Thottal Thodarum

Sep 16, 2011

தமிழ் சினிமா வாழ்கிறதா? - சினிமா வியாபாரம்.


தமிழ் சினிமா உலகின் பெரிய குற்றச்சாட்டே கடந்த ஐந்து ஆண்டுகளில் நிதிகளின் ஆக்கிரமிப்பினாலும், சன்னின் ஆதிக்கத்தினாலும் ஒடுங்கிவிட்ட்தாக புலம்பிக் கொண்டிருந்தவர்கள் எல்லோரும் ஆளுக்கொரு காரணத்தை மீண்டும் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். ஆம் தமிழ் சினிமா இந்த ஆட்சி மாற்றத்திற்கு பிறகு வாழ்கிறதா? என்ற கேள்வியை முன் வைத்தால் இன்றைய நிலையில் இல்லை என்றே சொல்ல வேண்டும். நிச்சயம் இது சார்புடய கருத்து என்று நினைக்காதீர்கள். நிச்சயம் இல்லை. மற்றவர்கள் எல்லாரும் சொன்னது போல நிச்சயம் ஏதேனும் மாறுதல் வரும் என்று நம்பியவர்களில் நானும் ஒருவன். அந்த நம்பிக்கை நிச்சயம் பொய்த்துப் போய்விடப் போகிறது என்ற நம்பிக்கை அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. அதற்கான காரணங்களும் நிறைய இருக்கவேத்தான் இப்படிச் சொல்கிறேன்.
சென்ற ஆட்சியின் போது திரைதுறை மக்கள் சொல்லிய முக்கிய குற்றச்சாட்டு என்னவென்றால் சிறு முதலீட்டு படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை என்பதுதான். நிதிகள் தியேட்டர்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு சிறு படங்களை ஓடும் போது தூக்கிவிடுவதும், அல்லது தியேட்டரை கொடுக்காமல் இழுத்தடிப்பது, அல்லது கொடுக்காமலேயே இருப்பது என்று அராஜகம் செய்து கொண்டிருந்தார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அந்த நிலை இன்று மாறிவிட்ட்தா? என்று கேட்பவர்களுக்கு இல்லை என்றே சொல்வேன். நிறைய சிறு முதலீட்டுப் படங்கள் வெளியாகி, வெளியிட க்யூப், யு.எப்.ஓ, பி.எச்.எக்ஸ், பிரிண்டுக்கு கட்டிய பணம் கூட வசூலாகாமல் பெட்டிக்குள் முடங்கிவிட்டது. சென்ற ஆட்சியில்தான் அவர்கள் தியேட்டர்களை ஆக்கிரமித்திருந்தார்கள். இப்போதென்ன?. அப்படி கேட்கிறவர்கள் தற்போது புதிதாய் கண்டுபிடித்துச் சொல்லும் காரணம் தமிழ்நாட்டுத் திரையரங்குகளில் தமிழ் திரைப்படங்களை விட, மற்ற மொழி படங்கள் அதிகம் ஓடுகிறது என்ற குற்றச்சாட்டுத்தான். காரணங்கள் தான் மாறியிருக்கின்றதே தவிர அதற்கான தீர்வை யாரும் கண்டுபிடிக்கவில்லை.

அதற்கான காரணம் நிச்சயம் என்னவென்று எல்லோருக்கும் தெரியும் ஆனால் அதை சொல்ல முடிவதில்லை. முக்கிய காரணம் தமிழ்நாட்டிலிருக்கும் தியேட்டர்களின் எண்ணிக்கை. மொத்தமே சுமார் 1000 சொச்ச திரையரங்குகள் தான் இருக்கிறது என்கிறது கணக்கு. அப்படியிருக்க, வாரத்திற்கு சுமார் ஏழு முதல் எட்டு படங்கள் தமிழ் படங்கள் இல்லாமல், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம், தமிங்கிலிஷ், படங்கள் என்று மானாவரியாய் தொடர்ந்து வெளியாகிறது. இந்த 1000 சொச்ச தியேட்டர்களில் ரிலீஸ் செண்டர் என்று எடுத்துக் கொண்டால் ஆறு நூறு  அல்லது ஏழு நூறுதான் இருக்கும். இந்த ஏழுநூறு தியேட்டர்களில் தான் இத்தனை மொழிப் படங்களும் வெளியிட்டாக வேண்டும்.

