8 ஷர்மி
ரேஷ்மாவின் ஒவ்வொரு பிறந்தநாள்
பார்ட்டியும் எனக்கு வேறுவிதமான அனுபவத்தை
கொடுக்கும். ஆனால் நான் வயதுக்கு வந்த பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத ஒரு
அனுபவம் இன்றைக்கு கிடைக்கும் என்று எதிர்பாக்கவில்லை. வழக்கம் போல வீடே
கோலாகலமாயிருந்தது. ரேஷ்மாவின் அப்பா கோடீஸ்வரர். க்ரானைட் பிஸினெஸ். வெள்ளுடை
சிப்பந்திகள் வீட்டின் மொட்டை மாடியில் இனிப்புகளையும், குளிர்பானங்களையும்
கொடுத்துக் கொண்டிருக்க, பள்ளியில் நேரடியாய் நின்று பேசத் தயங்கும் பையன்களும்
பெண்களும், மிக அந்யோன்யமாய் பேசிக் கொண்டிருந்தார்கள். தனித்தனியே ஜோடியாய்
இருந்ததை வைத்தே அவர்களின் நெருக்கத்தை வெளிக்காட்டிக் கொண்டிருந்தனர்.
வந்திருந்தவர்கள் அத்தனை பேரும் பணக்கார குடும்ப வாரிசுகள். ஃபல்குனி
பதக்கின் “யாத் பியாகி ஆனே லகே” பாடிக் கொண்டிருந்தது.
ரேஷ்மாவின் அம்மா எல்லாரையும்
மிகையாய் அணைத்து அணைத்து பேசினாள். பத்து நிமிஷத்துக்கொரு முறை “ச்சோ..ஸ்வீட்” என்றாள். அங்கிருந்தவர்களைவிட
குழந்தைத்தனமாய் பேசினாள்.
அர்ஜுன் நான்கைந்து நண்பர்களுடன்
இருந்தாலும் என்னையே குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தான். என் முதுகெல்லாம்
சுட்டது. ஒவ்வொரு
வருடமும் இப்படித்தான். பள்ளியில், பார்ட்டியில், காரிடாரில் என்று மூன்று வருஷமாய் நான் போகுமிடமெல்லாம் பின்னால்
நிற்பான். சட்டென திரும்பினால் ஒரு மாதிரி சோகமாய் முகத்தை வைத்து சிரிப்பான்.
அவன் அப்படி அலைய வைப்பது எனக்கு மேலும்
சந்தோஷமாய் இருக்கும். ரேஷ்மா அவனுக்காக ஒவ்வொரு முறையும் வருத்தப்படுவாள்.
”நீ அவனை
ரொம்பத்தான் டீஸ் செய்யறே”
“‘உனக்கு பெரிய அழகின்னு நினைப்பு”
“அவனுக்கு
பின்னாடி இத்தனை பேரு சுத்தறோம் அவன் கண்ணுக்கு யாரும் தெரிய மாட்டேங்குறாஙக் உன்னைத்தவிர?”
“அப்படி என்னதான் இருக்கோ உன்கிட்ட?”
“அப்படி என்னதான் இருக்கோ உன்கிட்ட?”
இம்மாதிரி பேச்சுக்கள் எல்லாம்
எனக்கு என் அழகின் மேல் கர்வத்தை ஏற்படுத்தியது. அது அலட்டலான ஒரு மிதப்பை
கொடுத்தது. அந்த மிதப்பு அவனை மேலும் அலைவைக்க தூண்டியது. இந்த மூன்று வருடங்கள்
என்னை நான் கண்ணாடியில் பார்க்கும் நேரங்கள் அதிகமாயின. என் உடலின் வளர்ச்சி
என்னையே பிரம்மிக்க வைத்தது. உடலின் வளைவுகளை பார்த்து
இன்றும் அப்படித்தான் அதே சில பையன்கள் ரகசியமாய் குசுகுசுவென பேசிக்
கொண்டார்கள். அவர்களின் பேச்சில், பார்வையில், சதியிருந்தது. திடீர் திடீரென
மாயமாய் மறைந்தார்கள். திடீரென முளைத்தார்கள். அப்படி திரும்ப வரும் போது
அவர்களின் பார்வையில் கொஞ்சம் பளபளப்பு ஏறியிருந்தது.
