Thottal Thodarum

Sep 2, 2011

தமிழ் சினிமா ரிப்போர்ட்- ஆகஸ்ட் 2011

இந்த மாதமும் ஏகப்பட்ட படங்கள். வெறும் ஒரு தியேட்டரில், மூன்று தியேட்டர்களில் மட்டுமே வெளியான படங்கள் நிறைய. அப்படி வெளிவந்த படங்கள் பற்றிய தகவல்களையோ, வசூல் நிலவரங்களையோ பற்றி எழுத தகவல்கள் கூட கிடைக்காததால் எழுதவில்லை.

1.டூ
புதிய இயக்குனர், புதிய தயாரிப்பாளர்கள் என்று புதியவர்களின் டீம். நன்றாகத்தான் மார்கெட்டிங் செய்தார்கள் படம் வெளிவருவதற்கு முன். ஆனால் ஏனோ தெரியவில்லை. படத்தை வெளியிடும் போது விளம்பரமும் இல்லை. அதே போல் விநியோகஸ்தர்கள் சரியான தியேட்டர்களை எடுக்காமல், போய் ஒரு வாரத்தில் சுருண்டு விட்டது. அதற்கு  காரணம் இவர்கள் மட்டுமில்லாமல். படத்தின் திரைக்கதையும் ஒரு காரணம். சுவாரஸ்யமான ஒரு யூத்புல் படமாய் வந்திருக்க வேண்டியது. தொலைக்காட்சி தொடரைப் போல் வந்து காணாமல் போய்விட்டது வருத்தமே. விமர்சனம் படிக்க

2. போட்டா போட்டி
ரொம்ப நாளாக வெளிவராமல் இருந்த ப்டம். வேறு வழியேயில்லாமல் தயாரிப்பாளர்களே வெளியிட்டார்கள். முறைபெண்ணை அடைவதற்காக இரண்டு கிராமத்து மாமன்கள் கிரிக்கெட் போட்டி வைத்து யார் ஜெயிக்கிறார்களோ? அவர்களுக்கே என்று முடிவு செய்ய, கிரிக்கெட் பற்றி அரிச்சுவடி கூட தெரியாமல் இருப்பவர்கள் கிரிக்கெட் வீரர் சடகோபன் ர்மேஷை கடத்துகிறார்கள். செம காமெடியாய் வந்திருக்க வேண்டிய படம். ஆங்காங்கே புன் சிரிப்பை மட்டுமே வரவழைத்ததால் பின்னாளில் தொலைக்காட்சிகளில் மட்டுமே பார்த்து சந்தோஷப்பட முடியும் நிலைக்கு வந்துவிட்டது. மிக மோசமான மார்கெட்டிங்கும் ஒரு காரணம். விமர்சனம் படிக்க

3. ரெளத்திரம்
நெடுநாள் தயாரிபில் இருந்த படம். கோவின் பெரும் வெற்றியால் உடனடியாய் தூசு தட்டப்பட்டு ஒரு மாதிரி ஒட்டி வெட்டி வெளியிட்டு விட்டார்கள். வில்லனை பற்றிய பெரியபில்டப்பே படத்தை சாய்த்துவிட்டது. அதே போல க்ளைமாக்ஸும். இப்போது மாற்றிவிட்டார்கள். ஆனாலும் படம் தோல்விப் படம் லிஸ்டில் சேர்ந்தது வருத்தமே..விமர்சனம் படிக்க

4. உயர்திரு.420
சிநேகன் கதாநாயகனாக உயர்ந்திருக்கும் படம். வந்த சுவடே தெரியாமல் போய்விட்டது. மோசமான மார்கெட்டிங். மோசமான திரைக்கதை என்று மொத்தமாகவே மோசமாய் இருந்தால் எப்படி விளங்கும்?. விமர்சனம படிக்க

5. கொஞ்சம் வெயில்.. கொஞ்சம் மழை.
ஒரு இருபது வருடங்களுக்கு முன் வ்ந்திருந்தால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடியிருப்பார்கள். ஆனால் இப்போது வேலைக்காகாது. முதல் பாதி ஓகே. ஆனால் ரெண்டாவது பாதியில் ஹீரோவை பைத்தியமாக்கிவிட்டு, நம்மையும் ஆக்கி அலையவிடுகிறார்கள்.

6. முதல் இடம்
ஏவிஎம்மின் 175வது படமாம். ர்வுடிகள் லிஸ்டில் மூன்றாவதாக இருப்பவன் எப்படியாவது முதலிடம் பெறுவதற்காக போராடும் கதைதான். சுவாரஸ்யமில்லாத திரைக்கதை, பாடல்கள், மிடியோக்கர் விளம்பரம், என்று எல்லாமே படு சுமாராய் இருக்க, எப்படி ஓடும்?. எனக்கென்னவோ ஏவிஎம் தெரிந்தே விளம்பரம் செய்யவில்லை என்று தோன்றுகிறது.விமர்சனம் படிக்க

7. வெங்காயம்
புதிய இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் படம். க்ராப்டிங்கில் பெரிதாய் ஏதும் இல்லாமல் இருந்தாலும், சொல்ல வந்த கருத்துக்களில் இருந்த நேர்மை ப்டத்தின் தரத்தை தூக்கி வைத்துவிட்டது. இப்படத்தை பற்றி பேசவைத்த இயக்குனர் சேரனின் முயற்சிக்கு பாராட்டுக்கள். ஆனால் வியாபார ரீதியாய் எதையும் சாதிக்காத வெங்காயம் என்றே சொல்ல வேண்டும் . விமர்சனம் படிக்க

