Sep 30, 2011
Sep 29, 2011
சாப்பாட்டுக்கடை - சேட்டு சப்பாத்திக்கடை
சைதாப்பேட்டை பூக்கார தெருவுக்கு எதிரில் உள்ள தர்மராஜா கோவில் தெரு சப்பாத்தி கடை சேட் என்றால் எல்லோருக்கும் தெரியும். சப்பாத்தி என்றால் சைதாப்பேட்டையில் மிகவும் பிரபலமான கடை. எனக்கு நினைவு தெரிந்து பள்ளி படிக்கும் காலத்திலிருந்து அவர் கடை வைத்திருக்கிறார். அப்போதெல்லாம் அதே தெருவின் ஆரம்ப முனையில் ஒரு குட்டிக்கடையில் மாலையில் சப்பாத்தியும், பூரியும் போடுவார். சூடான உப்பிய பூரியுடன் தக்காளி குருமாவை சாப்பிட ஒரு பெரிய கூட்டமேயிருக்கும். பின்பு அதே தெருவில் பழைய கடைக்கு பகக்த்திலிருந்த கோயிலுக்கு அருகில் இருந்த ஒரு பெரிய கடையாய் பார்த்து பிடித்து சப்பாத்தி மட்டுமே போட ஆரம்பித்தார்.
Sep 27, 2011
Sep 26, 2011
கொத்து பரோட்டா-26/09/11
யுடான்ஸ் தொலைகாட்சி www.tv.udanz.com. யுடான்ஸ்(www.udanz.com) பதிவர்களுக்காக பதிவர்களால் நடத்தப்படும் தமிழ் வலைப்பதிவு திரட்டியின் ஒரு அங்கம். வலைப்பதிவர்களுடனான கலந்துரையாடல்கள், பிரபலங்களின் நேர்க்காணல்கள், தமிழ் வலைப்பதிவர்கள் மற்றும் தமிழ் ட்விட்டர்கள் சந்திப்பு, பதிவர்களின் குறும்படங்கள், பதிவர்கள் கலந்துக் கொண்ட சிறப்பு நிகழ்ச்சிகள் ஆகியவை யுடான்ஸ் தொலைகாட்சியில் வெளியிடப்படும். வாரம் அல்லது மாதம் ஒரு சிறப்பு குறும்படம் ஒளிபரப்பவும் திட்டமிட்டிருக்கிறோம்.பதிவர்கள் தங்களின் விடியோ படங்களை யூட்யூபில் (YouTube), ஏற்றிவிட்டு, அதற்கான இணைப்பையும் விடியோ பற்றிய தகவல்களையும் udanztv@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பினால், யுடான்ஸ் குழுவால் பரிசீலிக்கப் பட்டு யுடான்ஸ் டிவியில் வெளியிடப்படும். பதிவர் சந்திப்புகள், ட்விட்டர் சந்திப்புகள், இலக்கிய கலந்துரையாடல்கள் போன்ற சிறப்பு நிகழ்வுகளின் நேரடி ஒளிபரப்பும் இடம்பெறும். உங்கள் அனைவரின் ஆதரவையும் ஆலோசனைகளையும் வரவேற்கிறோம். விரைவில் யுடான்ஸிலிருந்து பதிவர்களுக்கான போட்டிகளை விரைவில் எதிர்பாருங்கள்.
##########################################
##########################################
Sep 23, 2011
குறும்படம் - ஊருக்கு 4 பேர்.
சமீபத்தில் பார்த்த சுவாரஸ்யமான குறும்படம். இன்னும் கொஞ்சம் ஷார்ப்பாக செய்திருக்கலாம். நெட்வொர்க் மார்கெட்டிங்கை அடிப்படையாய் வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தக் குறும்படத்தில் உறுத்தாமல் நிறைய அட்வைஸ்களை தருகிறார்கள். சிரிக்க..சிரிக்க.. டெக்னிகலாய் கேமரா, எடிட்டிங் எல்லாம் ஓகே. படத்தில் ஆங்காங்கே நம்மை அறியாமல் புன்முறுவல் பூக்க வைக்கிறார்கள். அதுவே இவர்களது வெற்றியை சொல்கிறது.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Sep 21, 2011
பஞ்சாட்சரம்
அந்த பரந்த மைதானத்தின் நடுவில் ஒரு சிறிய மேடை அமைத்திருந்தார்கள். மேடையின்
நடுவில் ஒரு கழு மரம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்க, சுற்றியிருந்த மக்களிடையே
பெருத்த அமைதி நிலவியது. அவ்வளவு பெரிய கூட்டத்தில் இருந்த அமைதிக்கு பின் ஒரு
பெரிய அழுத்தமிருப்பதை அவர்களின் மெளனம் வெளிப்படுத்தியது. அவர்களின் மெளனத்தை
கலைப்பது போல குதிரைப்படை வீரர்கள் புழுதி பறக்க உட்புக, கடைசி குதிரையுடன் ஒரு
உருவம் கயிற்றால் பிணைக்கப்பட்டு இழுத்து வரப்பட்டது. கூட்டத்தில் மெல்ல ஒரு
ஜாக்கிரதை உணர்வுடனான ஒரு பரிதாபக் கூக்குரல் ஏறி அடங்கியது.