ஒரு பட்த்திற்கு சுமார் அறுபது தியேட்டர்கள் என்று கணக்கிட்டால் கூட வாரத்திற்கு ஏழு படங்களுக்கு 420 தியேட்டர்கள் வேண்டியிருக்கிறது. இதே பெரிய நடிகர்கள், பெரிய பட்ஜெட் படங்களுடன் வரும் போது அறுபது தியேட்டர்களுக்கு பதிலாய் குறைந்த பட்சமே நூறிலிருந்து நூற்றியைம்பது திரையரங்குகளை அந்தப்படமே ஆக்கிரமித்துவிடும். அது தவிர ஏற்கனவே ஓடிக் கொண்டிருக்கும் படங்கள் வேறு இருக்க திரையரங்குகள் கிடைக்க த்திங்கினத்தோம் போட வேண்டிய சூழ்நிலை இன்றும் இருக்கிறது. எனவே ஆட்சி மாறியதால் தமிழ் சினிமாவில் சிறு முதலீட்டு படங்களுக்கு  தியேட்டர் சுலபமாக கிடைக்கிறது என்று சொல்வதெல்லாம் வெறும் பேச்சில் மட்டுமே என்பது தான் உண்மை.

சரி இந்த மூன்று மாதத்தில் அப்படி தியேட்டர் கிடைத்து வெளிவந்த எந்த ஒரு சிறு முதலீட்டு படங்கள் ஏதும் ஓடியதாகவே தெரியவில்லை ஏன்?. ஆட்சி மாறி தமிழ் சினிமா சுதந்திரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று சொல்பவர்கள் இதற்கான காரணம் என்ன என்று சொல்வார்களா? என்று பார்த்தால் வாய் மூடியே இருக்கிறார்கள். முக்கியமான காரணம் தியேட்டர்களின் அனுமதி கட்டணம். இன்று சென்னையில் குறைந்த பட்சம் 80ரூபாயிலிருந்து அதிகபட்சம் 120 ரூபாய் வரை அனுமதி கட்டணம் வசூலிக்க படுகிறது. இதே தமிழ் நாட்டின் சிறு நகரங்கள் பெரு நகரங்களிலும் இதே கதிதான். பெரிய நடிகர்களின் படம் என்றால் திருச்சி, மதுரை போன்ற ஏரியாக்களில் அதிகபட்சமாய் 150 ரூபாயெல்லாம் கூட வாங்குகிறார்கள். சிறு முதலீட்டு படங்களுக்கு, புதுமுகங்கள் நடித்திருக்கும் பட்த்திற்கு பெரிய அளவு ஓப்பனிங் இருக்காது. அப்படி ஓப்பனிங் இல்லாத பட்சத்தில் குறைந்தபட்ச அளவு டிக்கெட் விற்பனை கூட இல்லாமல், இன்னும் சில திரையரங்குகளில் படம் பார்க்க ஆளேயில்லாமல் காட்சிகள் கேன்சல் செய்யப்படுகிறது என்பது வேதனைகுரிய விஷயம்.

இன்றைய சூப்பர் ஹிட் பட்த்தின் வாழ்நாளே மூன்று வாரங்கள் என்று ஆகிவிட்டபிறகு, இம்மாதிரியான சிறு முதலீட்டு படங்களின் கதி என்ன என்று நினைத்துப் பாருங்கள். அது மட்டுமில்லாமல் சிறு முதலீட்டுப் படங்களின் தலையாய பிரச்சனை விளம்பரம். ஒரு கோடி ரூபாயில் டிஜிட்டலிலோ, அல்லது ஃபிலிமிலோ படமெடுத்துவிட்டு, படம் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்பு ஒரு நாள் தினகரன், இன்னொரு நாள் தினத்தந்தி என்று கணக்குப் போட்டு விளம்பரமும், ஒரு சில லட்சங்கள் செலவு செய்து படம் வெளிவருவதற்கு சில நாட்களுக்கு முன் தொலைக்காட்சிகளில் அதுவும் இசை மற்றும் செய்தி சேனல்களில் நாளுக்கு மூன்று முறை விளம்பரம் செய்துவிட்டு, பட்த்தை வெளியிடுகிறார்கள். இப்படி யாருக்கும் தெரியாமல் வெளியாகும் படங்களை பார்பதற்கு மக்கள் எப்படி வருவார்கள்?.

