Thottal Thodarum

Aug 29, 2011

கொத்து பரோட்டா -29/08/11

முப்பத்தியைந்து லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கிய அன்பு வாசக நெஞ்சங்களுக்கும், சக பதிவர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள். சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
மீண்டும் ஒரு புன்னகை
”Wind" குறும்படத்தை அடுத்து ஒரு அரை மணி நேரக் குறும்படமான “மீண்டும் ஒரு புன்னகை” என்கிற படத்தை எடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர், மணிகண்டன். சமீபத்தில் இவ்வளவு மெச்சூர்டான, அழகான குறும்படத்தை பார்க்கவில்லை. ஃபீல் குட் குறும்படம். நிச்சயம் வாழ்க்கையின் நிகழ்வில் நடந்து கொண்டிருக்கும் விஷயம். அருமையாய் கையாண்டிருக்கிறார்.  சின்ன சின்ன ரியாக்‌ஷன்களில், பின்னணியில் வரும் சவுண்ட் ஓவர்லாப்பில் நிறைய மெனக்கெட்டிருக்கிறார்கள். நடிகர்களின் பங்களிப்பை சரியான வாங்கியிருக்கிறார். ஒரு குட்டி பாட்டு வருகிறது. அதுவும் ச்ச்சோ..ச்வீட்.ரகுராம் இசையமைத்திருக்கிறார். ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்திருக்கிறார். சின்னச் சின்னதாய் கோணம் மாற்றி எடிட் செய்திருக்கும் விதம் சுவாரஸ்ய மூட்டுகிறது. இனிது இனிது, தேநீர் விடுதி திரைப்படங்களில் நடித்த அதித் தான் கதாநாயகன். சினிமாவை விட குறும்படங்கள் மனிதர் கலக்குகிறார். நல்ல வாய்ப்புத்தான் அமையவில்லை. நிச்சயம் ஒரு நல்ல ஸ்மார்ட் யங் நடிக்கக்கூடிய ஹீரோ இருக்கிறார். நாளைய இயக்குனர் வெற்றியாளர் நளனும், அரவிந்த் மனோவும் வசனமெழுதியிருக்கிறார்கள். செம வசனங்கள். அரை மணி நேர படத்தில் தொடர்ந்து நாலைந்து இடங்களில் கைதட்டல் கிடைக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.”என்ன பண்றே?” கதாநாயகன் புத்தகத்தை காட்ட, “எப்பப்பாரு அதையே படிச்சிட்டிருக்க.. அதில அப்படி என்னதான் இருக்கோ..? நான் சீரியல் பார்த்தா மட்டும் கிண்டல் பண்றே?”.  சின்ன, சின்ன விஷயங்களில் எல்லாம் அழகாக வேலை பார்த்திருக்கிறார்கள். கேனான் 7டியில் எடுத்திருக்கிறார்கள். அள்ளூம் விஷுவல்கள். மணிகண்டனிடமிருந்து முழு நீள திரைப்படம் எப்போ வரும் என்கிற ஆவலை கிளப்பிவிட்டுவிட்டார். வாழ்த்துக்கள் மணிகண்டன்.
################################################