Sep 20, 2011
சாப்பாட்டுக்கடை- சம்பத் கெளரி மெஸ்
சைதாப்பேட்டையில் நல்ல உணவகங்களுக்கு கொஞ்சம் பஞ்சமே. அதிலும் மெஸ் போன்ற நல்ல தரமான குறைந்த விலை உணவகங்கள் மிக அரிது. அந்தக் குறையை போக்க வந்திருக்கிறது சமீபத்தில் திறக்கப்பட்ட சம்பத் கெளரி மெஸ். காலையில் அருமையான பூரி, பொங்கல், தோசை, இட்லி என்று வரிசைக்கட்டி அட போட வைக்கும் நேரத்தில், மதியம் அருமையான கல்யாண சாப்பாட்டை நாற்பது ரூபாய்க்கு தருகிறார்கள். ரேஷன்கடை ஒரு ரூபாய் அரிசியை வைத்து போடாமல், நல்ல அரிசியில், அருமையான சாம்பார், ரசம், காரக்குழம்பு, மோர்க்குழம்பு, புளிக்காத கெட்டி மோர், ஊறுகாய், அப்பளம் என்று அசத்துகிறார்கள். படு ஹோம்லியான சாப்பாடு. மாலையில் டிபன் வகையறாக்கள் வேறு அசத்துகிறது. இந்த ஏரியா அலுவலகம் செல்பவர்களுக்கு மாலை நேரத்தில் வீட்டில் சென்று சமைக்க நேரமில்லாதவர்கள், வீட்டிற்கு போகும் போது சாம்பார், ரசம், போன்றவற்றை பார்சல் செய்து வாங்கிப் போகிறார்கள். சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த மெஸ் மிகக் குறுகிய காலத்தில் பிரபலமாகிவிட்டது.
Sep 19, 2011
கொத்து பரோட்டா - 19/09/11
நன்றி
பதிவர்களுக்காக பதிவர்களால் நடத்தப்படும் யுடான்ஸ் திரட்டியை பற்றிய அறிவிப்பை போன வாரம் கொத்து பரோட்டாவில் அறிவித்திருந்தேன். அதற்கு நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. ஒரே வாரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவுகள் இணைகக்ப்பட்டு, ஆரம்பித்த மாதங்களில் 20லட்சத்திற்கு மேல் இருந்த அலெக்ஸா ரேங்கிங் கடந்த ஒரே வாரத்தில் 2.50 லட்சத்திற்கு வந்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் உங்கள் ஆதரவினால் மட்டுமே. விரைவில் அடுத்த சில வாரங்களில் ஒரு லட்சத்திற்குள் நம் யுடான்ஸை வரவழைத்து விடுவீர்கள் என்று நம்புகிறோம். வருகிற வாரம் முதல் ஸ்டார் ஆப் த வீக் என்ற தலைப்பில் பதிவர்களை தெரிந்தெடுத்து அவர்களுடய பதிவுகளை முன்னிறுத்தவிருக்கிறோம். அப்புறம் ஒரு விஷயம் யுடான்ஸில் யாரும் தனியாய் ரிஜிஸ்டர் செய்யாமல் உங்களுடய ஃபேஸ்புக், டிவிட்டர், கூகிள் ஐடிக்களையே வைத்து இணைய முடியும். தொடர்ந்து உங்கள் ஆதரவை தருவீர்கள் என்ற நம்பிக்கையோடு. http://www.udanz.com
####################################################
####################################################
Sep 17, 2011
Sep 16, 2011
தமிழ் சினிமா வாழ்கிறதா? - சினிமா வியாபாரம்.