இன்றைய காலகட்ட்த்தில் மக்களுக்கு எண்டர்டெயிண்ட்மெண்ட்டுக்கு நிறைய விஷயங்கள் மக்களுக்கு இருக்கிறது. பெரிய நடிகர்கள், பெரிய பட்ஜெட் அதிக விளம்பரம் செய்யப்பட்ட படங்களுக்கே இன்றைய காலகட்ட்த்தில் நூறு சதவிகிதம் ஓப்பனிங் இருப்பதில்ல, அப்படியிருக்க, முகம் தெரியாத புதுமுகங்கள் நடித்த, இப்படி ஒரு படம் வெளிவந்த்தா? என்றே தெரியாத படங்களுக்கு  மக்கள் எப்படி செல்வார்கள்?. தமிழ் சினிமாவில் எப்போதாவது ஒரு சேது, களவாணி போன்ற சிறு முதலீட்டுப் படங்கள் தான் வெளியாகி வெற்றி பெற்றிருக்கிறது. அதற்கு காரணம் அப்படம் மக்களை பார்த்த முதல் காட்சியிலேயே கவரும் அளவிற்கு இருந்ததும் ஒரு காரணம். மக்களின் வாய் மொழி விளம்பரத்தினாலேயே அப்படங்கள் பெரும் வெற்றி பெற்றது.

விளம்பரம் இல்லாதது ஒரு ப்ரச்சனை என்றால் இன்னொரு ப்ரச்சனை பத்திரிக்கைகளில் அப்படங்களுக்கான விமர்சனம் கூட வராதது. ஏன் பட்ஜெட் காரணமாய் பத்திரிக்கையாளர்கள் காட்சிக்கு அவர்களை அழைப்பதில்லையா? என்று கேட்டால் இல்லை எல்லா படங்களுக்கும் பத்திரிகையாளர்கள் காட்சி ஏற்பாடு செய்யத்தான் செய்கிறார்கள். ஆனாலும் விமர்சன்ங்கள் பத்திரிக்கைகளில் வருவதில்லை. அதற்கு அப்பட்த்தின் பி.ஆர்.ஓ எனபடுபவர்கள் அழைப்பவர்களை பொறுத்தும், வருபவர்களைப் பொறுத்தும்தான் முடிவாகிறது. ஆம் வெகுஜன வார பத்திரிக்கைகளில் வாரத்திற்கு ஒரு படம் தான் விமர்சனம் எழுத இடம் ஒதுக்குகிறார்கள். அப்படியிருக்கும் நேரத்தில் அந்த வாரம் ஒரு பெரிய பட்ஜெட் படம் வெளியானால் அதற்கு வாசகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பும் இருக்கும் என்பதால் முன்னுரிமை அப்படங்களுக்கு கொடுக்கப் படுகிறது. அதே வாரத்தில் வெளியாகும் சிறு முதலீட்டு படங்கள் அடுத்த வாரம் எழுதலாம் என்றால் வந்த சுவடே தெரியாமல் போய்விடுவதால் அப்படங்களைப் பற்றி எழுதிப் பிரயோஜனமில்லை என்பதாலும் அடுத்த வாரத்தில் வரும் படங்கள் வேறு க்யூவில் இருப்பதால் முதல் வார படங்கள் மறக்கப்படுகின்றன. ஒரு வாரத்தில் குறைந்த்து மூன்று முதல் நான்கு படங்கள் பார்ப்பவர்கள் எதை எழுதுவார்கள். பெரும்பாலும் எல்லா படங்களுக்கு விமர்சனம் எழுதுபவர்கள் இணையதளம் வைத்திருப்பவர்கள் மட்டுமே.

சிறு முதலீட்டுப் படங்கள் மக்களிடம் சென்றடைய சரியான வழி எனக்கு தெரிந்து தமிழ் சினிமாவின் வெளியீடுகளை கட்டுப்படுத்த வேண்டும். வாரத்திற்கு இரண்டு படங்களுக்கு மேல் வெளியிட தடை விதிக்க வேண்டும். தியேட்டர்களின் அனுமதி கட்டணத்தை குறைக்க வேண்டும். அப்போதுதான் சிறு முதலீட்டு படங்களுக்கான ஷெல்ப் லைப் அதிகரிக்கும். விலை குறைந்தால்  மக்கள் அதிகம் பேர் திரையரங்குக்கு போய் படம் பார்ப்பார்கள். இதை நாம் கண்கூடாக நிருபிக்க முடியும். இன்றளவில் பெரும்பாலான ஏசியில்லா திரையரங்குகளிலும், சென்னையில் அண்ணா போன்ற ஏசி திரையரங்குகளில் தமிழ்நாட்டில் எங்குமே மக்களால் அங்கீகரிக்க படாத சின்ன, மற்றும் பெரிய முதலீட்டு படங்கள் ஒரு வாரம் தாண்டியெல்லாம் ஓடும். அதற்கு காரணம் அனுமதி கட்டணம் குறைவாக இருப்பதால் பொழுது போக்கிற்காக வருவர்களின் கைக்குள் அடங்கும் விலையாக இருப்பதால் படங்களை பார்க்க செல்கிறார்கள்.