யூத் பதிவர் சந்திப்பு
வருகிற 4ஆம் தேதி மாலை டிஸ்கவரி புக் பேலஸில், பதிவுலகின் யூத்துகளாகிய நாங்கள் ஒரு பதிவர் சந்திப்பை நடத்தவிருக்கிறோம் யூத்துகளாகிய அனைவரும் வருக. மேலும் தகவலுக்கு இங்கே கிளிக்கவும்
#######################################################
கறை நல்லது
பிரபல ஜோதிடர் காளிபட்டி சிங்காரம் கணிப்பு. ராஜிவ் கொலை வழக்கில் உள்ளவர்களை தூக்கிலிட்டால் தமிழக மக்களுக்கு கோவலன் குற்றம் வந்து சேரும். பெண்கள் அவர்களின் மாங்கல்யம் காக்க மதுரை மீனாட்சி அம்மன் தாயை மனதில் வைத்து தூக்கை நிறுத்துமாறு சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு திரு விளக்கு ஏற்றி தினமும் ஆவணி 22 வரை வழிபட வேண்டும். அப்போதுதான் உச்சி மாகாளியான கண்ணகியின் கோபம் இதன் மூலம் தீரும் என்று ஃபேஸ்புக்கில் கொடுத்திருக்கிறார். எதையாவது சொல்லி இப்படியெல்லாம் மூட நம்பிக்கையை வளர்க்கிறார்கள். ஒரு நண்பர் இதை பார்த்துவிட்டு சொன்னார். மூடநம்பிக்கையானாலும் ‘கறை நல்லது” போல இதுவும் நல்லதுதான் என்றார்.
###########################################
நன்றியும் வேண்டுகோளும்
குறும்பட விழாவுக்கு வந்திருந்த நிறைய நண்பர்கள் சினிமா வியாபாரம் புத்தகத்தை படித்திருந்தார்கள். ஒவ்வொருவரும் அதை பற்றி பாராட்டியது மிகவும் சந்தோஷமாய் இருந்தது. நிச்சயம் வளரும் உதவி இயக்குனர்கள், புதிய தயாரிப்பாளர்கள் அனைவரும் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய புத்தகம் என்பது என் எண்ணம். இயக்குனர் மீரா கதிரவனும், இன்னொரு இயக்குனரும் கூப்பிட்டு பாராட்டினார்கள். நன்றி நண்பர்களே..

