இன்னொரு கவிஞர் நடிகனான படம். முதலில் பா.விஜய். அவரின் அவுட்டிங் படு மோசமான விஷயமாகி விட்டது. இவரின் அறிமுகம் எப்படி என்பதை பார்போமா? ஏற்கனவே அமீரின் யோகியில் இவர் ஒரு சிறு கேரக்டரில் நடித்திருந்தார். படத்தை போலவே அவரும் கவனிக்கப்படாமல் போய்விட்டார்.
படத்தின் டைட்டிலே உங்களுக்கு கதை சொல்லும். தில்லாலங்கடி செய்யும் ஒருவனைப் பற்றிய கதை. பணத்திற்காக ஏமாற்றுபவன் ஒரு பக்கம் இருக்க, தன் புத்தி கூர்மையால் திலலாலங்கடி செய்பவனை பற்றிய கதை எனும் போது கொஞ்சம் சுவாரஸ்யம் கூடத்தான் செய்கிறது. வசீகரன் ஒரு பெரிய தொழிலதிபர். ஸ்டார் ஓட்டல் ஒன்றிக்கு சொந்தக்காரர். இவரது ஹோட்டல் தொழில் நஷ்டத்தில் ஓடுகிறது. அந்த ஹோட்டலில் ஜெனரல் மேனேஜராய் போலி சர்ட்டிபிகேட்டுகளை கொடுத்து சேர்கிறார். சிநேகன் ஒரு தில்லாலங்கடியாக இருந்தாலும் அவருக்கென்று ஒரு கொள்கையிருக்கிறது. தனது முதலாளியின் கனவுகளையும், கடன்களையும் அடைக்க பாடுபடுகிறார். அதில் நேர்மையாக இருக்கிறார். இதன் நடுவில் வசீகரனுக்கும் ஒரு நடிகைக்கும் காதல் மலர்கிறது. ஜெயபிரகாஷ் வருகிறார். திடீரென படத்தின் தயாரிப்பாளர் ஒரு கேரக்டரில் வருகிறார். எலலோரும் வந்து எப்படி எல்லாரையும் சமாளிக்கிறார் சிநேகன் என்பது கதை.
இம்மாதிரியான கதைகளில் ஒரு கேட் அண்ட் மவுஸ் கேம் இருந்தால் தான் சுவாரஸ்யம் மிகும். ஆனால் இயக்குனர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. சிநேகனின் புத்திசாலித்தனத்தை அவ்வளவு டீடெயிலாக காதல் காட்சிகளில் காட்டியவர். வசீகரனின் தொழிலை எப்படி புத்திசாலித்தனமாய் விரிவு படுத்தினார் என்பதை காட்டவில்லை. தீடீரென ஒரு அம்மா.. சார் வந்ததிலேர்ண்டு முப்பது பர்செண்ட் பிஸினெஸ் ஏறியிருக்கிறது என்று சொல்வது செம காமெடி. அது மட்டுமில்லாம எதற்காக சிநேகன், வசீகரனின் ஹோட்டலுக்கு வந்து சரி செய்ய வேண்டும்?. அவருக்கும் வசீகரனுக்கு எந்த விதத்தில் நட்பு?. எதற்காக அவர் வசீகரனுக்கு நேர்மையாக இருக்க வேண்டும்?. வசீகரனுக்கும் நடிகைக்குமான காதல்?. ஜெயபிரகாஷுக்கும் வசீகரனுக்கும் வெறும் தேர்தலில் நின்றதினால் தான் ரைவலரியா? அது போதாமல் இருக்கிறது. தீடீரென வரும் ஒலக பிஸினெஸ்மேன் சந்திரசேகர் கேரக்டர் எதற்கு?. அந்த மலேசிய அரண்மனையை வாங்கி கொடுத்துவிட்டால் வசீகரனின் கனவு முடிந்துவிடுமா?. சிநேகன் ஏன் சந்திரசேகருடன் போக வேண்டும். இப்படி பல கேள்விகள் துரத்துகிறது.
