முப்பத்தியைந்து லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கிய அன்பு வாசக நெஞ்சங்களுக்கும், சக பதிவர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள். சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
நினைத்தாலே இனிக்கும் பட இயக்குனர் ஜி.என்.ஆர். குமரவேல் இயக்கியுள்ள படம். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கதை வசனம் எழுதிய படம் எனபது வேறு ஒரு ஆர்வத்தை தூண்டியிருந்தது எனக்கு. நிச்சயம் ஒரு வித்யாசமான கதையை அர்பன் பின்னணியில் அளித்திருப்பார்கள் என்ற என் எதிர்பார்ப்பை திருப்திபடுத்தினார்களா? என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
பரத் அமெரிக்கா செல்வதற்காக ஆர்வமாய் இருப்பவன். அதே போல ரீமாவும். இருவருக்கும் அமெரிக்க விசா க்யூவில் பரிச்சயமாகி, சண்டையில் ஆரம்பித்து, சண்டையில் முடிகிறது. பின்பு ரீமாவுக்கு பாஸ்ப்போர்ட் வாங்கித்தருகிறேன் பேர்விழி என்று உடன் அலைந்து ஒரு தலையாய் காதல் கொண்டு அதை சொல்ல நினைக்கும் போது ஒரு அதிர்ச்சியை கொடுக்கிறார் ரீமா. தான் அமெரிக்கா போவதே தன்னுடய திருமணத்துக்காகத்தானென்று. இதனிடையில் பரத்தின் கிராமத்து, காதல் கல்யாணத்துக்கு எதிரியான சம்பத் தன் மகனுக்கு வேறு ஒரு இடத்தில் கல்யாணம் செய்ய அதே தேதியில் முடிவெடுத்க்கிறார். விமான பயணத்தின் போது தன் காதலை சொல்ல நினைத்தவனுக்கு அவளின் பயணத்தின் காரணம் அதிர்ச்சியாகிப் போக, தன் மகன் யாரோ ஒரு பெண்ணுடன் சுற்றுவதால்தான் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளாமல் அமெரிகக போக எண்ணுகிறான் என்று முடிவு செய்த பரத்தின் அப்பா சம்பத் ரீமாவை கடத்திவிடுகிறார். தந்தையிடம் தன் நிலையை விளக்கி, அவளுக்கு அமெரிக்காவில் கல்யாணம் என்று சொல்லி, சண்டையிட்டு ரீமாவை காப்பாற்றுகிறார். தன் கல்யாணம் நின்றதற்கு காரணம் பரத்தான் என்று முடிவு செய்து இனி என் முகத்தில் விழிக்காதே என்று சொல்லிவிட்டு இடைவேளை விடுகிறார்கள். இதற்கு அப்புற்ம் என்ன என்று பல ஆங்கில, இந்தி, மட்டுமில்லாமல் பல தமிழ் படங்களில் பார்த்ததையேத்தான் மீண்டும் காட்டியிருக்கிறார்கள்.

இந்த ஹிந்தி, இங்கிலீஷ் கதைக்கு எதற்கு எஸ்.ரா?. ஆங்காங்கே பெற்றவர்களுக்கு தான் தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்ய உரிமையுண்டு என்று சம்பத் பேசுகிற வசனங்களிலும், இடைவேளைக்கு பிறகு அப்பா பிள்ளை பேசும் வசனங்களில் மட்டுமே கத்தி தீட்டப்பட்டிருக்கிறது. யுவன் யுவதி என்று பெயரை வைத்து இளமை துள்ளும் காட்சிகள் வரும் என்று நினைத்து உட்கார்ந்தால் எவ்வளவு கற்பனை வறட்சி. ஒரு இளம்பெண் அதுவும், அமெரிக்க விசாவுக்கு அப்ளை செய்து வெளிநாட்டில் போய் திருமணம் செய்யவிருக்கும் பெண்ணுக்கு தன் பாஸ்போர்ட் தொலைந்துவிட்டால் உடனடியாய் அடுத்து என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரியாதா? அதற்காக சத்யனை வைத்து பாஸ்போர்ட் வாங்க காமெடி காட்சிக்கு ஊறுகாயாய் எல்லாம் இருப்பாரா? என்ன?. ஹீரோ ஹீரோயினிடம் நெருங்க பாஸ்போர்ட் வாங்கித்தந்துதான் நெருங்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டு, காட்சிகள் நகர படு மொக்கை போடுகிறார்கள். இடைவேளைக்கு பிறகு மிகவும் தெரிந்த பாதையில் படம் ஓடுவதும், அவ்வளவு பில்டப் செய்த சம்பத் கேரக்டரை படு மொக்கையாய் சப்பென முடித்து படத்தை முடிப்பது அதை விட மொக்கையாய் இருக்கிறது. கொஞ்சமாவது திரைக்கதையில் மெனக்கென மாட்டார்களா?
பரத் ஆஸ்யூஷுவல் ஓவர் பெப்பியாய் நடக்கும் பேசும் இடங்களைத் தவிர மற்ற இடங்களில் நடித்திருக்கிறார். ரீமா கல்லிங்கள் கர்ள் முடியுடன் படு ஸ்லீக்கான் உடைகளுடன் வலம் வருகிறார். சம்பத்துக்கு நல்ல அப்பா கேரக்டர். க்ளைமாக்ஸ் அவரின் கேரக்டரை சாகடித்துவிடுகிறது. பாராட்டப்படக்கூடிய, மற்றும் லாஜிக்குகளையெல்லாம் மீறி ஆங்காங்கே நம்மை கிச்சு கிச்சு மூட்டி சிரிக்க வைக்கும் சந்தானமும், ஷீஷெல்லின் அழகை திரையில் பளிங்கு துல்லியமாய் கொண்டுவந்த கோபி மட்டும் இல்லையென்றால் ரொம்பவே கஷ்டமாகியிருக்கும். விஜய் ஆண்டனியின் இசையில் ஒரிரு பாடல்கள் கேட்கும் ரகம். காதலின் வலியை சொல்ல ஒரு சிறு பாடலை பின்னணியில் ஒலிக்க விடுகிறார்கள் “நீ இல்லாமல் நான் என்ன செய்வேன்” என்பது போன்ற வரிகளில் எவ்வளவு கற்பனை வறட்சி?
யுவன் யுவதி- கொஞ்சம் அவதி
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Post a Comment
10 comments:
யுவன் யுவதி - மொக்கையா?
படம் அவ்வளவு மொக்கையா
சூர்யா விஜய்க்கு செய்தது சரியா ? http://kobirajkobi.blogspot.com/2011/08/blog-post_27.html
நல்ல வேலை ... இன்னைக்கு போலாம்னு நினைத்தேன்..
அப்படின்னா..
யுவன் யுவதி... செம அவதி!!!
நைட் ஷோ கேன்சல்...
கண்டிப்பா அவதிதான் ரெம்போமொக்கை
pere nalla illa....
santhanam?
படம் சுமார்தான்...
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
Post a Comment