ரொம்ப நாளாயிற்று இம்மாதிரியான ஒரு பக்கா ஆங்கில மசாலா எண்டர்டெயினரை. போன வாரம் பார்த்த ஏலியன் & கவ்பாய் கொடுத்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் எந்த ஆங்கில பெரிய பட்ஜெட் படமாயிருந்தாலும் ஒரு முறைக்கு பத்து முறை யோசித்துதான் போக வேண்டும் என்று முடிவெடுத்திருந்தேன். அதையும் மீறி இப்படம் என்னை உள்ளிழுத்துவிட்டது. இத்தனைக்கும் முதல் பாகத்தை நான் பார்த்ததில்லை.
ஜெனிசிஸ் எனும் பார்மசூட்டிகல் கம்பெனி மனிதர்களின் ஞாபக மறதிக்கான மருந்தை கண்டு பிடிக்கும் முயற்சியில் மனிதர்களுக்கு பதிலாய் சிம்பன்ஸி குரங்குகளை காட்டிலிருந்து பிடித்து வந்து டெஸ்ட் செய்கிறது. அதன் விஞ்ஞானி வில் ஒரு மருந்தை கண்டுபிடிக்க, அவர்களின் டெஸ்ட் நெ.9 எண்ணுடய சிம்பன்ஸி சரியாக ரியாக்ட் செய்கிறது. மருந்து வெற்றி பெற்று அதை நிருபிப்பதற்கான நாள் அன்று அந்த சிம்பன்ஸியை கொண்டு செல்ல வரும் போது அது மிகவும் கோபமாய் எல்லோரையும் தாக்கி மொத்த கம்பெனியையே கந்தர் கோளமாக்குகிறது. காவலர்கள் அதை சுட்டுக் கொள்கிறார்கள். மருந்து கண்டுபிடிப்பு தோல்வியடைந்ததால் அனைத்து சிம்பன்சிகளையும் கொல்லச் சொல்கிறான் கம்பெனியின் உரிமையாளர். ஒவ்வொன்றாய் மருந்து கொடுத்து கொன்று விட்டு ஒன்பதாம் நம்பர் கேஜுக்கு வரும் போதுதான் தெரிகிறது. அந்த சிம்பன்சி ஒரு குட்டியை ஈன்றிருக்கிறது. அதன் பாதுகாப்பு பொருட்டே அது தாக்கியிருக்கிறது என்று. எனவே சிம்பன்சி பாதுகாவலர் அதை வில்லிடம் ஒப்படைக்க, தன் அல்சைமர் தந்தைக்கு துணையாய் சீசர் என்று பெயர் வைத்து வளர்க்கிறான். தாய் சிம்பன்சியின் கொடுத்த மருந்தின் காரணமாய், அதன் குட்டி சீசருக்கும் மரபணுவின் காரணமாய், மனிதனுடய ஐக்யூ லெவலில் ஸ்மார்ட்டான ஏப்பாய் வளர, அந்த மருந்தை அவனின் தந்தைக்கும் கொடுக்க, அவருடய அல்சைமர் வியாதி சரியாகிறது. ஐந்து வருடங்கள் கழித்து அவன் கண்டுபிடித்த மருந்து வலுவிழக்க, மாற்று மருந்தை கண்டுபிடிக்க மீண்டும் முயலும் போது, அல்சைமர் தாத்தா வெளியே போய் ப்ரச்சனையை கொண்டு வர, வேறு வழியில்லாம அவரை தாக்க வருகிறார்கள் என்று பக்கத்து வீட்டுக் காரனை தாக்கி அவனின் விரலை கடித்து துப்பி விடுகிறது. கோர்ட்டு சீசரை மிருகங்கள் அடைத்து வைக்கும் ஜெயில் வைக்க, முதல் முதலாய் வெளியுலகை சந்திக்கிறது. அதன் பிறகு சீசர் சந்திக்கும் பிரச்சனைகள், போராட்டங்கள் என்பது தான் கதை.
