யுடான்ஸ், ஆதி+பரிசல் இணைந்து வழங்கும் சவால் சிறுகதைப் போட்டி -2011
சென்ற வருடம் ஆதி+ பரிசல் கூட்டணி நடத்திய சவால் சிறுகதைப் போட்டியை பற்றி அறிந்திருப்பீர்கள். இந்த வருடமும் ஆதி + பரிசல் கூட்டணி சிறுகதை போட்டியை நடத்த இருப்பதை அறிந்தவுடன் பதிவர்களுக்காக பதிவர்களால் நடத்தப்படும் நம் “யுடான்ஸ்” இவர்களுடன் இணைந்தால் இன்னும் பெரிய அளவில் இப்போட்டியை கொண்டு சேர்க்க முடியும் என்று தோன்றியது. உடன் நாங்கள் தொடர்பு கொண்டு பேசினோம். இவ்வருடம் நாங்களும் அவர்களுடன் இணைந்து போட்டியை நடத்துவதற்கு ஆவலாயிருக்கிறோம் என்றவுடன் பெருத்த மகிழ்ச்சியுடன் இசைந்தார்கள். இவ்வருடத்திற்காக பரிசுத் தொகையை யுடான்ஸ் ஏற்றுக் கொள்ளும் என்ற அறிவிப்பை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.
இதோ மேலே இருக்கும் நிழற்படமே உங்களுக்கான சவால். இந்தப்படத்தில் இருக்கும் நிகழ்வு சிறுகதையின் ஒரு இடத்தில் சரியாக பொருந்தவேண்டும். (இன்னும் தெளிவாக பார்க்க படத்தை க்ளிக்கி பெரிதாக்கி கொள்ளுங்கள்)
பரிசல்+ஆதியுடன் ’யுடான்ஸ்’ இணைந்து வழங்கும்.. சவால் சிறுகதைப்போட்டி -2011
விதிமுறைகள் :
1. கதைக்கான மேற்குறிப்பிட்ட சவால் பொருத்தமாக கதையோடு பொருந்தியிருக்க வேண்டும்.
2. கதையின் களம் காதல், குடும்பம், க்ரைம், நகைச்சுவை என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அளவு 500 வார்த்தைகளுக்கு குறையாமலும் 1500 வார்த்தைகளுக்கும் மிகாமலும் இருக்கவேண்டும்.
3. வலைப்பூக்களில் இயங்கும் பதிவர்கள் மட்டுமே இப்போட்டியில் கலந்து கொள்ள முடியும். போட்டிக்காக எழுதப்பட்ட சிறுகதைகள் அவரவர் வலைப்பூக்களில் வெளியிடப்பட வேண்டும். இதுவரை வலைப்பூ வைத்துக் கொண்டிராதவர்கள் புதிய வலைப்பூ ஒன்றை துவக்கி அதில் அவர்கள் போட்டிக்காக எழுதும் சிறுகதையை வெளியிட்டு பதிவராக தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளலாம்.
4. கதைக்கு தாங்கள் வைக்கும் தலைப்போடு தொடர்ச்சியாக அடைப்புக்குறிக்குள் ‘சவால் சிறுகதை-2011’ என்ற சொற்களையும் சேர்க்கவேண்டும்.
5. ஒருவர் அதிகபட்சமாக 3 சிறுகதைகள் வரை எழுதி அனுப்பலாம்.
6. வலைப்பூக்களில் வெளியிடப்பட்ட சிறுகதைகளுக்கான தொடுப்பை(URL Link)யும், கதைகள் உங்கள் சொந்த கற்பனையில் உருவானவை, வேறெந்த அச்சு, இணைய இதழ்களுக்கும் அனுப்பப்படாதவை என்ற உறுதிமொழியையும்kbkk007@gmail.com, thaamiraa@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பவேண்டும்.