குறும்பட இயக்குனர்களுக்கு ஒர் வேண்டுகோள். நிறைய நண்பர்கள் என் சிறுகதைகளை படித்துவிட்டு அக்கதைகளை குறும்படங்களாக எடுப்பதற்கு கேட்கிறார்கள். சில பேர் அதை கேட்காமல் எடுக்கிறார்கள். தயவு செய்து என்னுடய அனுமதியுடன் எடுத்தால் தன்யனாவேன். உங்களது நன்மைக்குத்தான் சொல்கிறேன். அதே கதையை வேறு யாருக்காவது நான் எடுக்க சொல்லியிருந்தால் ஒரே கதையை நீங்கள் எடுத்து பணமும், நேரமும் விரயமாகிவிட வாய்ப்புண்டு. அப்படித்தான் நான் எழுதிய முத்தம் கதையை நானே படமாக்க தயாராகிக் கொண்டிருக்கும் போது, குறும்படம் எடுக்கும் குழுவில் உள்ள நண்பர் ஒருவர் சங்கர் நாராயண் என்கிற எழுத்தாளரின் முத்தம் என்கிற கதையைத் தான் எடுக்கப் போகிறோம் என்றார் என்னிடமே.. பின் சொல்லி புரிய வைத்தேன்.
#################################################
இந்த வாரம் படித்தது.
ஏற்கனவே படித்திருந்தாலும் ஏதோ திடீரென தோன்றியது தி.ஜா.வின் மரப்பசுவை படிக்க வேண்டுமென்று. எத்தனை தடவை படித்தாலும் அம்மிணி மனதை விட்டு அகலவே மாட்டேனென்கிறாள். பாலகுமாரனின் எழுத்துக்கு இவர்தான் இன்ஸ்பிரேஷன் என்பதை மீண்டும் மரப்பசுவை படிக்கும் போது உறுதியாயிற்று. அம்மிணி என்னா கேரக்டர்டா..
##################################################
செவிக்கினிமை
நண்பர் இசையமைப்பாளர் பி.பி. பாலாஜியின் இசையில், கரண் நடித்து, நண்பர் சிவாஜி அவர்தம் நண்பர்களூடன் சேர்ந்து தயாரித்த சூரன் திரைப்பட பாட்ல் வெளியீட்டிற்கு போயிருந்தேன்.மூன்று பாடல்களை ஒளிபரப்பினார்கள். எனக்கு கேட்டவுடன் பிடித்தது “அய்யனார் குதிரையிலே:” பாடல்தான். ஹரிணியின் குரலிலும், பெர்க்யூஷனிலும் ஒரு பெப் ஓடிக் கொண்டிருந்தது. இந்த மாமனோட பொண்ணு என்ற டபுள் மீனிங் கானா பாடல் ஒன்றை இயக்குனர் பாலு நாராயணன் எழுதி பாடியிருக்கிறார். வெகுஜனங்களிடம் சேர வாய்ப்பிருக்கும் பாடல் இது.  பாடல்களை கேட்க இங்கே க்ளிக்கவும். நிகழ்ச்சியில் பேரரசு, ஆக்‌ஷன் பட இயக்குனர்களை பத்திரிக்கையாளர்கள் மதிப்பதில்லை எனறதும், ஆக்‌ஷன் படமெடுப்பது எவ்வளவு கஷ்டமென்றும், காதல் படங்களில் நடித்துக் கொண்டிருந்த நடிகரை நல்லவன் வல்லவன் என்று பில்டப் பண்ணி ஏத்தி விட்டு ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்ற எவ்வளவு உழைப்பு உழைக்க வேண்டும் என்பதை ஏ.வெங்கடேஷ் சொன்னதும் நிஜமாகவே மிகவும் உண்மை.
###################################################
சேனல் புதுசு
புதிய தலைமுறை செய்தி சேனல் சுவாரஸ்யமாய் இருக்கிறது. சின்னச் சின்ன நிகழ்வுகளைக் கூட படம் பிடித்துக் காட்டுகிறார்கள். பேரறிவாளன், சாந்தன் தூக்கு தண்டனைக்கு எதிரான விஷயங்களை அருமையாய் கவர் செய்கிறார்கள். செய்தி வாசிப்பவர்களிடம் பல நேரங்களில் தடுமாற்றம் இருக்கிறது. போகப் போக சரியாகிவிடும். ஏதோ ஒரு சார்பு நிலையுள்ள செய்திகளையே பார்த்து பார்த்து சலித்த கண்களுக்கு இந்த சேனல் ப்ரெஷ்ஷாக இருந்தாலும் அதிமுக ஆட்சிக்கு எதிரான செய்திகள் வரும் போதுதான் நம்பிக்கை வரும். இவர்களின் ப்ரொமோ நன்றாக இருக்கிறது. சினிமாட்டிக்காய்.
###################################################
ஜெய்ஹிந்த்
அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதம் முடிந்துவிட்டது. ஏகோபித்த ஆதரவுடன் ஏற்றுக் கொண்டதாக அறிவித்திருக்கிறார்கள். எனக்கென்னவோ இதில் டகால்டி வேலையிருப்பதாக படுகிறது. அடுத்த கூட்டத் தொடருக்கு முன் மீண்டும் உண்ணாவிரதம் இருக்க வேண்டி வந்தாலும் வரலாம். எல்லாரும் நல்லா சாப்ட்டு தயாராவுங்க..
######################################################
இன்னொரு தீக்குளிப்பு. தூக்குதண்டனையை தடுப்பதற்காக தீக்குளித்து செத்திருக்கிறார் செங்கொடி. என்ன ஒரு மடத்தனம்?. அதற்கு தியாகி பட்டம் வேறு கொடுத்து முதல் வருட நினைவு நாள் அன்று விளக்கேற்றுவார்கள். அதற்கு பிறகு?. தவறு செய்தவனுக்கே மரணம் தண்டனையல்ல என்று சொல்லும் போது அதற்காக தற்கொலையை தியாகம் என்று பில்டப் செய்து உணர்ச்சி வசப்படுகிற தமிழுணர்வாதிகளை என்ன செய்ய?. முத்துகுமாரினால் உயிர்தியாகம் மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியதாம்.  ஊர்வலம் போய் வந்ததைவிட என்ன சாதித்துவிட்டார்கள். முத்துக்குமார் இவர்களுக்கு வேண்டுமானால் தமிழர்களுக்காக உயிர் தியாகம் தியாகி என்று பில்டப் செய்து கொண்டு அரசியல் நடத்தலாம்.  அவன் என் சக உதவியாளன். நண்பன். அவனின் தற்கொலை முட்டாள் தனமானது. இதுக்கு என்னை பத்து பேர் திட்டத்தான் செய்வான். ஆனா ஒரு நண்பனோட முட்டாள் தனமான  தற்கொலை எவ்வளவு வலி மிகுந்தது என்று நண்பனுக்குத்தான் தெரியும். உங்களுக்கு புரியாது.
###################################################
ப்ளாஷ்பேக்
மெஹப்பூபா என்கிற படத்தில் வரும்இந்த பாடலை எப்போது கேட்டாலும் கண்ணீர் முட்டும், தொண்டையடைக்கும். கிஷோரின் உருக்கும் குரலும், பாடல் வரிகளில் இருக்கும் ஆழமும் நம்மை கலங்கடிக்கும்.
#############################################################
தத்துவம்

