அவரக்ளின் லஞ்ச் டைம் முடிந்து போனதால் இரண்டு முறை சாப்பிட முடியாமல் போக, இம்முறை திரைத்துறை நண்பர் ஒருவருடன் போய் அமர்ந்தோம். நல்ல கூட்டம். எங்கு திரும்பினாலும் வடநாட்டு மிடில் ஏஜ் ஆண்டிகளின் கூட்டமாயிருந்தது. பெரும்பாலும் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டு அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்த சிறுவர்களை பத்து நிமிசத்திற்கு ஒரு முறை “சோட்டு…இதர் ஆவோ” என்று கூப்பிட்டுக் கொண்டிருந்ததில் பிஸியாக இருந்தார்கள். மெனு கார்டை பார்த்ததும் இதயம் வாய்க்கு வந்துவிட்டது. பைவ் ஸ்டார் ஓட்டல் ரேட். எலலா சைட் டிஷ்ஷும் ஹாஃப் அல்லது புல் என்று போட்டிருக்க ஹாஃப் அளவு சைட்டிஷ் எல்லாம் குறைந்த பட்சம் 330 ரூபாயில் ஆரம்பித்தது. மற்ற ரோட்டி நான் போன்ற அயிட்டங்கள் எலலாம் குறைந்த பட்சம் ஐம்பது ரூபாய்லிருந்துதான் ஆரம்பிக்கிறது. நண்பரிடம் பேசாம போயிடலாமா? என்று கேட்ட போது தன் பின் பக்கத்தை தட்டிக் காட்டி ஒண்ணும் பிரச்சனையில்லை என்றார். பர்ஸை காட்டினாராம்.
ரொம்ப நேரம் காத்திருந்து, காத்திருந்து அங்கே டேபிளில் வைத்திருந்த வினிகரில் ஊற வைத்த சின்ன வெங்காயத்தையும், சட்னியையும் சாப்பிட ஆரம்பித்தோம். எத்தனை பேர் முப்பது வயதுக்கு இருப்பவர்கள். எவ்வளவு பேர் முப்பது என்று காட்ட விரும்புகிறவர்கள் என்று கணக்கெடுத்தும் விட்டோம். ஆர்டர் செய்த பட்டர் சிக்கனும், மசால குல்சாவும் வந்த பாடில்லை. பொறுமை இழந்து வாய்விட்டு சொல்லிக் கொண்டிருக்கும் போது ஒரு சர்வர் வந்து “சாரி சார்… கொஞ்சம் லேட்டாவுது. உங்க் ஆர்டர் என்ன்?” என்று கேட்டுவிட்டு கிச்சனுக்குள் சென்றவர் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ஒரு பெரிய பவுலில் பட்டர் சிக்கனையும், ஒரு கூடையில் இரண்டு மசாலா குல்சாவையும் வைத்தார்.
நல்ல பெரிய பவுல். நிச்சயம் நான்கு பேர் குடும்பத்திற்கு போதுமான சைட்டிஷ். வாசனை மூக்கை துளைக்க, காத்திருந்ததன் காரணமாய் பசி வேறு ஏறியிருக்க, உடனடியாய் ஒரு துண்டு குல்சாவையும் பட்டர் சிக்கனையும் ப்ளேட்டில் விட்டு, குல்சாவை ஒரு பீஸ் பிய்த்து, பட்டர் சிக்கன் கிரேவியோடு ஒரு குட்டி பீஸ் சிக்கனையும் சேர்த்து வாயில் வைத்ததுதான் தெரியும். அட அட..அட.. சூடான குல்சாவின் மேலிருந்த நெய் சமாச்சாரங்கள், சிக்கனின் பதமும், அற்புதமான நாவின் சுவை நாளங்களை தூண்டும் வாசனை, அந்த தக்காளி கலந்த கிரேவியும், எதனால் என்று சொல்ல முடியாத ஒரு விதமான முகம் சுளிக்க வைக்காத புளிப்புடன் நாக்கின் சுவை நாளங்களில் புகுந்து ஜிவ்வென கிளம்ப.. அப்படியே கரைந்து போனது. வாவ்….. டிவைன்.
