சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
மீண்டும் ஒரு புன்னகை
”Wind" குறும்படத்தை அடுத்து ஒரு அரை மணி நேரக் குறும்படமான “மீண்டும் ஒரு புன்னகை” என்கிற படத்தை எடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர், மணிகண்டன். சமீபத்தில் இவ்வளவு மெச்சூர்டான, அழகான குறும்படத்தை பார்க்கவில்லை. ஃபீல் குட் குறும்படம். நிச்சயம் வாழ்க்கையின் நிகழ்வில் நடந்து கொண்டிருக்கும் விஷயம். அருமையாய் கையாண்டிருக்கிறார். சின்ன சின்ன ரியாக்ஷன்களில், பின்னணியில் வரும் சவுண்ட் ஓவர்லாப்பில் நிறைய மெனக்கெட்டிருக்கிறார்கள். நடிகர்களின் பங்களிப்பை சரியான வாங்கியிருக்கிறார். ஒரு குட்டி பாட்டு வருகிறது. அதுவும் ச்ச்சோ..ச்வீட்.ரகுராம் இசையமைத்திருக்கிறார். ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்திருக்கிறார். சின்னச் சின்னதாய் கோணம் மாற்றி எடிட் செய்திருக்கும் விதம் சுவாரஸ்ய மூட்டுகிறது. இனிது இனிது, தேநீர் விடுதி திரைப்படங்களில் நடித்த அதித் தான் கதாநாயகன். சினிமாவை விட குறும்படங்கள் மனிதர் கலக்குகிறார். நல்ல வாய்ப்புத்தான் அமையவில்லை. நிச்சயம் ஒரு நல்ல ஸ்மார்ட் யங் நடிக்கக்கூடிய ஹீரோ இருக்கிறார். நாளைய இயக்குனர் வெற்றியாளர் நளனும், அரவிந்த் மனோவும் வசனமெழுதியிருக்கிறார்கள். செம வசனங்கள். அரை மணி நேர படத்தில் தொடர்ந்து நாலைந்து இடங்களில் கைதட்டல் கிடைக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.”என்ன பண்றே?” கதாநாயகன் புத்தகத்தை காட்ட, “எப்பப்பாரு அதையே படிச்சிட்டிருக்க.. அதில அப்படி என்னதான் இருக்கோ..? நான் சீரியல் பார்த்தா மட்டும் கிண்டல் பண்றே?”. சின்ன, சின்ன விஷயங்களில் எல்லாம் அழகாக வேலை பார்த்திருக்கிறார்கள். கேனான் 7டியில் எடுத்திருக்கிறார்கள். அள்ளூம் விஷுவல்கள். மணிகண்டனிடமிருந்து முழு நீள திரைப்படம் எப்போ வரும் என்கிற ஆவலை கிளப்பிவிட்டுவிட்டார். வாழ்த்துக்கள் மணிகண்டன்.
################################################
Aug 28, 2011
குறும்படம் - Zero கிலோமீட்டர்
கலைஞர் டிவி நாளைய இயக்குனர்கள் நிகழ்ச்சியில் மூன்றாவது பரிசு பெற்ற ரவிக்குமாரின் படமிது. இதுதான் பைனல்சுக்கான படமும் கூட. கொஞ்சம் பேண்டஸியான சப்ஜெக்ட். படத்தின் ஆரம்பத்தில் இருக்கும் ஜோர் முடிவு வரை தொடர்ந்தது ஜோரான விஷயம். கொஞ்சம் முயற்சி செய்திருந்தால் இன்னும் சுவாரஸ்யமான படமாய் அமைந்து முந்தைய இடங்களில் இடம் பெற்றிருக்கும். வாழ்த்துகள் ரவிகுமார்.