இன்னும் பத்து வயது பெண்ணிற்கான
பர்த்டே பார்ட்டி போலவே “டம்ப்ஷராப்” எல்லாம்
வைத்து ஆடிக் கொண்டிருந்தார்கள். வீட்டிற்கு வந்திருந்த சிறுவர்களுடன் ரேஷ்மாவின்
அம்மா கோஆர்டினேட் செய்து விளையாடிக் கொண்டிருக்க, வந்திருந்தவர்கள் தம் தம்
ஜோடிகளின் தோள்களின் மேல் கை போட்டு, எத்தேசையாய் படுவது போல் மார்பகங்களில் கை
வைத்தார்கள். இதை தெரிந்தே ஒரு விதமான பெருமித்த்துடன் பெண்களும் தட்டிவிட்டுக்
கொண்டேயிருந்தார்கள். எனக்கு அவர்களின் நாடகம் போரடித்த்து. இன்றைக்குள் அந்தப்
பெண்கள் அவர்களை அனுமதித்து விடுவார்கள் என்றே தோன்றியது. தூரத்திலிருந்து
பார்க்கும் போது என்னால் இந்த விழாவில் கலந்து கொண்டிருப்பது போலவே தோன்றவில்லை.
எல்லாமே மிகையாய் தெரிந்தது. கூட்டத்திலிருந்து விலகி மெல்ல ஒவ்வொரு அறையாய்
பார்த்துக் கொண்டு வந்தேன். நிறைய அறைகளில் ஆளேயில்லாமல், கட்டிலும் மெத்தையும்
பளிச்சென போட்டு வைத்திருந்தார்கள். நிறைய கூல்டிரிக்ஸ் குடித்திருந்த்தால் அடி
வயிற்றை முட்டியது. அங்கிருந்த அறையினுள் இருந்த அட்டாச்ட் பாத்ரூமில் நுழைந்து
வெளி வந்த போது, வாசலில் அர்ஜுன் நின்றிருந்தான். எனக்கு திடுக்கென தூக்கி வாரிப்
போட்டது. அந்த இட்த்தில் அதுவும் கதவை திறந்த்தும் நேரே ஒரு உருவத்தை
எதிர்பார்க்கவில்லை. சமாளித்து “என்ன?” என்றேன்.
“உன் கிட்ட பேசணும்”
“என்ன
பேசணும். அங்கேயே பேச வேண்டியதுதானே? அதுக்காக யூரினல் வரைக்கும் வருவியா?”
“சாரி..
எல்லாருக்கும் முன்னே பேசி ஏதாவது அவமானப் படுத்திடுவியோன்னு பயம்.”
“அதான்
தெரியுதுல்ல.. அப்புறம் என்ன..?” என்று
அவனை விட்டு நகர்ந்த போது, சட்டென கையை பிடித்திழுத்து, சுவற்றோடு வைத்து என்னை
அழுத்தி என்னை மூர்கமாய் முத்தமிட்டான். அந்த செயலை நான் அவனிடமிருந்து
எதிர்பார்க்கவில்லை. நேராக உதட்டில்
முத்தமிடாமல் கன்னம், கழுத்து என்று பற்களால் கடித்து, கடைசியாய் உதட்டை கவ்வி
அப்படியே உள்ளுக்குள் உறிஞ்சினான். வலி உச்சத்தில் ஏற நான் கத்தியது அவனின்
வாய்க்குள்ளேயே எதிரொலியாய் எனக்கு கேட்டது. ஒரு கையால் என் கழுத்தின்
பின்பக்கத்திலிருந்து அவன் பால் முகத்தை அழுத்த, தன் உடலால் சுவற்றில் அழுத்தி,
இன்னொரு கையால் என் மார்புகளை வெறி கொண்டு கசக்கினான். எனக்கு வலியாய் இருந்தது.
என் உடைகளை அப்படியே தூக்கி, பேண்டீஸின் உள்ளே கையைவிட்டு என் குறியை கசக்கினான்.
எனக்கு வலி உயிர் போய்விட்ட்து. சட்டென அவன் கிறங்கியிருந்த நேரத்தில் அவனின்
குறியில் ஓங்கி என் முழங்காலால் ஒரு எத்து எத்தி, அவனை தள்ளிவிட்டேன். “ஹெல்ப்
மீ.. ரேஷமா.. கார்த்திக்” என்று
கத்தினேன். பெரும் வலியுடன் தன் குறியை பிடித்தபடி யாரும் வருவதற்குள் அர்ஜுன்
வெளியே ஓடினான். எதிரே வந்தவர்களை பற்றியெல்லாம் கவலைப்படாமல் தள்ளிக் கொண்டு
போவதையும், என் நிலையையும் பார்த்து அதிர்ச்சியானார்கள். எனக்கு திடீரென அழுகை
முட்ட, அப்படியே சரிந்து :ஓவென அழ ஆரம்பித்தேன்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Post a Comment
7 comments:
me the first
last para ..romba overah irukkoooo?
கதை நல்லா இருக்கு. கடைசிப் பாரா கொஞ்சம் அதிகமோ என்று எண்ணத் தோன்றினாலும் உங்கள் நடை அருமை. தொடருங்கள்.
good story
interesting
கதை அருமையா இருக்கு சங்கர்...!
நா இந்த கதைய படிக்கலனு சொன்னா நம்ப தயாரா??? சீக்கரம் புக் போடுங்க சார்... லேட் ஆகாதீங்க.....
Post a Comment