Thottal Thodarum

Aug 9, 2011

போட்டாபோட்டி-50/50

potta-potti-review ரொம்ப நாளாக வெளிவர காத்திருந்தது இந்தப் படம். சென்ற வருடமே ரிலீசாக வேண்டியது. இந்தப் படத்தின் பப்ளிசிட்டிக்காக லோக்கல் டீம்களோடு ஒரு 20/20 மேட்ச் எல்லாம் வைத்து தூள் பரத்தினார்கள். என்ன காரணமோ தெரியவில்லை. படம் வெளிவரவிலலை. அதை விடுங்க அதான் இப்ப வந்திருசே எப்படி இருக்குன்னு கேக்குறீங்களா? இருங்க சொல்றேன்.



 Potta Potti Stills00 கதை என்னன்னா ரொம்ப சிம்பிள். கொடைவாணன், கொலைவாணன்னு ரெண்டு பங்காளிங்க. இவிங்களுக்கு படிப்பு வர்லைன்னுட்டு ஊரூக்குள்ள ஆரும் படிக்கவே கூடாதுன்னுட்டு பள்ளிக்கூடத்தையே முடினவயங்க. அவிய்ங்களுக்கு ஒரு முறை பொண்ணு ரோசா கணக்கா, அவளை கட்டின ஒரு பெரிய சொத்து வேற கிடைக்கும். ஏற்கனவே ஊருக்குள்ள ரசாபசமா திரியரவனுங்க.. பொண்ணு மேட்டர் வேறயா? ஒரே போட்டியாயிருது. சரின்னுட்டு ஊர்காரய்ங்க எலலாம் சேந்து ஊர் வழக்கப்படி ஒரு போட்டி ஒண்ணு நடத்தி அதில ஆரு செயிக்கிறாய்ங்களோ அவங்களை பொண்ணு கட்டிக்கும்னு சொல்றாய்ங்க.. கிரிக்கெட்டுன்னா ஆனா ஆவன்னா கூட தெரியாத பயபுள்ளைக இருக்கிற ஊரு. எப்படி விளையாடப் போறாய்ங்கன்னு யோசிக்க, ஊருக்குள்ள வழி மாறி வரும் இந்தியா ப்ளேயர் சடகோபன் ரமேஷ் கிடைக்க அவரை கடத்தி வச்சி, டீம் கோச்சாக்குது கொடைவாணன் டீம். இன்னொரு டீமுக்கு கிரிக்கெட்ட பத்தி ஒண்ணுமே தெரியாத மயில்சாமி கோச். இது நடுவில சடகோபன் ரமேஷுக்கும் மாமன் பொண்ணுக்கு லவ் வேற என்னாச்சுங்கிறத தியேட்டர்ல போய் பாருங்க.
Potta Potti Stills00-6 எப்பவும் கிரிக்கெட்டும் சினிமாவும் சேர்ந்தா மஜாவாத்தான் இருக்கும். இதில இயக்குனர் ஒரு முடிவோட இறங்கியிருக்காரு. முடிஞ்ச் வரைக்கும் கிச்சு கிச்சு மூட்டி படத்தை ஓட்டிரணுமுன்னு அதுல அவர் முடிஞ்ச வரைக்கும் கெலிச்சிட்டாருன்னுதான் சொல்லணும். படம் ஆரம்பித்தது முதல் கடைசி வரை ஒன்லைனர்களால் தோரணம் கட்டியிருக்கிறார்.
potta-potti-stills-002 சடகோபன் ரமேஷின் நடிப்பு ஆச்சர்யமூட்டுகிறது. மிக அசால்டாய் மெட்ராஸ் பாஷை போன்ற தமிழில் பேசுகிறார். முகத்தில் பெரிய ரியாக்‌ஷன் ஏதுமில்லாவிட்டாலும் இந்த படத்திற்கு ஓகே. கொலைவாணனாக வருபவரை விட கொடைவாணனாக வரும் அந்த கருப்பு மைனர் இம்ப்ரசிவ். கடைசி வரை உதார் காட்டியே அலைவதும், கீழே விழ்ந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்றிருப்பது சுவாரஸ்யம். இவரை விட இன்னொரு