கொத்து பரோட்டா – 15/08/11


அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
myphoto வெட்டுப்புலி நாவல் விருது பெற்றதையொட்டி, மனுஷ்யபுத்திரன், எழுத்தாளர் பாரதி மணி, முனைவர் குருநாதன் அவர்களுடன் என்னையும் மேடையேற்றி பேச சொல்லியிருந்தார்கள். நன்றி வேடியப்பன். சென்ற வருடம் வரை  இவர்களை பேசுவதை பார்வையாளர் வரிசையில் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்தவன். இன்று அவர்களுடன் மேடையில் என்பது உங்களால் தான் வந்தது. என் உயர்வுக்கு துணையாய் உள்ள அத்துனை நல் இதயங்களுக்கும் என் இதய்ம் கனிந்த நன்றிகள். மனுஷ்யபுத்திரனின் பேச்சு மிக சுவாரஸ்யமாய் இருந்தது. முக்கியமாய் பெரிய வெகு ஜன இதழ்களில் எழுதாமல், புத்தகத்தைப் பற்றி எந்தவிதமான விளம்பரமும் இல்லாமல், சுய பப்ளிசிட்டியில்லாமல் ஒரு நாவல் இரண்டாவது பதிப்பு வந்திருப்பது தமிழ்மகனின் எழுத்துக்கு கிடைத்த வெற்றி என்றார்.(உள்குத்து ஏதாவது இருக்குதோ?). நிச்சயமாய் படித்தவர்களுக்கு தெரியும். இம்மாதிரியான நாவல் ஆங்கிலத்தில் வந்திருந்தால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி பெஸ்ட் செல்லர் ஆகியிருக்கும். தமிழ்மகனுக்கும், மனுஷ்யபுத்திரனுக்கும் நல்ல வருமானம் கிடைத்திருக்கும். தமிழில் எழுதியதால் இப்போதுதான் இரண்டாவது பதிப்பு வருகிறது. ம்ஹும்.
#######################################