8. யுவன் யுவதி பரத், ஜி.என்.ஆர்.ரங்கராஜ், விஜய் ஆண்டனி, என்று கொஞ்சம் நல்ல கூட்டணிதான். ரிலையன்ஸ்ன் வெளியீடு என்று போட்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் கமிஷனுக்கு விநியோகம் செய்ததுதான் உண்மை. எஸ்.ரா கதை வசனம் வேறு.அ ருமையான காதல் கதையாய் வர வேண்டிய கதை. படத்தின் கதையில் காதலே இல்லாததால் ஒன்றும் செல்ப் எடுக்கவில்லை. விமர்சனம் படிக்க

9.புலிவேஷம்

ஆர்.கே. பத்து வருஷமாய் பி.வாசுவை துரத்தி, துரத்தி படமெடுக்க சொல்லி நடித்த படமாம். பாவம் தானே தேடிப் போய் உட்கார்ந்து கொள்வதில் சிலருக்கு சுகம். ரிலீஸான ரெண்டாவது நாளே மங்காத்தாவின் ஆட்டத்தில் காணாமல் போய் விட்டார். விமர்சனம் படிக்க

10 மங்காத்தா
ஒரு மாதமாய் காய்ந்து போயிருந்த மக்களுக்கு தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை வேறு. தலையின் 50வது படம். அவர் வாங்கி, இவர் வாங்கி அங்கேயிங்கே அலைந்து ஆட்டமாய் ஆடி, சன்னுக்கு வந்து தமிழ் நாடு பூராவும் எந்திரனுக்கு பிறகு திரும்பிய இடமெல்லாம் இதே படத்தை போட்டு ஓட்டக்கூடிய அளவிற்கு ஓப்பனிங். இந்த மாதத்திய ஹிட்டா… சூப்பர் ஹிட்டா என்று முடிவு செய்ய முடியவில்லை. ஏனென்றால் வந்து ஒரு நாளே ஆனதால். அடுத்த மாதமே நிர்ணயம் செய்ய முடியும். ஆனால் நிச்சயம் ப்ளாப் லிஸ்டில் இப்படம் கிடையாது என்பது உறுதி. விமர்சனம் படிக்க

 சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

13 comments:

CS. Mohan Kumar said...

மீ தி பஸ்ட்டு

CS. Mohan Kumar said...

முன்னாடி எல்லாம் குவார்டர்(லி) போட்டுட்டு இருந்தீங்க. இப்ப புல் (மன்த் )க்கு மாறிட்டீங்க. ஆங்காங்கு எனது விமர்சனம் படிக்க என போட்டது புதுசா இருக்கு, பாவமாவும் இருக்கு (இந்த படங்களெல்லாம் பாத்தீங்களே என)

மனீஜி ரவுத்திரம் சூப்பர் என்றாரே?

Cable சங்கர் said...

ரவுத்திரம் முதல் நாள் பார்த்தவங்களுக்கும் ஒரு வாரம் கழிச்சு பார்த்தவங்களுக்கு வேற வேற ஃபீலிங்.. ஏன்னா சுமார் இருபது நிமிடங்கள் மற்றும் க்ளைமாக்ஸ் மாற்றப்பட்டுவிட்டது. ஆனால் படம் போணீயாகவில்லை என்பதே உணமை

Rajan Kurai Krishnan said...

மிகவும் பயனுள்ள பதிவு. இதை கண்டிப்பாக தொடர்வும். வருட இறுதியில் தொகுத்துப் பார்த்தால் மிகவும் முக்கியமான ஆவனமாகத் தெரியும். விவரங்கள் இன்னம் கொஞ்சம் இருந்தால் பிரமாதமாக இருக்கும். உதாரணமாக வெங்காயம் எத்தனை பிரிண்ட் ரிலீஸ் ஆனது போன்ற தகவல்கள். அதையெல்லாம் பற்றி யாருமே எழுதுவதில்லை. உங்கள் பணிக்கு வாழ்த்துக்களும், நன்றியும்.

பிரபல பதிவர் said...

மங்காத்தா ஆட்டம் செம ஆட்டம்....

விளையாடிட்டார் அஜித்....

ரைட்டர் நட்சத்திரா said...

good report

ஒரு வாசகன் said...

ரெளத்திரம் புதிய க்ளைமாக்ஸ் என்னவென்று யாராவது சொல்லுங்களேன்

சந்தியா said...

10 படம் தானா இன்னமும் இருக்கா.

சந்தியா said...

10 படம் அடடா தங்களுக்கு 25 மணித்தியாலம் கிடைச்சதே பெரிய விசயம்

விஜயிற்கு கிடைச்ச யோகத்தை பார்த்திங்களா ?
விஜயிற்கு ஜோடியாகப் போகும் 20 வயது பொலிவுட் நாயகி

சதீஷ் மாஸ் said...

வரிசைபடுத்திய விதம் அருமை.....

'பரிவை' சே.குமார் said...

அருமையான பார்வை...
தல ஆடும் மங்காத்தா... இங்கும் வெற்றிகரமாக ஓடுகிறது.

kavi said...

யுவன் யுவதி இயக்குனர் ரங்கராஜ் இல்லை, அவருடைய மகன் குமரவேல்....

aotspr said...

மிகவும் அருமையான விமர்சனம்.

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com