வாத்தியார் சுஜாதா சொன்னது போல் எதிர்காலத்தில் ரஜினியில்லாமலேயே ரஜினி படம் எடுத்துவிடுவார்கள் சி.ஜியின் என்று சொன்னது உண்மையாகிவிட்டது. குட்டி சிம்பஸியிலிருந்து க்ளைமாக்ஸ் வரை வரும் சீசர் சிம்பன்ஸியின் நடிப்பு, பாடி லேங்குவேஜ், எல்லாம் சிஜி என்று சொன்னால் நமப முடியாது. கிட்டத்தட்ட தத்ரூபம். யாரோ ஒரு நடிகரின் முக பாவங்களை வைத்து, அனிமட்ரானிக்ஸ் முறையில் தான் செய்திருப்பார்கள் என்றாலும் அட்டகாசம். முக்கியமாய் ஜன்னல் வழியே சிறுவர்க்ள் விளையாடுவதை பார்த்தபடி ஏங்கும் காட்சியில் அதன் முகத்தில் தெரியும் ஆர்வம், கண்களில் தெரியும் ஆச்சர்யம். அதே நேரம் ஜெயிலில் அடைத்து வைத்திருக்கும் போது வீட்டின் ஞாபகம் வந்து ஜன்னைலை போல சுவற்றில் வரைந்து அதில் முட்டிக் கொண்டு கலங்கும் இடங்களில் எல்லாம் பின்னி பெடலெடுத்திருக்கிறது சிஜி சீசர். டெக்னாலஜி இம்ப்ரூவ்ட் வெரி மச்.
மற்ற கேரக்டர்களின் நடிப்பை பற்றி ஏதும் சொல்ல முடியவில்லை சீசர் குரங்கின் நடிப்பினால். நம்மூர் ஸ்லம்டாக் மில்லியனர் ஃபிரிதா பிண்டோவும் இருக்கிறார். ரெண்டு காட்சிகள் முத்தமிடுகிறார்கள். அவ்வளவே. பாராட்ட பட வேண்டியவர்கள் திரைக்கதையமைத்தவர்கள் தான் ஒரு சிம்பன்ஸியின் வாழ்கையை ஒரு போராளியின் வாழ்க்கையில் நடக்கும் மாற்ற்ங்கள் போல எல்லாவிதமான உணர்வுகளையும் கொடுத்து விறுவிறுப்பாக கதை சொன்னவிதம் அருமை.

எங்கேயும் சாதாரணமாக கேள்வி எழுப்பிவிடாதபடி லாஜிக், மற்றும் செண்டிமெண்டுகளை சரியான விகிதத்தில் அமைத்து ஒரு சுவாரஸ்யமான படத்தை அளித்திருகிறார்கள். சில காட்சிகள் தெரியும் புத்திசாலித்தனங்கள் அசத்துகிறது. சிம்பஸிகளின் ஜெயில் இருக்கும் ஒரு பெருசு சிம்பன்ஸி, சீசர் பேசும் சைகை மொழிக்கு சைகையில் பதில் சொல்ல, அதை பார்த்து ஆச்சர்யபப்ட்ட சீசர், எபப்டி? என்று கேட்க, சர்ககஸ் உராங்குட்டான் என்று சைகையில் பதில் சொல்வது அட்டகாசம் என்றால். க்ள்மாக்ஸில் சீசர் பேசும் வசனம் சிலிர்க்கிறது. நான் சீசரின் ரசிகன் ஆகிவிட்டேன். அடுத்த பார்டு வந்தால் நிச்சயம் ஆஜர் தான். என்னா நடிப்பு.
Rise of the Apes – Smart, Fun & Entertaining Movie.