வாழ்க்கையை கொண்டாட வேண்டுமென்றால் இன்றுதான் உன் வாழ்நாளின் முதல் நாள் என்று நினைத்துக் கொள். வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாயானால் இது தான் உன் வாழ்நாளின் கடைசி நாள் என்று நினைத்து செயல்படு.
##################################################
அடல்ட் கார்னர்
ஒரு டாக்டர் ரொம்ப நேரம் ஹாஸ்பிட்டல் டியுட்டி பார்த்துவிட்டு அசந்து தூங்கிட்டு இருந்தார். அப்போ அவரோட போன் மணி ஒலித்தது. தூக்க கலக்கமாக போனை எடுத்து காதில் வைத்தார். மறுமுனையில் ஒரு பெண் பேசினாள்.
பெண்:- டாக்டர்.. ரொம்ப அர்ஜென்ட்..சீக்கிரம் வாங்க.. 
டாக்டர்:- என்ன பிரச்சனைன்னு சொல்லும்மா முதல்ல..
பெண்:- நானும் என் வீட்டுக்காரரும் செக்ஸ் பண்ணுறதுக்கு முன்னாடி நான் எப்பவும் கர்ப்ப தடுப்பு மாத்திரை போடுவேன்.. இன்னைக்கு மாத்திரையை போடலாம்னு டேபிள் மேல வச்சி இருந்தேன். என்னோட மூணு வயசு பையன் அதை எடுத்து அவன் வாயில போட்டுகிட்டான் டாக்டர்..உடனே வர்றிங்களா... ப்ளீஸ்..
டாக்டர்:- உடனே வர்றேன்..

டாக்டர் தூக்க கலக்கத்தில் எழுந்து உடைகளை மாட்டி கொண்டு தன் காரை ஷெட்டில் இருந்து எடுத்து ஓட்ட ஆரம்பித்தார். பாதி தூரம் வந்திருந்த போது அவருடைய போன் மறுபடி அழைத்தது. எடுத்து காதில் வைத்தார். அதே பெண் தான் பேசினாள்.

டாக்டர்:- வந்துகிட்டே இருக்கேன்ம்மா.. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவேன்...


பெண்:- இல்லை வேண்டாம் டாக்டர்.. நீங்க வர வேண்டாம்.. இப்போதான் என் புருஷன் இன்னொரு மாத்திரை வச்சிருக்கேன்னு எடுத்து கொடுத்தார்..
டாக்டர்:- ?????????????????

சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

27 comments:

goundamanifans said...

யூத் பதிவர் சந்திப்பிற்கு வருபவர்களுக்கு தலா நாலு 'பரோட்டா தானம்' வழங்க ஒப்புக்கொண்ட கேபிள் அவர்களுக்கு 'யூ ஆர் தி அல்டிமேட் யூத்' எனும் விருதை வழங்குகிறோம்!!.

அரவிந்தன் said...

அன்பின் கேபிள்..

தமிழர்கள் இப்போது இருக்கும் இந்த மனநிலையில் இந்த சந்திப்பு தேவைதானா.?

கொஞ்சம் யோசித்து பாருங்கள்.

Anonymous said...

// குறும்படம் எடுக்கும் குழுவில் உள்ள நண்பர் ஒருவர் சங்கர் நாராயண் என்கிற எழுத்தாளரின் முத்தம் என்கிற கதையைத் தான் எடுக்கப் போகிறோம் என்றார் என்னிடமே.. பின் சொல்லி புரிய வைத்தேன். //

சூப்பர் காமடி சார். Cant stop laughing!! இந்த மேட்டரை ஒரு குறும்(பு)படமா எடுக்கப்போறேன். சங்கர் நாராயணிடம் சொல்லிடாதீங்க!!

சந்தியா said...

என்னாலும் இந்த தீக்குளிப்பு நிகழ்வை ஏற்றுக் கொள்ள முடியல.

இன்று மனதை நெருடிய செய்தி மூவரின் தூக்கை ரத்து செய்யக்கோரி இளம்பெண் தீக்குளிப்பு ( படம் மற்றும் கடிதம் இணைப்பு )

சந்தியா said...