தமிழ் சினிமா உலகின் பெரிய குற்றச்சாட்டே கடந்த ஐந்து ஆண்டுகளில் நிதிகளின்
ஆக்கிரமிப்பினாலும், சன்னின் ஆதிக்கத்தினாலும் ஒடுங்கிவிட்ட்தாக புலம்பிக்
கொண்டிருந்தவர்கள் எல்லோரும் ஆளுக்கொரு காரணத்தை மீண்டும் சொல்ல
ஆரம்பித்துவிட்டார்கள். ஆம் தமிழ் சினிமா இந்த ஆட்சி மாற்றத்திற்கு பிறகு
வாழ்கிறதா? என்ற கேள்வியை முன் வைத்தால் இன்றைய நிலையில் இல்லை என்றே சொல்ல
வேண்டும். நிச்சயம் இது சார்புடய கருத்து என்று நினைக்காதீர்கள். நிச்சயம் இல்லை.
மற்றவர்கள் எல்லாரும் சொன்னது போல நிச்சயம் ஏதேனும் மாறுதல் வரும் என்று
நம்பியவர்களில் நானும் ஒருவன். அந்த நம்பிக்கை நிச்சயம் பொய்த்துப் போய்விடப்
போகிறது என்ற நம்பிக்கை அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. அதற்கான காரணங்களும் நிறைய
இருக்கவேத்தான் இப்படிச் சொல்கிறேன்.
Sep 15, 2011
Sep 12, 2011
கொத்து பரோட்டா - 12/09/11
சென்னை டூ திருநள்ளாருக்கு முன்னேற்பாடில்லாத ஒரு பயணத்தை துவக்கினோம் நானும் கே.ஆர்.பியும். சென்னை டூ பாண்டி சல்லீசாக, நூறு ரூபாய்க்கு ஏசியெல்லாம் போட்டுக் கூட்டிப் போனார்கள். அங்கிருந்து சிதம்பரம் நல்ல பஸ். ஆனால் கீக்கிடம். சிதம்பரம் டூ காரைக்கால் படு மோசமான பஸ். காரைக்கால் டு திருநள்ளார். ஆட்டோ மினிமம் 100. திரும்புகையில் டாடா ஏஸில் திருநள்ளார் டூ காரைக்கால் 5 ரூபாய். அங்கிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் ஏசி பஸ். 280 ரூபாய். படு மோசமான பாடியில் இருந்தது. ஏசி ஏதோ புழுங்காத அளவில்.ஆயிரம் ரூபாயில் கொஞ்சம் டீலக்ஸ், ஏசி பஸ்களில் ஆறு நூறு, ஏழு நூறு கிலோமீட்டர்கள் பயணிக்க முடிவது நன்றாக இருந்தாலும், பஸ்ஸுக்கு அடித்து பிடித்துதான் ஏறி திணற வேண்டிய நிலையில் இருக்கிறது நமது போக்குவரத்து துறை. . தமிழகம் முழுவதும் பஸ்கள் நிறைய இருக்கத்தான் செய்கிறது. ஆனால் படு மோசமான நிலையில். உடனடியாய் இதை அரசு கவனிக்க வேண்டும். காசு கொடுத்தும் நல்ல சர்வீஸ் இல்லையென்றால் எதிர்காலத்தில் தனியாரின் கட்டுப்பாட்டுக்குள் போக்குவரத்து துறையும் வருவதை தடுக்க முடியாது. லோக்கல் ஆட்கள் பெரும்பாலும் டாடா ஏஸ் போன்ற வண்டிகளில் பயணப்படுவதை மிகவும் விரும்புகிறார்கள். பஸ்ஸை விட ஒரு ரூபாய் அதிகம்.சாப்பாட்டுக்கு நிறுத்திய இடம் சிதம்பரம் தாண்டி ஒர் நான் - வெஜ் கடையில். சைவம் சாப்பிடுபவர்கள் ரொம்பவும் அவஸ்தை பட்டார்கள்.
#########################################################
#########################################################
Sep 10, 2011
குறும்படம் - ரோட்சைட் அம்பானி
சில படங்களை பார்த்தவுடன் பிடித்துவிடும். அதன் மைனஸுகள் பற்றிய பரக்ஞையேயில்லாமல், அவ்வளவு பிடித்துவிடும். இந்த ரோட் சைட் அம்பானி என் மனதை கவர்ந்துவிட்டான்.
Sep 9, 2011
சாப்பாட்டுக்கடை - கிருஷ்ணா டிபன் சென்டர் கோவை.