Post a Comment
19 comments:
வட.. வட.. மொத வட..
enjoy
சீசர் குரங்காக நடித்தவர் ஆன்டி செர்கின்ஸ். படம் பார்த்துவிட்டு நெட்டில் பார்த்தபோதுதான் எனக்கு இவ்விசயம் தெரிந்தது. அவதாருக்கு பிறகு எல்லா தரப்பினருக்கும் பிடித்த கமர்சியல் படம் என சொல்லலாம்.
I liked climax scene of this first half. Thanks sivakumar. That info s new for me.
In my blog, "English changed so much (only to adults)"
http://kumkumaa.blogspot.com
cable ji
Manitha kurangaka nadithavar andi serkis . Ivar Lord of the rings padathila Gollum appadinnu oru CG based characterla varuvar.
By the way oru vazhiyaga 2006 la arambicha unga pathivugalai ellam padichu ippa 2011 feb varikkum vanthuvitten .. but Naan Mela sonna padam Lord of the rings pathi onnum illayae ... illa naan than engayuchum miss pannivittana ?
நல்ல விமர்சனம்....
வாழ்த்துக்கள்.
நல்ல விமர்சனம்....
வாழ்த்துக்கள்.
Good Review Sir .. Really Nice One ..
All the Animations were Designed by Avatar Film Makers !!
Regards
J.M.Gazzaly
(http://hack-erz.blogspot.com)
படத்தை பார்க்கத் தூண்டும் விமர்சனம்..
Thanks!!
கேபிள் ஜி , நல்ல விமர்சனம். கட்டாயம் தியேட்டரில் பார்ப்பேன்.
எளவு எவ்வளவு எழுத்துப் பிழைகள்...
இந்தப் படத்தின் சிஜி யை எல்லோரும் வெகுவாக பாராட்டுகிறார்கள்..
விமர்சனம் பார்க்கவேண்டிய ஆவலை உண்டாக்குகிறது...
உங்கள் விமர்சனங்களில் கூடி வரும் தகவல் பிழைகள், எழுத்துப் பிழைகள் உறுத்தலாக இருக்கின்றன. பதிப்பிக்கும் முன் கொஞ்சம் சரி பார்த்து வெளியிட்டால் நன்று. நன்றி
சீனியர் பதிவர்கள் Vs ஜூனியர் பதிவர்கள் - ஓர் ஆய்வு
http://rasekan.blogspot.com/2011/08/vs.html
ரவிசங்கர்.. இதில் தகவல் பிழை என்ன கண்டுவிட்டீர்கள்.? டவுட்டு.
"விமர்சனங்களில்" என்று கூறி இருந்தேன். உங்களின் மற்ற சில இடுகைகளில் தகவல் பிழைகளைக் கண்டுள்ளேன். பெரும்பாலும், அவற்றை மற்ற வாசகர்களே சுட்டிக் காட்டி இருப்பார்கள். இந்த இடுகையில் ஏகப்பட்ட எழுத்துப் பிழைகள்.
நான் சொல்ரேனுங்க...எழுத்து பிழைகள் மட்டும்தான் ...மற்ற படி விமர்சனத்தில் ஒன்றும் இல்லை ..
///கந்தர் கோளமாக்குகிறது
///சுட்டுக் கொள்கிறார்கள்
///குட்டி சிம்பஸியிலிருந்து
///ஜன்னைலை
///மாற்ற்ங்கள்
///ஆச்சர்யபப்ட்ட சீசர், எபப்டி? என்று கேட்க, சர்ககஸ்
///க்ள்மாக்ஸில்
என்ன ஆச்சு தலைவரே ..?
கேபிள் அங்கிள், இப்போதைய நிலவரம்
20 லட்சம் ஹிட்டுக்கு இன்னும் 16 ஹிட்ஸ்தான் தேவை, இன்னும் கொஞ்ச நேரத்தில் எட்டிவிடும்.
முதல் வாழ்த்து என்னுடையது.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
கட்டாயம் பார்க்கணும்,20 லட்சம் ஹிட்டுக்கு வாழ்த்துக்கள் தல.
-அருண்-
Post a Comment