கேட்டால் கிடைக்கும் ASK கேட்டால் கிடைக்கும் என்கிற தலைப்பில் நான் எழுதிய கட்டுரைக்கு பெரிய ஆதரவு கொடுத்தீர்கள். அது மட்டுமில்லாமல் இதை ஒரு இயக்கமாய் நாம் ஏன் எடுத்து நடத்தக் கூடாது என்று கேட்டிருந்தேன் அதற்கு நிறைய வாசகர்கள் தனி மெயிலில் ஆதரவு தெரிவித்திருந்தார்கள். அதன் தொடர்ச்சியாய் நண்பர் சுரேகாவும் என்னை போன்றே தனக்கான உரிமையை விட்டுக் கொடுக்காதவர். அவருக்கு சமீபத்தில் நடத்த ஒரு நிகழ்வைப் பற்றி எழுதியிருந்தார். நாங்கள் இருவருமே ஒத்த கருத்துடையவர்கள். ஏன் நாம் இருவரும் சேர்ந்து இம்மாதிரியான இயக்கம் ஒன்றை தொடங்கக்கூடாது. அட்லீஸ்ட் இணையம் மூலமாய் ஒரு குழுவை அமைத்தால் என்ன? என்று யோசித்து ஃபேஸ்புக்கில் ஒரு கம்யூனிட்டியை தொடங்கியிருக்கிறோம். அதன் பெயர் கேட்டால் கிடைக்கும் ASK. இதில் இணைய விரும்புபவர்கள், பேஸ்புக்கில் அக்கவுண்ட் உள்ளவர்கள்  http://www.facebook.com/groups/249616055063292/ இந்த சுட்டியை சுட்டி உங்களை இணைத்துக் கொள்ளலாம். உங்கள் ஆதரவு எங்களுக்கு மிகவும் தேவை. நன்றி
################################################
நான் எழுதும் விமர்சனங்களுக்கு பல விதமான ரெஸ்பான்ஸுகள் அப்படத்தை இயக்கிய இயக்குனர்களிடமிருந்து, நடிகர், நடிகைகளிடமிருந்தும், டெக்னீஷியன்களிடமிருந்தும் வரும். சில சமயம் எழுதாத போது போன் செய்தும் கேட்பார்கள். சில படங்களின் காட்டமான விமர்சனத்தை போலவே காட்டமாய் பேசியதும் உண்டு. பின்னர் வெகு நேர கலந்துரையாடலுக்கு பிறகு புரிந்து கொள்வார்கள். பின்பு அவர்களின் நெருங்கிய நண்பனாக ஆகிவிடும் அளவிற்கு  நெருக்கமும் வளர்ந்திருக்கிறது.  அப்படி ஒரு இயக்குனர் சென்ற வாரம் ஃபேஸ்புக் இணையளதள வாசகர்களுக்காக ஒரு சிறப்பு காட்சியை ஏற்பாடு செய்திருந்தார். அப்படத்திற்கு நான் விமர்சனம் எழுதினேன். என்னைத் தவிர படம் பார்த்த ஒருவர் கூட விமர்சனம் செய்யவில்லை. காலையிலேயே கோபமாய் பேசினார். நான் எப்படி எழுத வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். எனக்கு என்ன அறிவில்லை என்று சொன்னார். நான் ஒரு தயாரிப்பாளரின் அலுவலகத்தில் இருப்பதை சொல்லி பிறகு பேசுகிறேன் என்றேன். பிறகு நான் பேச அழைத்த போது எடுக்கவில்லை. நான் அவருக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினேன். Thanks for your review about my___________ review, and about me. என்று. பின்பு கூப்பிட்டார். பேசினேன். என் மேல் வைக்கும் விமர்சனத்தை நான் ஏற்றுக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன். I expect the same too Nanba.
##############################################
அழைப்பிதழ்
நம் சக பதிவர் ஹரீஷ் மற்றும் ஹரி ஷங்கர் சேர்ந்து இயக்கும் அம்புலி 3டி படத்தின்  பாடல் வெளியீட்டு விழா வருகிற 19ஆம் தேதி, காமராஜர் அரங்கத்தில் மாலை 6 மணிக்கு நடைபெற இருக்கிறது. இப்படம் தமிழின் முதல் ஸ்டீரியோபோனிக் 3டி படம். பார்த்திபன் நடித்திருக்கும் இந்த த்ரில்லர் படத்தை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இவர்களிம் முதல் பாயிண்டாப் வீயு தமிழ் திரைப்படமான ஓர் இரவு தமிழ் சினிமாவின் குறிபிடத்தகுந்த முயற்சி. விழாவில் கலந்து சிறப்பிக்க அனைவரையும் அழைத்திருக்கிறார். நம் சக பதிவரின் திரைப்பட முயற்சியை ஆதரிப்போம் வாழ்த்துவோம் வாருங்கள். ஒரு புத்தகம் சைசுக்கு இன்விடேஷனிலேயே 3டியில் கலக்கியிருக்கிறார்கள். மேலும் 3டியிலேயே பல ஸ்டில்களை அவர்களது இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள். 3டி கண்ணாடியுடன் பார்ப்பதற்கு.  www.ambuli3d.com
#########################################
தத்துவம் கடவுள் ஒவ்வொரு பறவைக்குமான புழுக்களை படைத்திருக்கிறான். ஆனால் அதனுடய கூட்டுக்குள் கொண்டு வந்து போடுவதில்லை. ஒரு சுவீடிஷ் பழமொழி
நீங்கள் யாருக்காவது ஒரு சிறந்த பரிசை கொடுக்க விரும்பினால் உங்களது நேரத்தை, கவனிப்பை, அவர்களுக்கான முக்யத்துவத்தை கொடுங்கள். உங்கள் மேல் அன்பு வைத்திருக்கும் உள்ளம் இதை விட பெரிதாய் எதையும் பெரிதாய் எதிர்பார்க்காது.

