
ராம் கோபால் வர்மாவின் லேட்டஸ்ட். சமீபகாலமாய் அவரின் டச்சில்லாமல் வரிசையாய் ராம நாராயணன் போல படமெடுத்து தள்ளிக் கொண்டிருக்கிறார். அதுவும் தினசரி ஹெட்லைனில் ப்ரப்ரப்பாக பேசப்பட்ட விஷயங்களை வைத்து படமெடுத்துக் கொண்டிருக்கிறார். நீரஜ் குரோவர், மரியா சூசைராஜ் என்கிற நடிகையின் நிஜ வாழ்க்கை கதையை இம்முறை படமெடுத்திருக்கிறார்.

அனுஷா சாவ்லா எப்படியாவது மும்பை திரையுலகில் கதாநாயகியாய் கொடி நாட்ட வேண்டுமென்ற ஆசையுடன் வருகிறாள். தொடர் போராட்டஙக்ளுக்கு பின் ஒரு வாய்ப்பு கிடைக்க, படுக்கையை பகிர அழைத்ததால் அதிலிருந்து விலகுகிறாள். அவளுக்கு அது பிடிக்காதது மட்டுமல்ல. அவளுக்கு ராபின் என்றொரு பொஸசிவ் காதலன் இருக்கிறான். பொஸசிவ் என்றால் கொஞ்சம் ஓவர் பொஸசிவ்வே.. ஒரு நல்ல நட்பின் மூலமாய் ஆஷிஷ் என்கிற ஒரு ப்ரொடக்ஷன் கம்பெனி எக்ஸிக்யூட்டிவை சந்திக்கிறாள். அவன் மூலமாய் ஒரு படத்தின் கதாநாயகியாய் புக் செய்யப்பட இரவு பார்ட்டி முடிந்ததும், அவனை வீட்டிற்கு அழைக்க, அவனுடன் உடலுறவு கொள்கிறாள். காதலி கதாநாயகி ஆனது தெரிந்து சந்தோஷத்தில் அவளுக்கு சொல்லாமலேயே வீட்டிற்கு வர, அங்கே நிர்வாணமாய் ஒருவனை பார்த்ததும், அவனை கோபத்தில் கொன்று விடுகிறான். அதன் பிறகு நடக்கும் ப்ருட்டலான விஷயம்தான் படம்.

ஆர்வத்துடன் கதாநாயகியாய் வலம் வர துடிக்கும் பெண்ணின் மன ஓட்டத்தை, சிக்கலை, அழகாக காட்டியிருக்கிறார். ஆனால் அதே பெண் இரண்டாவது பாதியில் கொலைக்கு உடந்தையாய் வரும் போது அவ்வளவு இம்ப்ரசிவ் இல்லை. அவளுடய காதலனாய் வரும் தீபக்கின் நடிப்பு ஓகே. போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் நடிகரின் பாடி லேங்குவேஜும், டயலாக் டெலிவரியும், ராம் கோபால் வர்மா டச். படத்திற்கு இம்மாதிரியான ஒரு கேரக்டரை கொண்டு வந்துவிடுவதில் கில்லாடி. காதலனின் பொஸசிவ்னெஸின் காரணமாய் அவன் படும் கோபமும், அதனால் ஏற்பட்ட கொலையை மறைக்க அவன் செய்யும் கொடூரமும், பிணத்தை நடு ஹாலில் போட்டுவிட்டு, பெட்ரூமில் காதலியுடன் உறவு கொள்ளும் காட்சி கொஞ்சம் உறையத்தான் வைக்கிறது.

டிஜிட்டல் கேமராவில் லைட் உபயோகப்படுத்தாமல் எடுத்திருக்கிறார். சில இடங்களில் இருளடித்தாலும், பல இடங்களில் படத்திற்கு தேவையான மூடை கொடுக்கிறது. டிஜிட்டல் கேமராவின் அனுகூலங்களை எல்லாவிதத்திலும் பயன் படுத்தி பார்த்திருக்கிறார். ஹீரோயினின் பாண்டீஸிலிருந்து க்ளிவேஜின் கேப் வரை. அதே போல போலீஸ் இன்வெஸ்டிகேஷன் காட்சியில் ஒரே டேக்கில் முன்னும் பின்னும் போகும் கேமரா கோணங்கள் டிஜிட்டலில் மட்டுமே சாத்தியம். நேட்டிவிட்டியோடு எடுக்கிறேன் என்பதற்காக நிஜ கொலை நடந்த ப்ளாட்டிலேயே எடுத்திருக்கிறார்கள். இன்னும் சுவாரஸ்யமாய் போக வேண்டிய படம் அரைகுறையாய் முடிந்தது போல ஒரு எண்ணம் வரக் காரணம் திரைக்கதை. போலீஸ் இண்ட்ரோகேஷனில் படு ப்ளாட்டாக போய்விட்டதும் ஒரு காரணமாய் இருக்கலாம். வழக்கமான ஆர்.ஜி.வியின் பஞ்சில்லாத ஒகே படம்.
Not A Love Story – Ok.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com