குறும்படங்களால் வெள்ளித் திரை ஆட்டம் காணும் போல இருக்கே.

Anonymous said...

Cable sir, please check your mail before answering about bloggers meet.

kanagu said...

அண்ணா.. குறும்படத்துக்கான லிங்க் கொடுக்கவே இல்லையே :(

உணர்வைத் தொலைத்தவன் said...
This comment has been removed by the author.
உணர்வைத் தொலைத்தவன் said...
This comment has been removed by the author.
உணர்வைத் தொலைத்தவன் said...

திரு சங்கர் நாராயன் அவர்களே தற்கொலைகள் சம்பந்தமான தங்கள் கருத்துடன் நானும் ஒத்துப் போகிறேன்.

ஆனால் தாங்கள் ஒரு தமிழ் உணர்வற்ற ஒரு ஜடமாக இருந்து கொண்டு அதை தெரிவிப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

தமிழ் நாடே அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நீங்கள் ஒரு தமிழ் உணர்வற்ற மனிதனாக சந்திப்பை ஒழுங்கு செய்துள்ளீர்கள்.

நீங்கள் உணர்வற்ற மனிதன் தான் காரணம் உங்கள் சமூக வலைத் தளங்களில் இட்டுள்ள கருத்துக்களையும்படித்தேன். அதற்காக மற்றவரையும் தவறான திசைக்கு இட்டுச் செல்லாதீர்கள்.

இது சினிமா சமூகமல்ல சினியருக்கு பல்லைக் காட்டி புழப்பை ஓட்ட. தேவையானால் நீங்கள் அங்கே போய் காட்டுங்கள். நாங்கள் அதற்கு ஆட்களில்லை.

உணர்வைத் தொலைத்தவன் said...

திரு சங்கர் நாராயன் அவர்களே தற்கொலைகள் சம்பந்தமான தங்கள் கருத்துடன் நானும் ஒத்துப் போகிறேன்.

ஆனால் தாங்கள் ஒரு தமிழ் உணர்வற்ற ஒரு ஜடமாக இருந்து கொண்டு அதை தெரிவிப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

தமிழ் நாடே அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நீங்கள் ஒரு தமிழ் உணர்வற்ற மனிதனாக சந்திப்பை ஒழுங்கு செய்துள்ளீர்கள்.

நீங்கள் உணர்வற்ற மனிதன் தான் காரணம் உங்கள் சமூக வலைத் தளங்களில் இட்டுள்ள கருத்துக்களையும்படித்தேன். அதற்காக மற்றவரையும் தவறான திசைக்கு இட்டுச் செல்லாதீர்கள்.

இது சினிமா சமூகமல்ல சினியருக்கு பல்லைக் காட்டி புழப்பை ஓட்ட. தேவையானால் நீங்கள் அங்கே போய் காட்டுங்கள். நாங்கள் அதற்கு ஆட்களில்லை.

sugi said...

Nice kothuparotta, Youth!

Anonymous said...

//அப்படித்தான் நான் எழுதிய முத்தம் கதையை நானே படமாக்க தயாராகிக் கொண்டிருக்கும் போது, குறும்படம் எடுக்கும் குழுவில் உள்ள நண்பர் ஒருவர் சங்கர் நாராயண் என்கிற எழுத்தாளரின் முத்தம் என்கிற கதையைத் தான் எடுக்கப் போகிறோம் என்றார் என்னிடமே.. பின் சொல்லி புரிய வைத்தேன். //

Padam copy adichu eduthuttu inspirationla eduthennu sollida poranga. :)

http://claqueurs.blogspot.com/2011/08/top-10-streaming-digital-media-players.html

Unknown said...

//தூக்குதண்டனையை தடுப்பதற்காக தீக்குளித்து செத்திருக்கிறார் தேன்மொழி// - தல, அது செங்கொடி... தேன்மொழி இல்ல.. தயவு செய்து மாத்திடுங்க..

Unknown said...

//எனக்கென்னவோ இதில் டகால்டி வேலையிருப்பதாக படுகிறது. அடுத்த கூட்டத் தொடருக்கு முன் மீண்டும் உண்ணாவிரதம் இருக்க வேண்டி வந்தாலும் வரலாம்.// - இதுல என்ன சந்தேகம்? கண்டிப்பா அடுத்த உண்ணாவிரதம் கூடிய விரைவில் நடக்கும்..

