Thottal Thodarum

Sep 27, 2011

ஆயிரம் விளக்கு

Aayiram-Vilakku-Movie-Stills-3 பிப்ரவரி 14 படத்திற்கு பிறகு சுமார் ஐந்தாண்டுகளுக்கு மேலான இடைவெளியில் இயக்குனர் ஹோசிமின் தயாரித்து இயக்கியுள்ள படம். ரிலையன்சின் விநியோகத்தில் வெளிவந்துள்ள படம்.


Aayiram-Vilakku-Movie-Stills-1 ஊரே பயந்து நடுக்கும் ஒரு தாதா தனக்கென ஒரு வாரிசு இல்லையே என்று தன் பால்ய கால நண்பனின் மகனை பார்த்து ஆசை வர, இனிமேல் கல்யாணம் காட்சி செய்தோ, அல்லது சிறு குழந்தையை எடுத்து வளர்த்து ஆளாக்குவதோ சரிபடாது என்பதால், வளர்ந்த பையனை தத்தெடுக்கலாம் என்று முடிவெடுக்கிறார். அதே ஊரில் வசிக்கும் அனாதை சாந்தனு சந்தர்ப்ப வசத்தால் ரவுடியின் பெயரைச் சொல்லி பில்டப் கொடுத்துக் கொண்டு வாழ்பவன். எங்கே தான் தான் அந்த ரவுடி என்று சொன்னால் தன்னிடமிருந்து விலகிப் போய்விடுவானோ என்கிற எண்ணத்தில் தன் பெயர் கண்ணாயிரம் என்று சொல்லி அவனுடய அன்பு மழையில் நினைகிறார். ஒரு கட்டத்தில் தான் யார் என்று சொல்லி தன் சொத்துக்களையெல்லாம் எழுதி வைத்துவிட்டு சந்தோஷமாய் மிச்ச காலத்தை கழிக்கலாம் என்று நினைக்கும் போது என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
Aayiram-Vilakku-Movie-Stills-19 சத்யராஜுக்கு அசால்டான ஒரு கேரக்டர். அல்வா மாதிரி லபக்கி விடுகிறார். ஆனால் இவர் வாயில் மதுரை ஸ்லாங் தான் வந்து தாண்டவம் ஆட மாட்டேன் என்கிறது. கிட்டத்தட்ட இவரது ஆல்டர் ஈகோவாக வரும் டெல்லி கணேஷ் மனதில் நிற்கிறார். சாந்தனு சுறுசுறுப்பாக இருக்கிறார். நன்றாக நடனம் ஆடுகிறார். சண்டை போட முயற்சிக்கிறார். ஆனால் எமோஷனல் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் விளக்கெண்ணெய் குடித்தது போலிருக்கிறார். முழுங்கிட்டா வந்திரும்னு நினைக்கிறேன். நடிப்பச் சொன்னேன். சனாகான் மதுரை மாநகர் பொண்ணு என்று சொல்கிறார்கள். ஆனால் ஆளும் கேரக்டர் பேரும் ஒட்ட மாட்டேன் என்கிறது. முடிந்த வரை மிக கான்ஷியசாக திரையில் தன் இருப்பை தெரிவிக்கும் முயற்சியில் இருந்திருக்கிறார். கஞ்சா கருப்பு மீண்டும்  தனித்த காமெடி முயற்சியில் அயர்ச்சியை கொடுக்கிறார்.
Aayiram-Vilakku-Movie-Stills-2 கண்ணனின் ஒளிப்பதிவு சொல்லிக் கொள்கிறார் போல இல்லை. படம் நெடுக பாடல் காட்சிகளை தவிர மற்ற காட்சிகள் கொஞ்சம் அழுக்காகவே இருக்கிறது. ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் “பாப்பா ஒரு ஜிகர்தண்டா பாடலும்” இன்னொரு பாடலும் கேட்கும் ரகம்.
Aayiram-Vilakku-Movie-Stills-21 எழுதி, இயக்கி தயாரித்திருப்பவர் ஹோசிமின். சும்மா லட்டு மாதிரி ஒரு லைன். கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் அடித்து தூள் பரத்தியிருக்கலாம். ஆனால் அடுத்த காட்சி என்ன? என்பதை மிகத் தெளிவாக யூகிக்கக் கூடிய திரைக்கதையால் சுவாரஸ்யம் குறைந்துவிடுகிறது என்பதை மறுக்க முடியவில்லை. சத்யராஜின் பெர்மானெஸ்தான் படத்தை பார்க்க வைக்கிறது. ஆங்காங்கே தெரிந்த உணர்வென்றாலும் தன் நடிப்பால் நெகிழ வைக்கிறார். லாஜிக்காக நிறைய கேள்விகள் மனதினுள் எழும்பத்தான் செய்கிறது. முக்கியமாய் இம்மாம் பெரிய ரவுடியை ஹீரோ முதல் படத்தின் முக்கிய கேரக்டர்கள் அனைவருக்கும் தெரியாமல் இருப்பது என்பது போன்ற கேள்விகள் எழுந்தாலும், அட கதையே அது தானே என்று நம்மை சமாதானப் படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனாலும் ஆங்காங்கே பளிச்சிடும் வசனங்கள், ஆரம்ப சுவாரஸ்ய காதல் காட்சிகள், நெகிழ வைக்கும் செண்டிமெண்ட் காட்சிகளால் தப்பிக்கிறார் இயக்குனர்.
ஆயிரம் விளக்கு – வெளிச்சம் பத்தலை

Post a Comment

10 comments:

ஆர்வா said...

ஷங்கரோட அஸிஸ்டெண்ட் வேற இவரு... ஒரு படம் எதாவது ஒரு வகையில நம்மை போட்டுத்தாக்கணும்.. இந்த படத்துல என்ன ஸ்பெஷல்ல்னு கூட தெரியலை.. ட்ரெய்லர் கூட பாக்குற மாதிரி இல்ல..

ஆர்வா said...

நீங்க எப்ப தலைவா கோதவுல குதிக்கப்போறிங்க. ஆர்வமா வெயிட்டிங்..

ஆர்வா said...

”மனசு” பார்க்கணும்...

கொங்கு நாடோடி said...

சத்யராஜ் மதுரை தமிழா... பாவம் மனுஷன், படம் பார்க்கணும்.

IlayaDhasan said...

பரவால்ல, சத்யராஜ் தன் ஒரிஜினல் மண்டையில வர்றாரா?

http://unmaikaga.blogspot.com/2011/09/blog-post_27.html

IlayaDhasan said...

போடா டுபுக்கு - ஒரிய படம் இந்திரன் வசூலை மிஞ்சும்

aotspr said...

படம் சுமார் தான்.......

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

projectdevendhra said...

http://www.change.org/petitions/dismiss-and-convict-police-who-executed-paramakkudi-massacre

குமரன் said...

விளம்பர போஸ்டர் எல்லாம் பெரிய பில்டப்பா இருந்தது.

படத்தின் ஒன்லைனே தேறவில்லை. இன்னும் எத்தனை குப்பை படங்களை எடுத்து தள்ளுவார்கள் என தெரியவில்லை.

உங்களை நினைத்தால் தான் கவலையாக இருக்கிறது. ஒரு மோசமான படங்களை பார்த்தால், நாலு நல்ல படங்களை நிச்சயம் பாருங்கள். எல்லாம் உங்க நல்லதுக்காக சொல்கிறேன்.

கதம்ப உணர்வுகள் said...

சத்யராஜுக்காக பார்க்கலாம் படம்...

அன்பு நன்றிகள் விமரிசனத்திற்கு.