Thottal Thodarum

Sep 20, 2011

சாப்பாட்டுக்கடை- சம்பத் கெளரி மெஸ்

சைதாப்பேட்டையில் நல்ல உணவகங்களுக்கு கொஞ்சம் பஞ்சமே. அதிலும் மெஸ் போன்ற நல்ல தரமான குறைந்த விலை உணவகங்கள் மிக அரிது. அந்தக் குறையை போக்க வந்திருக்கிறது சமீபத்தில் திறக்கப்பட்ட சம்பத் கெளரி மெஸ். காலையில் அருமையான பூரி, பொங்கல், தோசை, இட்லி என்று வரிசைக்கட்டி அட போட வைக்கும் நேரத்தில், மதியம் அருமையான கல்யாண சாப்பாட்டை நாற்பது ரூபாய்க்கு தருகிறார்கள். ரேஷன்கடை ஒரு ரூபாய் அரிசியை வைத்து போடாமல், நல்ல அரிசியில், அருமையான சாம்பார், ரசம், காரக்குழம்பு, மோர்க்குழம்பு, புளிக்காத கெட்டி மோர், ஊறுகாய், அப்பளம் என்று அசத்துகிறார்கள். படு ஹோம்லியான சாப்பாடு. மாலையில் டிபன் வகையறாக்கள் வேறு அசத்துகிறது. இந்த ஏரியா அலுவலகம் செல்பவர்களுக்கு மாலை நேரத்தில் வீட்டில் சென்று சமைக்க நேரமில்லாதவர்கள், வீட்டிற்கு போகும் போது சாம்பார், ரசம், போன்றவற்றை பார்சல் செய்து வாங்கிப் போகிறார்கள். சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த மெஸ் மிகக் குறுகிய காலத்தில் பிரபலமாகிவிட்டது.


கல்யாண கேட்டரிங்கும் செய்கிறார்கள். வழக்கமாய் இம்மாதிரியான மெஸ்களில் பீட்ரூட்டும், முட்டைகோஸைத் தவிர பொரியலுக்காக வேறேதும் வைக்க மாட்டார்கள். கூட்டென்று எப்போதும், கோஸ் கூட்டோ, கோவைக்காய் கூட்டோத்தான் இருக்கும் இவர்கள் ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு மெனு. பீன்ஸ், உருளை காரப் பொறியல், கோஸ் தேங்காய் பொரியல், அவியல் என்று மிரட்டுகிறார்கள். காரக்குழம்பு படு திக்காய் அளவான காரத்தோடு நாக்கின் சுவை நாளங்களை தூண்டுகிறது. மோக்குழம்பு வழக்கமாய் வெங்காயம் போட்டு, தாளித்த மஞச்ள் தண்ணீராய்த்தான் இருக்கும். ஆனால் இவர்கள் கெட்டியாய், நல்ல மஞ்சளில் வெண்டைக்காய், வடை ஆகியவற்றை போட்டு ஊற வைத்த குழம்பாய் ஊற்றுகிறார்கள். வெட்கப்படாமல் ரெண்டாவது முறை கேட்டு சாப்பிடத் தூண்டுகிறது. நிச்சயம் ஒரு முறை சைதாப்பேட்டை வந்தால் மேற்கு சைதாப்பேட்டை பஸ் நிலையத்திலிருந்து பெருமாள் கோவில் தெருவில் பெருமாள் கோயிலுக்கு அருகில் இருக்கும் இந்த சம்பத் கவுரி மெஸ்ஸில் சாப்பிடாமல் போகாதீர்கள். சாரி சொல்ல மறந்திட்டேன்.. டிவைன்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

18 comments:

Guru said...

கடுப்ப கிளப்பாதிங்க தல. நானே வெந்து நொந்து போய், கிடைச்சதை சாப்பிட்டுகிட்டு இருக்கிற நேரத்தில, மோர் குழம்பு, கூட்டு, கல்யாண

சாப்பாடுன்னு வெந்த புண்ணில் வேல பாய்ச்சிகிட்டு. சந்தோசமா சாப்பிடுங்க.

Nat Sriram said...

எழுதிய விதம் டூ மச்..உங்கள் சாப்பாட்டுக்கடை tab-ஐ பிரிண்ட் அவுட் எடுத்துக்கொண்டு தான் இந்தியா வர வேண்டும்..

a said...

M..... Note pannitten....

ravi said...

இது கொஞ்சம் ஒவர்தான், யாராவது கூகள் லொக்கேஷனயும் கொடுத்தா நல்லா இருக்கும்.

புதுகை.அப்துல்லா said...

யோவ், நீயி சைவக்கடை பக்கமெல்லாம் போவியா?!?!

IlayaDhasan said...

ஏங்க, கடை கடையா , ரவுண்டு கட்றீங்களே ,வூட்ல வைய மாட்டாங்களா?

காஞ்சனா பார்ட் 3 - ரஜினி நடிக்க மறுப்பு

aotspr said...

நல்ல சாப்புடுயுங்க......

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

aotspr said...

நல்லா சாப்புடுங்க......

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

Anonymous said...

நல்ல 'சுவை'யான பதிவு

Anonymous said...

அருமையான தகவல்

Without Investment Data Entry Jobs !

FOR MORE DETAILS VISIT OUR WEBSITE : http://bestaffiliatejobs.blogspot.com

Dwarak R said...

shankar,

try chappati kadai in bazaar street (next to kasturi sweet). many times i had dinner here. cutney, sambar, channa sabji are always ecstatic.

MSDA said...

Nice review,
I am coming to India this December. I will try if I go to Saidapet.

Anonymous said...

eanga messna photollam poda matingala?

கொங்கு நாடோடி said...

கேபிள்
என்னமோ போங்க அப்போ அப்போ வயித்து பசியையும் கிளப்புரிங்கோவ்..

உடம்பை பாத்துகோங்கோ.. வயசாகுது இல்லே

Unknown said...

Starting ellam nallathaan irukkum.. aana poga poga ? :)

CS. Mohan Kumar said...

உங்க ஊராச்சே. ஒரு தடவை சேர்ந்து போகலாம்

கதம்ப உணர்வுகள் said...

அடுத்த மாசம் ஊருக்கு போகும்போது இதை நினைவில் வெச்சிண்டு போய் சாப்டுரனும்....

அன்பு நன்றிகள் பகிர்வுக்கு...

பொன் மாலை பொழுது said...

அட! நம்ம வீட்டுக்கு பக்கத்திலே தான் தலீவா!!