Aug 27, 2011
யுவன் யுவதி
முப்பத்தியைந்து லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கிய அன்பு வாசக நெஞ்சங்களுக்கும், சக பதிவர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள். சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
நினைத்தாலே இனிக்கும் பட இயக்குனர் ஜி.என்.ஆர். குமரவேல் இயக்கியுள்ள படம். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கதை வசனம் எழுதிய படம் எனபது வேறு ஒரு ஆர்வத்தை தூண்டியிருந்தது எனக்கு. நிச்சயம் ஒரு வித்யாசமான கதையை அர்பன் பின்னணியில் அளித்திருப்பார்கள் என்ற என் எதிர்பார்ப்பை திருப்திபடுத்தினார்களா? என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
நினைத்தாலே இனிக்கும் பட இயக்குனர் ஜி.என்.ஆர். குமரவேல் இயக்கியுள்ள படம். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கதை வசனம் எழுதிய படம் எனபது வேறு ஒரு ஆர்வத்தை தூண்டியிருந்தது எனக்கு. நிச்சயம் ஒரு வித்யாசமான கதையை அர்பன் பின்னணியில் அளித்திருப்பார்கள் என்ற என் எதிர்பார்ப்பை திருப்திபடுத்தினார்களா? என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
Aug 26, 2011
மங்காத்தாவின் ஆட்டம் - சினிமா வியாபாரம்.
எந்த நேரத்தில் மங்காத்தா என்று சூதாட்டப் பெயரை வைத்தார்களோ? ஒரே ஆட்டமாய்தான் இருக்கிறது. மங்காத்தாவை ஆளாளுக்கு கை மாற்றி விட்ட குழப்பம் ஒரு வழியாய் முடிந்து மீண்டும் சன்னிடமே வந்துவிட்டது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதன் பின்னணியில் இருக்கும் விஷயமே வேறு. முதலில் மங்காத்தா படத்தை துரை தயாநிதியே வெளியிட நினைத்து தியேட்டர்களை புக் செய்ய முனைந்த போது துரை தயாநிதியின் முந்தைய படங்களான, வா குவாட்டர் கட்டிங், அழகர்சாமியின் குதிரை போன்ற படங்களினால் அடைந்த நஷ்டத்தை சரிகட்டினால்தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று தியேட்டர் அதிபர்கள் முடிவெடுத்திருந்தார்கள்.
Aug 25, 2011
சாப்பாட்டுக்கடை - ஆரோமா
இரண்டு பேர் அஞ்சு பரோட்டா, இரண்டு சப்பாத்தி, ஆலுமட்டர், காலிப்ளவர் சப்ஜி சாப்பிட்டு மொத்த பில் 49 ரூபாய் என்றால் நம்புவீர்களா..?. என்ன பகல் கனவு கண்டீர்களா? என்று கேட்பவர்கள் ஒரு நடை நம்ம கோடம்பாக்கம் ரோடு, மீனாட்சி காலேஜுக்கு முன்னால் ஒரு சின்னக் கடை ஆரோமா என்ற இந்தக் கடைக்கு ஒரு நடை போய் வாருங்கள். அவ்வளவு அருமையான சப்பாத்திகள்.
சுடச்சுட..
Aug 22, 2011
கொத்து பரோட்டா- 22/08/11
ஜப்பானில் சுமார் 350 கோடி ரூபாய் பணம் மக்களிடையே கிடைத்திருக்கிறது. அதை பத்திரமாய் அவர்கள் போலீஸிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். எப்படி கிடைத்தது என்று கேட்கிறீர்களா? பூகம்பத்தின் போது பல லட்சம் பேர்களின் வீடுகள் நாசமடைந்து அழிந்து போனது. அதை சீரமைக்கும் போது அந்ததந்த வீடுகளில் கிடைத்த பணம் எல்லாவற்றையும் அந்நாட்டு மக்கள் போலீஸார் வசம் ஓப்படைத்தனர். இதைத் தவிர, நகைகள், விலையுர்ந்த பொருட்களும் உண்டு. விபத்தில் அடிபட்டு கிடக்கும் ஆட்களிடம் உயிரை காப்பாற்றுவதற்கு பதிலாய் அவர்களிடமிருக்கும் உடைமைகளை அள்ளிக் கொண்டு போகும் போலீசும், மக்களும் உள்ள நம் நாட்டில் இது ஒரு ஆச்சர்யமான, அதிசயமான விஷயமே.