அதன் பிறகு விளம்பரம். விளம்பரம் இல்லாமல் இன்று மக்க்ளிடையே நாம் சென்றடைய முடியாது. சிறு முதலீட்டு படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு ஒரு தலையாய ப்ரச்சனை பட்த்தை வெளியிடுவதுதான். முன்பெல்லாம் சிறு படங்களை ஓரளவுக்கு சுமாராக இருந்தால் ஒரு குறிப்பிட்ட விலைக்கு வாங்கி விநியோகிக்க சிறு விநியோகஸ்தர்கள் நிறைய பேர் இருப்பார்கள். ஆனால் இன்றோ எது எப்படி என்றாலும் தயாரிப்பாளரே சொந்த செலவில் வெளியிட வேண்டிய நிர்பந்தம். அப்போது தயாரிப்பு செலவில்லாமல், வெளியீட்டு செலவும் அவர்கள் தலையில் விழுகிறது. இது தவிர விளம்பரம். எனவே ஒரு  கோடிக்குள் படம் தயாரிப்பவர்கள் குறைந்த பட்சம் ஐம்பதிலிருந்து ஒரு கோடி வரை விளம்பரம் மற்றும் வெளியீட்டுக்கும் சேர்த்து பட்ஜெட் வைத்திருந்தால்தான்  பட்த்தை வெளிக் கொண்டுவர முடியும் நிலை இன்று.

எப்படி தினசரிகளில் விளம்பரம் செய்வதை தயாரிப்பாளர்கள் சங்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததோ அதே போல தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு ஒரு கட்டுப்பாடும், விலை நிர்ணையமும், செய்ய வேண்டும். அப்போதுதான் சிறு முதலீட்டு படங்கள் முதல் பெரிய முதலீட்டு படங்கள் வரை ஒரே சீராக மக்களிடையே சென்றடைய முடியும்.தெலுங்கு பட உலகில் இம்முறை கடைபிடிக்கபட்டு வருகிறது. அதனால் எல்லா படங்களுக்கு ஒரே சீரான விளம்பரம் கிடைக்கிறது. அங்கேயும் சிறு முதலீட்டு படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு கொஞ்சம் குறைவுதான் என்றாலும் குறைந்தபட்சமாய் என்பது முதல் நூறு திரையங்குகள் சிறு முதலீட்டு படங்கள் வெளியிடுகிறார்கள்.

என்றைக்கு கார்பரேட் கம்பெனிகள் விநியோகத்துறையில் நுழைந்தார்களோ. அன்றிலிருந்து பணம் கொடுத்து வாங்கி விநியோகம் செய்யும் முறை ஒழிந்து கொண்டிருக்கிறது. விநியோகதர்கள் கையில் சினிமா இருப்பது ஒன்றும் புதிதல்ல. இன்று நேற்றில்லாம சினிமா கண்டுபிடிக்கப்பட்ட நாளிலிருந்து, ஏதாவது ஒரு மூன்று பேர் கையில்தான் சினிமா மாறி மாறி இருந்து வருகிறது. அது சென்ற ஆட்சியில் சன் மற்றும் நிதிகளின் கைகளில் இருந்த்து, இப்போது மீண்டும் வட நாட்டு கார்பரேட்டுகளின் கையில் போய் சேர்ந்திருக்கிறது. அவ்வளவு தான்.
கேளிக்கை வரியும், தமிழ் சினிமாவின் தலைவிதியும். அடுத்து
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

20 comments:

தமிழன் said...

sooda oru vadai!

விஜய் said...

அது என்னமோ என்ன மாயமோ தெரியல நடிகர்களின் சம்பளம் மட்டும் விலைவாசி போல் ஏறிக்கொண்டே போகிறது. வியாபாரத்தில் வருவாயையும் பெருக்கவேண்டும் செலவையும் குறைக்கவேண்டும். ஒரு table of major expenses and average % கொடுக்கமுடியுமா? இதையும் கட்டுபடுத்தினால் small budget படம் கூட known starsகளை வைத்து கொஞ்ச அதிக முதலீட்டில் medium budget படமாக வந்து minimal opening ஆவது கிடைக்க வைக்கலாம்.

