இரண்டு பேர் அஞ்சு பரோட்டா, இரண்டு சப்பாத்தி, ஆலுமட்டர், காலிப்ளவர் சப்ஜி சாப்பிட்டு மொத்த பில் 49 ரூபாய் என்றால் நம்புவீர்களா..?. என்ன பகல் கனவு கண்டீர்களா? என்று கேட்பவர்கள் ஒரு நடை நம்ம கோடம்பாக்கம் ரோடு, மீனாட்சி காலேஜுக்கு முன்னால் ஒரு சின்னக் கடை ஆரோமா என்ற இந்தக் கடைக்கு ஒரு நடை போய் வாருங்கள். அவ்வளவு அருமையான சப்பாத்திகள்.
இவர்களின் மெனு கார்டில் அதிகபட்ச விலையே 35 ரூபாய்தான். குறைந்தபட்ச விலை 4 ரூபாய். கையேந்திபவனிலேயே ப்ரைட்ரைஸ் 30 ரூபாய் விற்கிறார்கள். அது மட்டுமில்லாமல் துரிதமான சர்வீஸ், சப்பாத்தி மட்டுமில்லாது, பரோட்டா, காலையில் தோசையெல்லாம் கூட போடுகிறார்கள். சகாய விலையில் சென்னையில் சாப்பிட நல்ல வெஜ் ரெஸ்டாரண்டுகளில் இதுவும் ஒன்று. ஒரு நடை போய் வாருங்கள். சின்ன பட்ஜெட்டில் நிறைவான உணவு.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Post a Comment
11 comments:
ம்ம்ம்....
//ரொம்ப வருஷமாய் இருப்பதால் அரோமா ஆரோமா ஆகிவிட்டதாக புதிய தலைமுறைகளான எங்களுக்கு தோன்றுகிறது.//
நல்ல வேளை.. ஆடுறா ராமா ன்னு சொல்லாம போனீங்களே..
//ரொம்ப வருஷமாய் இருப்பதால் அரோமா ஆரோமா ஆகிவிட்டதாக புதிய தலைமுறைகளான எங்களுக்கு தோன்றுகிறது.//
அப்ப இன்னும் கொஞ்சம் நாள் கழிச்சு இரோமா ஆகுமா?
They have one poster saying " love does not keep record of wrongs" still they keep? I was in meenakshi college men hostel for 3 years.
என்ன ஷங்கர் சார் சொல்ரீங்க.இது சென்னை தானா.கனவு போல் உள்ளது.நம்பவே முடியலையே.இந்த வாரதுலயே போகனும்.நல்ல தகவல் சார்.நன்றி...
good message. sapittuvivom..
நல்ல தகவல்.
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
//ஆலுமட்டர்// என்றால் என்னங்க?
ஊழலை ஒழிக்க ஒன்று சேருவோம்
http://www.youtube.com/watch?v=RNmsdPeg-6Y&feature=related
@oru vasagan
ஆலு என்றால் உருளைகிழங்கு. மட்டர் என்றால் பட்டாணி.
எனக்கும் ஒரு பாசல் அனுப்ப முடியுமா ?
பேஸ்புக்கில் புதிதாய் வந்துள்ள முக்கிய மாற்றங்களை இங்கே காணலாம் Facebook க்கின் புதிய, தனிநபர் காப்பு அம்சங்கள் அறிமுகம்
Post a Comment