இவ்வளவு நேர காத்திருத்த கோபமெல்லாம் மறைந்து சாப்பிட்டு முடிக்கும் வரை வேறு ஏதும் பேச்சில்லாம் உணவின் சுவையில் மயங்கியிருந்தோம் என்றால் அது மிகையில்லை. வாழ்நாளில் நிச்சயம் எல்லோரும் ஒரு முறை சாப்பிட்டே ஆக வேண்டிய கட்டாயம் நிச்சயம் இந்த பட்டர் சிக்கனுக்கு உண்டு. இங்கு வெஜிட்டேரியன் அயிட்டங்களும் இருக்கிறது. ஒற்றை ஆளாய் போனால் நிச்சயம் அவர்கள் கொடுக்கும் கிரேவியை சாப்பிட முடியாது. எனவே எப்போது போனாலும் யாரையாவது கூட்டிக் கொண்டு போங்கள். அல்லது குடும்பத்தோடு போங்கள். ஒரு அருமையான, நிறைவான உணவு நிச்சயம்.
Moti Mahal Delux Restaurant
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Post a Comment
15 comments:
அன்பின் கேபிள்,
இந்த ஹோட்டல் விஜய் தொலைக்காட்சி அலுவலகம் பக்கத்தில் இருக்கிறதா.?
ஆமாம் போறப்ப என்னை கூட்டிட்டு போகணும். இல்லாட்டி உள்ள விட மாட்டாங்க:)
இவ்வளோ அருமையான சாப்பாடு பற்றி சொல்லும் போது அடடா எங்க நீங்க அந்த மஹாலின் முகவரி சொல்லாம போவீன்களோ எண்டு பயந்தன் கடைசில என் எண்ணத்திற்கு விருந்து வச்சிடீங்க..
சாப்பிட்ட திருப்த்தியை தருது உங்க பதிவு .. நன்றி
//அட அட..அட.. சூடான குல்சாவின் மேலிருந்த நெய் சமாச்சாரங்கள், சிக்கனின் பதமும், அற்புதமான நாவின் சுவை நாளங்களை தூண்டும் வாசனை, அந்த தக்காளி கலந்த கிரேவியும், எதனால் என்று சொல்ல முடியாத ஒரு விதமான முகம் சுளிக்க வைக்காத புளிப்புடன் நாக்கின் சுவை நாளங்களில் புகுந்து ஜிவ்வென கிளம்ப.. அப்படியே கரைந்து போனது. வாவ்….. டிவைன்.//
ஆஹா......... இது ரசிப்பு!!!!!
சூப்பர்!
ஷங்கர் சார்,படிக்கும் போதே நாக்கில் எச்சில் ஊறிவிட்டது.நல்ல வேலை முகவரியை கொடுத்தீர்கள்.நிச்சயம் சீக்கிரம் போக வேண்டும்.ட்ரீட் வைக்க யாரவது ஒரு நண்பன் சிக்க மாட்டானா என்ன?.
//எத்தனை பேர் முப்பது வயதுக்கு இருப்பவர்கள். எவ்வளவு பேர் முப்பது என்று காட்ட விரும்புகிறவர்கள் என்று கணக்கெடுத்தும் விட்டோம்.// நான் சிக்கன் சாப்பிடாவிட்டலும், உங்கள் எழுத்தின் சுவையை அநுபவித்தேன்! (என் பேரில் உள்ள தெருவில் இந்த ஹோட்டல்!) - ஜெ.
சாப்பிட்ட திருப்த்தியை தருது உங்க பதிவு.
பாஸ்...இங்க துபாய்ல ஏதாவது கிளை இருக்கான்னு கேட்டு சொல்லுங்க பாஸ்
சிங்கப்பூரில் முத்து கறி ஹவுஸ் என்னும் கடையில் மீன் தலைக்கறி ரொம்ப பிரமாதமாம். யாருக்காவது இது பற்றி தெரியுமா?
Dear shankarji,
As usual a mouth watering review.Dont you know the same hotel was there 25 years back opposite Midland theatre inside the smalll lane. The owners were so strict that they would give a mouthful to the police constables who come there for free food or 'something" late nights.
The butter chicken was simply great,then.
25 வருஷத்துக்கு முன்னாடியெல்லாம் நான் ரொம்ப சின்னப் பையனாஇருந்திருப்பேன்.
பதிவுலகத்தின் நிரந்தர இளைஞர் அணி செயலாளரே..எப்படி இப்படியெல்லாம்..
@Village Vignyani - A branch of Moti Mahal is in Karama, near Aryaas restaurant.
@lakshman..நன்றி ஐயா...கேபிள் சார் இனிமே பாரின்ல branch இருக்கற restaurant ல மட்டும்தான் சாப்பிடனும்னு சட்டம் போடனும்
நல்ல பதிவு.
Thanks,
Kannan
http://www.ezdrivingtest.com
Post a Comment