இன்றும் நல்ல சினிமாக்களுக்கு Metro & Tier 1, 2 நகரங்களில் 120 ரூபாய் கொடுத்தும் குடும்பத்துடன் படம் பார்க்கிறார்கள். Eg. தெய்வத்திருமகள், காஞ்சனா. நான் பார்த்த இரவு காட்சியில் அதிகமான குட்டீஸ் கூட்டம். அரங்கத்தில் படம் பார்ப்பதை தவிர்க்கவைப்பது poor maintenance. இன்று திருச்சியில் 2 அரங்குகளை தவிர மற்றவையாவிலும் எட்டி கூட பார்க்கமுடியாது.

IlayaDhasan said...

சினிமா ஒரு மாய உலகம் மட்டுமில்ல , ஒரு வட்டம் கூட ன்னு சொல்றீங்க
மெக்ஸிகோ சலவை காரி ஜோக்

பிரபல பதிவர் said...

என்னவோ போங்க‌

கதை திரைக்கதை சரியா இருந்தா எந்த படமும் ஓடும்...

எவனாலயும் தடுக்க முடியாது....

aotspr said...

சினிமா ஒரு மாய உலகம்.

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

Ravikumar Tirupur said...

ஒரு நல்ல குறைந்த பட்ஜெட் படம் விளம்பரம் இல்லாததால் தான் ஒடவில்லை என்று சொல்வதை முழுமையாக ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. உண்மையில் பெருவெற்றி பெறவேண்டிய தகுதியிருந்தும் ஒடாத ஒரு குறைந்த பட்ஜெட் படத்தை கூறுங்களேன். படம் சரியில்லையென்றால் விளம்பரம் வீண்.
புலிவேசம் படத்திற்க்கு செய்யாத விளம்பரமா?ஒரு நல்ல குறைந்த பட்ஜெட் படம் விளம்பரம் இல்லாததால் தான் ஒடவில்லை என்று சொல்வதை முழுமையாக ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. உண்மையில் பெருவெற்றி பெறவேண்டிய தகுதியிருந்தும் ஒடாத ஒரு குறைந்த பட்ஜெட் படத்தை கூறுங்களேன். படம் சரியில்லையென்றால் விளம்பரம் வீண்.
புலிவேசம் படத்திற்க்கு செய்யாத விளம்பரமா?

shortfilmindia.com said...

ரவி.. ஆரண்யகாண்டம்.?

தென்மேற்கு பருவக்காற்று. இப்படி நிறைய உதாரணங்கள்.

shortfilmindia.com said...

ravi.. ஒரு படம் எடுத்து அதை வெளிக் கொண்டுவர நடத்தப்படும் பிரயத்தனங்கள் எதுவுமே சாதாரண விஷயமல்ல.. படம் நல்லருக்கு ஓடுது நல்லா இல்ல ஓடுது

SURYAJEEVA said...

சார் எனக்கு ஒரு சந்தேகம் இவ்வளவு பணம் குடுத்து டிக்கெட் வாங்கும் ஜனங்கள் யார், எப்படி அவர்களால் இவ்வளவு பணம் கொடுத்து இந்த படங்களுக்கு செல்ல முடிகிறது.. எனக்கு டிக்கெட் விலை அம்பது ரூபான்னு சொன்னாலே போங்கடான்னு சொல்ல தோணுது..

joe vimal said...

நல்ல கட்டுரை மாற்று வழிகளை யோசிக்க வேண்டும் சிறு திரைபடத்தை தயாரிப்பவர்கள். குறைந்த விலையில் டிவீடி திரைப்படம் வெளியாகும் அன்றே வெளியிடவேண்டும் ,தியேட்டரில் 150 ருபாய் கொடுத்து ஒரு படத்தை பார்க்க நிச்சயம் நடுத்தர மக்கள் விரும்ப மாட்டார்கள் தியேட்டர் டிக்கெட் விலை குறைப்பு வேண்டும் மார்க்கெட்டிங் இன்னும் சிறப்பாக செய்யப்பட வேண்டும் .