###########################################
###########################################
Aug 21, 2011
குறும்படம் - பண்ணையாரும் பத்மினியும்
சமீபத்தில் பார்த்த அருமையான குறும்படம் இது. மேக்கிங்கில் ஆகட்டும், டெக்னிக்கலாய் ஆகட்டும் அசத்தியிருந்த படம். சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு ஒரு தேர்ந்த திரைப்பட ஒளிப்பதிவாளரின் கைவண்ணம் போல் மிளிர்கிறது. தேனி முருகனின் நடிப்பும், பின்னணியிசையும், மிக இயல்பாய் மனசுக்குள் பூக்கும் சிரிப்பை வரவழைக்கும் வசனங்களும் இப்படத்திற்கு மிகப் பெரிய பலம். நிச்சயம் ஒரு ஃபீல் குட் குறும்படம். படத்தை இயக்கிய எஸ்.யு.அருண்குமாருக்கு வாழ்த்துக்கள்.
Aug 20, 2011
Aug 19, 2011
சாப்பாட்டுக்கடை - மோதி மஹால்
Aug 17, 2011
Aug 16, 2011
Aug 15, 2011
கொத்து பரோட்டா – 15/08/11
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
#######################################
Aug 14, 2011
குறும்படம் - சட்டென்று மாறுது வானிலை.
கொஞம் யூ ட்யூபில் தேடிக் கொண்டிருந்த போது கிடைத்த லிங்க் இது. இனிது இனிது ஆதித் நடித்திருந்தார். எனக்கு இவரின் நடிப்பு பிடிக்கும். விஜய் டிவியில் காதலர் தினத்தை ஒட்டி ஒளிபரப்பப்பட்ட குறும்படம். சின்னச்சின்ன நிகழ்வுகளுடன், தெரிந்த விஷயமானாலும் சுவாரஸ்யமாய் சொல்லியிருந்தார்கள். இயக்குனர் ஸ்ரீநிவாஸ் கவிநயத்தின் எக்ஸிக்யூஷன் இன்னும் கொஞ்சம் ஷார்ப்பாக இருந்திருக்கலாம். அல்லது விஜய் டிவியின் ஸ்லாட்டுக்காக கொஞ்சம் இழுத்து சொல்ல முயற்சித்திருப்பதாகக் கூட இருக்கலாம். அதனால் காதலிக்கும் அவனுக்குமான ஊடல் காட்சிகளில் ரப்பர் ஆகியிருக்கிறதை தவிர்க்க முடியவில்லை. மொத்தத்தில் சுவாரஸ்யமான குறும்படம்.
http://www.youtube.com/watch?v=-lbvQ1q9S3w&feature=fvwrel
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Aug 13, 2011
Aug 12, 2011
Aug 11, 2011
Rise of the Planet of the Apes
ரொம்ப நாளாயிற்று இம்மாதிரியான ஒரு பக்கா ஆங்கில மசாலா எண்டர்டெயினரை. போன வாரம் பார்த்த ஏலியன் & கவ்பாய் கொடுத்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் எந்த ஆங்கில பெரிய பட்ஜெட் படமாயிருந்தாலும் ஒரு முறைக்கு பத்து முறை யோசித்துதான் போக வேண்டும் என்று முடிவெடுத்திருந்தேன். அதையும் மீறி இப்படம் என்னை உள்ளிழுத்துவிட்டது. இத்தனைக்கும் முதல் பாகத்தை நான் பார்த்ததில்லை.
Aug 9, 2011
தமிழ் சினிமா ரிப்போர்ட்-ஜூலை 2011
ஜூன் மாதத்தின் மந்த நிலை இந்த மாதமும் தொடருமோ என்று ஒரு எண்ணம் எனக்குள் ஓடிக் கொண்டுதானிருந்தது. இந்த மாதம் அரும்பு மீசை குறும்பு பார்வை, இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரனின் தேநீர் விடுதி, வேங்கை, விக்ரமின் தெய்வதிருமகள், ராகவேந்திரா லாரன்ஸின் காஞ்சனா, களஞ்சியத்தின் கருங்காலி, கெளதமின் உதவியாளர், பெண் இயக்குனர் அஞ்சனா இயக்கிய வெப்பம். ஆகியவை குறிப்பிடத்தக்க படங்களாய் வெளியாகின.
போட்டாபோட்டி-50/50
ரொம்ப நாளாக வெளிவர காத்திருந்தது இந்தப் படம். சென்ற வருடமே ரிலீசாக வேண்டியது. இந்தப் படத்தின் பப்ளிசிட்டிக்காக லோக்கல் டீம்களோடு ஒரு 20/20 மேட்ச் எல்லாம் வைத்து தூள் பரத்தினார்கள். என்ன காரணமோ தெரியவில்லை. படம் வெளிவரவிலலை. அதை விடுங்க அதான் இப்ப வந்திருசே எப்படி இருக்குன்னு கேக்குறீங்களா? இருங்க சொல்றேன்.
