சாப்பாட்டுக்கடை - கிருஷ்ணா டிபன் சென்டர் கோவை.
ஒரு முறை திருப்பூருக்கு சென்று வர வேண்டிய வேலை வந்தது. வழக்கம் போல பரிசலை சந்தித்துவிட்டு, அடுத்த நாள் மதியம் கோவைக்கு வ்ந்து விட்டேன். நைட் டிரெயின் என்பதால். சஞ்செய்காந்திக்கு போன் செய்ததும், பத்தாவது நிமிஷத்தில் பஸ்ஸ்டாண்டுக்கு வ்ந்துவிட்டார். செல்வேந்திரன் அவரது அலுவலகத்துக்கு வ்ந்திருப்பதாகவும், வரும் போது சாப்பிட வாங்கி வர சொல்ல, போகிற வழியில் ஆளுக்கு நாலு, பருப்பு வடை, பழ பஜ்ஜி, உருளை போண்டாவும், தேங்காய் பாலும் வாங்கி கொடுத்தார். தேங்காய் பால் சூப்பர். மனுஷன் நல்லா தேடிப் பிடிச்சு வாங்கி கொடுக்கிறார்பா..
வடகரை வேலன் அண்ணாச்சி, செல்வேந்திரன், சஞ்செய் ஆபீசுக்கு வர, அரட்டை முடித்துவிட்டு, எட்டு மணிக்காய் டிபன் சாப்பிட ஆரம்பாளையம் ரோட் வழியில் பெண்கள் பாலிடெக்னிக்கின் எதிரே உள்ள, கிருஷ்ணா டிபன் செண்டர் என்கிற இடத்துக்கு கூட்டி போனார்கள். அந்த செண்டரில் நம் வெகுஜன நாட்களில் மறந்த குழாபுட்டு, கேப்பை தோசை, பெசரட், பணியாரம், கம்பங்கூழ் என்று வித்யாசமான அயிட்டங்களை போட்டு பின்னி எடுக்கிறார்கள்.. நான் ஒரு பெசரட்டும், கம்பங்கூழும், அரை ப்ளேட் கொத்துபரோட்டாவும், சாப்பிடடேன் நிஜமாகவே டிவைன். என்ன ராத்திரி ரயிலில் நான்கு பீர் அடித்தது போல் ”சுச்சா” வந்து கொண்டேயிருந்தது அவ்வள்வு தான். ஆனால் டோண்ட் மிஸ்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
#நான் யாரு? எங்க இருக்கேன்..?
இந்த மாதிரி பரிசல், சஞ்சய், செல்வா, வடகரைவேலன்னெல்லாம் பதிவுல எழுதறப்ப ஒரு காலத்துல லிங்கெல்லாம் குடுத்து எழுதுவாங்க. அதெல்லாம் மாறிடுச்சா இப்ப?
#நான் யாரு? எங்க இருக்கேன்..? //
ஹா ஹா ஹா ஹா இது சரியான கேள்விதான் ஹி ஹி...
வாழ்த்துக்கள்.
இன்று ஸ்டெர்லிங் அவென்யூவில் டூ ஸ்கொயர் வெஜ் ரெஸ்டாரண்ட்டுக்க்ப் போயிருந்தேன். நீங்கள் போனதில்லை என்றால் ஸ்ட்ராங்காக சிபாரிக்கிறேன்!
-ஜெ.