அல்லு சிரிஷின் ஒரு கட்டுரை உங்கள் பார்வைக்காக
http://sirishallu.com/?p=162

sarav said...

thalivar cable ji avargalae

naan munnal oru nalaikku 4 shows padam parthavaan(athavathu collegele padicha kalathilae ) ticket rate 2.40 2.90 3.40 ivalavvuthan . athukka apparam 2.90 , 4, 5 then 4 ,5 ,6 then 5 8 10 then 6 10 12 ippadi yerikittae poi ippo 120 140 150 vanthichinaa enna mathiri alunga eppadi padam pappanga ?
oorkuruvi appadinnu oru padam kelvi patirukkirgala arun pandian than hero avarukkae nyabagam irukkumaanu doubt athula villan yaar theriyuma ? janagaraj intha mathiri mokkai padatha kooda naanga pathirukkom bcos theatre rate was affordable intha padam enga pathom theriyuma sathyam theatrlaa .... ippo mudiyuma intha latchanathila snacks are not allowed eppadinga ? enakku verkadalai romba pidikum padam parthikette sapida numnu aasaai veetla appadi than aana theatrekku pona parimudal ennomo kanja packet eduthukittu vanthitta mathiri kodumai padam nalla illanu 1 show 2 show kku apparam than theriyum aanal nanga than 1 showkke poga mattomae yenna ticket rate jaasthi theatre mokkai ithula snacks eduthukitu poga koodathu

ippadi yellam irundha eppadi sir ?
naanga torrent download panni pathukuvom

Astrologer sathishkumar Erode said...

சன் டிவியில் அவர்கள் படத்தை தினம் 1000 முறை டிரைலர் காட்டி இது பெரிய படம் எனும் மாயை ! உண்டாக்கி அதிக தியேட்டர்களை கைப்பற்றும் தந்திரத்தை உடைக்க சங்கம் என்ன செய்ய போகிறது?

Astrologer sathishkumar Erode said...

காலம் காலமாக சொல்லப்படும் நடிக நடிகைகள் சம்பளம் குறைக்க சங்கம் என்ன செய்யபோகிறது..3 மாதத்தில் ஒரு படம் முடித்து இளம் நடிகர்கள் வாங்கும் சம்பளம் 3 கோடி ரூபாய்.அடேயப்பா.அவர்கள் பட வியாபாரமும் நல்ல கலெக்சன் என்பதால்தானே? அப்புறம் எப்படி சிக்கல் வருகிறது?சம்பளம் குறைன்னு சொன்னா என் பட கலெக்சன் எவ்ளோ தெரியுமில்ல என்பார்கள்.தியேட்டர் கட்டணத்தை குறைத்தால் மட்டும் மக்கள் வருவார்கள் என சொல்ல முடியவில்லை.சுலபமாக கிடைக்கும் டி.வி.டியும்,சீரியல்களும் ஒரு காரணம்.மதியம் 12 மணி சீரியல்கள்,இரவு 9 மணி சீரியல்கள் மேட்னி ஷோ,ஈவினிங் ஷோவை முடக்கி விட்டன..என அடித்து சொல்லலாம்..இதை நம்ப முடியாமல் இருக்கலாம்..ஆனால் இது குறிப்பிட்ட சதவீத பாதிப்பை உண்டாக்குவது நிச்சயம்.

Astrologer sathishkumar Erode said...

ஒரு ஊர்ல 100 பேர் படம் பார்க்க முடிவு பண்ணி தியேட்டருக்கு போகலாம்னு நினைச்சா,எந்த படம்னு யோசிக்கிறப்ப சன் குழுமத்தில் உள்ள 7 சேனல்களிலும் காட்டப்படும் குறிப்பிட்ட ஒரு படத்தை பார்க்கவே மனதில் தோன்றும்...இது போன்ற மக்கள் சதமும் அதிகம்.மைனா போல பெரிய அலை எழாமல் சின்ன படங்கள் வெற்றி மற்றும் கலெக்சன் சம்பாதிக்கும் என தோணவில்லை.மைனாவுக்கே கலைஞர் டிவிதான் தூண்டுகோள்

Astrologer sathishkumar Erode said...

உலக சினிமா லெவலுக்கு யோசிக்கும் ஆட்களுக்கும் சாதரண பாமரனுக்கும் ,இளைஞனுக்கு தேவையான பரபரப்பும் என அனைத்து ரசனை கலவை கொண்ட படங்களே பெரு வெற்றி பெறுகின்றன..உதாரணம்-மைனா-இதில் எல்லா ரசனையாளர்களும் ஒன்று கூட முடியும்.ஆரண்ய காண்டம் உலக சினிமா லெவல் ரசனியாளர் மட்டுமே ஒன்று கூட முடியும்.பாமரன்,பெண்களுக்கு இது புரியாது.அல்லது போரடிக்கும்

Wanderer said...