உன் புன்னகைக்கு பின்னால் இருக்கும் சோகத்தை, உன் அன்புக்கு பின்னால் இருக்கும் கோபத்தை, உன் மெளனத்தின் பின்னாலிருக்கும் காரணம் ஆகிய மூன்றை அறிய முயல்பவனை நீ நம்பலாம்.
###########################################
செவிக்கினிமை
இந்த வார ஹிட் அஜித்தின் மங்காத்தாதான். பாடல்கள் எல்லாமே மாஸ் மக்களுக்கான பாடல்களாய் இருக்கிறது. பல்லேலக்கா, மச்சி ஓப்பன்  த பாட்டில் எல்லாம் பழைய ராஜாவின் ரீமிக்ஸாகத்தான் இருக்கு. விளையாடு மங்காத்தாவைவிட, வாடா பின்லேடா தான் இந்த ஆல்பத்தின் சூப்பர் ஹிட் என்று சொல்ல வேண்டும். ஏதோ ஒரு பழைய பாடலின் சாயல் தெரிகிறது. நல்ல ஆர்கெஸ்ட்ரேஷனும், பெர்கூயூஷனும் பாடலை இன்னும் சுவாரஸ்யபடுத்துகிறது. மசாலா ஆல்பம்.
############################################
ஷம்மிகபூரின் நேற்று மறைந்தார்.  இந்திய சினிமாவின் இளைஞர்களின் குதூகல ஸ்டாராய் வலைய வந்தவர். இவரின் பாடல்கள் இன்றைக்கும் நம்மை துள்ளாட்டம் போடச் செய்யும் பாடல்கள். ராஜ்கபூரின் தம்பியானாலும் ஒரு நாளில் பெரிய லெவலுக்கு வரவில்லை. முதல் படத்தின் தோல்விக்கு பிறகு சுமார் ஏழெட்டு வருடங்களுக்கு பிறகு தான் ஜங்லி மூலமாய்த்தான் பிரபல நடிகர் ஆனார். இவர் இந்தியாவில் இண்டெர்நெட் பயன்படுத்துபவர்களுக்கான சங்கத்தை துவக்கியவர்.அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வோம்.

##########################################
மீண்டும் சன் டிவி தன் விநியோக இறக்கையை விரிக்க தயாராகிறது. சக்ஸேனாவுக்கு பதிலாய் புதிய சி இ ஓ வை நியமித்திருக்கிறார்கள். அநேகமாய் ஜெமினியின் தயாரிப்பான நண்பன் இவர்களது வெளியீடாக இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.
#########################################
ப்ளாஷ்பேக்இந்த பாடலை இப்போது கேட்டாலும் லேசாய் ஆடத் தோன்றும். தெலுங்கு பக்கனிண்டி அம்மாயிலிருந்து, தமிழ் அடுத்த வீட்டு பெண்ணாகி, இந்தி படோசன் ஆகிய படம்.. பிபிஎஸ்ஸின் குரலில் அருமையான பாடல். உங்களுக்காக
####################################################
மை கார்னர்

#####################################################
அடல்ட் கார்னர் அவள்:- டாக்டர், ஒவ்வொருதடவையும் நான் டேட்டிங் போகும்போது அழாகான பசங்களை பாத்தா என்னையும் அறியாமா அவங்களோட செக்ஸ் பண்ணிட்றேன் டாக்டர்..அதை நினைச்சா மனசுக்கு கஷ்டமாவும், ரொம்ப வருத்தமாவும் இருக்கு டாக்டர்...
டாக்டர்:- உங்க மனசை கட்டுபடுத்துற ட்ரீட்மென்ட் கொடுத்தா போதும், டேட்டிங் பண்ணும்போது செக்ஸ் பண்ண மாட்டீங்க...
அவள்:- ஐயோ டாக்டர்..நான் உங்ககிட்ட வந்தது அதுக்கு இல்ல..செக்ஸ் பண்ணதுக்கு அப்புறம் மனசு கஷ்டப்படக்கூடாது... வருத்தப்படக்கூடாது... அதுக்கு ஏதாச்சும் வைத்தியம் பண்ணுங்க...
டாக்டர்:- ??????????????????????

சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்


Comments

தலைவரே, நம்ம மேட்டர விட்டுட்டீங்களே ?!
Kumar said…
In “Chake de India”, when everyone introduce themselves with their state name. Oruthi matum Vidhya Sharma India nu soluva. I think that’s day we can pride our Independence.
Thought this would interest you.

Why British government left us in 1947?
http://kumkumaa.blogspot.com/2011/08/why-british-government-left-us-in-1947.html
ஜி.. கேட்டால் கிடைக்கும்க்கு இந்தப்பதிவுக்கப்புறம் நல்ல ஆதரவு கிடைத்திருக்கிறது. மிக்க நன்றி!!

அடுத்தகட்டமாக சில விஷயங்களை முன்னெடுத்துச்செய்யணும்.
அதென்ன..

நீங்களும், தங்கவேலுவும் ஒரே நேரத்தில் ஆர்மோனியம் வச்சிருக்கீங்க? :)
King Vj said…
Thalaivarey.. Padoson came in 1968.. AVP came in 1960.. Wiki apdithaan solludhu... http://en.wikipedia.org/wiki/Padosan
Rafeek said…
சன் பிக்சர்ஸ் பத்திய உங்கள் guess ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது :)
balaji said…
கேபிள்,
நான் உங்கள் வலைபூவை தொடர்ந்து வாசித்து வருகிறேன்.

அவன் இவன் விமர்சனத்தின் வாசகர்களின் கருத்துக்கு "அவ்வ்வ்வவ்வ்வ்வவ் என்றும் நான் அப்படித்தான் எழுதுவேன் வேணும்னா வா" சொன்ன நீங்க, இப்போ ஏதோ இயக்குனருக்கு "என் மேல் வைக்கும் விமர்சனத்தை நான் ஏற்றுக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன். I expect the same too Nanba." சொல்றீங்க. ஏன் வாசகர்களுக்கு கொடுத்த அதே ரெஸ்பான்ஸ்ஐ அந்த இயக்குனருக்கும் கொடுக்க வேண்டியதுதானே ?

நன்றி,
பாலாஜி
அப்படி கொடுத்ததை தான் டீசெண்டாய் இங்கு சொல்லியிருக்கிறேன் பாலாஜி.
aotspr said…
நல்ல விமர்சனம்.
Thanks,
Priya
http://www.ezdrivingtest.com
Anonymous said…
ASK பற்றி இன்னும் விரிவாக சொல்லியிருக்கலாம்... ஃபேஸ் புக் பார்த்து தெரிந்துகொள்கிறேன்..
நீங்கள் இன்னும் அதிகம் பிரபலம் ஆக வாழ்த்துக்கள்
priya.. என்ன எழுதியிருக்கிறேன் என்றே படிக்காமல் பின்னூட்டம் இட்டிருக்கிறீர்கள். இது விமர்சனமல்ல.. உங்க ப்ளாக்கை விளம்பரப்படுத்த ரொம்பத்தான்.. ம்ஹும்
Vediyappan M said…
15/08/2011 கொத்துபரோட்டாவில் நிகழ்வு டிஸ்கவரி புக்பேலஸ்-ல் நடந்தது என்று சொல்லாமல் எனக்கு மட்டும் நன்றி என்று சொல்லிவிட்டீர்களே ( இதில் ஏதும் உள்குத்து உண்டா )
veediyappan என்று சொன்னால் டிஸ்கவரிபுக் பேலஸ் என்றும் டிஸ்கவரி புக் பேலஸ் என்று சொன்னால் அது வேடியப்பனை குறிக்கும் என்று ஒலக மக்கள் அனைவருக்கும் தெரியுமே வேடியபன்.:))

Popular posts from this blog

சாப்பாட்டுக்கடை - டி.கே. மாப்பிள்ளை மெஸ். -77km

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.