7. மேலும், யுடான்ஸ் திரட்டியில் படைப்பு வகைகளின் (‘Categories’) ‘சவால் சிறுகதைப்போட்டி 2011’ என்ற வகை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் கதை இணைக்கப்படவேண்டும். இது கதைகளைப் படிக்கும் வாசகர்களின் தேவையை ஒரே இடத்தில் பூர்த்திசெய்யும். மேலும் இந்தமுறை வெற்றிபெறப்போகும் கதைகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பில் வாசகர்களாகிய உங்களுக்கும் பங்கு இருக்கிறது. ஆம், 10% மதிப்பெண்களை கதைகள் பெறும் யுடான்ஸ் வாக்குகளே தீர்மானிக்கும்.
8. ’யுடான்ஸ்’ (www.udanz.com) திரட்டி தங்கள் கதைகளுக்கான இணைப்பையோ, சிறுகதைகளின் தொகுப்பையோ அதன் சிறப்புப்பக்கங்களில் வெளியிடலாம்.
9. 10% சதவீத வாசகர் மதிப்பீடு போக மீதம் 90% சதவீத மதிப்பீட்டுக்காக மூன்று பேர் கொண்ட தமிழ் இணையம் சார்ந்து இயங்கும் நண்பர்கள் இடம்பெறும் நடுவர் குழு உருவாக்கப்பட்டுள்ளது. அவர்களின் பெயர்கள், போட்டிமுடிவுகள் வெளியானபின் வெளியிடப்படும்.
10. பரிசுகள் முதல் மூன்று இடங்கள் என்பதையோ, மூன்றும் முதல் இடங்கள் என்பதையோ, ஆறுதல் பரிசுகளுக்கான இடங்கள் இருக்கின்றனவா என்பதையோ நடுவர்கள் முடிவுசெய்வார்கள்.
11. பரிசு பெறும் கதைகள் ரூபாய் 3000/- மதிப்பிலான புத்தகங்களை பகிர்ந்துகொள்ளவிருக்கின்றன.
12. போட்டி முடிவுகள் நவம்பர் 15 ம் தேதி கீழ்க்கண்ட தளங்களில் வெளியிடப்படும். www.udanz.com, www.parisalkaaran.com, www.thaamiraa.com
13. சிறுகதைகள் வந்து சேரவேண்டிய கடைசி தேதி : அக்டோபர் 31, இந்திய நேரப்படி இரவு 12 மணிக்குள்.
பதிவுலக நண்பர்களே… உடன் உங்கள் கதைகளை போட்டிக்கு அனுப்புங்கள். உங்கள் கதைகளை இணைக்கும் போது “சவால் சிறுகதை போட்டி 2011” என்கிற கேட்டகிரியில் இணையுங்கள். இந்த போட்டிக்கான லோகோவை உங்கள் பதிவுகளில் போட்டு, http://udanz.com/category.php?category=savaal2011 இந்த இணைப்புக்கு போகுமாறு லிங்க் கொடுத்தால் உங்கள் கதைகளை மேலும் பலர் படித்து ஓட்டுக்களை பெற ஏதுவாயிருக்கும். பதிவர்களின் போட்டிக்கான சிறுகதைகளை நம் யுடான்ஸ் தளத்தில் உள்ள கேட்டகிரி பகுதியில் உள்ள “சவால் சிறுகதை போட்டி 2011” என்ற இணைப்பை க்ளிக்கினால் இது வரை வந்துள்ள கதைகள் அனைத்தையும் படித்து உங்கள் ஆதரவை தெரிவிக்க முடியும். மேலும் உங்கள் ஆதரவை உங்கள் யுடான்ஸுக்கு தருவீர்கள் என்கிற நம்பிக்கையோடு.. உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்.
உங்கள்
கேபிள் சங்கர்
ஜோசப் பால்ராஜ்
மற்றும் யுடான்ஸ் குழுவினர்.
Comments
நான் சிரிச்சா தீபாவளி - அனுஷ்காவின் அடுத்த அட்டாக்
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
When I login into Udanz and submit the link to register my blog. It showing the following error.
URL is invalid or blocked: (http://kanakkadalan.blogspot.com/)
Thanks for your help.