உங்கள் வாதங்கள் பெருமளவில் சரியே! குறைந்த கட்டணங்களுடன், தியேட்டரை சுத்தமாக வைத்திருந்தாலே 50% சீட்டுகளை சுமாரான படத்தைக்கொண்டு கூட நிரப்ப முடியும். ஆந்திராவில் இன்னும் கூட 20 ரூபாய்க்கு டிக்கெட்டும், இன்டர்வெலில் 3 ரூபாய்க்கு கோலி சோடாவும் விற்கிறார்கள். நம்ம ஊர் தியேட்டர்களில் மட்டமான படத்துக்கு கூட 80 ரூபாய்க்கு டிக்கெட்டும் 20 ருபாய்க்கு பெப்சியும் விற்பதால் ஏழை மட்டுமல்ல மிடில் கிளாஸ் கூட போக முடிவதில்லை!

இது போட்டி நிறைந்த உலகம். ஒரு காலத்தில் சினிமா மட்டுமே பொழுது போக்காக இருந்த காலம் கடந்து, இப்போது பல சாய்ஸ்களில் சினிமாவும் ஒன்று. அவ்வளவே! இந்த சூழ்நிலையில் சினிமா 'content'ம் மக்களின் மாறி வரும் ரசனைக்கேற்றவாறு இருக்க வேண்டும்.

Ravikumar Tirupur said...

சார் படம் வெளிவர படும் பிரயத்தனங்கள் உண்மையில் கடும் சிரமம்தான்.
ஆரண்யகாண்டமும். தென்மேற்க்குபருவக்காற்றும் அதனதனளவில் மிகச்சிறந்த படங்கள்தான் ஆனால் குறைந்தபட்ஜெட் படங்கள் ஆடியன் கமெண்ட்
"நல்லா இருக்கு" அப்படினா கூட வெற்றிபெருவதில்லை, "படம் சூப்பர்!" னு டாக் வந்தால்தான் உண்டு அப்படி டாக் வந்து ஹிட் ஆனவைகள்தான் களவாவாணி,மைனா, சு.புரம்,பசங்க, வெ.க.குழு...etc
என்ன செய்ய ஏழைமாணவன் மெரிட்ல வந்தாகவேண்டியிருக்கே!

ஸ்ரீகாந்த் said...

இன்றைய சினிமா சூழலை யாராலும் கணித்து கூறிவிட முடியாது ...ஏனெனில் அது ஒவ்வொரு தனிப்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் அனுபவங்கள் உள்ளடக்கியது .....அதில் உங்கள் வரையில் தெரியவந்த ஒன்றீரண்டு விஷயங்களை வைத்து மட்டும் நீங்கள் இந்த பதிவை எழுதியதாக தெரிகிறது .....உண்மையில் தற்போதைய சூழல் நம்பிக்கை தரும் விதமாக மாறி வருகிறது என்பதே உண்மை

hayyram said...