மேக்னா நாயுடு கொஞ்சம் நயந்தாரா போல் இருக்கிறார் சிரிக்கும் போது. இன்னொரு கதாநாயகி பேர் தெரியவில்லை. அஙகாங்கே எக்ஸ்போஸ் செய்கிறார். வசிகரன் பெரும்பாலும் கூலிங்கிளாஸ் அணிந்தபடி ரிச் லுக் பாயாக வருகிறார். மெதுவாய் பேசுகிறார். எரிச்சலாய் இருக்கிறது. சிநேகன் தான் ஹீரோ மெட்டீரியல். சில இடங்களில் ரசிக்க வைக்கிறார். இவரது கேரக்டர் குழப்பம் மேலும் இன்வால்வ் ஆக முடியாமல் தடுக்கிறது. ஒன்று ஹீரோவாக இருக்க வேண்டும், இல்லை வில்லனாக இருக்க வேண்டும் இப்படி ரெண்டும் கெட்டான் கேரக்டரில் எதிலும் ஒட்டாமல் படம் பார்பது கஷ்டமாய் இருக்கிறது. இவரும் பாதி நேரம் கூலிங்க்ளாஸ் போட்டு நடித்திருப்பது கொஞ்சம் எரிச்சலாகவே இருக்கிறது. ரூமில் இருக்கும்போது கூட க்ளாஸ் போட்டு பேசுவது என்பது நடிப்பு வராதவர்களுக்கான ஆப்ஷன் அதை தொடர்வது ஒரு நடிகனுக்கு சரியானதல்ல. சிநேகனுக்கு வாய்ஸ் கொடுத்த சஞ்சீவுக்கு வாழ்த்துக்கள். அருமையாய் நடித்திருக்கிறார் குரலில்.
ராதாகிருஷணனின் வசனங்கள் ஆங்காங்கே நச்சென இருக்கிறது. முக்கியமாய் காதலைப் பற்றி பேசும் வசனங்கள். கொஞ்சம் தர்க்கம் செய்யும் காட்சிகளிலும். சங்கரின் ஒளிப்பதிவு பற்றி பெரிதாய் ஏதும் சொல்ல இல்லை. மணிசர்மாவும் அஃதே.

எழுதி இயக்கியவர் பிரேம்நாத். கண்களால் கைது செய் திரைபடத்தின் கதாசிரியர். சுவாரஸ்யமான நாட் தான். ஆனால் இலக்கில்லாம புது புது கேரக்டர்கள் வந்து படத்தை திசை திருப்பி, குழப்படித்து பேசி பேசி மாய்ந்து முடிந்தால் போதும் என்று நினைக்கும் அளவிற்கு திரைக்கதை டீவியேஷன்கள் சுவாரஸ்யத்தை கொடுபப்தற்கு பதிலாய் ஆயாசத்தை கொடுத்துவிடுவதுதான் பெரிய மைனஸ்
உயர்திரு420 - 210
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Post a Comment
9 comments:
Parra...nanellam first comment poduren..!!!
Good review..!!
Nalla kani.. Nalla kani..!!!
H
Sir...hindi padangala pathi ippellam podurathu illaye??? Waiting for that
உயர்திரு 420.... நோ கேரண்டி.....
// மேக்னா நாயுடு கொஞ்சம் நயந்தாரா போல் இருக்கிறார் சிரிக்கும் போது. இன்னொரு கதாநாயகி பேர் தெரியவில்லை. //
அவங்க பெயர் மேக்னா நாயுடு இல்ல கேபிள்... மேக்னா சுந்தர்... இரண்டாவது நாயகியின் பெயர் அக்ஷயா...
ம்ஹூம்... ஹீரோ பெயரில் தப்பு செய்திருந்தால் கூட இவ்வளவு ஃபீல் பண்ணியிருக்க மாட்டேன்...
//ரூமில் இருக்கும்போது கூட க்ளாஸ் போட்டு பேசுவது என்பது நடிப்பு வராதவர்களுக்கான ஆப்ஷன் அதை தொடர்வது ஒரு நடிகனுக்கு சரியானதல்ல//
'மன்னன்' கவுண்டமணி டயலாக்: "இருந்தாலும் இந்த ஓட்ட கூலிங் கிளாசை போட்டுக்கிட்டு எப்படித்தான் துணிஞ்சி முன்னால நிக்கிறியோ?"
என்னா ஒரு கடமைய்யா.. பிலாசபி.. ஹீரோயின் பேரு தப்பாயிரக்கூடாதாம்..
பா.விஜய் தொல்லை விட்டுது.. இப்போ சிநேகனா?? ஆட்சி மாற எல்லோரும் "Advantage " எடுத்துக்குறாங்க போலிருக்கு?? மகா மொக்கை படம்..
ஏனுங்க சார். அப்புடியே அந்த பல்லு டாக்டர் படத்தையும் பார்த்துட்டு ஒரு விமர்சனம் போடுங்களேன்..
மத்த நடிகர்கள் என்ன செய்ய போறாங்க?
ஜெயிக்கபோறது விஜய்யா, அஜித்தா, சூர்யாவா? - ஒரு எக்ஸ்க்ளுசிவ் அலசல்
உங்க கமெண்டும் ஓட்டும் அவசியம் சார்…
Post a Comment