கேரக்டர் படம் நெடுக பஞ்ச டயலாக் போல கிடைக்கிற கேப்பில் கிடா வெட்டியிருக்கிறார். அவர் தான் அவதார் கணேஷ். கவனிக்கப்பட வேண்டியவர். அருமையான பாடிலேங்குவேஜுடன், சரியான மாடுலேஷனில் அசத்துகிறார். என் மனம் கவர்ந்த மயில்சாமியிருந்தும் பெரிதாய் இம்ப்ரஸ் செய்யவில்லை என்று சொல்வதை விட இவரை சரியாய் பயன்படுத்தவில்லை என்றே சொல்ல வேண்டும்.
potta-potti-stills-008 கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு குறை சொல்ல முடியாது. ஒரு சில டாப் ஆங்கிள் ஷாட்டுகளில் பளிச். அருள்தேவின் இசை பற்றி பெரிதாய் சொல்ல ஏதுமில்லை.எழுதி இயக்கியவர் யுவராஜ். கிரேஸி மோகனுக்கு பிறகு தொடர் ஒன்லைனர்களாய் தொகுத்திருக்கிறார். கேஸ்டிங்கில் ஸ்கோர் செய்திருக்கிறார். கோட்டை விட்டது திரைக்கதையில். கிராமத்தில் கிரிக்கெட்டே தெரியாத ஆட்களை வைத்து கிரிக்கெட்போட்டி என்பது எவ்வளவு சுவாரஸ்யமானதளம். அந்த தளத்தை மிஸ் செய்து, மலை, சுற்றுப் புற சூழல் என்று கொஞ்சம் செண்டிமெண்டை நக்க விட்டு சுறுசுறுப்பை குறைகிறார். சும்மா சிக்ஸரும், ஃபோருமாய் அடித்து தூள் பரத்த வேண்டிய படம். கவனிக்க வேண்டிய இடங்களை விட்டு விட்டதால் சோபையிழந்து விடுகிறது. நடுவே வெள்ளைக்கார அழகிகளுடன் ஒரு பாட்டுக்கு நடனம் வேறு ஆடுகிறார். ஏன் என்று தெரியவில்லை. ஆங்காங்கே புன்முறுவல் பூக்க வைக்கும் வசனங்களுக்காகவும், அழுது வடியும் ஏண்டா உட்கார்ந்தோம் என்று யோசிக்க வைக்கும் படமாய் இல்லாமல் ஜாலியாய் ஒரு படம் கொடுத்ததிற்காக பார்க்கலாம்.
போட்டா போட்டி- புன்முறுவல்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்


Post a Comment

6 comments:

Anonymous said...

'இக்பால்' ஹிந்தி திரைப்படம் பார்த்திருக்கிறீர்களா? கிரிக்கெட் பற்றி எடுக்கப்பட்ட இந்தியப்படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம். லகானை விட....

KANA VARO said...

ஜாலியா பாக்கலாம் போல! அதுவே பெரிய புண்ணியம்.

shortfilmindia.com said...

iqbal நாகேஷ் கூக்குனூரின் அருமையான படம். நஸ்ருதீன் ஷா கலக்கியிருப்பார்.

'பரிவை' சே.குமார் said...

ஜாலியா பாக்கலாம் போல...

Deva said...

sir neenga kung fu panda 2 film paarunga.really entertaining.andha padam pathi unga kitta vimarsanam varalaye

கண்ணாமூசான் said...

படத்தைப்பற்றி ஒரு லேசான பாஸிட்டிவ் டாக் இருக்கு. நீங்களும் சொல்லீட்டிங்க. பார்ப்போம் இந்தவார கடைசியில்.