Cable சங்கர் said...

@உணர்வை தொலைத்தவரன்
சந்திப்பு நடத்துவதால் உணர்வற்றவன் என்றால், தமிழன் செத்துக் கொண்டிருக்கும் போது கல்யாணம் செய்தவன், குழந்தை பெற்றவன், சாப்பிட்டவன், நண்பர்களோடு தண்ணியடித்தவர்கள், ஊர் சுற்றியவர்கள், ப்ளாக் எழுதியவர்கள்,சினிமா பார்த்தவர்கள். தமிழர்களுக்காக போராடாமல் 100வது நாள் விழா கொண்டாடியவர்கள். இவர்கள் எல்லாரும் உணர்வற்றவர்கள் என்றால் நான் தமிழ் உணர்வற்றவனாகவே இருந்துவிட்டு போகிறேன். நன்றி.

கா.கி said...

ஜோக்கு புரியலை :(

naren said...

அந்த இந்தி பாடல் எதோ ஒரு தமிழ் பாடல் போல் உள்ளது.
அது எந்த தமிழ்பாடல்????

துளசி கோபால் said...

ஹைய்யோ!!!!! என்ன ஒரு அருமையான பாடல்!!!! மறந்தே போயிருந்தேன். நினைவூட்டியதுக்கு நன்றி கேபிளாரே

R. Jagannathan said...

இன்று மூத்த தலைவர் சொன்னது: ”ராஜீவ் உயிருடன் இருந்திருந்தால் மூவரையும் மன்ந்த்திருப்பார்”! புரியுதா? ராஜீவ் உயிருடன் இருந்தால் இவர்களுக்கு ஏன் மரண தண்டனை! - ஜெ.

vijay said...

pls aatach ur blog meendum oru punnagai film link.by ragavan

vijay said...

jeila antha moonu perum anubavicha vethaiya vidava,enyha thuku thandanai avangaluku valiya koduka poguthu.natla theva ellama yevan yevano valdran.pavam evangalum valnthutu potume.ena koranjida poguthu.vazha vidunga pa.

KathaiSolli said...

அய்யா தமிழ் உணர்வு கோமான்களே ! உயிர் என்பது யாவர்க்கும் பொது, அது மூன்று ஆயினும், ஒன்றாயினும்.., என்ன சமாதானம் கூறினாலும் முட்டாள்தனத்தை மன்னிக்க முடியாது
உணர்வு என்பது உயிரை மாய்ப்பது அல்ல, உழைப்பது..
இழப்பை சந்தித்தவன் என்றமுறையில் இதை கூறுகிறேன்...

ராஜரத்தினம் said...

//இருந்தால் இவர்களுக்கு ஏன் மரண தண்டனை! - ஜெ.//

அவரின் வயதால் வந்த உளறல் இது.
ராஜிவ்காந்தி உயிருடன் இருந்தபோதுதான் இந்திரா கொலையாளிகளை தூக்கிலிட்டார்கள். இவரது கூற்றுபடி அவர்களை அவர் மன்னித்து விட்டிருக்கவேண்டுமே? வேண்டுமானல் இப்படி இருக்கலாம், ஸ்டாலினோ, கனிபொழியையோ கொல்லப்பட்டிருந்தால் அவரின் கொலையாளிகளை ராஜிவ் உயிருடன் இருந்திருந்தால் மன்னித்து விட்டிருப்பார், இவர் த.கிருட்டிணன் கொலையாளிகளை விட்டமாதிரி!!!!

”தளிர் சுரேஷ்” said...

எல்லா மேட்டரையும் நல்லா அலசி பிழிஞ்சிட்டீங்க பாஸ்!

ர.கிருஷ்ணசாமி said...

கேபிள் ஜி, மீண்டும் ஒரு புன்னகை பார்க்க யு டுயுப் லிங்க் எதாவது இருக்கிறதா? அல்லது எங்கேயாவது டவுன்லோட் செய்ய முடியுமா? பார்க்க ஆவலாக உள்ளது. எங்கே என்றுதான் தெரியவில்லை.

aotspr said...

சூப்பர் கொத்து.....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com