சைதாப்பேட்டை பூக்கார தெருவுக்கு எதிரில் உள்ள தர்மராஜா கோவில் தெரு சப்பாத்தி கடை சேட் என்றால் எல்லோருக்கும் தெரியும். சப்பாத்தி என்றால் சைதாப்பேட்டையில் மிகவும் பிரபலமான கடை. எனக்கு நினைவு தெரிந்து பள்ளி படிக்கும் காலத்திலிருந்து அவர் கடை வைத்திருக்கிறார். அப்போதெல்லாம் அதே தெருவின் ஆரம்ப முனையில் ஒரு குட்டிக்கடையில் மாலையில் சப்பாத்தியும், பூரியும் போடுவார். சூடான உப்பிய பூரியுடன் தக்காளி குருமாவை சாப்பிட ஒரு பெரிய கூட்டமேயிருக்கும். பின்பு அதே தெருவில் பழைய கடைக்கு பகக்த்திலிருந்த கோயிலுக்கு அருகில் இருந்த ஒரு பெரிய கடையாய் பார்த்து பிடித்து சப்பாத்தி மட்டுமே போட ஆரம்பித்தார்.
கையேந்தி பவன் தான். ஆனால் அடுப்பிலிருந்து எடுக்கும் சூடான சப்பாத்தி, ரொட்டிக்கு அவர் கொடுக்கும் சென்னா,மற்றும் தக்காளி குருமா, ப்ளஸ் பச்சை வெங்காயம் எல்லாவற்றையும் சூடான மிகவும் சாப்டான, அதிகமாய் எண்ணையில்லாத சப்பாத்தியுடன் சப்பிட்டால் ம்ம்ம்ம்ம். நிஜமாவே டிவைன். உள்ளே போவது தெரியாது. இப்போது அங்கே தோசை, இட்லி, கூட சாம்பார், ரெண்டு வித சட்னிகள், வெஜிட்டபிள் ரைஸ், மதியம் சாம்பார் சாதம், தயிர்சாதம் கூட கிடைக்கிறது படு நியாயமான விலையில். நாலு தோசைக்கல்லில் ஒரே நேரத்தில் சப்பாத்தியை போட்டு அதில் ஒரு ஸ்பூன் எண்ணையை விட்டு, அடிப்பக்கம் காய்ந்து தீய்வதற்குள் ஒவ்வொரு சப்பாத்தியையும் அடுத்த பக்கம் திருப்பிப் போடும் லாவகம் இருக்கிறதே அதைப் பார்க்கவே கண் கோடி வேண்டும். நிச்சயம் தவறாமல் சென்னையில் சைதாப்பேட்டையை க்ராஸ் செய்ய வேண்டிய நேரமிருந்தால் ஒரு விசிட் அடித்து விடுங்கள்.
********************************************************************
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Post a Comment
17 comments:
//ஒரே நேரத்தில் சப்பாத்தியை போட்டு அதில் ஒரு ஸ்பூன் எண்ணையை விட்டு, அடிப்பக்கம் காய்ந்து தீய்வதற்குள் ஒவ்வொரு சப்பாத்தியையும் அடுத்த பக்கம் திருப்பிப் போடும் லாவகம்//
அடடாடா.. படிக்கும்போதே நாக்குல ருசி தெரியுது (கடுப்ப கெளப்பாதீங்கய்யா)
டீநகர் பேருந்து நிலைய எதிர்லையும் இதே மாதிரி ஒரு கடை இருக்கு.
இனிமே சாப்பாட்டுக்கடை பகுதியை படிக்க கூடாதுன்னு முடிவு பண்ணி வச்சிருக்கேன். காதுல புகையா வருது////
வீட்டம்மாக்கு போன் போட்டுட்டேன்- இன்னைக்கு டின்னெர் சப்பாத்தி, தக்காளி குர்மா. வேறே என்ன பண்ணமுடியும்?
கடந்த பத்து வருடங்களாக இந்த கடையில் அடிக்கடி சப்பாத்தி சாப்பிட்டு வருகிறேன். சில கடை உணவுகள் சில நாட்கள் சாப்பிட்ட பிறகு நினைத்தாலே திகட்டும்/குமட்டும் ( உம்: கௌரி நிவாஸ் சாம்பார்), அனால் Welcome Corner (சேட் சப்பாத்தி கடையின் முந்தைய பெயர்) சப்பாத்தி என்றும் அப்படி ஆனதில்லை. என்னுடைய நினைவுகள் சரியாக இருந்தால் - படத்திலுள்ள சிறுவன் பெயர் வேலு, ஊர் திருவாச்சி. நினைவுகளை மீட்டமைக்கு நன்றி
நான் ஐந்து வருடம் சைதை வாசியாக இருந்த போது பல தடவை அங்கு சப்பாத்தி சாப்பிடிருகிறேன். நான்கு நாட்களுக்கு முன்பு தான் அந்த கடையை பத்தி என் மனைவியிடம் சொல்லி கொண்டிருந்தேன்.
//"நிச்சயம் தவறாமல் சென்னையில் சைதாப்பேட்டையை க்ராஸ் செய்ய வேண்டிய நேரமிருந்தால் ஒரு விசிட் அடித்து விடுங்கள்."//
தகவலுக்கு நன்றி.......
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
10 years back.....
Nalla chappathi...ninaivugal.....
Supera irukkum...antha kadai
sappathi.....
ம்... பசிக்குது.
//தி.நகர் பேருந்து நிலைய எதிர்லையும் இதே மாதிரி ஒரு கடை இருக்கு//
நானும் சாப்பிட்டிருக்கேன்.
என்ன கொஞ்ச நாளா சைதாபேட்டை விட்டு வெளியே வர்றதில்லையா? என்னா மேட்டர்?
நன்றி. அடுத்து சைதாப்பேட்டை வந்தால் சாப்பிடுகிறேன்.
ட்ட்ட்ட்ட்டேஎய்ய்ய்ய்ய்ய் ரேஏஏஏஏஏஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்
ஸார்,
வணக்கம்.
முந்தைய கமெண்ட்டில் ரேஸ்கள் என்பதை ரேஸ்கல் என்று மாற்றி வாசித்துக்கொள்ளவும்..
டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
டுபாக்குர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
// மோகன் குமார் said...
என்ன கொஞ்ச நாளா சைதாபேட்டை விட்டு வெளியே வர்றதில்லையா? என்னா மேட்டர்?//
சைதை தமிழரசி எனும் பெயரில் படம் எடுக்கிறாரோ என்னவோ..
எங்கே கடையில ஆளக் காணம்?
சப்பாத்தி..சப்பாத்தி தான்..ரொட்டி..ரொட்டி தான்!!
நீங்க எழுதுனதே சப்பாத்தி சாப்பிட்ட மாதிரி இருந்துச்சு ..ஏப் ப்ப்ப்பப்ப்ப்ப்
நான் சிரிச்சா தீபாவளி - அனுஷ்காவின் அடுத்த அட்டாக்
Post a Comment