Aug 8, 2011
கொத்து பரோட்டா – 08/08/11
காட்சிப்பிழை பத்திரிக்கைக்காக தெய்வதிருமகள் படத்தை பற்றிய ஒரு கலந்துரையாடல் நிகழ்வுக்கு என்னை அழைத்திருந்தார் அதன் ஆசிரியர் திர். ராஜன் குறை. ஜீவாவின் தேசிய விருது பெற்ற புத்தகத்தை பற்றி பேசிய போது பழக்கம். ராஜன் குறை, மற்றும் இன்னும் பலர் வந்திருந்தார்கள். பேச்சு படு தீவிரமாய் போயிற்று. சினிமாவை ஆத்மார்த்தமாய் நேசிக்கும் நண்பர்கள். நடிப்பில் ஆரம்பித்து திரைக்கதைவரை பல விஷயங்களை பேசினோம். இந்த கலந்துரையாடல் அச்சில் வரும் போது எப்படியிருக்கும் என்று எனக்கு ஆவலாய் இருக்கிறது. ஏனென்றால் நாங்கள் பேசிய பல விஷயங்கள் ஆப்த ரெக்கார்டாகத்தான் வைக்க முடியும். வசந்தபாலனின் உதவியாளர் ஒருவரும் வந்திருந்தார். மிக அளவாக பேசி எல்லோரையும் கவனித்தார். நடிப்பைப் பற்றி பேசும் போது நண்பர் ஒருவர் அந்த வெஸ்கியின் தியரி, ப்ராக்டிகல் என்றெல்லாம் சொன்னார்கள். நமக்கு விஸ்கியை தவிர வேறேதும் தெரியாததால் எஸ்கேப். கூத்துப்பட்டறை முத்துசாமியின் மகன் நடேசன் வந்திருந்தார். படு கேஷுவலாய் பேசினார். எனக்கு கூத்துப்பட்டறை பற்றிய மாற்றுக் கருத்து உண்டென சொன்னேன். எனக்கே இருக்கு உங்களுக்கு இருக்காதா? என்று கேட்டு ஆர்பாட்டமாய் சிரித்தார். காட்சிப்பிழையின் கலந்துரையாடலை அச்சில் பார்க்க ஆவலாயிருக்கிறேன். என்னையும் உங்களுடன் இணைத்து கொண்டதற்கு நன்றி ராஜன் குறை அவர்களே.
###################################
Aug 7, 2011
குறும்படம் - முண்டாசுப்பட்டி
திருப்பூர் ராம் என்கிற இளைஞரை முதலில் பார்த்த போது எதுவும் பேசமலேயிருந்தார். பின்பு இரண்டே இரண்டு நடிகர்களை வைத்து பின்னணியெல்லாம் 2டியில் வரைந்து ஒரு குறும்படத்தை எடுத்திருந்தார். சின்ன நாட் தான் ஆனால் சுவாரஸ்யமான, நுணுக்கமான 2டி வரைகலையில் அசத்தியிருந்தார். அதன் பின்பு சில கதைகளை பற்றி போனில் பேசுவார். இவரின் கலைஞர் டிவி பயணம் மிக அருமையாய் ஒவ்வொரு கட்டத்திலும் மெருகேறிக் கொண்டே வந்தது. அதில் உச்சம் என இந்த குறும்படத்தை சொல்ல முடியும். 1980 நடக்கும் கதை. ஃபீரியட் குறும்படம். அதிலும் வழக்கமாய் நகைச்சுவை என டயலாக்கால் கொல்லாமல், சின்னச் சின்ன பாடிலேங்குவேஜில், முக்கியமாய் நடிகர் ஒருவரை தங்களுடய பொணம் மாடலாய் மாற்ற, ஒரு சின்ன பிஜிஎம்மில் காட்டும் மாண்டேஜுகள் அட்டகாசம். இவர் எடுத்த படங்களிலே இந்த முண்டாசுப்பட்டி முதன்மையான படம். நல்ல எதிர்காலம் இருக்கிறது இவருக்கு. இப்படத்தின் ஒளிப்பதிவு முக்கியமாய் குறிப்பிடத்தக்கது.