/// வெளிவந்த எந்த ஒரு சிறு முதலீட்டு படங்கள் ஏதும் ஓடியதாகவே தெரியவில்லை ஏன்///

படம் திராபையா இருந்தா எவன் தியேட்டருக்கு போவான். அது போக சமீபத்த்ல் தல படம் பாக்க ஆசைப்பட்டு கமலா தியேட்டருக்கு போனேன். ஏதோ தீவிர வாதிகளை சோதனைப் போடுவது போல எல்லோருடைய உடம்பையும் தொட்டு சோதனை போட்டு உள்ளே அனுப்பினார்கள். காரணம் ஏதாவது தின்பண்டம் கொண்டு போய் தின்றுவிட போகிறோமாம்! என்ன சார் அராஜகம். வெளியே விற்கும் பத்து ரூபாய் பாப்கார்னை இந்த தியேட்டர் நடத்தும் கொள்ளைகும்பல் 60 ரூபாய்க்கு (சில தியேட்டர்களில்) விற்கிறார்கள். தியேட்டருக்குள்ளும் சொந்தமாக வேர்கடலை பேக்கட் கூட கொண்டு போய்விடக்கூடாதாம். பிடுங்கி வைத்து விடுவார்கள். கட்டாயமாக வியாபாரம் செய்வது ரவுடித்தனம் தவிற வேறென்ன? டிக்கெட் விலை குறைந்தது ஐந்து பேர் கொண்ட குடும்பம் போனாலே ஐநூறு ரூபாய்கள் பழுத்து விடுகிறது. பார்க்கிங் என்கிற பெயரில் தியேட்டர்காரர்கள் கொள்ளையடிப்பது அடுக்கவே அடுக்காது. நேஷனலில் டூவீலர் பார்க்கிங் மணிக்கு 10 ரூபாயாம். சினிமா பாக்க வந்தா 3 மணி நேரம் சத்தியமாக கழிக்க வேண்டும். அதுக்கு ஒரு மணி நேர கணக்கு வைக்க வேண்டிய அவசியம் என்ன? அல்லது சினிமா பார்க்க வந்தவர்களுக்கு மட்டும் 3 மணி நேரத்திற்கு என்று ஒரு கட்டணம் வசூலிக்கலாம். அதையும் செய்ய மாட்டார்கள். இப்படி அநியாயமாக அடித்துப்பிடுங்கி கோடீஸ்வரர்களாக இவர்கள் ஆவதற்கு ஏன் சாமானியன் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை இவர்களிடம் இழக்க வேண்டும். ஆதலால் பெரும்பாலான மக்கள் திருட்டு வி சி டியில் தான் பார்பார்கள். கமலா தியேட்டரில் நடந்த உடற்சோதனையில் கடுப்பானதால் நான் கூட இனி தியேட்டர் பக்கம் போகாமல்திருட்டு வி சி டியிலேயே படம் பார்க்க வேண்டும் என சபதம் எடுத்திருக்கிறேன். தமிழ் மக்கள் எல்லோரும் இதே மாதிரி சபதம் எடுத்தால் தியேட்டர் காரர்கள் கொட்டம் அடங்கும். அடங்கட்டும்!

arogara said...

உங்ககிட்ட ரொம்ப பிடிச்ச விஷயமே நீங்க சம்பந்தப்பட்ட துறைய பத்தி மட்டுமே எழுதுறதுதான்.. உங்க INDUSTRY PROBLEM பத்தி நல்லா ANALYSE பண்ணறீங்க.. ஆனா வெகு ஜனம் போல சினிமாவும் அரசாங்கத்த பொறுத்தவரை ஒரு தொழில்துறை, அவ்வளவுதான். அரசு மூலமா பிரச்சனை தீரனுமுனா அதுக்கு உங்க துறை மூலமா அரசாங்கத்துக்கு எவ்வளவு வருமானம் வருது, பிரச்சனையோட அடிப்படை என்ன - அது மூலமாகத்தான் தீர்வு வரும். இப்போ வந்திருக்கிற அரசு அந்த கண்ணோட்டதுலதான் சினிமா துறைய பார்க்குது, அதனால தான் கேளிக்கை வரிய அதிகப்படிதிருக்காங்க..SO அரசாங்கம் மாறினதால மட்டும் சினிமா உலகம் மாறாது.
திருப்பூர் சாய கழிவு போராட்டத்தை எடுத்துகிட்டீங்கான, தேர்தல் அப்பவே அவங்க பிரச்சனைக்கான தீர்வின் அவசியத்தை புதிய அரசாங்கத்துக்கு புரியவச்சாங்க, திருப்பூர் வடக்கு தொகுதில 1000 பேர் மனுத்தாக்கல் செய்தது நினைவிருக்கலாம். சினிமா துறையை சார்ந்தவங்க இது மாதிரி ஆர்ப்பாட்டம், கோரிக்கை எதுவும் இல்லாம அரசாங்கம் தீர்வு காணனுமுன்னா எப்படி சார்? சும்மா 200 கோடி குடுதுருவாங்களா?
சினிமா உலகம் எப்பவுமே அரசாங்கத்தின் செல்ல பிள்ளையாவே இருந்து பழக்கப்பட்டதால, இப்போ உண்மையான பிரச்சனைக்கு ரோட்டுல இறங்கி போராட்டம் நடத்த யோசிக்குது.. யார் யாருக்கோ போராட்டம் நடத்தினவங்க...
போராட்டம் அப்படியெல்லாம் அவசியம் இல்லை, சங்கம் முலமா நாங்களே சரிசெய்து கொள்வோம் என்றால், அரசு மாறிடுச்சு ஏதாவது நடக்கும்னு யோசிக்கிறத நிறுத்தணும்.
பொதுவா RETAIL தொழில் முறையை CORPORATE அழிக்கிறது, எல்லா INDUSTRY ளையும் இருக்கு, சக்கரம் சுழலுது.. அழிந்து போன மன்னர் முறை மறுபடியும் தலை தூக்குது.. ஆனா CORPORATE அப்படிங்கற பேர்ல..