ஒரு முறை திருப்பூருக்கு சென்று வர வேண்டிய வேலை வந்தது. வழக்கம் போல பரிசலை சந்தித்துவிட்டு, அடுத்த நாள் மதியம் கோவைக்கு வ்ந்து விட்டேன். நைட் டிரெயின் என்பதால். சஞ்செய்காந்திக்கு போன் செய்ததும், பத்தாவது நிமிஷத்தில் பஸ்ஸ்டாண்டுக்கு வ்ந்துவிட்டார். செல்வேந்திரன் அவரது அலுவலகத்துக்கு வ்ந்திருப்பதாகவும், வரும் போது சாப்பிட வாங்கி வர சொல்ல, போகிற வழியில் ஆளுக்கு நாலு, பருப்பு வடை, பழ பஜ்ஜி, உருளை போண்டாவும், தேங்காய் பாலும் வாங்கி கொடுத்தார். தேங்காய் பால் சூப்பர். மனுஷன் நல்லா தேடிப் பிடிச்சு வாங்கி கொடுக்கிறார்பா..
Sep 8, 2011
நான் - ஷர்மி - வைரம் -8
8 ஷர்மி
ரேஷ்மாவின் ஒவ்வொரு பிறந்தநாள்
பார்ட்டியும் எனக்கு வேறுவிதமான அனுபவத்தை
கொடுக்கும். ஆனால் நான் வயதுக்கு வந்த பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத ஒரு
அனுபவம் இன்றைக்கு கிடைக்கும் என்று எதிர்பாக்கவில்லை. வழக்கம் போல வீடே
கோலாகலமாயிருந்தது. ரேஷ்மாவின் அப்பா கோடீஸ்வரர். க்ரானைட் பிஸினெஸ். வெள்ளுடை
சிப்பந்திகள் வீட்டின் மொட்டை மாடியில் இனிப்புகளையும், குளிர்பானங்களையும்
கொடுத்துக் கொண்டிருக்க, பள்ளியில் நேரடியாய் நின்று பேசத் தயங்கும் பையன்களும்
பெண்களும், மிக அந்யோன்யமாய் பேசிக் கொண்டிருந்தார்கள். தனித்தனியே ஜோடியாய்
இருந்ததை வைத்தே அவர்களின் நெருக்கத்தை வெளிக்காட்டிக் கொண்டிருந்தனர்.
வந்திருந்தவர்கள் அத்தனை பேரும் பணக்கார குடும்ப வாரிசுகள். ஃபல்குனி
பதக்கின் “யாத் பியாகி ஆனே லகே” பாடிக் கொண்டிருந்தது.
Sep 7, 2011
Exam - 2009
ஆங்கிலப்படங்கள் எப்படி பிரம்மாண்டமான விஷயங்களுக்காக பேசப்படுகிறதோ அதே போல வித்யாசமான கதைக் களன்களுக்காகவும் பிரம்மிக்க வைக்கும் அவ்வரிசையில் இந்த எக்ஸாம் படம். ஓரே அறைக்குள் இதற்கு முன் ஏழெட்டு படங்கள் வந்து பார்த்திருக்கிறேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் ரத்தினங்கள். அந்த ரத்தினங்கள் வரிசையில் இதோ இன்னொன்று.
Sep 6, 2011
குறும்படம் - Love Chemical
எந்த ஒரு மொழியும் இல்லாத படம். அருமையான மேக்கிங், சினிமாட்டோகிராபி, ஷாட்ஸ் என்று டெக்னிகலாக மிரட்டியிருக்கிறார்கள் இந்த இளைஞர்கள். வாழ்த்துக்கள் சுஜீத் சைன்.