Aug 6, 2011
டூ
இந்த படத்தின் விளம்பர டிசைனைப் பார்த்தவுடன் படத்தைப் பற்றிய ஒரு ஆர்வம் உண்டானது. இதன் ஆடியோ ரிலீசின் போது அவர்கள் அந்த இன்விடேஷனில் காட்டிய வித்யாசங்கள் மேலும் ஆர்வத்தை கூட்டின. அவ்வளவு டீடெயிலிங். டி.ஆர் பாடிய “டூடா” என்கிற பாடல் வேறு ஏற்கனவே ஏறியிருந்த எதிர்பார்ப்பை இன்னும் தூக்கி வைத்திருக்க.. அத்துனை எதிர்பார்ப்பையும் திருப்தி செய்ததா டூ?
Aug 4, 2011
சினிமா வியாபாரம் – கதை திருட்டு.
இன்றைய இணைய உலகம் முழுவதும் எல்லோராலும் விவாதிக்கப்பட்டு, வசைபாடப்பட்டு, கற்பனை வறட்சி, கருத்து திருட்டு, என்றெல்லாம் காரி உமிழ்ந்தும்.. அதனால் என்ன? நீங்கள் எல்லாம் ஒலக அறிவாளிகள். நாங்க லோக்கல் எங்களுக்குத்தான் இம்மாதிரியான விஷயங்கள். நல்லாருந்தா ஓகேன்னு ஒரு கோஷ்டியும், அவன் இதை திருடினான். இவன் இதை திருடினான்னு ஆளாளுக்கு புலம்பிட்டிருக்கிற நேரத்தில ஒலகத்தில எத்தன இடங்களில் இது பற்றி பேசப்பட்டுக் கொண்டிருக்கிறதோ என்று தெரியவில்லை? ஆனால் ஒரு வெற்றி அதன் ரிஷிமூலத்தை, நதிமூலத்தை ஆராய சொல்கிறது. இதே ஆராய்ச்சி செய்யும் ஆர்வத்தை ஒரு தோல்வி கொடுத்திருக்குமா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அப்படித்தான் இன்றைய தெய்வதிருமகள் பட விஷயமும்.
Aug 3, 2011
Aug 2, 2011
கேஸினோவை வாங்கியது சத்யம்
தமிழ் நாட்டின் பழம் பெரும் திரையரங்குகளில் ஒன்றான கேஸினோ தியேட்டரை நான்கு மாதங்களுக்கு முன் சத்யம் நிர்வாகம் டேக் ஓவர் செய்துவிட்டது. கடந்த சில மாதங்களாகவே அங்கு வரும் தெலுங்கு படங்கள் உட்லான்ஸில் வெளியாகிக் கொண்டிருக்க, தமிழ் வர்ஷன் 3டி ஆங்கில படங்கள் அங்கே வர ஆரம்பித்தது. 3டி படங்களுக்காக சில்வர் ஸ்கிரீன் போடப்பட்டுள்ளது. கீழேயிருக்கும் சீட்டுக்களும் செப்பனிடப்படுகிறது. விரைவில் பழமையும், புதுமையும் கலந்த கேஸினோவை காணலாம் என்று நம்பலாம்.
எஸ்.கே.
Aug 1, 2011
கொத்து பரோட்டா - 01/08/11
நேற்று முந்தினம் என் பிறந்தநாள். முதல் நாள் ராத்திரியிலிருந்தே எஸ்.எம்.எஸ் மூலமாகவும், தொலைபேசியிலும், ஃபேஸ்புக்கிலும், ஜி+லும், பஸ்ஸிலுமாய் திகட்ட, திகட்ட வாழ்த்திய அத்துனை நல் உள்ளங்களுக்கும் என் நன்றிகள். என் பிறந்தநாள் அன்றே அண்ணன் அப்துல்லா, பட்டுக்கோட்டைபிரபாகருக்கும் பிறந்த நாள் என்று அறியும் போது மேலும் சந்தோஷமாயிருந்தது. அவர்களுக்கு இந்த பதிவின் மூலம் மீண்டும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
######################################################
Subscribe to:
Posts (Atom)