Sep 5, 2011
கொத்து பரோட்டா -05/09/11
யூத்துகளின் சந்திப்பு
நேற்று மாலை டிஸ்கவரியில் நடந்த யூத் பதிவர் சந்திப்பு கிண்டலும், கேலியுமாய் யூத்புல்லாய் நடைபெற்றது. ம.போ.சியின் பேத்தியும் வந்திருந்தார். புதிதாய் எழுத வந்திருக்கும் அத்துனை இளைஞர்களையும் ஒரு சேர சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி. நிகழ்ச்சியில் பேசிய யுவகிருஷ்ணா, உருப்படாத நரேன், ஜாக்கி, ராஜ் சுந்தர்ராஜன், மெட்ராஸ் பவன் சிவகுமார், ஆகியோரின் பேச்சு சீரியஸாகவும் போயிற்று. கணிணியில் தமிழில் எழுத முடியும் என்று தெரியாமல் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் ஏதாவது செய்ய முடியுமா? என்று கேட்டார்கள். நிச்சயம் முடியும். ஏன் நாம் ஒரு குழுவாய் இணைந்து, இதற்கான ஒரு பயிற்சி பட்டறையை செய்யக்கூடாது?. மற்றபடி வாசலில் இருந்து வரவேற்ற சிவகுமார், பிலாசபி பிரபாகரன் அவர்களின் சேவை பாராட்டுக்குரியது.:)
####################################################
நேற்று மாலை டிஸ்கவரியில் நடந்த யூத் பதிவர் சந்திப்பு கிண்டலும், கேலியுமாய் யூத்புல்லாய் நடைபெற்றது. ம.போ.சியின் பேத்தியும் வந்திருந்தார். புதிதாய் எழுத வந்திருக்கும் அத்துனை இளைஞர்களையும் ஒரு சேர சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி. நிகழ்ச்சியில் பேசிய யுவகிருஷ்ணா, உருப்படாத நரேன், ஜாக்கி, ராஜ் சுந்தர்ராஜன், மெட்ராஸ் பவன் சிவகுமார், ஆகியோரின் பேச்சு சீரியஸாகவும் போயிற்று. கணிணியில் தமிழில் எழுத முடியும் என்று தெரியாமல் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் ஏதாவது செய்ய முடியுமா? என்று கேட்டார்கள். நிச்சயம் முடியும். ஏன் நாம் ஒரு குழுவாய் இணைந்து, இதற்கான ஒரு பயிற்சி பட்டறையை செய்யக்கூடாது?. மற்றபடி வாசலில் இருந்து வரவேற்ற சிவகுமார், பிலாசபி பிரபாகரன் அவர்களின் சேவை பாராட்டுக்குரியது.:)
####################################################
குறும்படம் - ஒரு படம் எடுக்கணும்..
நளனின் ஆரம்ப கால படங்களில் ஒன்று. வழக்கம் போல மிக இயல்பான நகைச்சுவை இப்படத்திலும் உண்டு. கருணாவின் இயல்பான நடிப்பும், ரியாக்ஷன்களும் இண்ட்ரஸ்டிங். நளனும் இப்படத்தில் நடித்துள்ளார். முதல் படமென்பதால் இருக்கும் அமெச்சூர்தனங்கள் ஆங்காங்கே தெரிந்தாலும் சுவாரஸ்யம்.
Sep 3, 2011
லெமன் ட்ரீயும்.. ரெண்டு ஷாட் டக்கீலா பதிப்பகத்தின் இரண்டாம் ஆண்டு விழா.
பதிவுலகில் நான் எழுத ஆரம்பித்த போது தொடர்ந்து நிதர்சன கதைகள் என்ற தலைப்பில் சிறுகதைகள் எழுதி வந்தேன். வாசகர்களிடையே பெரும் வரவேற்பை அது பெற்றது. அப்போது நம் சக பதிவர் குகன் என்னை அணுகி என்னுடய நிதர்சன கதைகளில் சிலவற்றை தேர்ந்தெடுத்து சிறுகதை தொகுதி போடலாமென்றார். சொன்னபடியே சிறப்பாகவும் வெளியிட்டார். இந்த தொகுப்பின் வெற்றி அடுத்தடுத்து சினிமா வியாபாரம், மீண்டும் ஒரு காதல் கதை, கொத்துபரோட்டா என்று நான்கு புத்தகங்களை எழுதி வெளியிடும் நிலையை கொடுத்தது. எனவே அவருக்கும் அவரது நாகரத்னா பதிப்பகத்திற்கும் நன்றிகள் பல. எங்களுடய இரண்டாம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சியில் உங்களை கலந்து கொள்ள அழைப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். நண்பர்கள், வாசகர்கள் அனைவரும் வந்திருந்து சிறப்பித்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
Sep 2, 2011
தமிழ் சினிமா ரிப்போர்ட்- ஆகஸ்ட் 2011
இந்த மாதமும் ஏகப்பட்ட படங்கள். வெறும் ஒரு தியேட்டரில், மூன்று தியேட்டர்களில் மட்டுமே வெளியான படங்கள் நிறைய. அப்படி வெளிவந்த படங்கள் பற்றிய தகவல்களையோ, வசூல் நிலவரங்களையோ பற்றி எழுத தகவல்கள் கூட கிடைக்காததால் எழுதவில்லை.
Subscribe to:
Posts (Atom)